எமன் கட்டளை திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

. எஸ்.ராஜசேகர் இயக்கியுள்ள இந்த படத்தை செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.

:
நடிகர்கள்:

அன்பு மயில்சாமி, சந்திரிகா, அர்ஜுனன், ஆர். சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா
என நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்

..
படத்தின் கதை களம்

: இரு நண்பர்களின் தவறால் ஒரு பெண்ணின் திருமணத்தை பாதிக்கிறது.
அந்த இரு நண்பர்கள் அன்பு மயில்சாமி (குரு). அர்ஜுன் (பாரதி)
.இதனால் மணப்பெண்ணும் அவளின் தந்தையும் விஷம்குடித்து விடுகிறார்கள்.இதை அறிந்த இரு நண்பர்களில் ஒருவரான அன்பு மனம் வருந்தி அவமானத்தால் தற்கொலை செய்து எமலோகம் செல்கிறான். அங்கு எமதர்மராஜா(நெல்லை சிவா) கட்டளைப்படி உப்பை தின்னவன் தான் தண்ணீர் குடிக்கனும், அதனால் நீ தான் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுவும் 60 நாட்களுக்குள் மணமுடித்து வைக்க வேண்டும் என்று கூறுகிறான்.

பவர் ஸ்டாரின் மகன் நடிகை நளினியின் மகன் டெல்லி கணேஷ் மகன் என
அன்பு நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பல மாப்பிள்ளைகள் தேடி அலைகிறான்

இதற்கிடையில் அவளது தாய்மாமனும்(கராத்தே ராஜா)
கமலியை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் அன்பு மீது காதல் கொள்கிறான். ஆனால் அன்பு விலகி ஓடுகிறான். இவ்வேளையில் 59 நாட்கள் முடிந்து 60 வது நாளும் பிறக்கிறது. எமன் கட்டளைப்படி அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார்களா? என்பதை நகைச்சுவையுடன்
சொல்லி இருக்கிறது இந்த “எமன் கட்டளை” திரை படம்

அன்பு மயில்சாமி,

குரு என்ற கதாபாத்திரத்தில் கலகலப்பாக நடித்திருக்கிறார்
நடனம் எமோஷனல் காட்சி எல்லாம் நன்றாக இருக்கிறது

சந்திரிகா,

கமலி என்ற கதாபாத்திரத்தில் அன்பு வை ஒரு தலையாய் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்

அர்ஜுனன்,

பாரதி என்ற கதாபாத்திரத்தில் அன்புவின் நண்பனாக கலகலப்பாக நடித்திருக்கிறார்

மற்றும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அனுபவம் வாய்ந்த நடிகர்களான
ஆர். சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா, முத்து காளை, டிபி கஜேந்திரன்
என நடிகர் பட்டாளமே
சிறப்பாக
நடித்துள்ளனர்

..
இயக்குனர்

: இயக்குனர்
எஸ்.ராஜசேகர் இப்படத்தை இயக்கி உள்ளார்
படம் முழுக்க கலகலப்பாகவும் காமெடி ஆகவும் கொண்டு சென்றிருக்கிறார் எமனிடம்
மூன்று கட்டளை கேற்ப ,அன்பு நடந்து கொள்வது மாப்பிள்ளை கிடைக்காமல் நண்பர்கள் தவிப்பது என படம் முழுக்க இளைஞர்களுக்கு பிடித்த வகையில் படத்தை இயக்கியிருக்கிறார்

இசை

: என் .எஸ். கே இவரின் இசை துள்ளாட்டம் போட வைக்கிறது நான்கு பாடல்களை ரசிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார்

ஒளிப்பதிவாளர்

[ ஏ.எஸ் கார்த்திக்ராஜா
கண்களுக்கு குளிர்ச்சியாகவும் சரியான வண்ணக் கலவைகளுடன் படம் பிடித்து மனதில் இடம் பிடிக்கிறார்
பாடல்களை சினேகன் எழுதியிருக்கிறார் அனைத்தும் ரசிக்க வைக்கிறது
படத்திற்கு பணியாற்றிய காஸ்ட்யூம் டிசைனர், மற்றும் ஒப்பனையாளர் ,
ஆர்ட் டைரக்டர் ,
நடன பயிற்சியாளர்களான ராதிகா, ஜாய்மதி,
சிவராக் சங்கர், அபிநய ஸ்ரீ, ஆகியோர் சிறப்பாக
நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்

இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் வெங்கட் அவர்கள் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்

: மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை பார்த்திருக்கிறோம், அரசகட்டளை பார்த்திருக்கிறோம், இந்த எமன் கட்டளை வித்தியாசமான பார்முலாவாக
வந்தி ருக்கிறது பார்க்கலாம் ரசிக்கலாம் கொண்டாடலாம்

Comments (0)
Add Comment