வேடுவன்’ மற்றும் ‘ரேகை’ போன்ற கிரைம் வெப் தொடர்களை வெளியிட்ட பிறகு,ஜீ5
வெளியிடும் புதிய தொடர் தான் ’ஹார்ட்டிலே பேட்டரி’
கதை களம்
சின்ன வயதில் இருந்து நாயகி சோபியா சயின்டிஸ் ஆக வேண்டும் என்று
கணவில் மிதக்கிறார்.
தன் அப்பா, அம்மா பிரிந்து போனதை கண்டு ,தனிமையில் வெறுத்துப் போகிறாள்.
காதலர்கள் ஒருவரை ஒருவர் எவ்வளவு விரும்புகிறார்கள் என்று “லவ் மீட்டர்” என்ற புதிய சாதனத்தை கண்டுபிடிக்கிறார்.
அதை வைத்து தனது தோழி ‘நவ்யா”
வின் காதலன் ஒரு ஏமாற்றி பேர்வழி என்று கண்டுபிடிக்கிறார்.
அடுத்து இன்னொரு தோழி பிரியா வையும் காதலன் ஏமாற்றுவதை கண்டு மிசின் மூலம் கண்டுபிடிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் நாயகன் சித்தார்த் நாயகி சோபியாவை விரும்ப, இவர்கள் காதல் உண்மையானதா? என்று அந்த மிஷின் கண்டுபிடித்ததா?
காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை கதைக்களம்.
ஒரு இளமையான காதல் கதையை இதமாக, ஜாலியாக சந்தோஷமாக, சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஒவ்வொரு காட்சியும், இளமை துள்ளும் வகையில்,படமாக்க பட்டுள்ளது.
சித்தார்த்துக்கும், சோபியாவுக்கும் காதலர்அரும்பும் காட்சி அற்புதமாக இருக்கிறது.
அன்பு இல்லாதவர்களுக்கு தான் அந்த அன்பானவரை பற்றி தெரியும் என்று நாயகி தன் அம்மாவைப் பற்றி உருகும் காட்சி எல்லோரையும் கலங்க வைத்துவிடுகிறது.
வித்தியாசமான கதை, குதூகலமாக செல்லும் திரைக்கதை, வசனம் ரசிக்க வைக்கிறது.
நடிகர் & நடிகைகள்
நாயகன் குரு லக்சுமன்,
சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
முதல் காட்சியில் வில்லன் களிடமிருந்து தப்பிக்க நாயகி பாடினிகுமாரை காதலி என்று சொல்வதும்,
காதலுக்காக ஒருநாள் கெடுவை
காதலியிடம்
காதலை சொல்ல முயற்சிப்பதும், நல்ல ஜீவன் உள்ள நடிப்பு பிரமாதப்படுத்தி இருக்கிறார் குரு லட்சுமணன்.
நாயகி பாடினி குமார்,
ஹார்ட் பீட் வெப் தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர்
இவரின் கதாபாத்திரம்
“சோபியா” இவர் மூலம் தான் கதைடிராவல் ஆகிறது.
கண்களில் காதல் காவியம். இவர் ஒரு காதல் ஓவியம்.
அம்மா அப்பா பாசத்துக்காக ஏங்கி யலும் அந்த காட்சியில் எல்லோர் கண்களையும் குளமாக்கி விடுகிறார்.
ஆரம்பத்தில் இருந்து மற்றொரு காதலை லவ் மேட்டர் மூலம் பரிசோதிக்கும் சயின்டிஸ்ட் பிடித்த மாணவியாக வந்தாலும் அந்த அம்மா காட்சி இவரை சபாஷ் போட வைக்கிறது.
எமோஷனல் மற்றும்
குறும்பு நிறைய நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள் 🌷
சுமித்ரா தேவி,
பத்து வருஷமா போராட்டம் நடிக்க வேண்டும் என்று “நவ்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரிச்சியமான நடிகை ஆகிறார்
மற்றும் இந்த வெப் தொடரில் நடித்த
அனித் யாஷ் பால், யோகா லட்சுமி, இனியாள், ஜீவா ரவி, ஷர்மிளா, பிரவீணா பிரின்சி, கலை, அஜித், பவித்ரா மற்றும் சீனு உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார் கள்..
தொழில்நுட்ப கலைஞர்கள்
இந்தத் தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.
இயக்குனர் இந்த கதையை
காதல் என்பதே மெல்லிய உணர்வுகளின் மொத்த உருவம்தான். அப்படிப்பட்ட காதல் கதையை, இன்னும் மெல்லியதான திரைக்கதையுடன் சொன்னால் எப்படியிருக்கும்? எந்த திடுக்கிடல் சம்பவங்களுமில்லை வில்லனோ? கெட்டவனோ? என்று யாருமில்லை. ஆனால், என்னவாக இருக்கும், என்று
சொல்லி இருக்கிறார் இயக்குனர் “லவ் மீட்டர்” என்ற வித்தியாசமான சங்கதியை இளைஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இனி ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இந்த” லவ் மீட்டரை” வைத்து எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை கண்டுபிடித்துக் கொள்ளலாம் .
கால மாற்றத்தில் இது ஒரு புதிய செய்தி.
நாற்பத்து ஐந்து
ஜி .சி .ஒர்க் அந்த அனிமேஷன் காட்சிகள் ஒவ்வொரு எபிசோடு முன்னாலும் வரும்போது ரசிக்க வைக்கிறது. சுல்தானின் காதல், சித்தார்த்தின் காதல், பிரியாவின் காதல், நவ்யாவின் காதல், என ஒவ்வொரு காதலும் ரசிக்க வைக்கிறது.
நாயகியின் அம்மா சென்டிமென்ட் எமோஷனல் கலந்து உருக வைத்து விடுகிறார் இயக்குனர், வாழ்த்துக்கள் சார்🌷
மைக்கேல் ஆகாஷ் இசையமைத்திருக்கிறார் .இசை, உயிரோட்டமாக இருக்கிறது. காதல் காட்சிகளில் லவ் மீட்டர் வைத்து கண்டுபிடிக்கும் காட்சிகளில் இசை எதிர்பார்ப்புடன் இருக்கிறது.
நிஜாம் படத்தொகுப்பாளராக அருமையாக பணி புரிந்திருக்கிறார் .
அந்த
அனிமேஷன் காட்சிகளை தொகுத்து இருப்பது இருப்பது சிறப்பு.
வி.எப்.எக்ஸ் மற்றும்
அனிமேஷன் காட்சிகளை தனியாளாக செதுக்கி இருக்கிறார் அந்த சுல்தான் காட்சிகள் ரசிப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள் சார் 🌷
சவுந்தரராஜன்
ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்
காட்சிகள் குளுமையாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் கவனம் பெறுகிறது. அருமையான ஒளிப்பதிவு.
அனிமேஷன் காட்சிகள் ,கலர் கரெக்ஷன் எல்லாமே கேமராவில் அற்புதமாக பதிவாகி இருக்கிறது.
ராஜா டி.எஸ் அவர்கள் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார் “லவ் மீட்டர்” உருவாக்கிய விதம்
நாயகியின் வீடு, மற்றும் எல்லா காட்சியிலும்
ஆர்ட் டைரக்டர் பணி அற்புதமாக இருக்கிறது.
John Naresh – Executive Producer & Production Executives
Nizam & Gopi – Sound Design
Anbuarasu – DI
Nizam – Online Editor
Karthik Sivakumar – Associate Director
Kishore Chezhian – Assistant Director
Tony J – Audiography
மற்றும் இந்த வெப் தொடரில் பணிபுரிந்த காஸ்ட்யூமர், ஒப்பனையாளர்
அனைவரும் நன்றாக பணிபுரிந்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
மக்கள் தொடர்பாளர் சதீஷ் &சிவா AIM.
ஹார்ட்டிலே பேட்டரி’ வெப் தொடர் வருகிற 16 -ம் தேதி ஜீ 5 இல் வெளியாக உள்ளது.
இது வெற்றிப்பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா🌷🙏