மதராஸ் மாஃபியா கம்பெனி'”திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’

கதை: ஒரு தாதாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அவர் இறந்த பிறகு, அவரைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள். உடன் இருந்தவர்கள் என்ன சொல்கிறார்கள். என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு தாதா கதை.

கதை களம்

சென்னை மாகாணத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பூங்காவனம். கொலை , ஆள் கடத்தல், போன்ற எல்லா சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது ஒரு எஃப் ஐ ஆர் வழக்கு கூட நிலுவையில் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். கொலை செய்வது ஒரு குரூப், சரண் அடைவது ஒரு குரூப் என்று தனி தனியாக பிரித்து வைத்து சட்டத்தின் முன் ஆட்டம் காட்டி வருகிறார்.

சென்னையில் ஒவ்வொரு ஏரியாவுக்கும், ஒவ்வொரு வரை நியமித்து சிண்டிகேட் போட்டு தவறுகள் செய்யும் அவரை, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று காவல்துறை கங்கணம் கட்டி அலைகிறது .

அவர் கூடவே இருக்கும் கொண்டி தோப்பு வரதன், யானை கவுனி செல்வா, பர்மா பழனி ,கர்ணன், சார்பு போன்றவர்கள் பூங்காவனத்தை வீழ்த்தி அவருடைய இடத்திற்கு வரவேண்டும் என்று துடிக்கிறார்கள். அசிஸ்டென்ட் கமிஷனர் திகழ்பாரதி, எப்படியாவது பூங்காவனத்துக்கு எதிராக ஒரு சாட்சியை பதிவு செய்து, அவரை உள்ளே தள்ள வேண்டும் என்று லட்சியத்தோடு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் பூங்கா வனம் கொல்லப்படுகிறார். யாரால் கொலை செய்யப்பட்டார்? என்ன நடந்தது? என்பதை பிளாஷ்பேக் காட்சிகள் மூலம் மிகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கிறது இந்த மாஃபியா கம்பெனி.

ஆனந்தராஜ்

ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் தான் படத்தில் போட்டி ஆனந்தராஜுக்கு அல்வா சாப்பிடுவது போல அமைந்திருக்கிறது இந்த கதாபாத்திரம். தாதாவாக ஒவ்வொருவரையும் கொலை செய்யும் இடத்திலும், நக்கல் நையாண்டி உடன் பேசும் வசனத்திலும், மகள் ஸ்ரீராம் என்ற மிடில் கிளாஸ் இளைஞர் காதலித்து விட்டார் என்று அவரை கொலை செய்யும் இடத்திலும், கிளைமாக்ஸ் காட்சியில் தப்பிச்சென்று பிறகு போலீஸ்க்கே தண்ணீ காட்டும் இடத்திலும், அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மனநலம் குன்றிய மகனை பார்த்து சலித்துக் கொள்வது, முதல் மனைவியான வேண்டா வரத்திடம் பயப்படுவது, இரண்டாவது மனைவி பேபி இடம் கொஞ்சுவது, முனிஷ்காந்தை கண்டு நக்கலும் நையாண்டியும் செய்வது, அசிஸ்டன்ட் கமிஷனர் திகழ் பாரதியிடம் ,உன்னை உயிரோடு எரித்துக் கொள்ளப் போகிறேன் என்று மிரட்டுவது என ஒவ்வொரு காட்சியிலும் ஆனந்தராஜ் தான் ஸ்கோர் செய்துள்ளார் .அவர் பிணத்துக்கு முன் அவரே நடனம் ஆடுவது ,அவரது கல்லறையில் சென்று பார்ப்பது, தான் இறந்துவிட்ட பிறகு தன்னைப் பற்றி கூட இருந்த மனைவி, மற்றும் சகிலா, கூட்டாளிகள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை கேட்டு வருந்துவது ,என்று ஆனந்தராஜுக்கு இந்த படம் ஒரு கமர்சியலான வெற்றியை கொடுத்திருக்கிறது. நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
தீபா சங்கர்

வேண்டா வரம் என்ற ஆனந்தராஜின் முதலில் மனைவியாக, ஆன்மீகத்தில் மூழ்கி கணவருக்கு எச்சரிக்கை செய்யும் இடத்திலும் ,மகன் மீது பாசம் காட்டி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் .

சம்யுக்தா

அசிஸ்டென்ட் கமிஷனர் திகழ் பாரதி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். பிஃட்டான உடம்பு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது சிறப்பான நடிப்பு .

முனீஸ் காந்த்

வரதன் என்ற கதாபாத்திரத்தில் காமெடி கலாட்டா வாக, நடித்திருக்கிறார். ஒரு மட்டை கூட செய்ய முடியாத மொக்கை தாதாவாக, ஆனந்தராஜை கொலை செய்ய பிளான் போடும் இடங்கள் எல்லாம் செம கலகலப்பு .

ஆராதியா

ஆனந்தராஜ் மகள் வருணிகா என்ற கதாபாத்திரத்தில், ஸ்ரீராம் என்ற இளைஞரை காதலித்து ,அது கைகூடாமல் தன் தந்தைக்கு எதிராகவே அவர் சாட்சி சொல்ல கிளம்பும் இடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். மாணவர்களுக்கு இசை சொல்லி தரும் இடத்தில் அழகாக இருக்கிறார் நல்ல வரவு.

மற்றும் இப்படத்தில்

சசிலயா , ராம்ஸ், ரிஷி பிரகாஷ், சி. ரங்கநாதன், வடசென்னை அன்பு,
ஷகிலா, ரிச் கிரீஸ்,
முத்துபுவன், அஸ்மிதா, ஏ. இ. ஜெகதீஷ், தர்மராஜ், தாமோதரன், போன்றவர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்,

தொழில்நுட்ப கலைஞர்கள்

இப்படத்திற்கு அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் 1999 இன்று காட்டி அதை ரசிக்க வைத்திருக்கிறது கேமரா கலர் கரெக்ஷன், டி. ஐ
எல்லா பொருந்தி இருக்கிறது.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, மிகவும் ரசிக்க வைத்தது பாடல்கள் கு.கார்த்தி பாடல் வரிகள் ரசிக்க வைத்தது பின்னணி இசையில் ஸ்ரீகாந்த் தேவா மிரட்டி இருக்கிறார்.

இயக்குனர் ஏ .எஸ் முகுந்தன் ஒரு காமெடி படத்தை தாதாயிசம்கலந்து, ரவுடிகள் வாழ்க்கை, அவர்களின் மறுபக்கம், என கலந்து கட்டி கொடுத்திருக்கிறார். திரைக்கதை ,மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. படத்தைக் கொண்டு சென்ற விதம் ரசிக்க வைத்தது. கிளைமாக்ஸ் காட்சி, மன்னாதி மன்னன் என்றாலும் மண்ணுக்குள் செல்லும்போது யாரும் நம்மை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டு கொலைகள் செய்து தவறுகள் செய்யும் மனிதர்கள் இந்த படத்தை பார்த்து திருந்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுத்திருக்கும் இயக்குனரின் கனவு மெய்ப்பட வேண்டும். தவறு செய்யும் தாதாக்கள் இந்த படத்தை பார்த்து திருந்த வேண்டும் என்பது நமது எண்ணம்.

படத்தொகுப்பாளராக தேவராஜ் ,பணி புரிந்திருக்கிறார் படத்தை விறுவிறுப்பாக தனது டேபிளில், கச்சிதமாக செதுக்கியிருக்கிறார். எந்த இடத்திலும் படம் விறுவிறுப்பு குறையவில்லை. அவ்வளவு ரசிக்க வைத்தது.

ஆர்ட் டைரக்டராக கே. எ .ராகவ் குமார் பணிபுரிந்து இருக்கிறார். மாபியா கம்பெனி உருவான அந்த அரங்கம், ஆனந்தராஜ் வீடு, காவல்துறை அதிகாரிகளின் அலுவலகம், அஸ்மிதா ஆடும் அந்த கவர்ச்சி நடன அரங்கம், என எல்லா இடத்திலும் இவரின் கைவண்ணம் சிறப்பாக இருக்கிறது கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.

டேஞ்சர் மணி சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார் அவ்வளவு விறுவிறுப்பு
சம்யுக்தா போடும் சண்டைக்காட்சி அந்த வீட்டுக்குள் செல்வாவுடன், போடும் சண்டை ரசிக்க வைத்தது.

தினா ,மற்றும் ராதிகா நடனம் அமைத்திருக்கிறார்கள் நடன காட்சிகள் வெகுவாக ரசிக்க வைத்தது.

ஆர் .கே ஒப்பனையாளராக பணிபுரிந்து இருக்கிறார். ஆனந்தராஜ், சம்யுக்தா, மற்றும் எல்லோருக்கும் ஒப்பனை கச்சிதமாக இருந்தது.

ராமகிருஷ்ணனின் ஆடை வடிவமைப்பு எல்லோருக்கும் கச்சிதமாக பொருந்தி இருந்தது.

SFX : Praveen R
Stills : VinothKanna
PRO : Sathish (S2 Media)
Production Manager : P. Raghu
Produced by : V. Suganthi Annadurai

இவர்கள் அனைவரும் தங்கள் உழைப்பால் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்கள். எல்லோரையும் கவரும் வண்ணம் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய இளைஞர்கள் என்ன விரும்புவார்களோ? அதை அறிந்து இயக்குனர் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌷

Comments (0)
Add Comment