கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரிப்பில் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறது‘நாங்கள்’ திரை படம்
கமர்சியல் கலந்த சினிமாவில் அடி,தடி, வெட்டு, குத்து என நிஜத்துக்கு ஒவ்வாத கதைகளை படமாக தந்து ரசிகர்களின் ரசனையை மழுங்கடித்த சினிமாவில் நிஜ வாழ்வின் நடத்தக்கூடிய சம்பவங்களை அருமையாக உணர்வு பூர்வமான படமாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அவினாஷ் பிரகாஷ்
அம்மாவின் பேரன்பும் அப்பாவின் பெரும் கோபமும்
கதை களம்
படத்தின் நாயகன் ராஜ்குமார்(அப்துல் ரஃபி)இவர் சென்னையில் இருந்து ஊட்டிக்கு வந்து ஒரு பள்ளியை தொடங்கி அவை மிக வேகமாக வளர்ச்சியடைய வைக்கிறார் ஆனால் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் அந்த வளர்ச்சி வீழ்ச்சி அடைகிறது இதனால் பள்ளியை நடத்துவதில் அவருக்கு பொருளாதார வீழ்ச்சி இன்னொரு புறம் மனைவி பத்மாவுடன்(பிரார்த்னா ஸ்ரீகாந்த்) சரியான புரிதல் இல்லாமல் அவரை பிரிகிறார் குழந்தைகள் கார்த்திக்,(மிதுன் ) கௌதம் (நிதின் )துருவ்,(ரித்திக் மோகன்) இவர்கள் மூவரும் அம்மாவை பிரிந்த குழந்தைகள் அப்பாவிடம் கண்டிப்பு மட்டுமே காணும் குழந்தைகள் ராஜ்குமார் கொடுக்கும் டார்ச்சர், கண்டிப்பு, தேர்வில் மார்க் வாங்கியதால் அடி, உதை ,திட்டு என குழந்தைகள் அப்பாவை கண்டால் பயந்து நடுங்குகிறார்கள்
ஒரு கட்டத்தில் அப்பா ராஜ்குமாரின் ஷூவை நாய் கடித்தால் அந்த நாயை அடிக்கிறார் உடனே 13 வயது நிறைந்த கார்த்திக் தன் அப்பாவையே திருப்பி அடிக்கிறான் இப்பொழுது இந்த மூன்று பேரும் அம்மா வீட்டுக்கு குன்னூருக்கு அனுப்பப்படுகிறார்கள் அங்கு சென்ற பிறகு இவர்கள் வாழ்க்கை மலர்ந்ததா? என்ன ஆனது? என்பதை ஒரு அருமையான படமாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்
குழந்தைகள் மூன்று பேர் நடிப்பு அற்புதமாக இருக்கிறது
இயக்குனர்
இயக்குனர் அவிநாசி பிரகாஷ் திரைப்படக் கல்லூரியில் முறையாக படத்தொகுப்பு, திரைக்கதை அமைப்பு மற்றும் இயக்கம் உள்ளிட்டவற்றை பயின்று எண்ணற்ற விளம்பரப் படங்களில் பணியாற்றி இருக்கிறார்
அந்த அனுபவம் படம் பார்க்கும் பொழுது நமக்கு நன்றாக தெரிகிறது ஒரு அழகிய சினிமாவை பாலு மகேந்திராவின் கலைப்படைப்பை போல படம் நம் கண் முன் தந்திருக்கிறார்
ஒரு தனி மனிதனின் கோபம் அவன் குடும்பத்தை எப்படி ஆட்டிப்படைக்கிறது நல்ல மனைவியை பிரிந்து, நல்ல குழந்தைகளை வாட்டி வதைத்து,
செல்ல பிரியாணியான நாயை துன்புறுத்தி,
தானும் நன்றாக இருக்காமல் மற்றவர்களையும் சந்தோசமாக இருக்க விடாமல் செய்யும் ஒரு கதாபாத்திரத்தை இன்று சமூகத்தில் நடக்கும் சில மனிதர்களின் அசல் தோற்றத்தை பிம்பமாக திரையில் காட்டியிருக்கிறார் இது போன்ற மனிதர்கள் நாட்டில் நிறையவே இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ராஜ்குமார் கதாபாத்திரம் ஒரு உதாரணம் இயக்குனரின் வித்தியாசமான படைப்பு இந்த கதாபாத்திரம்
ஒளிப்பதிவு இவர் தான் குழந்தைகள் அப்பா வீட்டில் கஷ்டப்படும் பொழுது டார்க் & ஒயிட் காட்சிகளும்
அம்மா வீட்டுக்கு வந்த பிறகு கலர்ஃபுல் இருந்த காட்சிகளும் படத்தை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது
படத்தொகுப்பு இவர்தான் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்
மற்றபடி எல்லாம் ஓகே
நாயகன் அப்துல் ரஃபி
விரக்தியின் வெளிப்பாட்டு எப்படி காட்ட முடியுமோ அப்படி வித்தியாசமாக நடித்திருக்கிறார் அப்துல் ரபி
குழந்தைகளிடம் அன்பை காட்டாமல் வெறும் கண்டிப்பு மட்டும் காட்டுவது பிறகு உங்க நல்லதுக்காக மட்டும் தான் டா நான் இப்படி நடந்துக்கிறேன் என்று கொஞ்சம் மிஞ்சுவதும் கோபத்தின் வெளிப்பாடு மனைவியிடம் உன்னிடம் சேர்ந்து வாழ முடியாது என்று சொல்லுவது வேலைக்காரர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வருந்துவது இப்படி ஒவ்வொரு இடத்திலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயல்பான நடிப்பு எதார்த்தமாக இருக்கிறது வாழ்க்கையில் தோல்வி அடைந்த ஒரு மனிதனின் பார்த்தது போல் இருக்கிறது வெல்டன் அப்துல் ரபீ
மூன்று குழந்தைகள்
கார்த்திக்,(மிதுன் ) கௌதம் (நிதின் )துருவ்,(ரித்திக் மோகன்)
இவர்கள் மூவரை சுற்றி தான் கதைக்களம் அம்மாவை பிரிந்த குழந்தைகள் அப்பாவிடம் கண்டிப்பு மட்டுமே காணும் குழந்தைகள்
எவ்வளவு பரிதாபத்தை வாங்கி கட்ட முடியுமா அப்படி அருமையாக நடித்திருக்கிறார்கள்
: இசை அமைப்பாளர்
ஆர் ரஹ்மான் பயிற்றுவித்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ரா குழுவினரை பயன்படுத்தி வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார் ‘இத் திரைப்படம் லைவ் சவுண்ட் முறையில் முழுக்க படமாக்கப்பட்டிருக்கிறது
சுகவனம் இசையில் சுஜாதா நாராயணன் பாடல் வரிகளில் சைந்தவி பாடியுள்ள கனவே எனும் உள்ளத்தை தொடும் பாடல் இப்படத்தில் இடம் ரசிக்க வைக்கிறது
லைவ் சவுண்ட் முறையில் இப்படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளது
இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்
: தயாரிப்பு வடிவமைப்பு: விராஜ் பால ஜெ, சிங்க் சவுண்ட்: முகமது சஜித், ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன் ஹரிஹரன் எம் (சிங்க் சினிமாஸ்), சவுண்ட் மிக்ஸிங்: அரவிந்த் மேனன், பப்ளிசிட்டி டிசைன்: பொன் பாலாஜி, தயாரிப்பு நிர்வாகி: கிருஷ்ணசேகர் டி எஸ், டிஐ: யுகேந்திரா (கிராஃப்ட்ஸ் வொர்க்ஸ்), தயாரிப்பு ஒருங்கிணைப்பு: சாதிக் ஏ எம்,
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
: மனிதனுக்கும் நாய்க்குமான பாசப் பிணைப்பை வைத்து பல்வேறு படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் இடம் பிடிக்கும் நோக்கில் தற்பொழுது இந்த படம் ராக்ஸி என்ற
நாயை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள்
ஓகே
மூன்று குழந்தைகளின் தாத்தாவாக வரும் அந்த கதாபாத்திரம் நடிப்பு ரசிக்க வைக்கிறது குழந்தைகளிடம் பாசம் காட்டி நெகிழ வைக்கிறார்
ராஜ்குமார் மனைவியாக நடித்திருக்கும் பிரார்த்தனா ஸ்ரீகாந்த் கணவனின் அன்புக்காக
ஏங்குபவராக நன்றாக நடித்திருக்கிறார்
மொத்தத்தில் இந்த நாங்கள்” திரைப்படம் சொல்ல வருவது குழந்தைகளின் வளர்ச்சிக்காக அப்பாக்கள் பாடுபட்டாலும் அவர்கள் மீது அன்பு காட்டுவது அவசியம் செல்ல பிராணிகள் மீது அன்பு காட்டுவது அவசியம் கணவன் மனைவி அமர்ந்து பேசி புரிந்துணர்வோடு வாழ்வது அவசியம் என்பதை வலியுறுத்தி சொல்கிறது
இயக்குனர்கள் கே பாலச்சந்தர் அவர்கள் இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் இந்த படைப்பாளியை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார் கள்
எந்த சமரசமும் இல்லாமல் ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்ததற்காக இயக்குனர் அவினாஷ் பிரகாசுக்கு ஒரு பூங்கொத்து 🌷💐