சட்டமும் நீதியும் திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், “சட்டமும் நீதியும்”

இந்த சீரீஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV சண்முகம்,முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். தெளிவான, துல்லியமான, இலக்கை நோக்கி நகரும் கதை களம் எடுத்து கொண்ட பயணத்தில் வெற்றியை தொட்டுள்ளார் உணர்வு பூர்வமாக இருக்கிறது .

“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா, பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

நல்ல படைப்பை தந்த நிறுவனத்தின் முயற்சிக்கு பாராட்டுகள்.

சரவணன்

புதுமையான களத்தில், வக்கீலாக சரவணன்
சுந்தர மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்
.தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் நடிகர் சரவணன், 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், நிதானமாக நடை போட்டு நடித்திருக்கிறார் வெல்டன் சார்
நீதியை நிலை நாட்ட போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
விளிம்பு நிலை மனிதர்களுக்கு நீதி பெற்று தரும்
அருமையான நடிப்பு

கதை களம்

காவல்துறையிடம் தன் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்துவிட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற வாசலில் குப்புசாமி, தீக்குளித்து இறந்து போகிறார்

நோட்டரி வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி இந்த வழக்கபொதுநல வழக்காக எடுத்து நடத்துகிறார்
“குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து இந்த வழக்கில் சுற்றியுள்ள குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான்
வெண்ணிலா எங்கே என்ன ஆனது என்ற பரபரப்பான இன்வெஸ்டிகேஷன் கதைக்கு விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
வெண்ணிலாவின் உண்மையான முகம் தெரியும் பொழுது பரிதாபம் ஏற்படுகிறது.
கிளைமாக்ஸ் மிக நன்றாக உருக்கமாக இருக்கிறது.

நம்ரிதா

சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV நடித்திருக்கிறார்.
அருணா கதாபாத்திரத்தில் படம் முழுக்க சரவணன் உடன் வருகிறார்
மிகை படுத்தா நடிப்பு சூப்பர்!
ஜூனியர் வழக்கறிஞராக சரவணன் இடம் சேர்ந்து அவருக்கு பக்கபலமாக இருந்து வெற்றிக்கு உதவும் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.

சண்முகம்

. சண்முகம் குப்புசாமி என்ற கதாபாத்திரத்தில் எமோஷனலாக நடித்திருக்கிறார் படம் முழுக்க தன் மகளை தேடி அலையும் அந்த கதாபாத்திரம் நம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கிறது அவர் நடிப்பு சூப்பர்
மற்றும் அவர் மனைவியாக வரும் வள்ளி கதாபாத்திரம்
சரவணன் மனைவியாக வருபவரின் கதாபாத்திரம் மற்றும் வரதன் கதாபாத்திரம் இந்த கதைக்கு பக்க பலமாக இருக்கிறது அனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

கதை வசனம் எழுதியுள்ளார்

சூரிய பிரதாப், நீதிமன்றத்தில் நடக்கும் சம்பாசனைகளும், வழக்கு களும்
ரசிக்கும் படி எழுதி இருக்கிறார்

பாலாஜி செல்வராஜ் இயக்கம் சீராக இருக்கிறது
14 நாளில் ஏழு எபிசோடு உள்ள ஒரு கோர்ட்ரூம், கதையை இயக்கியதில் அவரின் கடும் உழைப்பு தெரிகிறது
சாதாரண மனிதர்களுக்கும் நீதி சமமாக கிடைக்க வேண்டும் என்று இயக்கி இருக்கிறார்

ஒளிப்பதிவாளர் கோகுல கிருஷ்ணன் அழகான விஷ்வல்
நீதிமன்ற கட்சிகளை படமாக்கிய விதம் சிறப்பாக இருக்கிறது மற்றும் வெண்ணிலா கதை சொல்லும் பொழுது வரும் பிளாஸ்பேக் காட்சியில் அந்த குளக்கரை விலைமாதுகள் நிற்கும் இடம் எல்லாமே ஒளிப்பதிவு கைவண்ணம்

எடிட்டிங் ராவணன் சீராக படத்தை செதுக்கியிருக்கிறார்
எந்த இடத்திலும் இந்த சீரிஸ் லேக் ஆகாமல் விறுவிறுப்பாக பரபரப்பாக செதுக்கியிருக்கிறார்
முதல் மூன்று எபிசோடுகள் கொஞ்சம் சுமாராக போனாலும் மற்ற எபிசோடுகள் ரெக்கை கட்டி பறக்கிறது வெண்ணிலா எங்கே? என்று தேடும் படலத்தில் விறுவிறுப்பான படத்தொகுப்பு

விபின் பாஸ்கர் இசை இரைச்சல் இல்லை, உருக வைக்கிறது இசை
ஆறாவது எபிசோடில் ஏழாவது எபிசோடில் பாடல் ரசிக்க வைக்கிறது.

ஆர்ட் டைரக்டர்
பாவனா கோவர்தன்
இவர் கைவண்ணத்தில்
கோர்ட் செட், போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் வளாகம்
கோர்ட் வடிவமைப்பு சூப்பர்!

இரண்டு பாடல்கள் ஸ்ரீனி எழுதி இருக்கிறார்
பாடல் ரசிக்க வைக்கிறது
காஸ்ட்யூம் மரியா
சரவணன் அவர்களுக்கு வழக்கறிஞர் உடையும் நமிர்தாவுக்கு வழக்கறிஞர் உடையும் பொருந்தி போகிறது குப்புசாமி கதாபாத்திரத்தின் ஆடை வடிவமைப்பும் வெண்ணிலாவின் ஆடை வடிவமைப்பும் கச்சிதமாக இருக்கிறது.

அருண் கணேசனின் ஒப்பனை நன்றாக இருக்கிறது எல்லோருக்கும் கச்சிதமாக ஒப்பனை செய்து இருக்கிறார்

Executive Manager: MP Ramachandran
Production Manager: Selvakuma
Colorist: SK (Pixel ARTS)
Visual Effects Diwahar

திரைக்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பு
சதீஷ் &சிவா

மொத்தத்தில் நீதி தாமதமாகலாம். ஆனால் கிடைக்காமல் போகாது. சட்டம் தன் கடமையை செய்யும் ஏழை எளியவர்களுக்கு வழக்காடி, வெற்றியை தேடி தர வேண்டியது ஒவ்வொரு வழக்கறிஞர்கள் கடமை, பணத்துக்கு விலை போகாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தால் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்கும் என்ற நல்ல ஒரு தத்துவத்தை சொல்லி இருக்கும் இந்த வெப் சீரிஸ் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்💐

Comments (0)
Add Comment