சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

சின்னத்தம்பி புரொடக் ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இணைந்து தந்துள்ளார்கள் இந்தப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் படம் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும், அடுத்து என்ன? என்று சீட் நுனியில் உட்கார வைக்கிறது இந்த படத்தின் திரைக்கதை

கதை களம்

படத்தின் ஆரம்பத்தில் நாயகன் வெற்றியை
அவரது அப்பா வாழ்க்கையை பத்து எபிசோடுகளாக எழுத சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்
அவர் அப்பா ஒரு கிரைம் கதை எழுத்தாளர்
அதன் பிறகு,

சென்னையில் நடைபெற்ற ஒரு குற்றச் சம்பவம் முதல் பக்கத்தில் இடம் பிடிக்கிறது .
ஒரு கொலை, ஒரு இளைஞன் முகம் சிதைந்த நிலையில் மாஸ்க் அணியப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடக்கிறான்.
இதை கண்டறிய தம்பி ராமையா அங்கு வருகிறார். திருடுவதையே தொழிலாக கொண்ட கிங்ஸ்லி ,ஷேர் ஆட்டோவில் வரும்பொழுது வெற்றியும், வருகிறார் இதனால் திருட்டு நகையை கேட்டு கிங்ஸிலியை ராமையா பின் தொடர, அப்பொழுது வெற்றியின் மூளை அபிரிதமாக வேலை செய்வதை கண்டு தன்னோடு குற்றங்களை கண்டுபிடிக்க வைத்துக் கொள்கிறார் தம்பி ராமையா,
அதன் பிறகு தொடர் கொலைகள் யார்? செய்தது? என்ன நடந்தது.
இதை தம்பி ராமையாவும், நாயகன் வெற்றியும், இணைந்து கண்டுபிடிக்கிறார்கள்.
கண்டுபிடிக்கும் பொழுது கொலைகாரன் யார்? என்று தெரிய வரும் பொழுது மிகவும் ஆச்சரியப்படவைக்கிறது !படம் பார்ப்பவர்களுக்கும்,
சரி தம்பி ராமையாவுக்கும், நாயகன் வெற்றிக்கு ம் ,
.இந்தப் படத்தில் ஒரு சமூக கருத்துடன் கதையையும், திரைக்கதையையும் உருவாக்கி இருக்கிறார்கள். க்ரைம் த்ரில்லராக நிறைய படங்கள் வெளியாகி இருந்தாலும் இது ஒரு வித்தியாசமான ரசிக்கக்கூடிய படமாக வந்திருக்கிறது

தொடர் கொலைகள் செய்பவன்
:காவல்துறைக்கு. எவ்வித தடயமும் இல்லாமல் ஒரே மாதிரியாக அடுத்தடுத்து நபர்கள் குறிவைத்தே கொலைகள் நடைபெற, ‘தொடர் கொலைகாரன்’ (சீரியல் கில்லர்) ஒருவன்தான் இதனைச் செய்கிறான் என விசாரணையில் இறங்குகிறது தம்பிராமையா டீம், விசாரணையில் திணற, வழக்கு நாயகன் பிரபா மூலம் கண்டு பிடிப்பது புதிய உத்தி , இருவரும் இணைய, இந்தப் புலனாய்வுக் கூட்டணி நெஞ்சை உரைய வைக்கும் சீரியல் கில்லரின் கொலைவெறிச் செயல்களைத் தடுக்கிறதா, கொலைகாரன் உண்மையில் யார், ஏன் இந்தக் கொலைகள் நடக்கின்றன என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்கிறது ‘முதல்பக்கம்

: நாயகன் வெற்றி

: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வெற்றி. இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ராஜபுத்திரன்’ படம் வெளியானது.. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் வெற்றி ‘சென்னை பைல்ஸ் முதல்பக்கம்’ படத்தில் முத்திரைப் படைத்துள்ளார்
கூர்மையான பார்வை இருந்தால் எல்லாமே நமக்கு தெளிவாக தெரியும் என்று காதை தடவிக் கொண்டு அவர் ஒவ்வொரு கொலையிலும் துப்பு துளுக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. ஒரு கிரைம் திரில்லர் எழுத்தாளரின் மகன் என்பதை படம் முழுக்க நிரூபிக்கிறார் அதிகமான காதல் காட்சி இல்லை, ஆனால் ஆக்ஷன் காட்சியின் நன்றாக நடித்திருக்கிறார்
தனக்கு எந்த மாதிரியான வேடம் நன்றாக வருமோ அதை தேர்வு செய்து நடித்து வருகிறார் .வெற்றி மேலும் பல உயரங்களை தொடுவதற்கு வாழ்த்துக்கள்

: தம்பி ராமையா

: தேசிய விருது பெற்ற தம்பி ராமையா, இந்த படத்தில் ஒரு மகளுக்கு அப்பாவாக கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக, கொஞ்சம் கலகலப்பு நையாண்டியு மாக நடித்திருக்கிறார்.

இவர் கொலைகாரனை கண்டுபிடிக்க நாயகன் பிரபாவிடம் ஐடியா கேட்பது புதுமையாக இருக்கிறது. காவல்துறை அதிகாரி என்றாலே கம்பீரமான இன்டலிஜென்ட் அதிகாரிகள் தான் பார்த்திருக்கிறோம் மற்றவர்கள் நம்பியே வாழும் இந்த கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் புதிது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்று சொன்னாலும் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை இப்படித்தானே காட்டியாக வேண்டும்
வெல்டன் சார்

நாயகி ஷில்பா

இத்திரைப்படத்தில் வெற்றி யுடன்இனைந்து
தொடர் எழுதும் பத்திரிக்கை நிருபராக ஷில்பா மஞ்சுநாத்
நடித்திருக்கிறார் அவர் கிளைமாக்ஸ் காட்சியில் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் அழகாக வந்து போகிறார்
இவருக்கு கொஞ்சம் முக்கியத்துவம் குறைவுதான்

வில்லனாக
மகேஸ்வரன் தேவதாஸ்
சைக்கோ கில்லராக
மிரட்டி இருக்கிறார்.
அதிக வசனம் பேசாமல் பார்வையாலே தான் ஒரு கொலைகாரன் என்பதை பறைசாற்றி இருக்கிறார்
நல்ல உடல் கட்டு, கொடூரமான பார்வை,
தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்கும் கொடூரமான சிந்தனை, தன்னை விட்டுப் போகும் காதலியை நடனமாடிக் கொள்ளும் நளினமான பாங்கு, என படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார் அவர் வரும் காட்சிகளில் இனி அடுத்து என்ன செய்யப் போகிறாரோ என்று பயத்தை கிளப்பியதில் வெற்றி கோட்டையை தொட்டிருக்கிறார் நிச்சயம் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் இவரை வில்லனாக பார்க்கலாம் நல்ல உயரம் கம்பீரமான பார்வை நல்ல உடல் மொழி என அனைத்தும் கலந்த ஆளவந்தான் கமலஹாசனை போல தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு புதிய வில்லன் மகேஷ் அவர்களை வரவேற்கிறோம்

ரெடின் கிங்ஸ்லி,
ஆரம்பத்தில் ஒன்று இரண்டு காட்சிகளில் வந்து விட்டு சென்றாலும் இவர் வரும் காட்சிகளில் கலகலப்பு
களை கட்டுகிறது
சுபத்ரா, அனிகா உள்ளிட்ட இவர்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது .
: இயக்குனர்

அனீஸ் அஸ்ரப்
: இந்தப் படத்தில் முக்கியமான சோஷியல் மெசேஜ் வைத்து இருக்கிறார் இயக்குனர்.அதை
கிரைம் திரில்லர் ஜானரில் சொல்ல முடியும்
என்று நிரூபித்துள்ளார் ஒவ்வொரு
காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பை ரசிகர்களுக்கு வைத்ததில் இயக்குனருக்கு வெற்றி தான் கொலைகாரன் கண்முன்னே இருந்தாலும் மக்கள் அவனை கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்
அதே சமயம் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் ஆண் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் அவர்களுக்கு எந்த வகையிலும் பரிதாபப்படக்கூடாது என்று சொல்வதில் கவனமாக கையாண்டு இருக்கிறார் தம்பி ராமையா மூலம் தன் மகளுக்கு நேர்ந்த அவலங்களை படத்தில் வைத்து பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்

சண்டை பயிற்சி இயக்குநர் நூர் ”. ஆக்ஷன் காட்சிகளில் டூப் எதுவும் இல்லாமல் வில்லன் மற்றும் நாயகனை மோதவிட்டு இருக்கிறார் சண்டை காட்சிகள் அனல் பறக்கிறது

வில்லன்
மகேஸ்வரன் தேவதாஸ் நான்காவது மாடியில் இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்கும் போது டூப் இல்லாமல் அசத்தியிருக்கிறார் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் இந்தக் காட்சியை ரசிகர்கள் கை தட்டி ரசிப்பார்கள்.
இசையமைப்பாளர்
ஏ.ஜி.எஸ் பரபரப்பான துள்ளலான மிரட்டலான இசையை கொடுத்திருக்கிறார் பாடல்கள் அதிகம் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் இந்த படத்திற்கு இசை தான் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது கதையின் ஓட்டத்துக்கு பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது.
விவேக், கார்த்திக் நேத்தா பாடல் ரசிக்க வைக்கிறது
நடனம் பயிற்சி: தினேஷ் தினா

படத்தொகுப்பு
வி .எஸ் .விஷால் படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் பரபரப்பாக படம் செல்வதற்கு படத்தொகுப்பு மிக முக்கியமாக இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் யூகிக்க முடியாமல் கொலைகாரனுடன் இணைத்து தம்பி ராமையாவை மகளை சீரழித்த அவர்களை இணைத்து படத்தொகுப்பு செய்திருப்பது பாராட்டுக்குரியது

ஆர்ட் டைரக்டர்கள்

சுரேஷ் ,மற்றும் வெங்கட் ,இருவரும் இணைந்து ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்கள் ராமையாவின் வீடு, சில்பா , அலுவலகம் வில்லனின் வீடு, மற்றும் மதுரையில் நாயகனின் கிராமத்து வீடு, எல்லா இடங்களிலும் இவர்கள் கை வண்ணம் நன்றாக தங்களது பணியை செய்துள்ளது நிச்சயம் பாராட்டுக்குரியது ஆர்ட் டைரக்டர் பங்கு

ஒளிப்பதிவாளர்

அரவிந்த் இந்த படத்தை ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது கொலை செய்யப்படும் இடங்களில் மிக கவனமாக கையாண்டு இருக்கிறார் நான்காவது மாடியில் நாயகனும், வில்லனும் ,சண்டை செய்யும் இடங்களில் ஒளிப்பதிவு புகுந்து விளையாடி இருக்கிறது வெல்டன் சார்

Chief Co-Director: Bala Ganesan
Stills : Raj
Publicity Designer : Kambam Sankar
Executive Producer : Kasilingam.M
DI: Infinity Media
Colorist: Gubendran Sekar
VFX: Skyhigh Studios
Sound Mixing: Lakshmi Narayanan
Special Effects

இவர்கள் பங்கு படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக அமைந்திருக்கிறது
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வில்லன்&தயாரிப்பாளர்
மகேஸ்வரன் தேவதாஸ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு நல்ல வில்லன் இனி இவரை நிறைய தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
சமூக விழிப்புணர்வு மிக்க இப்படி ஒரு படத்தை தயாரித்து மக்களுக்கு வழங்கியிருக்கிறார் இந்த படம் ஓடிடி தளத்திலும் ஓவர்சீஸ் வியாபாரத்திலும் சாதனை படைக்கும் என்று நம்பலாம் தற்போது தமிழ் சினிமாவில் கிரைம், திரில்லர், படங்களுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருவதால் நிச்சயம் தமிழ்நாடு தியேட்டரிலும் இந்த படம் வசூல் சாதனை படைக்கும் என்று நம்பலாம் இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் ஒரு படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற உத்தி அவருக்கு நன்றாக தெரியும் என்பதால் நிச்சயம் படத்தை பேச வைத்திருக்கிறார் வெற்றி பட்டியலில் “முதல் பக்கம்” இடம் பிடிக்கும்🌷

Comments (0)
Add Comment