அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் “ஜென்ம நட்சத்திரம் படத்தை இயக்கியுள்ளார்.
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்
கதை களம்
சாத்தானின் அரசன் லூசிபர் பூமியில் ஒரு குழந்தையாக அவதரிக்க வைக்கிறார்
அந்த குழந்தை பூமியில் யார் வீட்டில் பிறந்து வளர்கிறது? அது செய்யப் போகும் வேலை என்ன? என்பதை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பாராத வண்ணம் அதிர்ச்சி ஊட்டும் வண்ணம் சொல்லி இருக்கிறார்! அதுதான் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது.
“இத் திரைப்படம் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது,
.படத்தில் 666 இது தான் சாத்தான் அடையாளம்
அந்த குழந்தை எங்கே பிறந்தது? எப்படி இருக்கிறது? என்பதுதான் சஸ்பென்ஸ்!
நான்கு நண்பர்கள் அஜய்,வினோ, பிரகாஷ்,ஜனா இரண்டு நாயகிகள் ரியா,சுஜி என்று இதில் நாயகன் தமண் அஜய், என்ற கதாபாத்திரத்தில் உதவி இயக்குனராக படம் இயக்குவதற்கு பல கம்பெனிகளில் ஏறி இறங்குகிறார் .
அவருடைய காதலி ரியா அவர் கனவு காணுவது ஒரு தாயும் குழந்தையும் பேயாக வந்து மிரட்டுகிறார்கள்
அது ஏன்? என்று கிளைமாக்ஸ்சில் டுவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர் .
வினோவும் ,சுஜாவும் காதலிக்கிறார்கள் அவர்கள் திருமணம் செய்து கொள்வது தான் அவர்கள் இலக்கு .
அடுத்து ஜனாவுக்கு, பணத்தேவை இருக்கிறது. வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களில் இருந்து மீள பணம் ஒன்று தான் கை கொடுக்கும் என்று நம்புகிறார்.
அதற்காக அவர் எடுக்கும் முடிவு என்ன?
இவர்களுக்கிடையில் வேலாயுதம் என்ற கதாபாத்திரத்தில் அமைச்சர் வேலா ராமமூர்த்தி நடித்திருக்கிறார்
தேர்தலில் வெற்றி பெற தன் உதவியாளர்
காளி வெங்கட் ,எனும் ராஜேஷிடம் 57 கோடியை கொடுத்து பட்டுவாடா செய்ய சொல்கிறார் .
காளி வெங்கட்டுக்கு தன் மகள் திவ்யாவுக்கு மருத்துவ செலவுக்கு 10 லட்சம் தேவைப்படுகிறது வேலா ராமமூர்த்தியிடம் கேட்கிறார் அவர் கொடுக்க மறுக்கிறார்
இதனால் 57 கோடியை பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரும் ஒரு பழைய பங்களாவில் மறைத்து வைக்கிறார்
இதனால் ஆத்திரமடைந்த வேலாராமூர்த்தி, காளி வெங்கட்டை போட்டு தள்ளுகிறார்
காளி வெங்கட் நண்பர்களிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறார் இந்த விஷயத்தை ரியா, தன் காதலன் அஜயிடம் சொல்லும் பொழுது கிராஸ் ஸ்டாக்காக முனீஸ் காந்தும் , யாசரும் கேட்கிறார்கள்
அதன்பிறகு நண்பர்கள் கூட்டம் அந்த பணத்தை அடைய பழைய பங்களாவுக்கு போகிறார்கள்
அதை போனில் ஒட்டு கேட்ட கிராஸ் டாக் செய்த முனிஷ் காந்தும அவரது உதவியாளர் யாசர் அந்த பங்களாவுக்குள் போகிறார்கள் அங்கு என்ன நடந்தது சாத்தான் அவர்களை பணம் எடுக்க விட்டதா?
நாயகி ரியா கண்ட அந்த பேய் தாயும் குழந்தையும் இவர்களை என்ன செய்தது?
அங்கிருக்கும் ஒரு நாய் இவர்களை என்ன செய்தது?
நண்பர்கள் 4 பேரும் நாயகிகள் இரண்டு பேரும் உயிருடன் திரும்பி வந்தார்களா?
லூசிபர் மூலம் பூமியில் பிறந்த அந்த சாத்தானின் குழந்தை யார்?
என்பதை ஹாலிவுட் பாணியில் விறுவிறுப்பாக பரபரப்பாக சொல்லி இருக்கும் படம் “ஜென்ம நட்சத்திரம்”
தமன்
அஜய் என்ற வேடத்தில்துணை
இயக்குனராக, ஒரு படம் இயக்க வேண்டும் என்று கனவு காண்கிறார் அதே சமயம் நண்பர்களுக்கு ஒன்று என்றால் துடித்து போய் அவர்களுக்காக அந்த பாழடைந்த பங்களாவில் போராடுவது, சண்டை போடுவது, என விறுவிறுப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்
மால்வி மல்ஹோத்ரா
நாயகி
ரியா என்ற வேடத்தில் படம் முழுதும் ஒரு வித பீதியுடன் நடித்திருக்கிறார்
நடிப்பு ரசிக்கும்படி
இருக்கிறது
ஒரு தாயும் குழந்தையும் பேயாக வந்து இவரை மிரட்டுவது ஏன் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை!
மற்றும்
மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனைவர் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது ஒரு வெற்றி படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
இயக்குனர் பி.மணிவர்மன்
ஒரு நொடி என்கிற ஒரு அற்புதமான படத்தை கொடுத்தவர் இயக்குனர் மணிவர்மன்
அதேபோல இந்த ஜென்ம நட்சத்திரம் படத்தையும், விறுவிறுப்பாக சீராக இயக்கி, ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்
ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் வைத்து
அந்த சாத்தானின் குழந்தை யார்?
என்ற கேள்வியை எழுப்பி ஒரு வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறார்
பேய் படம் என்றாலே காமெடியாக தான் இருக்கும் என்ற நிலையை மாற்றி அச்சத்தையும் ஏற்படுத்தும் வண்ணம் சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள் இயக்குனர் சார்!
ஒளிப்பதிவாளர் கேஜி,
“பேய்ப்படம் என்பது ஒளிப்பதிவாளருக்கு சவாலான விஷயம்.
அதை சரியான சவாலில் படம் பிடித்திருக்கிறார் கதை பேய்
பங்களாவுக்குள் சென்ற பிறகு லைட்டிங் , திகில் அடைந்த காட்சிகள், எல்லாம் ஒளிப்பதிவாளரின் கைவண்ணம்
சிறப்பாக இருக்கிறது
எடிட்டர் குரு சூர்யா
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் பிசிறு தட்டாமல் சீராக செல்வதற்கு படத்தொகுப்பாளரின் கைவண்ணம் சான்று
இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம்,
பின்னணி இசையில்
மிரட்டி இருக்கிறார் சாத்தானை காட்டும் பொழுதும் ,தாயும் குழந்தையும் பேயாக வரும் பொழுதும் நாய், ஒவ்வொருவரையாக தாக்கும் பொழுதும், திடீர் திடீரென வரும் இசை மிரள செய்கிறது. வெற்றிக்கு பின்னணி, இசை முக்கியமான காரணம் என்று சொல்லலாம்
படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. அதில் டூயட் பாடலை சிநேகன் எழுத
சஞ்சய்,சின்மயி சேர்ந்து பாடியிருக்கிறார்கள் இன்னொரு பாடலை
அன்பழகன் எழுதி
சிவம் உச்சஸ்தாயியில் பாடியிருக்கிறார்
மற்றும் ஆர்ட் டைரக்டர் ராம், தன் பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.
ஒப்பனையாளர் விக்ரமாதித்தன் தன் பங்குக்கு மிக சிறப்பான பணியை செய்திருக்கிறார் சில காட்சிகளில் பேய் வரும் காட்சிகள் தத்ரூபான மேக்கப் கொடுத்திருக்கிறார்
சண்டை பயிற்சியாளர் மிராக்கிள் மைக்கேல்
சும்மா தெறிக்கவிட்டு இருக்கிறார் அந்த நாய் வரும் காட்சிகளும் பாழடைந்த பங்களாவில் நண்பர்கள் போடும் சண்டையும் அனல் தெரிகிறது.
மற்றும் காஸ்ட்யூம் டிசைனர்: சுபிகா
பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்து கொடுத்திருக்கிறார் ரமேஷ்
சவுண்ட் மிக்சிங் செய்துள்ளார் ஏ. எம். ரஹ்மத்துல்லாஹ்
நிறைய காட்சிகளில் திகிலடைய செய்திருக்கிறார் சவுண்ட் மூலமாக
சவுண்ட் டிசைனராக பங்கு பெற்றிருக்கும்
ஜெய்கணேஷ் பங்கு மகத்தானது
படத்தில் மிகவும் பாராட்ட வேண்டிய தொழில்நுட்பம் வி.எப்.எக்ஸ்
இதை லிங்ஸ்டர் மீடியா கணேஷ் செய்திருக்கிறார் பல இடங்களில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது
படத்தின் கலரிஸ்ட் ஆக சிவசங்கர் பணிபுரிந்து இருக்கிறார் படம் பாழடைந்த பங்களாவுக்குள் சென்ற பிறகு ஒரு கலர் ,திகில் ஆகவும் ரிச்சான வீட்டில் நண்பர்கள் குடியிருக்கும் போது கலர் ஒரு மாதிரியான பரவசத்தையும் கொடுக்கிறது கலர் கரெக்ஷன் சூப்பர்!
புரொடக்ஷன் மேனேஜராக பால்பாண்டி சரியான நிர்வாகம் செய்திருக்கிறார்
அவருக்கு வாழ்த்துக்கள்.
மக்கள் தொடர்பாளர் கள்: திரு. சுரேஷ் சந்திரா, அவர்கள்
மற்றும் திரு அப்துல் நாசர் அவர்கள்.
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .
மொத்தத்தில் இந்த ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் , “’எக்ஸோர்சிஸ்ட்’, ‘ஓமன்’, ‘போல்டர்ஜிஸ்ட்’ போன்ற பல கிளாசிக் ஹாரர் படங்கள் நினைவு படுத்துகிறது.
படம் கிட்டத்தட்ட ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கிறது இந்தப் படம் ஸ்பின் ஆஃப் போல அதாவது ப்ரீக்குவலாக இருக்கிறது
எப்படி ‘ஒரு நொடி’ படத்தின் கிளைமாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியானதாக இருந்ததோ அதுபோல இந்தப் படத்தின் கிளைமாக்ஸூம் அதிர்ச்சியானதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும்.
ஜென்ம நட்சத்திரம் வெற்றி பட்டியலில்‘