கெவி திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

ஆத்யக் புரொடக்சன்ஸ் சார்பில் “கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மண்டேலா, பேட்டைக்காளி புகழ் ஷீலா ராஜ்குமார் மற்றும் விஜய் டிவி புகழ் ஜாக்குலின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். அறிமுக நடிகர் ஆதவன் இந்த படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் படத்தில் வில்லனாக நடித்த சார்லஸ் வினோத், தர்மதுரை புகழ் திருநங்கை ஜீவா ஆகியோர் நடித்துள்ளனர்

மனதை உலுக்கும் வகையில் இப்படத்தின் கதை களம் அமைந்துள்ளது படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்🌷

கதை களம்

படத்தின் ஆரம்ப காட்சியில், மண் சரிவு ஏற்பட்டு ஐந்து உயிர் பறி கொடுத்த வெள்ளக்கெவியை சார்ந்த மக்கள் கொதிக்க, அப்போது எம்.எல்.ஏ ஓட்டு கேட்க வருகிறார்.

எங்களுக்கு சாலை வசதி இல்லை,
மருத்துவ வசதிகள் இல்லை ,ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஓட்டு கேட்க வருகிறீர்களே என்று மலையன் காவல்துறை அதிகாரி நரசிம்மனை அடித்து விட, மலையனை
வஞ்சம் தீர்க்க நாள் குறிக்கும் நரசிம்மன்

மனைவி மந்தாரைகாக சீமந்தம் செய்ய பெரியகுளம் சென்று காய் கறி வாங்க மலையன் போய் விட்டு மலையேறும் போது நரசிம்மன் தலைமையில் மலையன் தாக்க பட,
இப்போது மந்தாரைக்கு பிரசவ வலி ஏற்பட,
காவல் துறை நடத்திய தாக்குதலில் இருந்து மலையன் தப்பித்தாரா?

பிரசவ வலியால் துடித்துக் கொண்டு இருந்த மந்தாரை ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள
மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாரா?

மருத்தவ வசதி இல்லாத கிராமத்தில் உள்ள மக்கள் நிலை என்ன?என்பதை சொல்கிறது கெவி

கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவர்கள்

ஷீலா

நல்ல நல்ல கதாபாத்திரத்தில் நடித்து நம் மனதில் இடம் பிடித்த ஷீலா இப்படத்தில் “மந்தாரை என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்
படம் முழுக்க கணவர் மீது காட்டும் அக்கறை,அன்பு,
அதன் பிறகு பிரசவ வலியால் துடிக்கும் துடிப்பு கல் மனதையும் கறைய வைக்கும்
சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் விருது கொடுத்து கௌரவிக்க பட வேண்டும்
வாழ்த்துக்கள் மேம் 🌷

ஆதவன்

மலையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதவன் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்
மலை கிராமத்து நாயகனாக,
பொருந்தி போகிறார்
இடை வேளைக்கு பிறகு காவல் துறை அதிகாரிகளிடம் சிக்கி சின்னா பின்னமாகி எப்படியாவது அவர் தப்பி விட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர் பார்க்க வைத்தது இந்த கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றி
கடுமையாக உழைத்து இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் உருக வைத்து விடுகிறார்

ஜாக்குலின்

மனித நேயம் மிக்க
இளம் மருத்துவராக
சரோ”என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்
குழந்தை,தாய் இருவரையும் காப்பாற்ற அவர் துடிக்கும் துடிப்பும் உருக வைக்கிறது

சார்லஸ் வினோத்

நரசிம்மன் என்ற காவல் துறை அதிகாரி வேடத்தில்
செமயா ஸ்கோர் செய்திருக்கிறார்
குள்ளநரி தனமாக வஞ்சம் வைத்து மலையனை புரட்டி புரட்டி ,வெளுத்து வாங்கும் காட்சிகள்
மனம் வலிக்கும்
இது தான் இந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி

விவேக் மோகன்

மந்தாரை தம்பியாக,
மலையன் மச்சான் ஆக, கடுக்கன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்
படம் முழுக்க அக்கா பிரசவ நேரத்தில் மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்று அழுவது, துடிப்பது என நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் வெல்டன் சார்!

மற்றும்

மனித நேயம் உள்ள செவிலித்தாயாக ஜீவா மிளிர்கிறார்
என்னால் குழந்தை பெற்று கொள்ள முடியாது அதனால் தான் இந்த மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தை எல்லாம் என் குழந்தை போல நினைக்கிறேன் என்று அவர் பேசும் வசனம் சூப்பர்!

மனித நேயம் இல்லாத மருத்துவராக காயத்ரி,
,
ஊர் மக்களில் ஒருவராக உமர் பாரூக், சுப்ரமணியன்
ஜெகத் ராமன்,
அபிமன்யு மீணா
போன்றவர்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது

ஓட்டு கேட்க வரும் எம்.எல். ஏ
காம்பவுண்டராக வரும் மீனாட்சி,
நல்ல காவல் துறை அதிகாரியாக வரும் பழனியப்பன்,
ஆம்புலன்ஸ் டிரைவர்,
குழந்தையும் தாயையும் காப்பாற்ற துடிக்கும் ஊர் மக்கள்
போன்ற கதாபாத்திரங்கள்
படத்தை உயர்த்தி பிடிக்கிறது அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள

தொழில்நுட்ப கலைஞர்கள்

: இந்த படத்திற்கு
ராசி தங்கதுரை வசனம் எழுதி இருக்கிறார்
வசனம் மலை கிராமத்து மக்கள் வலியை சொல்லும் விதமாக அற்புதமாக இருக்கிறது.

இந்தப் படத்துக்கு ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்கிறார்.
அவ்வளவு சிறப்பாக
இருக்கிறது.
எவ்வளவு கஷ்டப்பட்டு கேமரா சுமந்து கொண்டு மலை மீது படமாக்கி இருக்கிறார் என்பதை என்னும் போது வியக்க வைக்கிறது
படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவு பலம்

பாலசுப்பிரமணியன் இசையமைத்து இருக்கிறார்

ஆரம்பம் முதல் முடிவு வரை இசை மிரட்டல் மற்றும் உருக வைத்து விடுகிறார் இசை அமைத்துள்ளார் இப்படத்தில் உச்சம் தொடுகிறார்.

இயக்குநர் தமிழ் தயாளன்

: ‘கெவி’ என்றால் அடிவாரம் அல்லது பள்ளம் என்று பொருள். மலை எப்போதுமே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் இன்னொரு இருட்டுப் பக்கம் யாருக்கும் தெரியாது. இத்தனை ஆண்டு காலத் தமிழக வரலாற்றில் எத்தனையோ ஆட்சிகள் மாறினாலும் மலைக்கிராம மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு மலைக்கிராமத்தின் கதையை யதார்த்தமாகப் படமாக்கி இருக்கிறார் இதற்காக 3 வருடங்களாக இந்த மலைக்கிராம மக்களுடன் வாழ்ந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார்
அந்த மக்கள் மனதில் உள்ள வலி, வேதனைகளை சொல்லி இருக்கிறார்
ஒரு தரமான படைப்பை கொடுத்திருக்கிறார்
இந்த படம் மூலம் அந்த மக்கள் வாழ்வில் நல்ல மருத்துவம் சாலை வசதி கிடைக்கத் தால் அது இயக்குனரையே சாரும்.
வாழ்வியல் சார்ந்த படம் தந்து விழிகளில் நீரை வரவழைத்து இருக்கிறார்
வாழ்த்துக்கள் சார்

படத்தொகுப்பாளர் ஹரி குமரன் கச்சிதமாக இருக்கிறது

அறிவு மணி ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் அருமையாக இருக்கிறது.
சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது டான் அசோக் சன்டை பயிற்சியாளராக பணிபுரிந்து இருக்கிறார் வாழ்த்துக்கள்
இடை வேளைக்கு பிறகு ஆக்ஷன் அதகளம் பண்ணி இருக்கிறார்.
பாடல்கள் ரசிக்க வைக்கிறது உருக வைக்கிறது
கவிப்பேரரசு வைரமுத்து,அவர்கள் மற்றும் யுகபாரதி, விநாயகன், சந்தோஷ் எழுதி இருக்கிறார்கள் அதிலும் “ஒரு வார்த்தை பேசாமல் பாடல் மனதை தொடுகிறது.
பாடல்களை தேனிசை தென்றல் தேவா,
வைக்கம் விஜயலட்சுமி,
மது பாலகிருஷ்ணன்
மற்றும் லலிதா ஆகியோர் குரலில் மனதை கரைக்கும் வண்ணம் இருக்கிறது

மக்கள் தொடர்பாளர் A . ஜான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்.

மொத்தத்தில் இந்த கெவி மருத்துவ வசதி இல்லாத மலைவாழ் மக்களின் வேதனைகளை அவர்களின் உள்ள குமுறலை அவர்களின் வலியை
பதிவு செய்திருக்கிறது தமிழக அரசு இதுபோன்ற மக்கள் மீது கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்தால் இந்த படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்
🌷🙏

Comments (0)
Add Comment