இரவின் விழிகள்” சைக்கோ த்ரில்லர் படம். மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி மூலம் மகேந்திராவால் தயாரிக்கப்பட்டு, சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படம் சமூக வலைத்தளங்களின் மோசமான விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்
கதை களம்
வலைதளங்களை மையமாக வைத்து சைக்கோ த்ரில்லர் ஜானரில் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்குத் தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. அதுவே வெற்றியாகும்
நாயகன் கர்ணா,சிவா, ரேஷ்மா யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் கள்.
வித்தியாசமான கண்டெண்ட் தேடித்தேடி ஒளிபரப்பு செய்கிறார்கள். அதில் சில பிரச்சினைகளும் வருகிறது.
இன்னொரு பக்கம் சைக்கோ கொலை காரன் நடுக்காட்டில் youtube நடத்துபவர்களை திட்டமிட்டு கொலை செய்கிறார் அவர் யார்?
இன்னொரு பக்கம் கருப்பனும், கயல்விழி கதை அற்புதமான அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது இவர்கள் யார்?
போலீஸ் அதிகாரியும் கான்ஸ்டபிள் இருவரும் காட்டுக்குள் தப்பு நடக்கிறதா ?என்று தேடி அலைகிறார்கள் .
இறுதியாக சைக்கோ கொலைகாரனை இவர்கள் பிடித்தார்களா? இல்லை யா? என்பதை சொல்லும் படமாக வந்திருக்கிறது “இரவின் விழிகள்”.
ஒரு முழுமையான க்ரைம் திரில்லர் படம் தமிழ் சினிமாவில் வருவதும் ஒரு நாவலைப் படிப்பது போன்ற பரபரப்புடன் நகரும் படங்கள்தான் ரசிகர்களை ஈடுபாட்டுடன் ரசிக்க வைக்கும். அப்படி ஒரு படமாக இந்த ‘இரவின் விழிகள்’ படம் அமைந்திருக்கிறது. ஒரு அறிமுக இயக்குனரிடமிருந்து இப்படி ஒரு நேர்த்தியான படம் வந்திருப்பதும் பாராட்டுக்குரியது. படத்திற்கு என்ன தேவையோ, எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே திரைக்கதையில் சேர்த்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள் சார் 🌷
இப்படத்தின் படப்பிடிப்பு வெள்ளிமலை பகுதியில் படமாக்கி இரக்கிறார்கள். ஒரு குகையில் சென்று காட்சிகளை படமாக்கி இருப்பது எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட காட்டு மிருகங்கள் சர்வ சாதாரணமாக உலா வரும் இடங்களில் அச்சமின்றி படமாக்கி இருக்கிறார்கள். கருப்பண்ண சாமியை இந்தக் கதையுடன் பிணைத்து உருவாக்கியுள்ளவிதம் சூப்பர் ‘வாடா கருப்பா’ என்கிற ஆக்ரோஷமான பாடல் மிரட்டி இருக்கிறது. இப்பாடல் காட்சி பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என்பது உறுதி” வளைதள வாசிகள் இப்படத்தை பார்த்தாவது திருந்த வேண்டும்.
பெண்கள் எப்படி பாதிக்க படுகிறார்கள் என்பது விழிப்புணர்வு மிக்க படமாக அமைந்தது என்று சொல்லலாம்.
நடிகர் & நடிகைகள்
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர்
மகேந்திரா நன்றாக நடனம் ஆடுகிறார். சன்டை காட்சியில் தெறிக்க விட்டுள்ளார்.
நாயகி நீமாராய் கலக்கி இருக்கிறார்.
நிழல்கள் ரவி ஒரு காட்சியில் வந்தாலும் உருக வைத்து விடுகிறார்.
சிக்கல் ராஜேஷ் பாசமுள்ள அண்ணன், கயல் மீது அன்பை காட்டும் போது கயலுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் அழுது புலம்பும் காட்சியில் உருக வைத்து விடுகிறார். அற்புதமான நடிப்பு.
மஸ்காராஅஸ்மிதாவின் ,
கவர்ச்சி பாடல் சூப்பர் . சிஸர் மனோகர், சேரன் ராஜ், காவல்துறை அதிகாரிகளாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சிந்து நடிப்பு சூப்பர்
கும்தாஜ், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள் .
இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மிகவும் பொறுப்பாக இன்றைய சமூகத்தில் நடக்கும் அவலங்களை அதனால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனையை சொல்லி இருக்கிறார்
இன்று வலைதளங்களில் மிகவும் ஆபாசமாக பேசுபவர்கள், ஆபாசமாக ரீல்ஸ் போடுபவர்கள், அனைவரும் இப்படத்தை பார்த்து திருந்த வேண்டும் என்பது இயக்குனரின் எண்ணம்.
திருந்துவார்கள் என்று எதிர் பார்க்கலாம்.
இப்படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாடல்கள் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார் இரவில் கொடூர முகத்தையும் நாயகன் மகேந்திரா, ரேஷ்மா இவர்கள் கவர்ச்சி கலக்கலாக படமாக்கி இருக்கிறார்.
விடுதலை” படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
அசத்தல். படத்தொகுப்பு கச்சிதமாக இருந்தது. இடைவேளைக்கு பிறகு செம விறுவிறுப்பான திரைக்கதை, மற்றும் படத்தொகுப்பு, இரண்டும் சேர்ந்து மிரட்டி இருக்கிறது.
சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும்,
இணைந்து பயிற்சி கொடுத்து இருக்கிறார்கள் சன்டை காட்சியில் அனல் தெரிக்கிறது.
நடனத்தை எல்.கே ஆண்டனி, வடிவமைத்துள்ளனர். நடனம் ரசிக்க வைக்கிறது.
ஒப்பனையாளர், காஸ்டியூம் டிசைனர், கலர் கரெக்ஷன் செய்தவர்கள், டி .ஐ செய்தவர்கள் என ஒவ்வொரு கலைஞர்களும் தங்கள் பங்குக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.
ஆக்ஷன் ரியாக்ஷன் உலகமெங்கும் வெளியிடுகிறார் ஜெனிஷ். அவர் வெளியிட்டாலே வெற்றி தான்.
‘இரவின் விழிகள்’ படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ். சமூக அக்கறையோடு சொல்லி இருக்கிறார் மிரட்டி இருக்கிறார்.
கயலுக்கு அண்ணணாக அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள் சார்.
தயாரிப்பாளர் மகேந்திரா இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள் சார்.
மக்கள் தொடர்பு ; A.ஜான்
.