கதை களம்
அரசனூர் என்ற கிராமத்தில் வெற்றி,
எழில், இருவரும் ஆதிபறைஇசை குழு நடத்தி வருகிறார்கள்.
வெற்றி, எழில்,
இருவரும் நண்பர்களாக உயிருக்கு உயிராய் பழகி வருகிறார்கள்.
இவர்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது .
சாவு வீட்டில் பறை அடிக்க மாட்டார்கள். சாமிக்கு பறையடிக்க கூடாது என்பது இவரது கொள்கை.
அந்த ஊர் தலைவர் பரந்தாமன் அவர்களை கண்டாலே எரிச்சல் அடைகிறார். அவர்களுக்கு ஏதாவது ஒரு சம்பவம் செய்ய வேண்டும் என்று திருமலையுடன் திட்டம் தீட்டுகிறார்.
அன்னை தெரசா பார்வையற்றோர் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் “யாழினி மீது வெற்றிக்கு காதல்” இருவரும் காதலிக்கிறார்கள். மணமுடிகிறார்கள்.
ஒரே சமயத்தில் வெற்றிக்கு அன்னைதெரசா பள்ளியில் ஒரு நிகழ்ச்சியும்,
கோடியூரில் எழிலுக்கு ஒரு கோயில் திருவிழாவில் பறை அடிக்கும் நிகழ்ச்சியும் வருகிறது.
அப்படி கோடியூர் நிகழ்ச்சியில் எழில் கலந்து கொள்ளும் நேரத்தில் தன் குரூப்பில் இருக்கும் ஒரு இளம் பெண் உடை மாற்றுவது அங்கிருக்கும் ஆதிக்க சாதியினர் பார்த்து பிரச்சனை ஏற்பட்டு, எழிலை கொன்று விடுகிறார்கள்.
நண்பன் இறந்த பிறகு வெற்றி அந்த ஆதிக்க சாதியினரை வேரறுத்தானா ?
அல்லது அடங்கிப் போனானா ?
ஆட்சி, அதிகாரம் காவல்துறை ஏவல்துறையாக வெற்றியை முடக்கி போட்டதா?
என்ன ஆனது!!! என்பதை பரபரப்பாக விறுவிறுப்போடு சொல்லி இருக்கும் படம் தான் *மாண்புமிகு பறை ”
இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி அருகே துறையூரில் நடத்தி இருக்கிறார்கள். எளிய மக்களின் இசையும், வாழ்வும் அச்சு அசலாக இப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது.இசை குறித்தும், தமிழ் மண்ணின் அடையாளம் குறித்தும் இந்தப் படம் விரிவாக பேசுகிறது.
ஆதிக்க சாதியினர் செய்யும் ஆணவக் கொலைகள் எப்படி இளம் காதலர்களை பாதிக்கிறது.
என்பதை இந்த படம் சரியாக பேசி இருக்கிறது.
நடிகர் & நடிகைகள்
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி அவர்கள் மகன்
லியோ சிவக்குமார்
இந்த படத்தில் நாயகனாக ,வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,
நண்பன் இறந்த பிறகு ,அழும் காட்சிகளும் சரி,
நாயகி காயத்ரி மீது காதல் கொள்ளும் காட்சி ,
ஆதிக்க சாதியினரை
எதிர்த்து பேசும் பொழுது ,
பறை இசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு பாடம் நடத்துவதிலும் ,தன் பாட்டியுடன் பேசும் காட்சியிலும் ,மற்றும் ரொமான்ஸ் காட்சியிலும், சிறப்பாக நடித்திருக்கிறார்.
இது போன்ற நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் எதிர்காலம் அவருக்கு பிரகாசமாக இருக்கும்.
காயத்ரி ரெமா ,
யாழினி “என்ற கதாபாத்திரத்தில் பார்வையற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம். பிறகு வெற்றியை காதலிக்கும் பொழுதும், கிளைமாக்ஸ் காட்சியில் பறையாய் அடித்துக் கொண்டு நடனமாடும் காட்சியும், வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்.
கந்து வட்டிக்காரன் பாலசிங்கத் திடம்
தன் கற்பை பாதுகாக்க வெகுண்டு எழுவதும், தன் மணவாழ்க்கை போனதுக்கு காரணமான உறவுகளை வெறுத்து ஒதுக்குவதும் ,என இந்த படத்தில் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் காயத்ரி ரெமோ.
ஆரியன் “இந்த படத்தில் எழில் என்ற கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருக்கிறார். தன் நண்பன் வெற்றிக்காக ,எதை வேண்டுமானாலும் செய்யும் கதாபாத்திரம்
தன் பறைஇசை குழுவில் உள்ள பெண்களை பாதுகாக்க போராடும் கதாபாத்திரம்.
வில்லன்கள் ஆதிக்க சாதியினரால் அடித்து உதைத்து கொல்லும் நேரத்தில் பரிதாபத்தை வாங்கி கட்டி கொள்கிறார். இவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
கஜராஜ்,
நாயகியின் அப்பாவாக ஒரே காட்சியில் வந்தாலும் படம் பார்ப்பவர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்கிறார்.
இப்படிப்பட்டவர்களால் இன்று இளைய தலைமுறையினர் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு அவர் கதாபாத்திரம் உதாரணம்.
ரமா, இவரது மனைவியாக நாயகி அம்மாவாக வந்து உருக்கமாக
நடித்தி ருக்கிறார்.
சேரன்ராஜ்,
ஊர் தலைவர் பரந்தாமன் கதாபாத்திரத்தில் உருட்டல் மிரட்டல் வில்லனாக ஆதிக்க சக்தியின் தலைவனாக வந்து நயவஞ்சகம் செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றும் இப்படத்தில்
அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 2025ல் திரையிடப்பட்டது. அப்போது, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்ற இந்தப் படம், சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற கலாச்சார பாரம்பரியம் பிரிவில் விருதை பெற்றுள்ளது.
இந்த விழாக்களில் இந்த படம் விருதுகளை பெறுவதற்கு கிளைமாக்ஸ் காட்சி தான் காரணம் என்பது படம் பார்த்தவர்களுக்கு புரியும் .அவ்வளவு அற்புதமாக இயக்குனர் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்திருக்கிறார்.
Banner : Siya Productions
Written by : Subha – Suresh Ram
இவர்கள்தான்
இந்த கதையை எழுதி இருக்கிறார் சிறப்பு!!!
இவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌷
இயக்குனர்: எஸ்.விஜயசுகுமார்
இயக்கி இருக்கிறார்
இந்த படத்தில்
ஆணவக் கொலைகள் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நடந்ததல்ல, மாறாக பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு குற்றமாகும்.
காதல், சாதி மறுப்புத் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஆணவக் கொலைகள் நடந்துள்ளன .
இதை இந்த படத்தில் முக்கிய கதையாக வைத்திருக்கிறார் ஆனால் அதை கிளைமாக்ஸ் காட்சியில்
அவர் அவிழ்க்கும் பொழுது திரைக்கதை “ஜம் என்று நிமிர்ந்து உட்காருகிறது.
பறை இசை உலகின் முதல் இசை என்றாலும், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று காதல் ,நட்பு ,ஜாதி வெறி ,அடக்குமுறை போன்ற சம்பவங்களை வைத்து கதை எழுதி இயக்கி இருக்கிறார்.
இன்னும் கொஞ்சம் காட்சியை எளிமைப்படுத்தி இருந்தால் நம்பகத்தன்மை அதிகரித்திருக்கும். ஓபனிங் பாடலில் அவ்வளவு ஆடம்பரம் தேவையா ?
இது போன்ற சில சின்னப் பிழைகள் இருந்தாலும் படம் வரவேற்க வேண்டிய படமாக அமைந்திருக்கிறது .
தேனிசைத் தென்றல் தேவா” இசையமைத்திருக்கிறார் படம் முழுக்க, பறை இசையின் துள்ளலான இசையை தந்திருக்கிறார். அவரே பாடியுள்ள பாத கத்தி ,பாடல் மனதை உலுக்கும் ரகம்.
தேவாவின் இசைக்கு கவிஞர் சினேகனின் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது. கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
கொளஞ்சி குமார் ;
ஒளிப்பதிவு கிராமத்து அழகையும் ,
பறை இசையில் நடனத்ததையும்,
பாடல் காட்சியில் ரம்யத்தையும் ,
சண்டைக் காட்சிஅனலாகவும் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
பிரேம் குமாரின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. நண்பன் இறந்த பிறகு அந்த ரொமான்ஸ் காட்சி தேவையா? எடிட்டர் அதை கவனித்து
அதை கட் பண்ணி இருக்க வேண்டாமா?
ஜி சரவணன் சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார் .
சூடான” பறையில்”
சுடு தண்ணீர் ஊற்றியது போல அந்த சண்டைக் காட்சி ரசிக்க வைக்கிறது. ஆரம்பத்தில் வரும் சண்டை காட்சி. நன்றாக இருக்கிறது.
ஜானி மாஸ்டர், நடன பயிற்சி கொடுத்திருக்கிறார். பறையிசையோடு, நடனம் ஆடிக்கொண்டு மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் நாயகி ஆடும் அந்த நடனம் ஒரு நாள் பயிற்சி எடுத்துக் கொண்டு அற்புதமாக ஆடி இருக்கிறார் .அதற்கு மாஸ்டர் தான் காரணம். காஸ்டியூமர்,
இன்று பறை இசைக் கலைஞர்கள் ஆண் பெண் எல்லோருமே பேன்ட் சட்டை போட்டுக் கொண்டுதான் பறையை இசைக்கிறார்கள் இதை கொஞ்சம் காஸ்டியூமர் கவனித்திருக்கலாம்.
Associate Editor : R. Sutharsson Edwin
Production Manager : A.V Palanisam
Hair and Makeup : Bharathi – Saradha
Vfx and Title Animation : Hocuspocus
Di : B2h Studio
Di Colorist : V. Siva Sankar
5.1 Mixing : Mantra Digital Audio Lab
Audiography : G. Tharanipathy and Krishnamoorthy D.F. Tech
Stills : Raja
Publicity Designer : Rajinkrishnan
Co Director : N. Selvakumar
Executive Producers : T. Murali
Co Producer : J.F Nakirane – Kavidha
என இந்த படத்திற்காக, திரைக்கு முன்னாலும், திரைக்குப் பின்னாலும், நிறைய தொழில்நுட்பக் கலைஞர்கள். நடிகர், நடிகைகள், உழைத்திருக்கிறார்கள் அவர்கள் உழைப்புக்கு தகுந்த வெற்றி கிடைக்க வேண்டும். இது போன்ற நல்ல படங்களை மக்கள் கொண்டாட வேண்டும். அடுத்த படத்திலாவது இயக்குனர், ஆடம்பரங்கள் இன்றி மனதுக்கு நெருக்கமான எளிமையான காட்சி அமைப்பை கொடுக்க வேண்டும். என்று வாழ்த்துகிறது கிளாசிக் சினிமா 🌷