அடுத்தடுத்த படங்களால் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்ப வைத்தவர், அர்ஜுன் தாஸ்

கைதி’, ‘அந்தகாரம்’, ‘மாஸ்டர்’ என அடுத்தடுத்த படங்களால் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்ப வைத்தவர், அர்ஜுன் தாஸ். ‘அந்தகாரம்’ திரைப்படத்தில் இவர் லீட் ரோலில் நடித்திருப்பார்

‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற ஆந்தாலஜியில் அர்ஜுன் தாஸ் – லிஜோமோல் ஜோடியை வைத்து ‘லோனர்ஸ்’ எனும் கதையை இயக்கியிருப்பார்.இயக்குனர்
அதன் பிறகு, இயக்குநர் வசந்தபாலன். மோதிர கை பட்டு பிரகாசமானார் அதுதான் ‘அநீதி’.

. மலையாளத்தில் ‘கப்பேலா’ . தற்போது, அர்ஜுன் தாஸ் கைவசம் அத்தனை படங்கள் இருக்கின்றன.
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ‘ரசவாதி’ தற்போது அவர், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் “பாம் படத்தில் நடித்து ள்ளார் இதில் அவருக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார்

மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள” பாம் திரைப்படத்தில், அர்ஜுன் தாஸ் அறிமுகமானவுடன் கைத்தட்டலும், விசிலும், திரையரங்கை தெறிக்க விடுகிறது .

இதுவரை அதிரடியான வில்லனாக ,மாஸ் காட்டிய அர்ஜுன் தாஸ் ,இந்த படத்தில் அம்மாவை இழந்த ஒரு சிறுவனாக, இருந்து வளர்ந்த பிறகும் அம்மா நினைவிலேயே காலம் கழிக்கும் மணி முத்து ,என்ற கதாபாத்திரத்தில் உயர்ந்துநிற்கிறார். பல இடங்களில் அவர் குரலை வைத்து படத்தில் வரும் வசனம் பேசப்படுகிறது .

இவர் ஒரு ஆக்ஷன் ஹீரோ ,இளைய தளபதி விஜய் அவர்களை எதிர்த்தவர். தமிழ் சினிமாவில் ஆக்சன் க்கு பேர் போன தலையுடன் மோதியவர் ,
இவரா? இப்படி படத்தில் காளி வெங்கட்டிடம், அடி வாங்குகிறார் .
சிவாத்மிகாவிடம்
அடி வாங்குகிறார். திருப்பி அடிக்க மாட்டாரா? என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் வேளையில்
இல்லை! இல்லை! அதெல்லாம் நான் மாஸ் காட்டி விட்டேன், இந்த படத்தில் என் நடிப்பை பாருங்கள் என்று ஒவ்வொரு பிரேமிலும், ஒவ்வொரு காட்சியிலும், நடிப்பில் ராஜாங்கம் செய்து நடித்திருக்கிறார்.

காளி வெங்கட், முதுகில் சுமந்து கொண்டு போகும்
ஒவ்வொரு காட்சியிலும், அவர் வேதனையை, வலியை ,சுமந்து கொண்டு படம் பார்ப்பவர்களின் இதயத்தை கணக்க செய்து விடுகிறார்.

காளி வெங்கட், இறக்கவில்லை என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு நடக்கும் அந்த சம்பவங்களை எல்லாம் இணைத்து உண்மையிலேயே கதிர் சாமியாக வந்துவிட்டார்! என்று அவர் கைதொழும் போது அற்புதமான நடிப்பு.

சிவாத்மிகா, அவர் காதலை சொல்லும் பொழுது அமைதியாக ஆழமாக அவரைப் பார்க்கும் அந்த ஒற்றை பார்வை ஏதோ சொல்ல தோன்றும் ஒரு உன்னத கலைஞனின் அற்புதமான பரிமாணம்.

பூவையர் யோகேஷ்,காலில் சூடுபட்டு துடிக்கும் பொழுது தரையில்
வ அடிபட்டு வீழ்ந்து, மண்ணை சுரண்டி தன் ஆற்றாமையை
வெளிப்படுத்தும் அந்த வெறுத்த
பார்வை அடடா! என்ன ஒரு கம்பீரமான பார்வை !

என்னாலும் எழுந்து அடிக்க முடியும் ஆனாலும் ஊர் மக்கள் ஒன்று சேர அமைதி காக்கும் அந்த காந்திவாதியமான நடிப்பு கம்பீரம் .

நாம் எத்தனையோ படங்களில் அர்ஜுன் தாஸ் சிங்கமாக கர்சிப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில் பார்வையாலே மிரட்டுகிறார். பார்வையால் பேசுகிறார். அமைதியான அந்த குரலும், அடங்கிப் போகும் அந்த முகமும் ,காளி வெங்கட்டுக்காக எல்லாவற்றையும் பொறுத்து போகும் அந்த ஜீவன் உள்ள நடிப்பு படத்தில் அவருக்கு கைதட்டலையும், ரசிகர்கள் மனதில் ஒரு சிம்மாசனத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பது உறுதி

அர்ஜுன் தாஸ், இந்த படத்தில் ஒரு சாந்தமான நாயகனாக, தன்னுடைய நடிப்பின் மூலம் மென்மேலும் பட்டைதீட்டிய
வைரம் போல ஜொலிக்கிறார்
இந்த படத்துக்கு யூ சான்றிதழ், கிடைத்தது இவரை இன்னும் வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும்.

அர்ஜுன் தாஸ் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தை இயக்கிய விஷால் வெங்கட்
இயக்குனர் உடன்
இரண்டாவது முறையாக
பாம் படத்தில் இணைந்துள்ளார்
அவரை ஒரு குணச்சித்திர வேடத்தில் மனிதநேயம் உள்ள நல்ல கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்
இயக்குனர்.

,அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் இருவருக்கும் காதல் ரொமான்ஸ் இல்லையென்றாலும் படத்தின் ஆழமான கதைக்களம்.
காளி வெங்கட்டின் மரணம் மறுக்க நினைக்கும் நிலைப்பாட்டில் அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.
இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்

படத்தில் அர்ஜுன் தாஸ் அவர்களின் நடிப்பில் ஹைலைட் காட்சிகள்
நெருப்பு வெளிச்சத்துக்காகதான் ஊரைக் கொளுத்த அல்ல, என்று அவர் பேசும் வசனம் கைதட்டல் பெறுகிறது.

உன் குரலுக்கு ஊரையே விலை வாங்கலாம் என்று சொல்லும் பொழுது கைதட்டல் அதிர்கிறது.

காளி வெங்கட் இறந்து விட்டார் என்று நம்ப முடியாமல் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர் துடிக்கும் துடிப்பு மனதை தொடும் நடிப்பு .

காளி வெங்கட்,
இறந்து விட்டார் என்று ஊரே சொன்னாலும் அவர் தங்கையே சொன்னாலும் ,அதை நம்பாமல் எப்படியும் காப்பாற்றி விடலாம் என்று ஒவ்வொரு வீடாக சென்று வெத்தலை கேட்கும் இடம் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

காளி வெங்கட் டை,தோளில் சாய்ந்து கொண்டு கதிர் ,கதிர், என்று கண்ணீர் விட்டு கதறி அழும்போது ஒரு பாசமுள்ள நடிப்பு நமக்குள் ஒரு பரவசத்தை தருகிறது .
அவரின் நடிப்பில் ஒரு புதிய வெளிச்சம் தெரிகிறது.

ஊரே சேர்ந்து காளி வெங்கட்டை,தூக்க முயன்றும் தூக்க முடியாமல் மணிமுத்து தூக்கி விடுவான் .என்று ஊர் சொல்ல அவர் காளி வெங்கட்டை தூக்க முயற்சிக்க, அவரால் முடியவில்லை .
ஊர் மக்கள் இது சாமி இல்லை என்று சொன்னவுடன் கண்ணீர் விட்டுக்கொண்டே காளி வெங்கட்டின் காலில் விழுந்து கதறி நான் தூக்குகிறேன் என் மீது ஏறிக்கொள் என்று அழும் காட்சி நிச்சயம் விருது கொடுக்க வேண்டிய காட்சி.

கிளைமாக்ஸ் காட்சியில் தீபம் ஏற்றுவதற்காக மலைக்கு செல்ல இவர் போகும்பொழுது நாசர் ,அவர்கள் தன் அடியாட்களுடன் சேர்ந்து அவரை அடித்து உதைக்க எப்படியும் வெகுண்டு எழுவார் எல்லோரையும் அடித்து விட்டு மலை மீது சென்று தீபம் ஏற்றுவார் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கையில், கதையின் நாயகனாக ,அவர் இல்லை இந்த படத்தில் அடிவாங்குவது தான் என்னுடைய கதாபாத்திரம்
என்று உணர்ந்து நடித்திருக்கிறார் நிச்சயம் இந்த படத்துக்கு அவருக்கு விருது கிடைக்கும் என்று கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது.

ஒரு ஆக்ரோஷமான ஒரு நடிகரை, அமைதியான முறையில், கதையின் நாயகனாக கச்சிதமாக பொருத்தி ஒரு சட்டைக்குள் உடலை வைத்து பொருத்திவிட்டது போல பொருந்தி இருக்கிறார்
இனி எல்லா கதாபாத்திரங்களும் இவருக்கு கைவந்த கலையாகும்
மணி”என்ற க கதாபாத்திரமாகவே நம்மால் கற்பனை செய்ய முடியாது அவர் நம்மில் ஒருவர்.. நாம்தான் அவர் என்றே எண்ணத் தோணும்.
சின்ன சின்ன கோபதாபங்களையும், அழுகையை மிக மிக நுட்பமாக காட்சியாக்கபட்டுருக்கிறது.
மணி” கண் பார்வையிலேயே காட்டும் உணர்ச்சிகள் அற்புதமானவை.

மணி பிறரை போல வீர மிக்கவன் ஆனால் சூழ்நிலை மணியை மோசமான மனிதனைப் போல் தோன்றச் செய்கிறது. தவறாக புரிந்து கொள்ளப்படுவதே படத்தின் மைய புள்ளி… அடக்கி வைக்கப்பட்ட கோபத்தின் வெளிப்பாட்டை அவ்வப்போது மிக அழகாய் வெளிப்படுத்தி இருப்பார் அர்ஜுன் தாஸ் அதை அழகாய் படம் பிடித்து இருப்பார் இயக்குனர்.
இந்த
மணி”பாத்திரம் வெகு நுட்பமானது. . ஒரு தன்மானம் உள்ள கிராமத்து இளைஞனின் உள்ளக் கொதிப்பின் வெளிப்பாடு.
அர்ஜுன் தாஸ் தோற்றம்.

கோபம் ,பாசம் ,வெறுப்பு இயலாமை எதார்த்தமான நடிப்பில் சிகரத்தை அர்ஜுன் தாஸ் கொண்டிருக்கிறார்
வாழ்த்துக்கள் சார் 🙏

Comments (0)
Add Comment