ஆந்திராவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர், ஆந்திர மாநிலத்தில் துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹரிஹரவீர மல்லு. வரலாற்று காவியமான இப்படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது இப்போது இந்த படம் ஒரு வெற்றி படமாக வந்துள்ளது.
க்ரிஷ் ஜகர்லமுடி , ஜோதி கிருஷ்ணா இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்கள். கடுமையாக உழைத்து இருக்கிறார்கள் ஒவ்வொரு ஃப்ரேம் அவுட் புட் நன்றாக வந்துள்ளது. ஐந்து வருட கடுமையான உழைப்பு இயக்குனர்கள் இடம் தெரிகிறது ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு எபிசோடாக பிரித்து இயக்கி இருக்கிறார்கள் அருமையான இயக்கம்.
எம்.எம் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் . பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது
படத்திற்கு ஒளிப்பதிவு பிரம்மாண்டமான முறையில் வந்திருக்கிறது வாழ்த்துக்கள்
கதை களம்
ஆரம்ப காட்சியில் ஆற்றின் கரையில் ஒரு குழந்தை வருகிறது அதை சத்யராஜ்,ஈஸ்வரி ராவ் எடுத்து வளர்க்கிறார்கள் அந்த குழந்தைக்கு ஹரிஹர வீரமல்லு என்று பெயர் சூட்டி வளர்க்கிறார்கள் வருங்காலத்தில் அந்த குழந்தை ஒரு சாம்ராஜ்யத்தையே தட்டிக் கேட்கும் வீரனாக வளர்கிறது.
1650 ஆம் ஆண்டில் முகலாயர்களின் ஆட்சிகாலத்தில் நடக்கும் கதை பேரரசர் ஔரங்கசீப் தனது ஆட்சிக் காலத்தில் தன்னை தாழ் பணியாதவர்களை தலை வெட்டி கொல்கிறார்.
தன் மதத்தை தவிர வேறு மதத்தைச் சேர்ந்த அரசர்களை கொல்கிறார். இதை தட்டி கேட்க ஒருவர் வருவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் அந்த ஒருவர் தான் ஹரி ஹர வீர மல்லு.
ஒரு மூட்டை நெல்லுக்கு குண்டர்களுடன் மோதி உயிரை விடும் அப்பாவி மக்கள் காப்பாற்றுகிறார்.
அனாதை பெண் ஆன பஞ்சமியை காப்பாற்றுகிறார் அதன் பிறகு இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கோஹினூர் வைரத்தை மீட்டு கொண்டுவர வீர மல்லு (பவன் கல்யாண்) என்கிற வரலாற்று நாயகன் செல்கிறான். இந்த பயணத்தில் அவன் பல சாகசங்களை எதிர்கொண்டு தர்மத்திற்காக அவர் போராடுவதை பீரியல் ஆக்ஷன் படமாக சொலகிறது.
மிக சுவாரஸ்யமான கதையோடும் தொடங்கும் கதை . ஆனால் இந்த பாகத்தில் வீர மல்லுவின் சாகசங்கள் மட்டுமே மையமாக சொல்லப்படுகின்றன. முக்கியமான போர் காட்சிகளுக்காக ரசிகர்கள் அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்க வேண்டும். பவன் கல்யாண் ரசிகர்களுக்குஇந்த படம் ஒரு
தீபாவளி போனஸ் சரவெடியாய் வெடிக்கிறது.
பவன் கல்யாணின் நடிப்பும் , ஆக்ஷன் காட்சிகளும் படத்தின் பிளஸ் , என சொல்லலாம். திரைக்கதை , சூப்பர் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் .அருமையாக இருக்கிறது
முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் இந்துக்கள் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதற்காக விதித்த தண்டனை வரியான ஜிஸ்யா வரி, அடக்குமுறையின் அப்பட்டமான அடையாளமாக நிற்கிறது, இருப்பினும் வரலாற்றாசிரியர்கள் நீண்ட காலமாக அதன் மிருகத்தனத்தை மென்மையாக்கியுள்ளனர். இந்த அநீதியை தைரியமாக அம்பலப்படுத்துகிறது, இந்த படம் கோஹினூர் திருட்டைப் போல இந்துக்களின் துன்பம் அழிக்கப்படுவதையும் இந்தியாவின் செல்வம் சூறையாடப்படுவதையும் அம்பலப்படுத்துகிறது. இந்த படம் அசைக்க முடியாத உறுதியுடன், இந்த சரித்திரம் சனாதன தர்மத்தையும் கொடுங்கோன்மையை மீறிய நமது பாராட்டப்படாத ஹீரோக்களின் தைரியத்தையும் கொண்டாடுகிறது
படம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் படமாக்கி இருக்கிறார்கள்
ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு எபிசோடில் பிரமாண்டமாக வந்திருக்கிறது
நடிகர் நடிகைகள்
பவன் கல்யாண்
வீரமல்லுவாக பவன்கல்யாண், அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் வியக்க வைக்கும் சன்டை காட்சிகள், டயலாக் டெலிவரி, எமோஷனல் கலந்த நடிப்பை வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார்.
பாபி தியோல்
பேரரசர் ஔரங்கசீப்பாக பாபி தியோல் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருக்கிறார் . அவர் வரும் காட்சிகள் கம்பீரமாக இருக்கிறது எதிரிகளை வாளால் தலையை வெட்டி வீசும் பொழுது மிரட்டி இருக்கிறார்
அடுத்த பாகத்தில் என்ன செய்யப் போகிறாரோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது கிளைமாக்ஸ்
நிதி அகர்வால்
பஞ்சமியாக நிதி அகர்வால்
கவர்ச்சி, ப்ளஸ் அழகான நாயகி,
அவர் வரும் காட்சிகளில் அழகோவியமாக தெரிகிறார்
தேவதாசிகளுக்கு உதவி செய்ய பவன் கல்யாண் இடமிருந்து நேரங்களை திருடும்போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் நல்ல தேர்வு நல்ல நடிப்பு!
மற்றும் இப்படத்தில் நடித்த கலைஞர்கள்
ரோஷனாராவாக நர்கிஸ் ஃபக்ரி
நோரா ஃபதேஹி, பவன் கல்யாண் வளர்ப்பு தந்தையாக
சத்யராஜ்,
மிர்சா கானாக விக்ரம்ஜீத் ,
விர்க்
அப்துல்லாவாக அய்யப்பா, பி. சர்மா
ஜிசு சென்குப்தா
பூஜித பொன்னடா
அபுல் ஹசன் குதுப் ஷாவாக தலிப் தஹில்
அனசுயா பரத்வாஜ்
சச்சின் கேடேகர்
ரகு பாபு
சுப்பராஜு
கபீர் பேடி
கபீர் துஹான் சிங்
நாசர்
சுனில்
தனிகெல்லா பரணி
கோட்டா ஸ்ரீனிவாச ராவ்
மகரந்த் தேஷ்பாண்டே
அனுபம் கெர்
ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள்
படத்தின் இசை மற்றும் பின்னணி இசை ஆஸ்கார் விருது வென்ற கீரவாணி மூலம் சிறப்பாக அமைத்துள்ளார் பாடல்கள் சில இடங்களில் படத்தின் எமோஷனை உயர்த்தியுள்ளன. , VFX மற்றும் கிராபிக்சில் காட்சிகள் படத்தின் பலம் ஒவ்வொரு காட்சியிலும்VFX
மிரட்டி இருக்கிறது:
புரோடக்ஷன் டிசைனராக தோட்டா தரணி அற்புதமாக பணி புரிந்திருக்கிறார் ஒவ்வொரு காட்சிக்கும் அவர் வரைந்து கொடுத்த ஓவியம் ஆர்ட் டைரக்டராக அற்புதமாக பொருந்தி இருக்கிறது.
படத்தொகுப்பாளராக கே .எல் .பிரவின்
படத்தை செதுக்கியிருக்கிறார் இடைவேளை வரை படம் பரபரப்பாக போவதற்கு படத்தொகுப்பாளர் காரணம்.
காஸ்ட்யூம் டிசைனராக ஐஸ்வர்யா ராஜ், மற்றும் நீடா லுல்லா,
பணிபுரிந்து இருக்கிறார்கள். ஆடை வடிவமைப்பு அனைவருக்கும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
ஒப்பனையாளராக
இண்டூரி சம்பய்யா
அந்த கால கட்டத்தில் உள்ள மக்கள், மற்றும் பாபி தியோல், பவன் கல்யாண் ,நிதி அகர்வால் ஆகியோருக்கு அருமையான ஒப்பனை அமைத்து இருக்கிறார் .
சண்டைக் காட்சிகள்
படத்தை பர பரபரப்பாக கொண்டு சென்றதில் சண்டை காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது இதற்கு உழைத்தவர்கள்
Action: Nick Powell, Syam Kaushal, Peter Hein, Ram-Laxman, Dilip Subbarayan, Stunt Silva, Todor Lazarov (Juji), Dragon Prakash, Vijay.
ஆகியோர் படத்தில்
ஆரம்பத்தில் வரும் 15 நிமிடம் சண்டைக் காட்சிகளும், இடைவேளையில் வரும் சண்டைக்காட்சிகளும் ,மற்றும் டெல்லிக்கு வரும்
வழியில் இந்துக்கள் தாக்கப்படும் பொழுது பவன் கல்யாண் போடும் சண்டைக் காட்சி, செம மிரட்டலாக இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இந்த சண்டை காட்சிகள் பரபரப்பாக கை கொடுத்து உதவி இருக்கிறது .
பவன் கல்யாண் அற்புதமாக ஸ்டைலாக சண்டை போட்டு ரசிகர்களிடம் கைதட்டல் வாங்குகிறார்
ஒளிப்பதிவாளர்
படத்தின் ஒளிப்பதிவாளர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
எல்லா காட்சிகளிலும் செமையாக மிரட்டி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பிரேம், பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரும் ,
மற்றும் வி .எக் .எப்ஸ்
பணிபுரிந்தவர்கள் படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள்
இயக்குனர்கள்
கிரீஷ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா
இருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் .ஒவ்வொரு காட்சியிலும் அதன் தரம் தெரிகிறது .ஒரு வெற்றி படத்திற்காக 5 வருடம் கடுமையாக போராடி இந்த படத்தை இயக்கி இருக்கிறார்கள். மொத்தத்தில் ஹரி ஹர வீரமல்லு வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்
மக்கள் தொடர்பாளர் ரேகா அவர்கள் இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்