ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் சார்பில் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் தான் காந்தா.
பீரியட் படமான இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கிஇருக்கிறார்
கதை களம்
சினிமாவை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது”காந்தா”. இந்த படத்தை பொருத்தமட்டில் இரு முக்கிய ஆளுமைகளை விவரிக்கும் இந்த படத்தில் டி.கே.மகாதேவனாக, துல்கர்சல்மான்,ஐயாவாக சமுத்திரக்கனி, வாழ்ந்திருக்கிறார்கள் இதில் நடிகை குமாரி யாக பாக்ய ஸ்ரீ போஸ், பட்டையை கிளப்பி இருக்கிறார். இவர்களோடு ஆடுகளம் நரேன், (ஐஜியாக),வையாபுரி (டிரைவர் செல்வமாக),டகுபதி ராணா( போலீஸ் அதிகாரி யாக),பக்ஸ் (போலீஸ்), நிழல்கள் ரவி (துல்கர் மாமனாராக) காயத்ரி, (துல்கர் சல்மான் மனைவி தேவி) என்று பெரிய நட்சத்திர கூட்டத்தோடு உருவா்கப்பட்டிருக்கிறது . அதுமட்டுமல்ல சினிமாவிற்குள் சினிமாபாடம் நடத்திய கதை இது.
துல்கர், மற்றும் சமுத்திரக்கனி
இருவருக்கும், இடையில் பிணக்கு ஏற்பட்டு, சினிமா பாதையில் இரு எதிரெதிர் துருவங்களாக நின்று, இருவரின் வாழ்க்கை பின்னனியில் உருவாக்கிய கதை.ஈகோவும் திரைப்பட துறைக்கும் உண்டான தொடர்புகளை அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் .
மகாதேவன் திரைப்பட துறையில் வாய்ப்பு கேட்டு, அலைந்த நாயகனுக்கு இயக்குனர் ஐயா ஆதரவு காட்டுகிறார். ஒரு கட்டத்தில சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்து மக்களின் அபிமானம் பெறுகிறார் மகாதேவன். அது ஐயாவுக்குள் ஈகோவை தூண்டுகிறது.
படப்பிடிப்பில் இயக்குனர், மற்றும் நாயகன் இருவருக்கும் விவாதம் ஏற்பட்டு நாற்காலியை தூக்கி வீசிகிறார் ஐயா, இருவரும் பிரிய,.
இன்னொரு பக்கம் ஐயா வின் புரட்சிகர வசனங்கள் மக்களின் ஈர்ப்பையும் மக்களின் மத்தியில் நல்ல சினிமா அந்தஸ்து மிக்கவராக மாற்றுகிறது. காலச்சூழலில் வெற்றி பெறுகிறார். .
இப்படி நின்றுபோன(சாந்தா) சினிமாவை உருவாக்க நினைக்கும் பொழுது, இருவருக்கும் இடையில் உள்ள பகை.. இருவர் வாழ்க்கை யிலும் மோதல்.. குமாரி
பிரவேசம் என்று சம்பவங்களை மிகவும் சுவாரசியமான தெளிவான திரைக்கதையோடு பயணபடுகிறது. சாந்தா என்ற காந்தா.
துல்கர் சல்மான்
நடிப்பு சக்கரவர்த்தி டி.கே மகாதேவன் என்கிற கதாபாத்திரத்தில் ஸ்டைலாகவும், வசீகரமாகவும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஐயா, ஒரு மாதிரியாக நடிக்க சொல்ல, இவர் தனது பாணியில் நடிப்பது செம .கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாடி முன் நின்று இவர் பேசும் வசனம் நடிப்பு விருதுக்கான நடிப்பு.
ஐயா ,நாலு ஸ்டெப் சொல்லிக் கொடுத்து ஒவ்வொரு அடியாகசொல்ல , இவர் ஒரே அடியாக ஸ்கோர் செய்து பிரமிப்பை ஏற்படுத்துகிறார் , துல்கருக்கு ஸ்பெஷல் ‘Gift-U’ கொடுக்கலாம்! ’டி கே’ என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, திரையில் வரும் ஒவ்வொரு நொடியிலும் திரையை ஆக்ரமிக்க ஆரம்பிக்கிறார். அதன்பின் க்ளைமாக்ஸ் வரை அதகளம் பண்ணுகிறார். நடிப்பில் அசால்ட் நடையில். எண்ட்ரி ஆவதில் தொடங்கி, கடைசி வரை நம்மை சரண்டர் செய்கிறார். வசன உச்சரிப்பில் அதே ஸ்பெஷல் கெத்து. குமாரி சம்பந்தப்பட்ட காட்சிகளில் பாசமும்,ஐயாவிடம் குரோதமுமாய் டபுள் டமாக்கா வெடி வெடிக்கிறார். இங்கே நான் தான் டைரக்ட் பண்ணுவேன் கேமரா எம் முன்னாடி வைக்கணும். என்று ஐயாவை மடக்கும் இடங்கள் மாஸ்!
ராணா டகுபதி
குமாரி கொலை வழக்கை இன்வெஸ்டிகேஷன் நடத்தும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஒவ்வொருவரையும் கேள்விகள் கேட்பதும் அவர்கள் வாயில் இருந்து வார்த்தைகளை வெளிவர வைப்பதும் இவரின் சாமர்த்தியமாக நடிப்பு. துல்கர் சல்மானை ஹீரோ சார் என்று அழைத்து வா போ, என்று சொல்லும் அளவுக்கு அவரிடம் விசாரணை நடத்துவதும் சமுத்திரக்கனியை பேச வைப்பதற்காக பிலிம்எரிப்பது,என ஒவ்வொரு காட்சியிலும் ராணா டகுபதி வெளுத்து வாங்கி இருக்கிறார் சூப்பர் நடிப்பு.
சமுத்திரக்கனி
சமுத்திரகனி ஐயா என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். ஈகோ, வன்மம் .
தான் வளர்த்த நடிகர் தன்னைவிட பெரிய நிலைக்கு உயர்ந்து விட்டானே, என்ற வயிற்று எரிச்சல் தான் எழுதிய கதையை துல்கர் சல்மான் மாற்றும் பொழுது காட்டும் கண்டிப்பு, குமாரியிடம் துல்கர் சல்மானை பழிவாங்க நடத்தும் நாடகம். என படம் முழுக்க தனி ராஜாங்கம் நடத்தி இருக்கிறார்.
இறுக்கமான முகத்துடன், இந்தக் கதாபாத்திரத்துக்காகத் தன்னைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி அந்த ஆரம்பக் காட்சியின், சிங்கிள் ஷாட்டில் ஒவ்வொரு இன்ச்சிலும் அநாயாச நடிப்பால் அசத்துகிறார்.
பாக்ய ஸ்ரீ போஸ்
அந்த காலத்து நடிகைகளை நியாபகப்படுத்தும் முகம் . நடிகை குமாரியாக சிரித்துக் கொண்டே காட்சிப்படுத்தி துல்கர் அன்பில் உருகுவது, சமுத்திரக்கனியிடம் பணிவு காட்டுவது, அற்புதமான முகபாவணையில் அசத்தி இருக்கிறார்.
பாக்ய ஸ்ரீ சும்மா வந்து போகாமல், முக்கிய பங்கு வகிக்கிறார். ‘சாந்தாவாக வளையவரும் கதாபாத்திரம், கொஞ்சம் வித்தியாசம்.இவர் வரும் காட்சிகளில் எல்லாம் எக்ஸ்ப்ரஷன்ஸில் கவர்கிறார். இடது கையில் சாப்பிட்டுக்கொண்டே ரெண்டு பேரிடம் பேசி பாருங்க, என்று ஐயாவிடம் சொல்லும் போது க்யூட்! ‘ நல்ல கதாபாத்திரத் தேர்வு!
வித்தியாசமான கேப்ஸ்யூலில் கொடுத்திருக்கும் குமாரிக்கு பிரகாசமான எதிர்காலம்.
இயக்குனர்
கதையும், திரைக்கதையும், இயக்கமும்
இயக்குனர் செல்வமணி செல்வராஜ் க்குசபாஷ் போட வைக்கிறது. இருவரின் மோதலுக்கு நடுவுல வர்ற ஒரு இளம் நடிகை, இவங்க வாழ்க்கையையே மாத்தி போடுறா. இது சாதாரணக் காதல் கதை இல்ல; கலைஞர்களோட மனப்போராட்டம்.பற்றி சிறப்பா வடிவமைத்திருக்கிறார். துல்கர் சல்மான் நடிப்பு “கண்டிப்பா இவருக்கு தேசிய விருது கொடுத்தே ஆகணும்!”ன்னு சொல்ல வைக்கிறது இயக்குனரின் படைப்பு.
ஹீரோ ,மற்றும் இயக்குனர் இடையே எப்படி எல்லாம் பிரச்சினைகள் வரலாம் என்பதை செல்வமணி செல்வராஜ் சிறப்பான திரைக்கதையின் மூலம் கையாண்டு உள்ளார். முதல் பாதி முழுக்கவே ஜெட் வேகத்தில் செல்கிறது. இரண்டாம் பாதி ஒட்டுமொத்தமாக வேறொரு படம் பார்க்கும் ஃபீல் நமக்கு கிடைக்கிறது,. இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்களில் இன்வெஸ்டிகேஷன் காட்சிகள். வித்யாசமான ஒரு உணர்வு ஏற்படுத்துகிறது..
படம் முழுக்க ஒரு செட்டிற்குள் நடக்கிறது. இருப்பினும் அதனை முடிந்தவரை போரடிக்க விடாமல் திரைக்கதையின் மூலம் கட்டிப்போட்டு உள்ளார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒரு பீரியட் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் காந்தா படத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு டிபார்ட்மெண்டும் தங்களது முழு உழைப்பை இந்த படத்திற்கு கொடுத்துள்ளனர், அது ஒவ்வொரு பிரேமிலும் நமக்கு தெரிகிறது. பிளாக் அண்ட் ஒயிட் டூ கலர் பிரேம்க்கு வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. நிச்சயம் ஒளிப்பதிவாளர் டானி சான்செஸ் லோபஸ்க்கு அதிக பாராட்டுக்கள.
காட்சிகளை மாற்றி மாற்றி கலரும் பிளாக் அண்ட் ஒயிட்டும் காட்டியிருப்பது தேசிய விருதிற்கான ஒளிப்பதிவு.
அந்த காலத்தில் இருந்த செட் ஒர்க், கேமரா என ஒவ்வொன்றும் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக இந்த படத்தில் காட்டியுள்ளனர்.
ஜானு சாந்தர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
துல்கர் சல்மானும், சமுத்திரக்கனி இருவரும் சந்திக்கும் காட்சிகள் ஒருவிதமான இசை இந்த கதாபாத்திரங்களை நினைவூட்டுகிறது.
சில நேரம் அமைதியாக இருப்பதும் கூட ஒரு பயம் கலந்த உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது இசை.
VFX காட்சிகளில் கூடுதல் கவனங்கள் பெறுகிறது வாழ்த்துக்கள்.
அந்தோனி கோன்சால்வேஸ் எடிட்டிங் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார்.
ஆர்ட் டைரக்டராக ராமலிங்கம்
அசத்தல் ஒரே அரங்கத்துக்குள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தாலும் அதை கவனமாக கையாண்டு கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் ஆர்ட் டைரக்டர்.
கதை ,திரைக்கதை யில் தமிழ் பிரபா, உதவி இருக்கிறார்
பூஜிதா ,ஆடை வடிவமைப்பு அருமையாக இருக்கிறது.
ஒப்பணையாளருக்கு தேசிய விருது காத்திருக்கிறது 1950 களில் என்ன ஒப்பனை இருக்குமோ அதை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறார்.
மக்கள் தொடர்பாளர்கள் சுரேஷ் சந்த்ரா , அப்துல் நாசர் , அவர்கள்.
இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகின்றது வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இந்த காந்தா காந்தம் போல ரசிகர்களை கவரும் பல விருதுகளை பெற்று தரும் என்பது உறுதி திட்டமிட்ட உழைப்பு வெற்றியை தேடி தரும் வெற்றி பட்டியலில் “காந்தா”
உலக சினிமா வரிசையில் “காந்தா”