மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கி யுள்ளபடம் ஏஸ்
இப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறா *‘ஏஸ்’ ( ACE).
ஒரு மாபெரும் வெற்றி படமாக வந்திருக்கிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
கதை களம்
பழைய அடையாளங்களை மறந்து சாதாரண மனிதனாக வாழ போகிறேன் என்று மலேசியா வரும்
போல்ட் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி,
மலேசியாவுக்கு என்ட்ரி ஆகிறார்.
அங்கு அவர் ஏன் வந்தார் ,என்ன நடந்தது என்பது சஸ்பென்ஸ்!
நாயகி ருக்குமணியை சந்திக்கிறார் மோதலுக்கு பின் காதலாகிறது
வளர்ப்பு தந்தையால் நாயகி படும் வேதனையை தீர்த்து வைக்கிறார்.
சமையல்காரனாக ஒரு ஓட்டலில் வேலை செய்கிறார் கல்பனா என்ற அந்த முதலாளிக்கு ஏற்படும் பண பிரச்சினை தீர்த்து வைக்கிறார்.
அறிவு என்கிற நண்பன் யோகி பாபு
குப்பை பொறுக்கியாக இருக்கிறார் அவரை கோடீஸ்வரனாக
ஆக்குகிறார்.
உடன் சேர்ந்து பேங்கில் பணம் திருடுகிறார்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது போல விஜய் சேதுபதி நம்பியவர்கள் அனைவரும் காப்பாற்றுகிறார்
மலேசியா நாட்டில் அவருக்கு லாட்டரி சீட்டில் 40 கோடி ரூபாய் பணம் கிடைக்கறது
மலேசியாவின் பெரிய டானாக இருக்கும்
வில்லன் அவினாஷ் என்கிற தாதாவுடன் மோதுகிறார் முடிவில் அவரை வீழ்த்துகிறார்.
சூதும் வாதும் செய்யும் காமுகன்
பப்லு பிரித்திவிராஜை வீழ்த்துகிறார்.
இப்படி அமைதியான பார்வை, அநாயாசமாக நகரும் திறமை,
அசாத்திய வலிமை,
பளிச்சென்று உடை,
தீயோர் களிடமிருந்து நல்லவர் களை காப்பாற்றுவது என
விஜய் சேதுபதி கதாபாத்திரம் உருவாக்கி
காமெடியாக, கலகலப்பாக, ரசிக்கும் வண்ணம் இயக்குனர் படமாக்கி கொடுத்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
.
* விஜய் சேதுபதி
படத்தின் பலம் அவர்தான் இதுவரை இல்லாத அளவுக்கு அழகாகவும் ஸ்டைல் ஆகவும் நடித்திருக்கிறார் தான் யார் ?
என்பதை சொல்லாமல் கடைசி வரை யோகி பாபு உடன் அவர் செய்யும் அந்த லூட்டி
ருக்மணியுடன் செய்யும் காதல் , தர்மாவுடன் மோதல் ,
ராஜதுரை ஒரு செக் என ஸ்டைல் ஆக சீட்டு கட்டை விளையாடும் அந்த ஸ்டைல் புதிது
அவருக்கு களம் புதிது
முழுக்க ஒரு ஆக்சன் ஹீரோவாக அசத்தியிருக்கிறார்
அவரது காஸ்டியூம் மிக அழகாக இருக்கிறது
ஹேர் ஸ்டைல் அழகாய் இருக்கிறது ஒரு குறுஞ்சிரிப்பில் படம் முழுவதும் நம்மை கவர்ந்து சண்டை காட்சிகளில் வியக்கவைக்கிறார்
கிளைமாக்ஸ் காட்சியில் அவர் போடும் பிளான் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி
கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? என்ற கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார்
,யோகி பாபு
இன்னொரு கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்கு படம் முழுக்க விஜய் சேதுபதி உடன் வந்து பிசினஸ்மேன் என்று சொல்லிக்கொண்டு கல்பனாவை காதலித்து பிறகு குப்பை பொறுக்கியாக மாறி வில்லன் தர்மாவிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு வரும் இடமெல்லாம் சிரிக்க வைக்கிறார் அவர் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்
தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல வில்லன்களிடம் எப்படி கொள்ளையடித்தோம் என்பதையெல்லாம் அவரை உளறுவது வித்தியாசம்
ருக்மணி வசந்த்
மலேசியாவில் ஒரு ஓட்டலில் பணி புரியும் ருக்குவாக வளர்ப்பு தந்தையின் தொல்லைகளை தாங்க முடியாமல் அவஸ்தைகளை அனுபவிக்கும் சராசரி பெண்ணாக விஜய் சேதுபதி காதலித்து அவர் யார? என்று அறியும் முற்படும் கதாபாத்திரத்தில் அழகாக ஜொலிக்கிறார் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்
இவரது கதாபாத்திரம் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல விஜய் சேதுபதி நல்லவராக இருக்க வேண்டும் அதே சமயம் தன்னுடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைக்கும் கதாபாத்திரம் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்
திவ்யா பிள்ளை,
ஹோட்டல் நடத்தும் கல்பனாவாக அழகான இளமையான தோற்றத்தில் காட்சி தருகிறார் யோகி பாபுவுக்கு காதலியாக வருகிறார் கிளைமாக்ஸ் காட்சியில் இவர் கொள்ளை அழகு
பால் சுன்டினாலும்
சுவை சுண்டுமா?
என்பது போல இவர் கதாபாத்திரம் இறுதி என்றாலும் கொள்ளை அழகு ரசிக்க வைக்கிறது
பப்லு பிரிதிவிராஜ்
நீண்ட இடைவெளிக்கு பிறகு காம்பேக்ட் கொடுத்திருக்கிறார் வில்லத்தனத்தில் பிரமாதமாக மிரட்டி இருக்கிறார்
நாயகி ருக்மணிக்கு இவர் கொடுக்கும் தொந்தரவு கொடூரமாக இருக்கிறது
விஜய் சேதுபதி கிளைமாக்ஸில் இவருக்கு வைக்கும் செக் அடடா !என்று சொல்ல வைக்கிறது
காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் பேய் என்பதைப் போல காமுகன் ஆன இவருக்கு பெண்களை காணும் போதெல்லாம் காமம் ஏற்படுவது வித்தியாசமான நடிப்பு
சகதியில் கல்லை விட்டு இருந்தால் தன் மீது தான் தெறிக்கும் என்பதற்கு இவர் கதாபாத்திரம் ஒரு உதாரணம்.
அன்னமிட்ட வீட்டிலே கண்ணமிட பார்க்கும்
இவர் கதாபாத்திரம் கடைசியில் அழியும் என்பது தெரியும் ஆனால் விஜய் சேதுபதி எப்படி இவருக்கு செக் வைக்கிறார் என்பது சுவாரசியம்
பி.எஸ். அவினாஷ்
மலேசியா கேங்ஸ்டர் தர்மா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்
இவர் வரும் காட்சிகளில் செம மிரட்டலாக
நடித்திருக்கிறார்
ஒரு படத்துக்கு வில்லன் ஸ்ட்ராங்காக இருந்தால் ஆக்சன் ஹீரோ அசத்த முடியும் என்ற பாணியில் விஜய் சேதுபதிக்கு செம டப் கொடுத்திருக்கிறார்
எட்டினால் குடுமியை பிடி !எட்டா விட்டால் காலை பிடி! என்பதை போல படம் முழுக்க யோகி பாபு வையும் விஜய் சேதுபதியும் துரத்திக் கொண்டே இருக்கிறார்
முடிவு
உரலில் அகப்பட்ட உலக்கை போல ”
விஜய் சேதுபதியின் சூப்பர் பிளானில் சூறாவளியாக சிக்கி சின்னா பின்னம் ஆகிறது நடிப்பு சூப்பர்!
மற்றும்
முத்துக்குமார்
ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
அனைவரும் நடிப்பு சிறப்பாக இருக்கிறது
கரண் வி. ராகவத்
ஒளிப்பதிவு மலேசிய நாட்டின் அழகை அற்புதமாக அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி மலேசியாவை சுற்றி காண்பிக்கவில்லை ஒவ்வொரு காட்சியும் கண்களை கவரும் வண்ணம் அற்புதமாக இருக்கிறது இயக்குனருக்கு நகையும் சதையும் போல நல்ல ஒத்துழைப்பை கொடுத்து படத்தின் வெற்றிக்கு வித்திட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வாழ்த்துக்கள் சார்
பாடல்கள் ஜஸ்டின் பிரபாகரன் தித்திக்கும் தேன் கண்டாக இரண்டு மெலோடி பாடல்கள் ரசிக்க வைக்கிறது
பின்னணி இசை:சாம் சி. எஸ்
மிரட்டி இருக்கிறார் காந்தமும் ஊசியும் போல படத்திற்கு என்ன இசை அவ்வளவு அற்புதம்
பென்னி ஒலிவர்
இவரின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது ருக்மணி வசந்த் வரும் காட்சிகளில் விஜய் சேதுபதி வரும் காட்சிகளில் எந்த இடத்தில் நறுக்குவது எந்த இடத்தில் ஒட்டுவது என்று ரசித்து ரசித்து படத்தொகுப்பு செய்திருக்கிறார்
நிறைகுடம் போல இவரது பணி இருக்கிறது
ஆர்ட் டைரக்டர் ஏ.கே முத்து
யோகி பாபு ரூமை விஜய் சேதுபதி சுத்தம் செய்து நவீனமாக்கும் அந்த காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது ஆர்ட் டைரக்டரின்
அழகுப் பணி ஒவ்வொரு இடமாக அவரது கை வண்ணம்
கரும்பு தின்ன கைக்கூலியா? என்பதைப் போல இயக்குனருடன் இணைந்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர்
மற்றும் இப்படத்திற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்
Action Director : Dinesh Subbarayan, Don Ashok, Ricky, James Chun
VFX : Pixel Light Studio Pvt Ltd
SFX : Alagia Koothan
Costume Designer : Sapna Kalra
Lyricist : Karthik Netha, Emcee Jesz, Vetti Payan Venkat
Choreography : Raju
Sundaram, Kalyan, Leelavathi
Direction Team : Rajesh Ethiraj, A.Chellavel Pandiyan, Ashwin Sakthivel, S.Sivam, Joan
Exective Producer : Kannan Sethuram
Line Producer Malaysia : Denes Kumar
Line Producer : Yogesh Ramanchandran
மற்றும் உடைய அலங்கார நிபுணர் திவ்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி அவர்களை இவ்வளோ அழகாக காட்டி ரசிக்க வைத்திருக்கிறீர்கள் ருக்மணி வசந்துக்கு அருமையான உடை வடிவமைப்பு யோகி பாபு கலக்கலான ஆடை வடிவமைப்பு கல்பனா கதா பாத்திரத்திற்கு
கவர்ச்சியான உடை அமைப்பு விலங்களுக்கு சிறப்பான உடைமைப்பு என இந்த படத்திற்காக நன்றாக மெனக்கெட்டு இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
Marketing & Promotion : DEC
Stills : Anand
Publicity Designs
என இப் படத்திற்காக
உழைத்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மக்கள் தொடர்பாளர் யுவராஜ்,
இந்த படத்தை நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
ஆறுமுக குமார் ஒரு நல்ல ஜாலியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிறைந்த படத்தை கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி அவர்களுக்கு எப்படி ஒரு படம் கொடுத்தால் மக்கள் ரசிப்பார்களோ அதை மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்ற கதையை தேர்வு செய்து
மலேசியாவில் படபிடிப்பு என மெனக்கெட்டு படம் எடுத்திருக்கிறார்
நடிகராகவும் ஆரம்பத்தில் மற்றும் படத்தின் முடிவில் வந்து போகிறார்
யோகி பாபு சரியாக கையாண்டு படத்திற்கு கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்
ருக்மணி வசந்த் அருமையான தேர்வு மலேசிய பெண் போல நடித்திருக்கும் இவர் நடிப்பு ரசிக்க வைக்கிறது
வில்லன் தேர்வு கனக்கச்சிகள்
சிங்கத்தின் கூட்டத்தை சிறு நரி வளைத்தது போல மலேசியாவில் இருக்கும் பெரிய தாதாவை விஜய் சேதுபதி எப்படி அளித்தார் என்ற ஒற்றை லைனுடன் ஓங்கி அடித்திருக்கிறார் இப்படம் ரசிகர் மனதில் இடம் பிடிக்கும் தடம் பதிக்கும் வாழ்த்துக்கள் இயக்குனருக்கு🌷🙏