Yellow”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow).

அடுத்த விநாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் ஏராளம் என்பதை பாசிட்டிவாக சொல்லி இருக்கிறது. இந்த “எல்லோ” திரை படம்

கதை களம்

காதலன் சந்தோஷ் உடன் எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடும் ஆதிரை, தன் அப்பாவின் உடல் நிலை முடங்கி போனதற்கு பிறகு வேலைக்கு செல்கிறார்.

வங்கி வேலைக்கு போகும் ஆதிரை அதில் ஒரு சலிப்பு தண்மைக்கு ஆளாகிறார்.
மூன்று நாட்கள் விடுமுறையில் சின்ன வயதில் சந்தித்த பாட்டிமா,

ஜெனி, சில்வா, சோட்டு இவர்களை தேடி புறப்படுகிறார் . அந்தப் பயணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆச்சரியத்தை கொடுக்கிறது.

பொதுவாக திரைத்துறையில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் மிக குறைவே.

அப்படி பெண்மையை போற்றும் வகையில் அதிரையின் உணர்வுகளை சொல்லும் படம். ஐந்து வருடம் காணாத சந்தோஷம் எட்டு நாட்களில் நாயகிக்கு எப்படி கிடைத்தது.என்பதை சொல்லும் படம் எல்லோ”

நாயகி பூர்ணிமா, மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் இக்கால பெண்களின் வாழ்க்கைக்கும் பொருந்திபோகும் பல விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. பெண்கள் மீதான அடக்குமுறை குடும்ப பொருளாதாரம் தனித்து வாழும் பெண்களின் பிரச்சனை மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
சந்தோஷ் காதலை பிரியும் நேரம், வங்கியில் மேனேஜரின் தினம் தினம் டார்ச்சர்,
என நாயகி சலிப்பு தண்மைக்கு வருவதற்கு காரணம் சரியாக சொல்லபடுகிறது.
பயணங்கள் வரிசையில் எடுக்கப்பட்ட படங்களின் வரிசையில் முத்தாய்ப்பாய் அமைந்த படம்தான் ‘ எல்லோ பொதுவாக சமூக விஷய ங்களை இயக்குனர் கவனமாக பதிவு செய்துள்ளார்

ஜெனியை தேடிச் செல்லும் ஆதிரை, அங்கு ஜெனி அவள் ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பதுகண்டு அங்கிருந்து வெளியேறுகிறார் .

பிறகு முகுந்த் என்ற வாலிபனை சந்திக்கிறார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கும் பொழுது லீலா தாம்சன் சந்திக்கிறார். அங்கு வரும் சாய், சந்தித்து இருவரும் மனம் விட்டு பேசுகிறார்கள். இவர்கள் கருத்து ஒன்றாக இருப்பதால் இவர்கள் இருவரும் மார்த்தாண்டம் செல்கிறார்கள். அங்கு சில்வாவை தேடினார்களா! சோட்டோ யார்? இப்படி இளமையான ஜாலியான பயணமாக படம் தொடங்கி முடியும் வரை இளைஞர்களின் இதயத்தை திருடி செல்கிறது “எல்லோ”

நாயகி பூர்ணிமாரவி

பிக் பாஸ் இல் தொடங்கிய பயணம் அட்ரா சக்கை, அன்னபூரணி ,என்று சின்ன சின்ன வேடங்களில் நடித்து இப்பொழுது நாயகியாக அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் பூர்ணிமா ரவி.

காதலன் சந்தோஷை பிரிந்து வாடுவது, தனிமையில் கண்ணீர் வடிப்பது, கொச்சின் சென்று ஜெனியை சந்தித்து, அவள் வாழ்க்கையில் நடந்த திருப்பங்களை கண்டறிவது, பிறகு தனது பாட்டிமா வினோதினி (மேரி பெர்ணாண்டாஸ்), தேடிச் செல்வது, யார் என்று அறிமுகமாகாத சாய் உடன் பயணம் செய்வது ,என படம் முழுக்க நடிப்பில் பட்டை தீட்டிய வைரம் போல் இருக்கிறது அவர் நடிப்பு.

பேசும் வசனங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது. டெல்லி கணேஷ் இடம் என்னால் நான்கு வருடம் தாங்க முடியவில்லை நீங்கள் 40 வருடம் எப்படி இந்த வேலையை தாங்கினீர்கள்? என்று கேட்கும் இடம் ,

உயிருக்கு உயிராக நேசித்த பாட்டிமா வினோதினி, இறந்துவிட்டார் என்று கலங்கும் இடம், வானவில் பார்த்து பிரமை யுடன் நிற்கும் பொழுதுசிலிர்க்கும் நடிப்பு மிகவும் ரசிக்க வைத்தது.

நாயகன் வைபவ் முருகேசன

சாய் என்று கதாபாத்திரத்தில் முன்னாள் காதலியை பிரிந்து, பைக் லோன் கட்ட முடியாமல் ட்ரிப்புக்கு வரும் இந்த கதாபாத்திரம். இதுதான் எனது கடைசி டிரிப் “என்று சொல்ல எல்லோருமே அவர் இறந்து விடுவார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது இல்லை, இல்லை ,எனது பைக் வங்கியில் பறிமுதல் செய்யப்பட போகிறது. என்று கதையை திசை திருப்பும் இடம் சிறப்பாக இருக்கிறது. நன்றாக நடித்து இருக்கிறார்.

மற்றும் சந்தோஷ் வேடத்தில்சாய் பிரசன்னா, சிறப்பாக நடிதிருக்கிறார். கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்னுடைய கல்யாண கதையை சொல்லி உருக வைத்து எல்லோரும் மனதிலும் இடம் பிடித்துக் கொள்கிறார் லீலா தாம்சன்.

சோமசுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் வரும் டெல்லி கணேஷ் ,நாயகியின் தங்கை, அம்மா, வங்கி மேலாளர், என எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

மற்றும் இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் நமீதா, கிருஷ்ணமூர்த்தி , வினோதினி , வைத்தியநாதன், பிரபு சாலமன், லோகேஷ் ஜுபின், மணிமாலா,
சிஜுராகவன், அஸ்வின், ஜெயபிரகாஷ், ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் ஹரி மகாதேவன் , தரமான இயக்கம், மேக்கிங் சிறப்பாக இருக்கிறது .வசனம் நச் “என்று இருக்கிறது. பெண்ணியம் சார்ந்த கதை கண்ணியமான முறையில் இயக்கியிருக்கிறார்.

இசை:கிளிப்கிரீஸ் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது .

ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஆனந்த கிருஷ்ணன், பின்னணி இசை அருமையாக இருக்கிறது.

ஸ்ரீ வத்சனின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

கார்த்திக் கிருஷ்ணன் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார். வீடு, ஹோட்டல், என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் பணி சிறப்பானது .

காஸ்ட்யூம் டிசைனராக மீரா, பூர்ணிமா ரவி, சாய் பிரசன்னா, வைபவ் ஆகியோரின் உடை தேர்வு கச்சிதமாக இருக்கிறது.

மக்கள் தொடர்பாளர் பரணி அழகிரி , படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்

இந்த படத்தை வெளியிடுகிறது உத்ரா புரொடக்சன்ஸ். உத்ரா வெளியிட்டாலே வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த படம், முழுக்க, முழுக்க இளைஞர்கள் ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது வெற்றி பட்டியலில் “எல்லோ”

எல்லோரும் பார்க்க கூடிய படம் “எல்லோ’
Comments (0)
Add Comment