கதை களம்
படத்தின் நாயகன் ஆகாச வீரனுக்கு(விஜய் சேதுபதி)அறிவிக்காமல் அவர் மகளுக்கு மொட்டையடிக்க கோயிலில் கூடுகிறது பேரரசியின் குடும்பம்.
அங்கு திருடுவதற்கு உத்தரவு கேட்டு காத்துக் கொண்டிருக்கிறார் யோகி பாபு ,
மகனின் பிறந்த நாள் கொண்டாட கோயிலுக்கு வருகிறார் காளி வெங்கட் குடும்பம்
விஜய் சேதுபதியின் மகள் மகிழினியின் முடி கொடுக்கும் விஷயம் அறிந்து களமிறங்குகிறது ஆகாச வீரன் குடும்பம். அதன் பிறகு பிளாஷ்பேக்கில் கதை செல்கிறது .
மதுரை ஒத்தக்கடையில் ஹோட்டல் நடத்திவரும் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி). அவர் மனைவி பேரரசி (நித்யா மேனன்). இவர்கள் இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கும் பொழுது நின்று போக அதற்கு காரணம் விஜய் சேதுபதியின் மச்சான் .
அதையும் தாண்டி விஜய் சேதுபதிக்கும், நித்யா மேனனுக்கு ஏற்படுகின்ற காதல் இவர்கள் இருவரையும் இணைத்து வைக்கிறது.
அதன் பிறகு ஓடி வந்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் வாழ்க்கையில்
நடக்கும் சின்ன சின்ன சண்டைகளால் இருவீட்டாரும் தலையிட, பிரிவின் எல்லைக்குப் போய் நிற்கிறது கணவன் – மனைவி உறவு மாமியார் மருமகள் சண்டை , பேரரசி, நாத்தனார் சண்டை , பெண் சம்பந்திகளால் சண்டை , கணவன் மனைவி சண்டை, மாமன் மச்சான் சண்டை ,என சண்டையாக போகிறது கதை
அதன் பிறகு அவர்கள் ஏன் பிரிந்தார்கள், என்ன நடந்தது ?இருவீட்டாரின் பஞ்சாயத்து எங்கே போய் முடிகிறது என்பதை பரோட்டா, கொத்துக்கறி, ஆம்லேட் என மிலிட்டரி ஹோட்டல் மெனுவாக, கமர்சியல் தூக்கலாகப் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
குடும்ப உறவுகளின் சிக்கலை 10 நிமிடம் உட்கார்ந்து பேசினால் தீர்ந்துவிடும் என்பதை “பசங்க படத்தில் சொல்லி இருப்பதைப் போல இந்த படத்திலும் நெற்றியில் அடித்த பொட்டு போல உரக்க சொல்லி இருக்கிறார். விவாகரத்து கேட்கும் தம்பதிகள் காதில் இந்த சங்கதி விழுந்தால் நிச்சயம் இனி விவாகரத்து, குடும்ப கோட்டுகளில் குறையலாம் அதற்கு இந்த படம் வழி வகுத்திருக்கிறது என்று சொல்லலாம்
இசை சந்தோஷ் நாராயணன் இசையில் ‘ இரண்டு பாடலும் காதுகளுக்குள் நுழைந்து, நெஞ்சுக்கு விருந்து படைக்கிறது. பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஒளிப்பதிவாளர் சுகுகுமாரின் ஒளிப்பதிவு அருமை.. கேமரா விஜய் சேதுபதியோடு
ஓடுகிறது, நடக்கிறது, நிற்கிறது, மூச்சிரைக்கிறைது, பைக் ஓட்டுகிறது ஒரே அட்டகாசம் செய்திருக்கிறார். பலே சுகுமார்
சன்டை காட்சிகள் ஒவ்வொன்றிலும் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, அவருடைய தம்பி, அவருடைய தந்தை அனைவரும் ரவுடிகள் அம்மா வாயாடி இவர்களால் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட பேரரசியுடன் வாழ முடியாமல் அவஸ்தை குள்ளாகும் ஆகாச வீரணாக, படம் முழுக்க அருமையாக நடித்திருக்கிறார் .
எமோஷனில் உருகுவதும் , காதலி மீது அன்பை பரிமாறுவதும், மகள் மகிழினிமீது பாசத்தை பொழிவதும் ,மச்சான் மீது வெறுப்பை பொழிவது, என பல பரிமாணங்களில் விஜய் சேதுபதி வெளுத்து வாங்கி இருக்கிறார்.
உடல் மொழி, டயலாக் டெலிவரி, காதல் காட்சிகள் கவிதையாக இருக்கிறது.
நித்யா மேனன்
பேரரசியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். வீட்டில் திருமணத்தை நிறுத்த முடிவு செய்துவிடும் காட்சியில் , சொல்ல முடியாமல் தவிப்பது, தனது வீட்டை எதிர்த்து விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்ளும் காட்சியில் , இன்றைய பெண்கள் எப்படி துணிச்சலாக இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்து இருக்கிறார் நித்யா மேனன் ஒரு நடிப்பு ராட்சசி என்பதை பல இடங்களில் ஞாபகப்படுத்துகிறார்
திருமணத்திற்கு பின் வாழ்க்கை நன்றாக ஜாலியாக வாழ்ந்து வர விஜய் சேதுபதியின் தந்தை சரவணன், தனது மருமகள் நித்யா மேனனை ஹோட்டல் கல்லா பெட்டியில் அமர்ந்து கணக்கை பார்த்து கொள்ள சொல்லும் காட்சியில் ஜம்பமாய் அமரும் போது ஒய்யாரமாக
இருக்கிறார்.
என்ன கம்பீரமாக கணவரை பார்த்து கண் சிமிட்டும் காட்சியில் கை தட்டல் விஜய் சேதுபதியின் அம்மாவுக்கு புதிதாக வந்த மருமகள் தனது இடத்தை பிடித்து விட்டால் என்கிற ஈகோ வால் பிரச்னை வெடிக்க அதே போல் இதுநாள் வரை தனது பெயரை ஹோட்டல் இருந்தது, ஆனால், தற்போது தனது மனைவி பெயரில் ஹோட்டலை மாற்றியதால், விஜய் சேதுபதியின் தங்கைக்கும் வரும் ஈகோ வால் அம்மாவும் மகளும் சேர்ந்து நித்யா மேனனை ஹோட்டலில் வேலை பார்க்கும் ஆள் போல் நடத்த, அந்தக் காட்சிகளில் அனாசியமாக நடித்திருக்கிறார் நித்தியா மேனன்.
விஜய் சேதுபதிக்கும் – நித்யா மேனனுக்கும் சண்டை வெடிக்க இந்த காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார் .
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவருமே தங்களது நடிப்பில் மிரட்டிவிட்டனர். உண்மையாகவே ஒரு கணவன் மனைவிக்கு இடையே எப்படி சண்டை வந்தால் நடந்து கொள்வார்களோ அதே போல் திரையில் அதனை வெளிப்படுத்தியுள்ளனர். மொத்த படத்தையும் இருவரும் இறுதி வரை சுமந்து செல்கிறார்கள். ரொமான்ஸ், சண்டை, டான்ஸ், நகைச்சுவை என அனைத்திலும் இந்த ஜோடி வேற லெவலில் கலக்கியுள்ளனர்.
மற்ற கலைஞர்கள்
அதே போல் தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக தீபா, சற்று வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறார். அதற்கு அவருக்கு பாராட்டுக்கள். இவர்கள் அனைவரையும் தாண்டி படத்தை வெற்றிகரமாக தனது நகைச்சுவையின் மூலம் கொண்டு செல்கிறார் யோகி பாபு.
இயக்குனர்
தற்போதைய ஹீரோக்கள் அனைவரும் மீது வைக்க படும் விமர்சனங்கள்,அவர்கள் பில்டப் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்கள் என்று. ஆனால் இயக்குனர் பாண்டிராஜ் மட்டுமே கதையை நம்பி பயணம் செய்கிறார் என்பதை இந்த படம் உறுதி செய்கிறது.
மதுரை ஒத்த கடையில் ஒரு சிறிய நகரத்தில் அன்றாட வாழ்க்கையின் நுணுக்கங்களை கதை களமாக்கி புத்துணர்ச்சியூட்டும் வகையில் விரிவாகக் சொல்லி இருக்கிறார் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக நடிக்க வைத்து இருக்கிறார் சில சமயங்களில் ஆகாச வீரனும், பேரரசியும், மற்ற கதாபாத்திரத்தில் வருபவர்கள் உண்மையான குடும்பங்களா? என்று நீங்கள் யோசிக்க வேண்டியிருக்கும்,
அந்த அளவுக்கு அமைப்பு மிகவும் சரியாக இருக்கிறது பேரரசி,ஒரு சராசரி பெண் வேடத்தில் தோன்றுகிறார், அது அவரின் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி.
கிராமப்புற கதையில் இவ்வளவு நவீனமான ஒரு பெண் இவ்வளவு நன்றாகப் பொருந்துவார் என்று இயக்குனர் கண்டு பிடித்து நடிக்க வைத்துள்ளார் .
பாராட்டுக்கள் சார்.
திரைக்கதை சீராக நகர்கிறது, பார்வையாளரைத் தாங்கும் அளவுக்கு உத்வேகம் உற்சாகமும் நிறைந்துள்ளது.
மீண்டும் தான் ஒரு வெற்றிப்பட இயக்குனர் என்பதை இயக்குனர் பாண்டியராஜ் நிரூபித்திருக்கிறார்
உங்கள் குடும்ப த்தோடுபாருங்கள். கடைசி அரை மணி நேரம் சினிமாத்தனமாக இருக்கலாம் – ஆனால் மீதமுள்ள பகுதி தவறவிட முடியாத அளவுக்கு நன்றாக இருக்கின்றது .
படத்தை தயாரித்து இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ்
TG தியாகராஜன் வழங்க,
செந்தில் தியாகராஜன், மற்றும்
அர்ஜுன் தியாகராஜன் தயாரித்திருக்கிறார்கள்
இணை தயாரிப்பாளராக
ஜி. சரவணன் மற்றும்
சாய் சித்தார்த்,
பங்கு வகித்திருக்கிறார்கள்
தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள் ஒரு நல்ல தரமான படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படத்தை கொடுத்ததற்காக,
ஆர்ட் டைரக்டர்
வீர சமர்,
ஹோட்டல், நித்தியாமேனன் வீடு, மற்றும் கோயில் இந்த மூன்று லொகேஷன் சிறப்பாக வடிவமைத்து இருக்கிறார்.
பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு விறுவிறுப்பாக போகிறது.
கலை கிங்சன்
சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார் ஆக்ரோஷமான சண்டையாக இல்லாவிட்டாலும் கதைக்கு தேவையான காமெடி கலந்து கொடுத்திருக்கிறார்.
பாபா பாஸ்கரின் நடன அமைப்பு புரோட்டா போடும் பொழுது விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆடும் ஆட்டம் ரசிக்க வைக்கிறது.
பாடல்களை விவேக், மற்றும் கார்த்திக் நேதா எழுதியிருக்கிறார்கள் ரசிக்க வைக்கிறது
காஸ்டியூம் டிசைனராக பூர்ணிமா ராமசாமி, பணியாற்றி இருக்கிறார் வித்யா மேனன்,
புரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதிக்கு கச்சிதமாக பொருந்தி போகிறது.
காஸ்டியூம் ;நட்ராஜ்
கச்சிதமான ஆடை
வடிவமைப்பு
மற்றும் திரைக்குப் பின்னால் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்.
Audiography : M.R. Rajakrishnan
Sound Design : Arun S Mani (Oli Lab)
VFX Producer : B.R. Venkatesh
DI : Prasath Somasekar (Knack Studios)
Stills : Theni Murugan
Publicity Designer
இவர்களின் பங்கு ஒரு வெற்றிப் படத்துக்கு உதவி இருக்கிறது வாழ்த்துக்கள்.
மக்கள் தொடர்பாளர் திரு. நிகில் முருகன் அவர்கள்
ஒரு வெற்றி படத்துக்கான அத்தனை அம்சங்களையும் அழகாக கோர்த்து படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி படமாக்கி இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் “இந்த தலைவன் தலைவி
குடும்பங்கள் கொண்டாடும் படமாக வந்திருக்கிறது.
ஈகோ என்ற மனிதனை ஆட்டுவிக்கும் அந்த வார்த்தையை முதலில் தள்ளிவிட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்தால் வாழ்க்கை நிச்சயம் கொண்டாட்டமாக இருக்கும்
என்பதை சொல்லி உள்ள இந்த படம் நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா🙏🌷