தாவூத்”திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

யார் அந்த தாவூத் படம் முழுக்க டிவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து, ஒரு பரபரப்பான கதை திரைக்கதையை தந்திருக்கிறார் இயக்குனர்.

ஒவ்வொரு நொடியும் ஆச்சரியம் ஒவ்வொரு பிரேமிலும் திடுக்கிடும் தகவல்கள் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் தாதாக்களின் ராஜ்ஜியம் தகர்த்தெறிய துடிக்கும் காவல்துறை முகம் காட்டாத தாவூத் இந்த சம்பவமே வேற லெவல்!!

மும்பையில் இருந்துக் கொண்டு தமிழ்நாட்டிலும் தனது போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்துகிறார்.தாவூத் அதற்கு 20 வருட காலமாக துணையாக இருந்து அந்த சாம்ராஜ்யத்துக்கு வழி நடத்துகிறார் மூர்த்தி புகைப்படம் உள்ளிட்ட எந்த விபரமும் வெளி உலகத்திற்கு தெரியாத தாவுத் யார் ? என்பதை தெரிந்து கொள்ள தீவிரம் காட்டுவதோடு, தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் அவரது போதை பொருளை கைப்பற்றும் முயற்சியில் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை குழு ஈடுபடுகிறது. அதே சமயம், தாவுத்தின் கடத்தல் பணிகளை 20 வருடங்களாக செய்து வந்த தீனாவும் அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறார். தாவுத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும் மற்றொரு தரப்பும் அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறது.

இந்த நிலையில், தாவுத்தின் சரக்கை சரியான இடத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அபிஷேக், வழக்கமான ஆட்கள் மூலம் செய்தால் தெரிந்துவிடும் என்பதால் புதிய நபரை தேடுகிறார். அதன்படி, வாடகை கார் ஓட்டுநரான லிங்காவை தேர்வு செய்கிறார். பண தேவைக்காக கடத்தல் பணியில் ஈடுபடும் அப்பாவி லிங்கா, திட்டமிட்டபடி தாவுத் சரக்கை சேர்த்தாரா ?, நிழல் உலகத்தில் வாழும் தாவுத் வெளிச்சத்திற்கு வந்தாரா ? என்பதை பரபரப்பாக சொல்வதே ‘தாவுத்’.

கதையின் நாயகனாக நடித்திருந்தாலும் படம் முழுவதும் ஒரு கதாபாத்திரமாக (தம்பிதுரை )என்ற வேடத்தில் வலம் வரும் லிங்கா, இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் நிறைவாக நடித்திருக்கிறார். அப்பாவியான முகம், அளவான நடிப்பு என்று தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக நடித்திருக்கிறார்.

ஓலா ஓட்டுபவர் எப்படி கடத்தல் புள்ளிகளிடம் சிக்குகிறார் என்பதும் கிளைமாக்சில் அவர் எடுக்கும் விஸ்வரூபமும் கைதட்டி ரசிக்க வைக்கிறது .

கதாநாயகியாக நடித்திருக்கும் சாரா ஆச்சர், வில்லன் ஜானியின் கைப்பாவையாக ஜோடியாக சுற்றி வருகிறார்.

எந்த உடை போட்டாலும் அழகு அழகு இப்படிப்பட்ட அழகி ஜானி க்கு ஜோடியா என்று பொறாமைப்பட வைக்கிறது.

அவரால்தான் லிங்கா படத்தில் புள்ளிகளிடம் சிக்குகிறார், என்பது ஏற்றுக் கொள்ளும் படியான ட்விஸ்ட் தான்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜெய், தாவுத்தின் அடியாளாக நடித்திருக்கும் திலீபன், சாய் தீனா, சரத்ரவி, அபிஷேக், ஸாரா, வையாபுரி, ராதாரவி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.

லிங்காவும் ,சாராவும் சிரிக்க வைக்கிறார்கள் ரசிக்க வைக்கிறார்கள் சாய் தீனா மிரட்டுகிறார். சரத் ரவி, ஜானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக செம ஸ்கோர் செய்திருக்கிறார்.

இசை அமைப்பாளர்

ராக்கேஷ் அம்பிகாபதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஆக்‌ஷன் திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடன் பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

வில்லன்கள் வரும்போதெல்லாம் பின்னணி மிரட்டலாக இருக்கிறது.

சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஆகியோரது கேமரா, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆக்‌ஷன் திரில்லர் உணர்வு குறையாதபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக படத்தின் ஹீரோ அல்லது வில்லன் கதாபாத்திரங்களுக்கு தான் பெரிய பில்டப் கொடுப்பார்கள். ஆனால், இவர்கள் படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் பில்டப் கொடுக்கும் விதமாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.

கடற்கரை ஓரத்தில் கேமரா ஆங்கில் டாப்பில் வைத்து படமாக்கி இருக்கிறார்கள் அவ்வளவு அழகு சாய்தீனாவும், வெள்ளியும் கடற்கரையில் நின்று பேசும் பொழுது கேமரா அற்புதமாக விளையாடி இருக்கிறது ஒவ்வொரு காட்சிக்கும் கேமராவில் கைவண்ணம் சிறப்பாக அமைந்திருக்கிறது

படத்தொகுப்பாளர் ஆர்.கே.ஸ்ரீநாத், காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து படம் முழுவதையும் பரபரப்பாக பயணிக்க வைத்திருக்கிறார்.விறுவிறுப்பான எடிட்டிங் படத்தின் வெற்றியை அவரது டேபிள் உறுதி செய்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் பிரசாந்த் ராமன், மிகவும் நேர்த்தியான திரைக்கதையில் எந்த குழப்பமும் இல்லாமல் கதை நேர்க்கோட்டில் பயணிக்க இவரது இயக்கம் உதவி செய்திருக்கிறது.

யார் அந்த தாவூத் என்று படம் பார்ப்பவர்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும்போதெல்லாம் இவராக இருப்பாரோ என்று யோசிக்க வைத்ததில் இயக்குனருக்கு பெரிய வெற்றி

தாவுத் மற்றும் அவரது கடத்தல் பொருளை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் பரபரப்பாக கதை சொல்லியிருக்கிறார்

ஒரு ஒரு பரபரப்பான ஆக்சன் திரில்லர் படத்தை பார்த்து உணர்வு.

எளிமையான விசயத்தை வைத்துக் கொண்டு, இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை பொழுதுபோக்கும் பணியை சிறப்பாக செய்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் ராமன்,,

தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடிப்பார் முன்னணி கதாநாயகர்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் லிங்காவின் கதாபாத்திரம் பிரசாந்த் ராமனுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது ஒரு சின்ன பட்ஜெட்டில் இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் இயக்குனர்.

கடத்தல் பொருளை கைப்பற்றப் போவது யார் ? என்ற கேள்விக்கான பதிலை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் ராமன், தாவுத் யார் ? என்ற கேள்வியை மட்டுமே வைத்துக் கொண்டு, படத்தின் இறுதிக் காட்சி வரை பார்வையாளர்களின் கவனத்தை சிதறவிடாமல் காட்சிகளை வடிவமைத்த விதம் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் இந்த படம் ஒரு பான் இந்தியா மூவிக்கான கதைக்களம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, எல்லா மொழிகளுக்கும் இந்த கதைக்களம் பொருந்தும்

வெற்றி பட்டியலில் இந்த படம் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🌷

மக்கள் தொடர்பாளர் புவன் செல்வராஜ்

Comments (0)
Add Comment