கேப்டன் பிரபாகரன் திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

புரட்சி கலைஞர், விஜயகாந்தின் 100வது படம் மற்றும் அவருக்கு “கேப்டன்” என்ற பட்டம் கிடைக்க காரணமாக அமைந்த திரைப்படம் ஆகும். இப்படம் 1991ல் வெளியானது.

இப்படத்தின் கதை ஒரு போலீஸ் அதிகாரி சந்தனக் கடத்தலில் ஈடுபடும் வீரபத்திரனை எப்படி கைது செய்து அழைத்து வருகிறார். ஒரு எம்.எல்.ஏ ஒரு மாவட்ட ஆட்சியர், மற்றும் டி . எஸ்.பி இந்த மூன்று பேரும் வீர பத்ரனை எப்படி கொலை செய்கிறார்கள். அதற்கு கேப்டன் பிரபாகரன் கொடுக்கும் தண்டனை என்ன என்பதுதான் கதையாகும்.

இது ஒரு அதிரடி திரைப்படம் மற்றும் விஜயகாந்தின் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சமீபத்தில், படத்தின் 4K தரத்திலான மறு வெளியீ்டில் வெளியாக உள்ளது

இப்படம், ஒரு போலீஸ் அதிகாரியின் வீர தீர செயல்களை மையமாகக் கொண்டுள்ளது. இது ரசிகர்களை கவர்ந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பெற்றுள்ள படம்

நடிப்பு

விஜயகாந்தின் நடிப்பு, குறிப்பாக அவரது ஆக்ஷன் காட்சிகள், இப்படத்தின் முக்கிய ஈர்ப்பு ஆகும்.

மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமானதும், இப்படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு அசத்தியிருக்கிறார்

சரத்குமார் படத்தில் மிகப்பெரிய பலமாக நடித்திருக்கிறார்

நாயகி ரூபினி, மற்றும் காந்திமதி, லிவிங்ஸ்டன், நடிப்பு நன்றாக இருக்கிறது.

இசை

இளையராஜாவின் இசையமைப்பில் தனி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் இரண்டு பாடல்கள் முத்தாக கொடுத்திருக்கிறார் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

திரைக்கதை: மற்றும் இயக்கம்

ஆர்.கே. செல்வமணி இப்படத்தை இயக்கியுள்ளார், மேலும் திரைக்கதையும் சிறப்பாக அமைந்திருக்கிறது

படத்தின் ஹை லைட்

:🌷 போலிஸ் ஸ்டேஷனில் கற்பழிப்பு முயற்சி – வேலியே பயிரை மேய்கிறது போன்ற வீர வசனங்கள்

🌷
ஷோலே பாதிப்பில் ரயிலை குதிரைகளில் துரத்தி பெரிய சண்டைக் காட்சி

🌷இளையராஜா இசையில் குரூப் டான்ஸ் பாடல் – ஆட்டமா தேரோட்டமா –
🌷பலசாலியான வில்லன் – மன்சூரலிகானின் அட்டகாச நடிப்பு
எல்லோருக்கும் தெரிந்த மற்றொரு ஹீரோ – கௌரவ தோற்றத்தில் – சரத் குமார்
கொஞ்சம் தெரிந்த இன்னொரு ஹீரோ – லிவிங்க்ஸ்டன்

🌷கௌரவத் தோற்றத்தில் நம்பியார் (ஒரு வசனம் கூட இல்லை!

🌷கவர்ச்சியான ரொமான்ஸ் காட்சிகள் – சரத் குமார் – ரம்யா கிருஷ்ணன்

🌷க்ளைமாக்சில் சண்டைக் காட்சி நடுவில் நிறை மாத கர்ப்பிணி தவிப்பு —
ரத்தக் களரி சண்டைக்கு நடுவே குழந்தை பிறப்பது — ரம்யா கிருஷ்ணன்
குழந்தையை பிரசவித்த வுடன் தாய் மரணம் —

🌷வில்லனை பிடித்த வுடன் நின்று விடாமல் நீளமான தீப்பொறி பறக்கும் வசனங்கள் —
கோர்ட்டில் மூன்று கொலை செய்த விஜயகாந்த் நிரபராதி என்று விடுதலையாவது

💕விஜயகாந்திற்க்கே உரிய கால்களை அதிகம் உபயோகித்து நிறைய சண்டைகள்..

🌷. குத்துச் சண்டையில் கடைசி ரௌண்டில் ஜெயிக்க தனக்குத் தெரிந்த எல்லா வகை தாக்குதல்களையும் பயன்படுத்தி அடிப்பது..

🌷விஜயகாந்தின் உழைப்பு அசர வைக்கிறது. படத்தின் பெரிய வெற்றிக்கு அவர் மட்டுமில்லாமல் மன்சூரும்

🌷மழை அருவி, நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள், என காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் இதுதான் கேப்டன் பிரபாகரன்🌷

Comments (0)
Add Comment