வயநாட்டில் வாழும் பழங்குடி சமூகத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் நரிவேட்டை.
அதிலும் பெரும்பாலும் இன்வெஸ்டிகேட்டிவ் ஜானர் படங்களில் நடிக்கும் டோவினோ தாமஸ் இப்படத்தினை தேர்வு செய்ததற்கே சபாஷ் போடலாம். தேவையான இடங்களில் எமோஷனல் மற்றும் அதிரடியாக நடித்து தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பை
வழங்கி இருக்கிறார் வாழ்த்துக்கள் சார்
ஒரு ஹீரோ இப்படி ஒரு கதையை தேர்வு செய்து நடித்ததற்காக
இவரின் மேலதிகாரியாக வரும் சேரனுக்கு முதல் மலையாள படம் என்றாலும் படத்தில் அவருடைய பங்கை சரியாக செய்து விடுகிறார். இன்னொரு பலம் சூராஜ் வெஞ்சரமூடு. நடிப்பில் ஏற்ற இறக்கங்களை சரியாக அமைத்து பலம் சேர்த்து இருக்கிறார்.
இந்த மூவரும் படத்தை தூக்கி நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளனர்
: கதை களம்
காட்டில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களுடைய இருப்பிட தேவைக்காக சின்ன சின்ன போராட்டங்கள் அரசாங்கத்திடம் செய்து வருகிறார்கள்.
அதுதான் படத்தில் மெயின் கதையாக மாறப்போகிறது என்பதை இயக்குனர் லீடு கொடுத்து இருக்கிறார்
நாயகன் கையில் ஒரு பையுடன் தலைமறைவாக இருக்கிறார். இவரை போலீஸ் தேடுகிறது அங்கிருந்துதான் பிளாஷ்பேக்கை தொடங்குகிறது
என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுகிறது
டொவினோ தாமஸ்
அரசு உயர் அதிகாரியாக வேண்டும் ஆசை படுகிறார். அதற்காக கிடைத்த சின்ன சின்ன வேலைகளை வேண்டாம் என்கிறார் ஆனால் அவர் அம்மா கஷ்டப்படுவதை பார்த்து காதலி நீ வேலைக்கு போக வேண்டும் என்று கட்டளை இடுகிறார். இதனால் கிடைத்த கான்ஸ்டபிள் வேலைக்கு டொவினோ செல்கிறார். அந்த வேலையில் விருப்பமே இல்லாமல் பணியை தொடங்குகிறார்
பிடிக்காத வேலை பிடிக்காத யூனிபார்ம் என டொவினோ தாமஸ் விருப்ப மில்லாமல் செய்கிறார். பஷீர் அவருக்கு ஆறுதல் சொல்லி அவரை பணியில் செய்யச் சொல்கிறார்
வயநாடு சென்ற பிறகு பாரஸ்ட் மக்களில் ஒருவரை டொவினோ அடிக்கிறார். பெரிய உயர் அதிகாரியான சேரன் டொவினோவை கண்டிருக்கிறார். டோவினாவுக்கு பக்க பலமாக பசீர் நிற்கிறார்
டொவினா சோர்ந்து போகும் இதெல்லாம் அவர் தோளைத் தட்டி அவரை உற்சாகப்படுத்துகிறார் நல்ல நண்பனாக வலம் வருகிறார்.
அமைச்சரும் அரசு அதிகாரிகளும், மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சின்ன பிரச்சினை பெரிய பிரச்சினையாக வெடிக்கிறது பசீர் காணாமல் போகிறார்.
அந்த இடத்தில் தான் டொவினோ வாழ்க்கையே மாறுகிறது. இதனால் பல சம்பவம் நடக்கிறது. இறுதியில் போலீஸ் ஏன் டொவினோவை தேடுகிறது? மலைவாழ் மக்கள் ஊரில் என்ன நடந்தது? டொவினோ தன் கனவை வென்றாரா?
தன் நண்பன் பஷீரை கொண்டவர்கள் யார்? என்று கண்டுபிடித்து தண்டனை வாங்கி தந்தாரா?
என்பது தான் படத்தின் மீதி கதை. நாயகன் டொவினோ தாமஸ்
தான் ஒரு பெரிய ஹீரோ என்று வளர்ந்து வரும் நிலையிலும் இப்படி ஒரு மக்களுக்கான கதையில் நடித்திருப்பதற்காக அவருக்கு ஒரு சல்யூட் போடலாம். அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடி சமூகத்தின் மக்களுக்காக ஆரம்பத்தில் எதிராக டொவினோ கான்ஸ்டபிள் கதாபாத்திரம் காட்டப்படுகிறது கடைசியில் அவர்களுக்கு நீதியை வாங்கி கொடுத்து கம்பீரமாக உயர்ந்து நிற்கிறார். நடிப்பு அற்புதமாக இருக்கிறது
இயக்குனர் சேரன்
உயர் அதிகாரியாக சேரன் மாஸ் காட்டி இருக்கிறார். அவர் ஆரம்பத்தில் நல்லவன் போல் நடித்தாலும் அமைச்சர்களுக்கு அடிபணிந்து மலைவாழ் மக்கள் மீது ஏவப்படும் அம்பு போல செயல்பட்டு இருக்கிறார் டொவினாவின் நண்பன் பஷீருக்கு உயிருக்கு உலை வைக்கும்
அந்த கதாபாத்திரம் கொஞ்சம் குள்ளநரித்தனமாக இருந்தாலும் கதைக்காக ஒரு அப்படி நடித்திருக்கிறார் நடிப்பு மாஸ்
சுராஜ் வெஞ்சரமூடு
படத்திற்கு மற்றொரு பலமாக சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார். சிறிது நேரமே அவரது கதாபாத்திரம் வந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
வெட்ட வெளியில் பணியில் படுத்துக்கொண்டு தன் வீட்டைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று சொல்லும் அந்த கதாபாத்திரம் எதார்த்தமானது போலீஸ் துறையில் சில சகிப்புத்தன்மை களை தாங்கிக் கொள்ளச் சொல்லும் டொவினாவுக்கு அறிவுரைகூறும்
இந்த பசீர் நடிப்பு அற்புதமாக இருக்கிறது
தொழில் நுட்ப கலைஞர்கள்
ஜேக்ஸ் பிஜோய் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்.
இயக்குனர்
மலையாளத்தில் அத்தி பூத்தார் போல் இப்படி ஒரு கதை தேர்வு செய்து அதை திறம்பட இயக்கி உள்ளனர்.
படத்தின் காதல் காட்சிகள், பாடல்கள் போன்றவை பலம்
முதல் பாதியைவிட. இரண்டாம் பாதியில் மிகவும் அட்டமாசமாகவும், மனதை உலுக்கும் உணர்வுபூர்வமான கதையாக இருக்கிறது.
தியேட்டரில் இருந்து வருபவர்களுக்கு கிளைமாக்ஸ் காட்சி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
ஒளிப்பதிவாளர் மிரட்டி இருக்கிறார் பசுமையான பள்ளத்தாக்கு வயநாட்டு பகுதி என ஒவ்வொரு பிரேம் அவர் கடின உழைப்பு நன்றாக தெரிகிறது நரி வேட்டை பாடலுக்கு அற்புதமாக படமாக்கி இருக்கிறார் ஆரம்பக் காட்சியில் டொவினோ
தப்பித்து ஓடும் பொழுது கேமராவும் அதனை தொடர்ந்து பயணிக்கிறது ஒளிப்பதிவாளர் படத்தின் பலம்
கதைக்களம் நன்றாக இருக்கிறது இது போன்ற கதைகள் வரும்பொழுது பாவப்பட்ட ஏழை மக்கள் மீது மக்களுக்கு அவர்கள் வாழ்க்கையை பற்றி தெரியும்
நல்ல மெசேஜ் உள்ள படம் வெறும் ஆடம்பரம் வெட்டு குத்து காபரே நடனம் என்று இல்லாமல் நல்ல கருத்து சொல்லி இருக்கிறது இந்த படம்
ஒளிப்பதிவு, இசை,
படத்தொகுப்பு, ஒப்பணையாளர்,
நடிகர் நடிகைகளின் ஆடை தேர்வு,
மற்றும் ஆர்ட் டைரக்டர்,
என
டெக்னிக்கல் சைடு அருமையாக இருக்கிறது
கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது மனதில் இடம் பிடிக்கிறது
படத்தினுடைய முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும் இடைவேளைக்கு பிறகு படம் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
இருந்தாலும் படத்தின் நல்ல கருத்துக்காக இதை மறந்து விடலாம்
காதல் காட்சிகள் தேவையா என்பது போல தான் இருக்கிறது
ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காதலி காதலன் கையைப் பிடித்துக் கொண்டு உனக்கு என்ன சரி என்று தெரிகிறதோ அதை செய் என்று சொல்லும்போது இப்படி ஒரு உத்வேகமான காதலி தேவைதான் என்று சொல்லத் தோன்றுகிறது
மொத்தத்தில் நரி வேட்டை – சிறப்பான வேட்டை
மனிதர்களை வேட்டையாடும் அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் இவர்களை குறி வைத்து டொவினோ தாமஸ் ஆடும் இந்த வேட்டை சிறப்பான வேட்டை மிகப்பெரிய வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்
இந்த படத்திற்கு மக்கள் தொடர்பாளராக ரியாஸ் அவர்களும் பாராஸ் ரியாஸ் அவர்களும் சிறப்பாக செயல்பட்டு இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏🌷