BIOSCOPE திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

நாயகன்(ராசா) – ராஜ்குமார்
என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பட்டதாரியான இவரை குடும்பம் படிக்க வைத்து, போலீஸ் வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று கனவு காண, இவரின் கனவு சினிமா தான் இந்த சினிமாவுக்காக சென்னை வந்து ஆறு வருடம் அல்லல்பட்டு பிறகு ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று
வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ,அப்பா, தங்கை, இவர்களை வைத்து ஒரு படம் எடுக்க எப்படி அல்லப்படுகிறார் என்பதை தன் நடிப்பின் மூலம் பல காட்சிகளில் அருமையாக உணர்த்திருக்கிறார் இயக்குனராகவும் புதுமையான விஷயத்தை கையாண்டு இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.

பாட்டி, (வெள்ளையம்மாள்)

படம் முழுக்க இவர் செய்யும் அட்ராசிட்டி
குறும்புக்கார பாட்டியாக மக்கள் மனதில் நிலைக்க வைக்கும்.

பாட்டி (முத்தாயி)

என்ற வேடத்தில் படம் முழுக்கவே ரசிக்க வைக்கிறார்

தாத்தா (முத்துசாமி)

தன் பேரனுக்காக ட்ராலியை தள்ளுவது, சொத்துக்களை விற்று கொடுப்பது, என சூப்பரான நடிப்பை இயல்பாக பதிவு செய்திருக்கிறார்.

தாத்தா (குப்புசாமி)

இவர் செய்யும் லூட்டி படம் முழுக்க ரசிக்க வைக்கிறது நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்.

அப்பா-(எஸ்.எம்.மாணிக்கம்)

தன் சொத்துக்களை விற்று, மகனுக்காக கொடுக்கும் தந்தையாகவும் நடித்திருக்கிறார் இரண்டாவது பாகத்தில் கூத்து கலைஞராக வந்து, தன் மகனை நரபலி கொடுக்கும் செய்தி எறிந்து காரில் அடிபட்டு இரக்கும் அந்த காட்சியில் மனதில் இவர் இடம் பிடிக்கிறார்.

அம்மா-(இந்திராணி)
தம்பி( எஸ்.எம்.செந்தில்குமார்)
தம்பி(சிவாரத்தினம்)
தம்பி(பெரியசாமி)
தங்கை(பாப்பா)-மோகனபிரியா
சோசியக்காரன்-தங்கராசு
Producer-தர்மசெல்வன்
குவாரி ஒனர்-நமச்சிவாயம்
நண்பன்-ராஜேஷ்கிருஷ்ணன்
ஹீரோ ( ரஞ்சித்)
ஹீரோயின்-நிலா

என படத்தில் யாரும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் தங்கள் கதாபாத்திரங்களோடு,
நடிப்பு பற்றி ஒன்றுமே தெரியாத இவர்கள் எதார்த்தமான இயல்பான பாணியில் நம் மனதில் இடம் பிடிக்கிறார்கள்

படத்துக்குள் படம்

: ‘வெங்காயம்’ என்ற திரைப்படம் வெளியாகி, தமிழ் சினிமா ஆர்வலர்களால் பாராட்டப்பட்டது. ஆனால் சரியான விளம்பரப்படுத்துதல் இல்லாமல் அப்படம் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இப்படத்தின் இயக்குனர் சங்ககிரி ராச்குமாரும் ஒரு பாத்திரத்தில் நடித்து இருந்தார். சத்யராஜ் ஒரு பாடலுக்கு தோன்றி இருந்தார்.

இப்படத்தை பார்த்த இயக்குனர் சேரன் இப்படி ஒரு நல்ல படம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு

முதலில் தன்னுடைய சக இயக்குநர்கள், நண்பர்கள், தயாரிப்பாளர்களுக்கு என்று பிரத்யேகமாக ‘வெங்காயம்’ படத்தை திரையிட்டு காட்டினார்.

அதையும் பயோஸ்கோப் இடத்தில் இறுதிக்காட்சியில் புத்திசாலித்தனமாக இயக்குனர் இணைத்திருக்கிறார்
பயாஸ்கோப் படத்துக்குள் வெங்காயம் படம் எடுப்பது தான் கதைக்களம்
இப்படத்தில்

கதை களம்

., நரபலி, சோதிடம், ராசிபலன், மூடநம்பிக்கை போன்ற கட்டுக்கதைகளை சோதிடத்தைச் சொல்லி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களைத் தோலுரித்துக் காட்டும் பயாஸ்கோப்

ஒரு கிராமத்தில்தான்
தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தப்பா அதாவது அவரை (பூவப்பா )என்று தான் நாயகன் அழைப்பார் அப்படிப்பட்டவர் ஜோதிடர் ஒரேவரிடம்
சென்று நான் புதிதாக தொழில் ஆரம்பிக்க வேண்டும் ஜாதகத்தை பார்த்து கொடுங்கள் என்று சொல்ல அதற்கு அந்த ஜோதிடர்

நீ தொழில் செய்ய முடியாது நடுத்தெருவுக்கு வந்து பிச்சை எடுப்பாய் என்று சொன்னதால் தற்கொலை செய்து கொள்கிறார்
இது போன்ற ஜோதிடர்கள் போலியாக மக்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

அப்படிப்பட்ட போலியான ஜோதிடர்களையும் நரபலி கொடுத்து ஒரு குழந்தையின் உயிரை கொல்ல நினைக்கும் போலீ சாமியாரின் முகமூடியை கிழிப்பது தான் இந்த படம் “பயாஸ் கோப்”

கதையோடு இணைந்த இரண்டு கிளைக்கதைகள் பின்கதையாக வருகின்றன. படத்தின் தொடக்கக் காட்சியே கிராமத்து வெள்ளந்தி மனிதர்களிடம் இருந்து தொடங்குகிறது.
பேரன் சொன்ன கதையை தாத்தா, பாட்டி, கேட்டு நகையை விற்று ஆடு மாடுகளை விற்று பணம் கொடுத்து படம் எடுக்கும் ஆசையை நிறைவேற்றுகிறார்கள் அப்படி படம் எடுக்கும் பொழுது உதவிக்கு யாரும் வராததால் தன்னுடைய தாத்தா, பாட்டி, பக்கத்து வீட்டு பாட்டி, தன் அப்பா மாணிக்கம், தம்பி, தங்கை,இவர்களை வைத்து படம் தயாரிக்கிறார் அதில் தான் எத்தனை சிரமம்,எத்தனை காமெடி ,எத்தனை நையாண்டி என எல்லாமே ரசிக்க வைக்கிறது
ஆனாலும் படம் எடுப்பவர்கள் படம் எடுத்துவிட்டு ரிலீஸ் ஆக எத்தகைய துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை இயக்குனர் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

இப்படத்தில்
நல்ல நகைச்சுவை மட்டுமன்று, கிராமங்களில் இயல்பாக நடக்கும் சேட்டையும் கூட.
இடம் பெறுகின்றன

நாயகன் ராஜா
ஜோதிடரிடம்
வம்புச் சண்டையில் தொடங்கி,
ஸ்ரீதர் ஸ்வேதா
அதைத் தொடரும் கிராமத்துக் காதல்
அவர்கள் இருவரும் சேர முடியாமல் ஜோதிடத்தால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளப்பட
ஸ்வேதாவுக்கு மூல நட்சத்திரம் அவர் மருமகளாக வீட்டுக்கு வந்தால் மாமனார் இறந்து விடுவார் என்று ஜோதிடர் சொல்ல இதனால் அவர்கள் திருமணத்தைப் பிரிக்கிறது ஸ்ரீதரின் குடும்பம்
ஆனால் நாயகன் எடுத்த வெங்காயம் படத்தை பார்த்து அந்த குடும்பம் திரும்பி ஸ்வேதாவை மருமகளாக ஏற்றுக் கொள்கிறது
இது ஒரு கதை

நரபலி சாமியாரினால் கூத்துக் கலைஞரான தந்தையையும், அன்பான மகனை இழந்து காரில் அடிபட்டு இறுதியில்.
தூக்கி வீசப்பட்டு இறந்து போகிறார் இது ஒரு கதை

இப்படி தன் சித்தப்பா சாவுக்கு காரணமான போலீஸ் ஜோதிடர்,

கூத்துக்கலைஞரான மகளைப் பலிகொடுக்கும் நரபலி சாமியார்,

இளம் ஜோடிகளை பிரித்து வைக்கும் மூல நட்சத்திரம் என்று போலிஜோதிடர்
இவர்களுக்கு எப்படி பாடம் போடுகிறார் நாயகன் என்பது கதை

கிளைமாக்ஸ் காட்சியில் போலி
சாமியார்களை
போலி ஜோதிடர்களை
கடத்தி காட்டுக்குள் இருக்கும் மண்டபத்தில் கட்டிப் போடுகின்றனர்.
சாமியார்களிடம்,
ஜோதிடர் களிடம்
அந்தச் சிறுவர்கள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடி. சோதிடப் புரட்டுகளைப் புட்டுப்புட்டு வைத்து, அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் சோதிடர்கள், நரபலி கொடுப்பவர் வியர்வையில் குளித்து, விக்கித்துப்போய் நிற்கின்றனர். இப்படி கேள்வி கேட்பது வயதுக்கு மீறிய பேச்சுக்கள் போன்று தோன்றுகிறது என்றாலும்
அறிவு என்பது வயதை அடிப்படையாகக் கொண்டதன்று. அதிலும் பகுத்தறிவுக்கு கேள்விகேட்கும் தன்மையும், உண்மையை அறிய முயலும் தேடலும்தான் தேவையே தவிர, வயது தடையில்லை. பட்டறிவுதான் உண்மையைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியன். அந்தவிதத்தில், அந்தச் சிறுவர்களின் வலியும், வேதனையும், அவர்களுக்குள் கேள்விகளாய் முளைத்துச் சிந்திக்க வைத்திருக்கலாம். அவர்கள் சந்தித்த பகுத்தறிவுவாதியின் விளக்கங்களும் அவர்களின் தேடலைத் தீவிரப்படுத்தி யிருக்கக் கூடும்.

கூத்துக் கலைஞராக வருபவர் இயக்குனரின் தந்தை மாணிக்கம் என்பது தெரிந்தபோது வியப்பாக இருக்கிறது பரம்பரைக் கூத்துக் கலைஞரைப் போல, அவ்வளவு இயல்பாக நடித்திருந்தார். மகனின் உயிர் காக்க செலவுக்காக, தெருவில் கூத்துக்கட்டும் போது ,கலையை நேசிக்கும் கலைஞனின் சுயமரியாதையும், தந்தையின் பாசமும் வெளிப்படுகிறது. இவரைப் பற்றிய கூடுதலான ஒரு செய்தி, இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். மகனின் இலட்சியத்திற்கு வடிவம் கொடுத்த தந்தையாகவும் நம்முடைய மரியாதைக்குரியவராகிறார். பேரனாக வரும் இயக்குனர் ராச்குமார் பாசக்காரப் பட்டிக்காட்டுப் பேரனாக அசத்தியிருக்கிறார்.

கதை மட்டுமன்று, பாடல்களும் நல்ல பல கருத்துகளைச் சொல்கின்றன. இவர்களோடு இயக்குனரின் தந்தை எஸ்.எம். மாணிக்கம், இயக்குனர் ராச்குமார் ஆகியோரும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். அறிவுமதி எழுதிய ‘ அச்சமென்ன அச்சமென்ன… ‘என்ற பேரா. சுபவீயின் பாடல் குழந்தைகளுக்குப் பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்கிறது. திரைப்படத்தில் இதுபோன்ற பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்லுவதற்கு கண்டிப்பாகத் துணிச்சல் வேண்டும். கதையைச் சொல்லும் இயக்குனரின் கொள்கை உறுதி பாராட்டிற்குரியது.

சிறிய படம் என்பதால், சிற்சில தொழில்நுட்பக் குறைபாடுகளும் படத்தில் இருக்கின்றன. கதை, கருத்தாழமிக்க பாடல்கள், எழிலார்ந்த கிராமத்துப் பசுமைக் காட்சிகள் ஆகியவற்றை முன்னிறுத்தி அந்தக் குறைகளை மறக்கலாம்.
மிகக் குறைந்த செலவில், நல்ல கருத்தாழமிக்கப் படத்தை, அதுவும் தன்படமாகத் தந்திருக்கும் இயக்குனருக்கு மீண்டும் பாராட்டுக்கள்

‘பயாஸ்கோப்’.
இப்படத்தை
25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ளனர்
அவர்களுக்கு பாராட்டுக்கள்

புரட்சி தமிழன் : சத்யராஜும் இயக்குனர் சேரன் இருவரும் கௌரவ நடிகராக நடித்திருக்கிறார்கள்

மற்றும்
சங்ககிரி ராஜ்குமார், நாயகன் , தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் ,என பன் முக திறமையை வெளிபடுத்திருக்கிறார்
எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் என்பது அவரைப் பார்த்தாலே புரிகிறது

ஒளிப்பதிவு
முரளி கணேஷ் இயற்கையான காட்சியும் செயற்கை தனம் இல்லாமல் படமாக்கி இருக்கிறார்

இசையமைப்பாளர் தாஜ்நூர்
வித்தியாசமான பின்னணி இசை நம்மை கவருகிறார்

ஆர்ட் டைரக்டர் மார்ட்டின்
படத்தில் ஆடம்பரம் இல்லாத ஆர் டைரக்டரில் கலைப்பணி ரசிக்க வைக்கிறது

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்
படத்தை மக்களிடம் கொண்டு போய் சிறப்பாக செய்ததற்காக அவருக்கும் பாராட்டுக்கள்

இப்படத்திற்கு கை கொடுத்து வெளியிட உள்ள ஆகா ஃபைண்ட்
OTT தளத்திற்கும்
வாழ்த்துக்கள்

வித்தியாசமான தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய படைப்பு எளிய முறையில் படமாக்கப்பட்டிருக்கும் இது தமிழ் சினிமாவுக்கு ஒரு குறிஞ்சி மலர் .

செட்டுக்குள் முடங்கி கிடந்த சினிமாவை இயக்குனர் இமயம் பாரதிராஜா ,கரம் பிடித்து கிராமத்து க்கு அழைத்து சென்றார் .

அதுபோல இயக்குனர் சங்ககிரி ராச் குமார் அதே பாணியில் இன்னும் எளிமையாக படம் எடுப்பது எப்படி என்று புரிய வைத்திருக்கிறார் வாழ்த்துக்கள்.

Comments (0)
Add Comment