லெவன் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

லோக்கேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் திரில்லர் படமாக தமிழ் – தெலுங்கு இருமொழிகளில் வெளிவந்துள்ள படம் லெவன் “

இந்தப் படத்தில், நவீன் சந்திராவுக்கு ரேயா ஹரி ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் படத்தின் தயாரிப்பாளரான அஜ்மல் கானுடன் இணைந்து ரேயா ஹரி நடித்திருக்கிறார்.

.இந்த படத்தில் ஷஷாங்க் , அபிராமி , திலீபன் , ரித்விகா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

கதை களம்
ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான கிரைம் , த்ரில்லர் ‘லெவன்’

படத்தின் ஆரம்பத்தில் ஒரு பேங்க் கொள்ளை நடக்கிறது அசிஸ்டெண்ட் கமிஷனரான
அரவிந்தன் அந்த கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்கிறார்

இதை அடுத்து நகரில் ஆறு கொலைகள், சைக்கோ கில்லரால் கொல்லப்படுகிறார் கள்
அதுவும் எரித்து கொலை செய்கிறான் சைக்கோ கொலைகாரன் அவனுடைய நோக்கம் என்ன? கொலை செய்யப்பட்ட அந்த நபர்கள் யார் ?அதை கண்டுபிடிக்க நியமிக்கப்பட்ட
ரஞ்சித் குமார் என்கிற காவல்துறை அதிகாரி கார் விபத்துக்குள்ளாகி கோமா ஸ்டேஜுக்கு போகிறார்

இப்போது இந்த வழக்கு அரவிந்தனிடம் வருகிறது அவர் இன்வெஸ்டிகேஷன் நடத்துகிறார்

அவரோடு மனோகர் என்கிற சப்-இன்ஸ்பெக்டர் சேர்ந்து இருவரும் அந்த கொலை காரனை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்
என்ன நடந்தது?
அந்த சைக்கோ எதற்காக கொலை செய்கிறான்
என்பதை விறுவிறுப்போடு, பரபரப்போடு சொல்லி இருக்கிறது இந்த” லெவன்”

எவ்வித தடயமும் இல்லாமல் ஒரே மாதிரியாக அடுத்தடுத்து கொலைகள் நடைபெற, ‘தொடர் கொலைகாரன்’ (சீரியல் கில்லர்) ஒருவன்தான் இதனைச் செய்கிறான் என விசாரணையில்
கண்டுபிடிக்கிறார் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன்

நெஞ்சை பதற வைக்கும் சீரியல் கில்லரின் கொலைவெறிச் செயல்களைத் தடுக்கிறதா, கொலைகாரன் உண்மையில் யார், ஏன் இந்தக் கொலைகள் நடக்கின்றன என்பதை
அருமையாக சொல்லி இருக்கிறது படம்.
படத்தை முடித்த விதம் மிக அருமை நெஞ்சை தொடுகிறது
நல்ல ஒரு கிரைம் திரில்லர் படத்தை பார்த்த திருப்தி ஏற்படுகிறது அதோடு மனித நேயம் எவ்வளவு முக்கியம் என்பதையும் படம் அழகாக சொல்லி இருக்கிறது தயாரித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும், கிரியேட்டிவ் புரொட்யூசராக, சிறப்பாக செயல்பட்ட இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🌷

: நவீன் சந்திரா
அசிஸ்டன்ட் கமிஷனர் அரவிந்தனாக,
நவீன் சந்திரா நன்றாக நடித்திருக்கிறார்
ஆரம்பம் முதல் முடிவு வரை கொலைகாரனை கண்டுபிடித்தே தீருவது என்று அவர் எடுக்கும் முயற்சியும் முகத்திலே எந்த புன்னகையும் இல்லாமல் கோபமான மனிதராக நடித்திருப்பது அவர் நடிப்புக்கு ஒரு சபாஷ் போடலாம்

: அபிராமி
: ட்வின்ஸ் பேர்ட்ஸ்
என்ற பள்ளியில் நடத்தி வரும் தாளாளர் சாந்தி என்ற கதாபாத்திரத்தில் அபிராமி நன்றாக பொருந்தி போகிறார் அவர் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது

திலீபன்

சப்-இன்ஸ்பெக்டராக மனோகரன் என்ற கதாபாத்திரத்தில் தாயை இழந்த குழந்தைக்கு ஆதரவாக நடித்திருக்கிறார் கொலைகாரனை கண்டுபிடிப்பதில் நவீன் சந்திராவுடன் கடைசி வரை உடன்
நின்று நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்

ரேயா ஹரி

சஞ்சனா என்ற வேடத்தில் நவீன் சந்திராவை ஒரு தலையாக காதலிக்கும் இவர் படத்தின் கதைக்கு பக்கபலமாக கிளைமாக்ஸ் கட்சியில் வருகிறார் டூயட் இல்லை என்றாலும் அழகாக இருக்கிறார் அம்சமாக வந்து போகிறார்
தயாரிப்பாளரில்
இவரும் ஒருவர்

மற்றும் இப்படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தில் ரித்விகா, ஆடுகளம் நரேன், ரவிவர்மா,
அஜய், கிருத்தி தாமுராஜ், ஷஷாங்
ஆகியோர் சிறப்பாக நடித்தி ருக்கிறார்கள்

இசை

இமான் இசையில் மூன்று பாடல்கள் முத்தாக இனிக்கிறது ஆண்ட்ரியா பாடி உள்ள தமுகு பாடல்
ஹாலிவுட் ஸ்டைலில் அசத்தலாக இருக்கிறது
பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இமான்

: Creative Producer – Prabu Solomon

ஒளிப்பதிவாளராக
கார்த்திக் அசோகன் இரவு நேரப்படிப்பு திகில் ஊட்டும் வண்ணம் படமாக்கி இருக்கிறார்
காட்சிகள் ஒவ்வொன்றும் ரிச் ஆக இருக்கிறது.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் என். பி
படம் விறுவிறுப்பாக பரபரப்பாக செல்வதற்கு இவரது படத்தொகுப்பு நன்றாக உதவி இருக்கிறது

ஆர்ட் டைரக்டராக
பி .எல் சுபேந்தர் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார் பள்ளியில், நாயகனும் நாயகமும் சந்திக்கும் அந்த ரெஸ்டாரண்டில்,
காவல்துறை அதிகாரிகள் அலுவலகம் என எல்லா இடங்களிலும் ஆர் ட்டைரக்டர் கைவண்ணம் பளிச்சிடுகிறது.

சண்டைக் காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைத்திருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சி அனல் பறக்கிறது.

காஸ்ட்யூம் டிசைனர்
கிருத்திகா சேகர்

மற்றும் திரைக்குப் பின்னால் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்

Lyrics – Kabilan, Vishnu Edavan, Lokkesh Ajls
Singers – Mano, Shruthi Hassan & Jonita Gandhi

Sound designer – Rajakrishnan
Color by – Red Chillies.color
Colorist – Tushar Jadhav
Production Executive – Hakkim Sulaiman
Production manager – M.Udhayakumar, Stalin Jesuraj, D.Rajasekaran
Stills – Amir

ஆகியோருக்கு வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்திற்காக கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள் .

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள்
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்

இயக்குனர்

இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் இவர்
‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இயக்குனர் சுந்தர். சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் நன்றாக தெரிகிறது ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதித்திருக்கிறார் இடைவேளை வரை யாரென்று யூகிக்க முடியாத ,சைக்கோ கொலைகாரனை காவல்துறை அதிகாரி தேடும் படலம். இடைவேளைக்குப் பிறகு அப்படியே கதை மாறி ஒரு மனிதநேயம் உள்ள நெஞ்சை தொடும் காட்சிகளுடன் முடித்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம் கிளைமாக்ஸ், டுவிஸ்ட் யாரும் எதிர்பாராதது.

மொத்தத்தில் இந்த லெவன்” ஒரு கிரைம் திரில்லர் படமாக வந்து வெற்றி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என எல்லா மொழிகளிலும் வெற்றி படமாக அமையும் வாழ்த்துக்கள் 🌷🙏

Comments (0)
Add Comment