பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கதை களம்
அறிமுக நடிகர் தினேஷ், ஜீவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தன் காதலியிடம் எப்படி பழகுவது, பேசுவது தனக்கான தேவையை எப்படி பூர்த்தி செய்து கொள்வது என்று தெரியாமல் நண்பனிடம் ஆலோசனை கேட்கிறார்.
நண்பன் பிரபு என் காதலி, உன் காதலி சாலு, எல்லோரும் டிரிப் போகலாம்
அப்படி போகும்போது நீ நினைப்பது நிறைவேறும் என்கிறார்.
அதேபோல நாயகன் ஜீவன், நாயகி ஷாலு, நண்பர் பிரபு, நண்பனின் காதலி சிபி எல்லோரும் அப்புகுட்டி மேனேஜராக இருக்கும் அந்த காட்டேஜுக்கு” ட்ரிப் போகிறார்கள்
ஜீவன் தன் காதலியிடம் கொஞ்சம் எப்பு தப்பாக நடக்க முயற்சி செய்கிறார் நாயகி ஷாலு கணவனுக்கு எப்படி உண்மையான மனைவியாக நடந்து கொள்ள வேண்டுமோ ?
அதே போல பெற்றோருக்கு உண்மையான மகளாக நடக்க வேண்டும் என்று
பிடி கொடுக்க மறுக்கிறார் .
பிடிவாதமாக ஜீவன் தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள அப்போது திடீரென ஷாலு இறந்து போகிறார் .
அங்கு வந்து பிரபுவும், அவர் காதலியும் போலீசுக்கு போன் செய்ய நினைக்கும் பொழுது ஜீவன் அவர்கள் இருவரையும் கொலை செய்து விடுகிறார் .
அதன் பிறகு அதிலிருந்து ஜீவன் தப்பித்தாரா? என்ன நடந்தது என்பதுதான் கதைக்களம்.
ஆழ் மனதில் தூங்கும் போது நாம் என்ன நினைத்துக் கொண்டு தூங்குகிறோமோ அதுவே தான் வாழ்க்கையில் நடக்கும் என்ற உளவியல் சிந்தனையை படமாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கோபி படம் விறுவிறுப்பாக போகிறது பரபரப்பாக இருக்கிறது. ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது.
நாயகன் தினேஷ்
முதல் படத்தில் பயம், கோபம், எமோஷனல் என கலந்து கட்டி நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் நடிப்பை பார்த்தது போல இருந்தது சிறப்பான நடிப்பு சிறப்பான எதிர்காலம் அவருக்கு இருக்கிறது. இரத்த கரை படிந்த சட்டையுடன் இடைவேளைக்கு பிறகு வருகிறார் , , நல்ல நடிகர் என்ற இடத்திற்கு நிச்சயம் செல்வார். எதிர்காலத்திலும் தனக்கு எது ஒத்து வருமோ, அப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் முன்னணி இடத்தை பிடிப்பார்
அப்புக்குட்டி
நண்பர்கள் தங்கும் காட்டேஜ் மேனேஜராக வருகிறார் அப்பு குட்டி அவர் இந்த காட்டேஜுக்கு வந்து ஆறு மாதம் தான் ஆகிறது இதற்கு முன் பத்து வருடம் சிறையில் இருந்தேன் என்று அவரது மகள் கதையை சொல்லும் பொழுது உருக்கமாக நடித்திருக்கிறார் எம்ஜிஆர் பாடலான ஆடலுடன் பாடலை கேட்டு பாட்டுக்கு சிறப்பான நடனம் ஆடி இருக்கிறார் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் அப்புகுட்டி
நாயகி பிராணா
நல்ல அழகான முகம், பேசும் கண்கள், நடிப்பிலும் பண்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார். தமிழ் கலாச்சாரத்தை மனதில் வைத்துக் கொண்டு அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் இன்றைய பெண்களுக்கு பாடமாக இருக்கும் இது போன்ற ஒரு படம் எடுத்தால் நிச்சயம் தமிழ் பெண்கள் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள் என்பது உறுதி! பிராணா நல்ல வரவு
ஆனந்த் பாண்டி
ஆனந்த் பாண்டி கலக்கப்போவது யாரு, டான்ஸ் ஜோடி, ’பாவம் கணேசா’, ‘ராஜா ராணி’ சீரியல்கள் ஆகியவற்றில் பணியாற்றியிருக்கிறார் இந்த படத்தில் பிரபு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘யாதும் அறியான்’ படத்தில் முக்கியமான வேடத்தில் அருமையாக நடித்திருக்கிறார்
தம்பி ராமையா
சொப்பன சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில், மனோதத்துவ டாக்டர் ஆக இரண்டு காட்சிகள் வந்தாலும், கலகலப்பாக வந்து போகிறார் கிளைமாக்ஸ் கட்சியில் ஆழ்மனம் பற்றி அவர் சொல்லும் ட்ரீட்மெண்ட் நன்றாக இருக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை, வசனம் எழுதி இயக்கிஇருக்கிறார் கோபி, வித்தியாசமான படத்தை எடுத்து முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருக்கிறார் .
தர்ம பிரகாஷ் இசையமைத்திருக்கிறார் பின்னணி இசை சூப்பராக இருக்கிறது.
S .K சித்திக் , பாடல்களை எழுதியுள்ளார். ரசிக்க வைக்கிறது..
நிரஞ்சன் ஆண்டனி யின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் எல்.டி.அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நெல்லை லெனின் ஆர்ட் டைரக்டர் பணியை திறம்பட செய்து இருக்கிறார்.
காஸ்ட்யூம் டிசைனராக லாவண்யா ராஜ்
ஒப்பனையாளராக
செந்தூர் முருகன்
எல்லோரையும் அழகாக காட்டி இருக்கிறார்
Colourist: Sri Kanth
Sound FX Supervisor: Ramki
Sound FX Engineer: Murugan
CG: Dinesh
Publicity Designs: Rajinkrishnan
Stills: Peter John
மக்கள் தொடர்பாளர்கள் :
சுரேஷ் சுகு, மற்றும்
தர்மதுரை பணிபுரிந்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்