ஆட்டோ கிராப் ரீ யூனியன்*திரை விமர்சனம்

ரேட்டிங் 4-8/5

ஆட்டோகிராஃப் (Autograph) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேரன் இதனை எழுதி, இயக்கி, தயாரித்ததுடன் நடித்தும் இருந்தார். இப்படம் வணிக நோக்கில் பெருவெற்றி பெற்றதுடன் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றது .

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இப்போது பார்த்தாலும் நமது நினைவுகளில் புதைந்திருக்கும் காதல், நம் மனதை புரட்டிப் பார்த்தால் நினைவுகளுக்கு ஒரு இசையை மீட்டும், அந்த நினைவுகள் பால்யகாதல், பள்ளி பருவ காதல், என காதலை மையமிட்டு ஆட்டோகிராப் ரசிகர்கள் மனதில் நிழலாடுவதை உணரலாம். சினேகாவின் பாத்திரப் படைப்பு துவண்டு போன உள்ளங்களுக்கு
அருமருந்தாக இருந்தது .ஒவ்வொரு பூக்களுமே” பாடல் காலத்தால் அழியாத பாடலாக அமைந்தது.

நம்பிக்கை ஊட்டியது. மழை பெய்தும் வீசும் மண் வாசம் போல நம் மனதில் புதைந்து கிடக்கிறது அந்த பழைய நினைவுகள். அந்த நேசமான நினைவுகளின் வாசனையே மீண்டும் முகரசெய்தது ஆட்டோகிராப்.

தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது ,பிலிம் பேர் விருது, என விருதுகளை வேட்டையாடி வந்திருக்கிறது ஆட்டோகிராப். மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது ஆட்டோகிராப் .

இந்த படத்தில் நடிக்காமல் விட்டு விட்டோமே, என்று ஒரு உச்ச நட்சத்திரம் சொல்லி இருப்பதையும் நம்மால் உணர முடிந்தது.

மறைந்த நடிகர் ராஜேஷ் அவர்களின் பண்பட்ட நடிப்பு. பாசமான அப்பாவாக நம் மனதில் பசுமையாக நிறைந்து இருக்கிறார் அவர் நினைவு விழிகளில் நீரை வரவழைக்கிறது.

கோபிகாவின் மலையாள வாடகை கலந்த அந்த பேச்சு, அழகான முகம், கேரள கடற்கரை ஓரம் எடுக்கப்பட்ட அந்த படப்பிடிப்பு எல்லாமே கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

முதல் பருவ காதலாக கமலாவாக வரும் மல்லிகா, அந்த உருண்டு திரண்ட பார்வையும், கள்ளமில்லா வெள்ளை சிரிப்பும் மனதை கவர்ந்தது .

இயக்குனர் சேரன் கதை ,வசனகர்த்தா சேரன், நடிகர் சேரன் என்று அவரை ஒட்டுமொத்தமாக இந்த படத்தை தாங்கி பிடித்து கதாபாத்திரத்தை உள்வாங்கி வெளிப்படுத்தி இருந்தார், காதல் தோல்வி, நம்பிக்கையூட்டி ஜெயித்தது. இப்படி எல்லாமே சேர்ந்த கலவையாக பண்பட்ட நடிப்பை காட்டி இருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் சிரித்த முகத்துடன் ரசிகர்களை வீட்டுக்கு அனுப்பும்போது சந்தோஷத்துடன் வெளியே வந்தார்கள். காதல் நினைவுகளோடு மனதில் சுமந்தபடி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் தான் ட்ரெண்ட் செட்டராக அமையும். அடிதடி ,பாட்டு, ஐட்டம் சாங், என பார்த்து பார்த்து அழுத்த ரசிகர்கள் ஆத்மார்த்தமான ஒரு படைப்பை காணும் போது அள்ளி அணைத்துக் கொண்டார்கள்.

எப்படி ஒரு பாசமலரை கொண்டாடினார்களோ, எப்படி ஒரு உலகம் சுற்றும் வாலிபனை வரவேற்று மகிழ்ந்தார்களோ, அதுபோல ஆட்டோகிராப்பை தமிழர்கள் இருக்கும் வரை ,அவர்கள் நினைவில் காதல் இருக்கும் வரை, கொண்டாடி மகிழ்வார்கள் .

அன்று முதல் இன்று வரை இனியும் ஒரு 50 வருடங்கள் கழித்தும் இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு புதிதாக இருக்கும். வசந்தமாக வீசும், வண்ண மலர்கள் தாலாட்டும், இனிமையான நினைவுகளில் இதயம் குளிர்ந்து, கண்களில் ஈரப்பசை உண்டாகும் .

நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், ஒப்பணையாளர், படத்தொகுப்பாளர், அரங்கமைப்பாளர், இசையமைப்பாளர் என எல்லோருக்கும் மறக்க முடியாத ஒரு மாபெரும் காவியமாக இந்த படம் தந்து இருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல

இயக்குநர் சேரன் இயக்கி நடித்து, மிகப்பெரிய ஹிட்டான திரைப்படமான ஆட்டோகிராஃப். திரைப்படம் முழுக்க ஒரு ஆணின் வாழ்வில் மூன்று பெண்கள் ஏற்படுத்திய பரிதவிப்பு, காதல், நட்பு ஆகிய மூன்று பந்தங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய 90’ஸ் கிட்ஸ்களின் காவியம், ‘இந்தபடம் இப்பொழுது ‘ஆட்டோகிராப் ரீயூனியன்’ எனும் பெயரில் வெளியாகியுள்ளது மீண்டும் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்

வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா ஆட்டோகிராப் ரீ யூனியன் ஒரு கிளாசிக் சினிமா என்பது உலகமே கொண்டாடிய திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை இப்பொழுதும் வணிகத்திலும் வெற்றி பெறும் மக்கள் மனதையும் தன் வசமாக்கும் இந்த படம் வசந்த கால நினைவுகளை மீண்டும் புரட்டி போடும் .இந்த ஆட்டோகிராப் வெற்றி பெற வேண்டும்🌷🙏

Comments (0)
Add Comment