*வேம்பு* திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார்
பெரியார் கண்ட பெண் கல்வி பற்றிய
படமாக வந்திருக்கிறது.

இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்
வெற்றி என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து இளைஞனாக
வேம்புவை மணந்த பிறகு அவர் அனுபவிக்கும் இன்னல்களை தன் முகபாவம் மூலம் அற்புதமாக காட்டியிருக்கிறார் ஹரி இந்த படம் மூலம் ஒரு நல்ல நிலையை வெட்டுவார்

,
திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
வேம்பு என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் கிராமத்து பெண்ணாக தன் அப்பாவுக்கு கட்டுப்பட்டு படிப்பை விட்டு திருமணம் செய்து கொண்டு சராசரி கிராமத்து மனைவியாக குடும்பத்தை கொண்டு செல்லும் ஒரு வாழ்வியல் கதாபாத்திரமாக கண்முன் நிற்கிறார் வேம்புவாகவே மாறி நம் இதயத்தில் இடம் பெறுகிறார்

மற்றும் இப்படத்தில் நடித்த கலைஞர்கள்
மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அணைவர் நடிப்பும்
எதார்த்தமாக உயிரோட்டமாக இருந்தது

*கதை களம்*

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ஒரு பசுமையான கிராமம் அங்கு
நடக்கும் மனிதர்களின் எதார்த்தங்களை கதையாக இப்படத்தில் கதையாக
சொல்லியிருக்கிறார் இயக்குனர்
வாழ்த்துக்கள் சார்.

பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் பாரமாக நினைக்கும் இந்த உலகத்தில் கூலி வேலை செய்யும் வெள்ளையன் தன் மகளை ஆண் போல நினைத்து வளர்க்கிறார் அந்த பெண்ணுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து தற்காப்பு கலையில் முன்னுரிமை கொடுத்து வளரக்க
வேம்புவும், அப்பாவுக்கு ஏற்ற பெண்ணாக படிப்பிலும் சிலம்பு சண்டையிலும், தன்னை முன்னுக்கு கொண்டு வருகிறார்.

ஹரி (வெற்றி )போட்டோ ஸ்டுடியோ நடத்தி அதன் மூலம் வருகின்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் டைகர் என்னும் சிறுவனை உதவி க்கு தன்னோடு வைத்திருக்கிறார்
தன் மாமன் மகள் வேம்பு வை உயிருக்கு உயிராக காதலிக்கிறார் வேம்பு இவரை காதலிக்கிறார் ஆனால் வேம்புவுக்கு
அரசு வேலைக்கு போக வேண்டும் என்பது கனவு.

அந்த கனவை கலைத்து அவரது அப்பா அவரை ஹரி என்னும் வெற்றிக்கு திருமணம் செய்து வைக்கிறார் அதன் பிறகு தான் கதை களம் அப்படியே மாறுகிறது
:பெண் தன்னையே பாதுகாத்துக் கொள்தல், கூடவே அரணாக நிற்கும் சரியான ஆண் துணை பற்றிய நிகழ்வுகளுடன் இப்படம் நகர்கிறது

இடைவேளை வரை அன்பான அப்பா, அப்பாவுக்கு கட்டுப்படும் மகள், நல்ல அத்தை குடும்பம், மாமன் ஹரி ,செங்கல் சூலையில் வேலை செய்யும் வெள்ளையனுக்கு உதவி செய்யும் முதலாளி இப்படியெல்லாமே பாசிட்டிவாக போகிறது இவர்கள் வாழ்க்கையில் என்ன வரப்போகிறது
இன்று எதிர்பார்ப்பை உண்டாக்கி
இருக்கிறார்
இயக்குனர்.

படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் பாஸிட்டிவ் நிறைந்த
கதாபாத்திரங்களாக காட்ட முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் பிரபாகர்.
தற்காப்பு கலை சொல்லிக் கொடுத்து வளர்க்கும் அப்பா.

அரசு வேலைக்கு போக வேண்டும் என்று நினைக்கும்
மகள்.

கணவனுக்கு பார்வை பறிபோணாலும் தன்னம்பிக்கை இழக்காத மனைவி

வீட்டில் வறுமை சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லை ஆனாலும் போராடும் பெண்

கணவனின் போட்டோ ஸ்டுடியோவை கையில் எடுக்கும் துணிச்சல்

வேம்புவை, சிலம்பம் போட்டியில் ஜெயிப்பதற்கு பந்தயத்திற்கு
செங்கல் சூளை முதலாளி

வேம்புவுக்கு, நகராட்சியில் சிலம்பம் கற்றுத் தரும் வாத்தியார் வேலையை போட்டுக் கொடுக்கும்
எம்எல்ஏ மதியழகன்
(மாரிமுத்து)

இப்படி படம் முழுக்க பாஸ்டிவ் வைப் ஏற்படுத்தி படம் பார்ப்பவர்களை மனம் முழுக்க பாசிட்டி வைப் ஏற்றி இயக்குனர் சிந்திக்க வைக்கிறார்

இயக்குனர் பெரியார் கண்ட கனவான பெண் கல்வியை கையில் எடுத்து ஒரு அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறார் இதில் நடித்த ஹரி, மற்றும் ஷீலா, ஜானகி, வெள்ளையன் ஆக நினைத்திருக்கும் ஜெயராவ், மாரிமுத்து என அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

தனுஷ் நடித்த ‘தங்க மகன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த A. குமரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பசுமை நிறைந்த கிராமத்தை
தன் கேமரா கோணம் மூலம் அழகாக படம் பிடித்திருக்கிறார்

‘அதோ முகம்’, G.V.பிரகாஷ் நடித்த ‘ரபேல்’ படத்திற்கு இசை அமைத்த மணிகண்டன் முரளி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
மஞ்சனத்தி பாடல் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை உருக வைக்கிற து

‘மிருதன்’ படத்திற்கு படத் தொகுப்பு செய்த KJ . வெங்கட்ரமணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.
படத்தொப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் விறுவிறுப்பு குறையாமல் லேக் ஆகாமல் கச்சிதமாக படத்தை தொகுத்திருக்கிறார்

‘துணிவு’, ‘வலிமை’ போன்ற முன்னணி படங்களில் பணிபுரிந்த ராம்ஜி சோமா இப்படத்திற்கு ஒலிக்கலவை செய்துள்ளார்.

மற்றும் : இப்படத்தில் பணிபுரிந்த ஒப்பனையாளர்,
ஆடை வடிவமைப்பாளர்,
அரங்க அமைப்பாளர்,
மற்றும் கலர் கரெக்ஷன் செய்த
பணியாளர் ,
காஸ்ட்யூம் டிசைனர்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக பணிபுரிந்துள்ள ஏ ஜான் அவர்களுக்கும் வாழ்த்துங்கள்

படத்தை வெளியிடும் உத்ரா புரொடக்சன்ஸ்
ஹரி உத்ரா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🌷🙏

Comments (0)
Add Comment