:* RMV THE KINGMAKER* — *அருளாளர் திரு. ஆர். எம். வ வீரப்பன் அய்யாவின் வாழ்க்கை வரலாறை வெளிப்படுத்தும் ஆவணப்படம்*
அருளாளர் திரு. ஆர். எம். வ ீரப்பன் அய்யாவின்
வரலாறு, வாழ்க்கைப் பயணம், தமிழக சினிமா
மற்றும் அரசியலுக்கு அவர் செய்த பெரும்
பங்களிப்புகளை பதிவு செய்யும் “RMV The
Kingmaker” ஆவணப்படம் விரைவில்
வெளியாகிறது.
ஆரம்ப காலத்தில் தந்தை பெரியார் மற்றும்
அறிஞர் அண்ணா ஆகியோருடன்
பணியாற்றிய அவர், பின்னர் புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய துணையாக
இருந்தார்.
திரு. ஆர். எம். வ வீரப்பன் அய்யாவின் சேவை,
ஒழுக்கம், தலைமைக் குணம் மற்றும் தமிழுக்கு
அவர் செய்த அர்ப்பணிப்பு இந்த படத்தில்
விரிவாக காட்டப்பட்டுள்ளது.
அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள்
மற்றும் வரலாற்றுத் தகவல்களின் மூலம் இந்த
ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் சத்யா மூவிஸ் மற்றும் தி
கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் இணைந்து
தயாரித்துள்ளது.
அருளாளர் ஆர். எம். வீரப்பன் அய்யா சினிமா
வளர்ச்சிக்கும், தமிழ் வரலாறு மற்றும்
கலாச்சாரத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகளை
அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல
வேண்டும் என்பதே இந்த தயாரிப்பு
நிறுவனங்களின் நோக்கம்.
தயாரிப்பாளர்
அருளாளர் ஆர். எம். வீரப்பன் அய்யாவின் மகன்
தங்கராஜ் வீரப்பன், தந்தையின் பாரம்பரியம்,
பண்புகள் மற்றும் சமூகப் பணிகளை மிகுந்த
அன்பும் மரியாதையும்கொண்டு இந்த
ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.
இது தந்தைக்கு அவர் செலுத்தும் மனமார்ந்த
அஞ்சலி.
இயக்குநர்
ஆவணப்பட இயக்குநர் சுப்பிரமணியம்,
உண்மை மற்றும் வரலாற்றை எளிமையாகவும,
ஆழமாகவும், பதிவு செய்யும் வகையில் இந்த
படத்தை வடிவமைத்துள்ளார்.
அவரின் ஆராய்ச்சி, கதை சொல்லும் திறன்,
மற்றும் காட்சிகளை நுணுக்கமாக உருவாக்கும்
நடை இந்த ஆவணப்படத்தின் முக்கிய
பலமாகும்.
ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, எங்கள் குழு
அருளாளர் வீரப்பன் அய்யா பிறந்த
கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன்
நேரடியாக உரையாடி பல முக்கிய
தகவல்களை சேகரித்தது.
மேலும் சினிமா, அரசியல், இலக்கியம்,
ஆன்மீகம், ISRO விஞ்ஞானிகள், மற்றும்
வரலாற்றாளர்கள் உள்ளிட்ட பல துறைகளின்
நிபுணர்களை சந்தித்து விரிவான ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டன.
படத்தில் இடம்
பெ ற்றுள்ள முக்கிய நபர்கள்
● தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.
ஸ்டாலின்
● சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த்
● திரு. ஆர். கண்ணன
● திரு. ஆர். சரத்குமார்
● திரு. சத்யராஜ்
● கவிஞர் திரு. வைரமுத்து
● ISRO விஞ்ஞானி திரு. நம்பி நாராயணன்
மேலும் பல முக்கிய ஆளுமைகள்…
ஆவணப்படம் பற்றி
“RMV The Kingmaker” என்பது ஒரு வாழ்க்கை
வரலாறு மட்டுமல்ல;
தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியல்
வரலாற்றில் முக்கிய பங்காற்றிய அருளாளர்
ஆர். எம். வீரப்பன் அய்யாவின் அரிய
பயணத்தை பதிவு செய்யும் வரலாற்று
ஆவணப்படம்.
அவரின் தலைமைக் குணம், நம்பிக்கை,
திறமை மற்றும் தமிழ்ப்பண்பாட்டுக்கு அவர்
செய்த பங்களிப்புக்கான ஒரு மரியாதை இது.
அருளாளார் RMV
அவர்கள் பற்றிய சில தகவல்கள்
.எம்.வீரப்பன் (R. M. Veerappan) (1926-2024) தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர். எம்.ஜி.ஆர்-ஐ அரசியலுக்குக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றியவர், AIADMK-வின் அமைப்புக்கு வித்திட்டவர், அமைச்சராகவும், எம்.ஜி.ஆர் கழகம் (MGR Kazhagam) நிறுவனர் மற்றும் தலைவராகவும் இருந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை & சினிமா:
பிறப்பு: செப்டம்பர் 9, 1926, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகிலுள்ள வல்லத்திராக்கோட்டை.
திரைத்துறை: 1964-ல் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, ‘ தெய்வத் தாய்’, ‘ நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’, ‘பாட்ஷா’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தார், ரஜினி, கமல் போன்றோரின் படங்களிலும் பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
எம்.ஜி.ஆர்-இன் திரைப்பட வாழ்க்கையையும், அரசியல் எழுச்சியையும் வடிவமைத்ததில் முக்கியப் பங்காற்றினார், எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து AIADMK உருவாக்க வித்திட்டார்.
அமைச்சர்: 1977 முதல் 1996 வரை பலமுறை அமைச்சராகப் பணியாற்றினார், தமிழ்நாடு சட்டமன்றத்திலும், மேலவையிலும் உறுப்பினராக இருந்தார்.
அரசியலின் “சானக்கியா” என்று அழைக்கப்பட்டார், ஏனெனில் அவர் திட்டமிடுவதிலும், ஒருங்கிணைப்பதிலும் வல்லவர்.
எம்.ஜி.ஆர். கழகம்: எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜானகி அமைச்சரவைக்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் AIADMK-விலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் கழகத்தைத் தொடங்கினார்.
இறுதி காலம்:
இறப்பு: ஏப்ரல் 9, 2024 அன்று தனது 97-வது வயதில் காலமானார்.
மொத்தத்தில், ஆர்.எம்.வீரப்பன் தமிழ் சினிமாவின் வளர்ச்சியிலும், திராவிட அரசியலின் போக்கிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு முக்கிய ஆளுமையாக இருந்தவர்
எம்ஜிஆர் விசுவாசி
1958ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சொந்தமாக ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து, ‘நாடோடி மன்னன்’ என்ற திரைப்படத்தை தயாரித்த போது, அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநராகவும் உயர்ந்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் தயாரித்த ‘அடிமைப் பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய திரைப்படங்கள் வரை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் முக்கியமானவராக இருந்தார் ஆர்எம் வீரப்பன். எம்ஜிஆரின் விசுவாசியான இவர் பின்னர் சொந்தமாக படக்கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் ‘சத்யா மூவீஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து முதல்படமாக எம்ஜிஆரை வைத்தே ‘தெய்வத்தாய்’ என்ற படத்தை எடுத்தார். 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இயக்குநர் பி.மாதவன் மற்றும் இயக்குநர் கே.பாலசந்தர் இருவரும் பணிபுரிந்த ஒரே எம்.ஜி.ஆர் படம் இது என்பதோடு, இயக்குநர் கே பாலசந்தர் வெள்ளித்திரைக்கு அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் மூலமே.
6 எம்ஜிஆர் படங்கள்
இதனைத்தொடர்ந்து ‘நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’, ‘கண்ணன் என் காதலன்’, ‘ரிக்ஷாக்காரன்’, ‘இதயக்கனி’ என எம்.ஜி.ஆரை வைத்து தனது சத்யா மூவீஸ் மூலம் 6 படங்கள் வரை தயாரித்து மாபெரும் வெற்றி கண்டார். இவற்றில் 1971ம் ஆண்டு வெளிவந்த ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ரஜினிக்கும் 6 படங்கள்
1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டிலில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், அடுத்த கட்ட முன்னணி நாயகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து படங்களை தயாரித்தார். ‘இராணுவ வீரன்’, ‘மூன்று முகம்’, ‘தங்கமகன்’, ‘ஊர்க்காவலன்’, ‘பணக்காரன்’ மற்றும் ‘பாட்ஷா’ என ரஜினிகாந்தை நாயகனாக்கியும் 6 படங்கள் வரை எடுத்து பெரும் வெற்றி பெற்றார். குறிப்பாக ‘பாட்ஷா’ திரைப்படம் அன்றைய கள அரசியல் நிலவரத்தை ரஜினி பொது மேடையில் பேசி, அவர் அரசியல் களம் காண வழிவகுத்ததென்றே சொல்லலாம். கமல்ஹாசனை வைத்து ‛‛காக்கி சட்டை, காதல்பரிசு” என்ற இரண்டு படங்களையும், நடிகர் சத்யராஜை வைத்து ‘மந்திரப் புன்னகை’, ‘புதிய வானம்’, ‘புதுமனிதன்’ ஆகிய திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் தனது ‘சத்யா மூவீஸ்’ தயாரிப்பில் நடிக்க வைத்த பெருமை இவருக்குண்டு. சிவாஜி கணேசன் நடித்த ஒரே ஒரு ‘சத்யா மூவீஸ்’ திரைப்படம் ‘புதிய வானம்’ என்பது குறிப்பிடதக்கது.
அரசியல் களம்
1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக., சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபை சென்றார். 1991ம் ஆண்டு சட்டசபை இடைத் தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி வாகை சூடினார். எம்.ஜி.ஆரின் முதல் அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும், திரைப்படத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறையை கூடுதல் பொறுப்பாகவும் கவனித்து வந்தார். அதன் பின்னர் இந்து அறநிலையத் துறை மற்றும் வனத்துறையையும் அவரிடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டு அதையும் கவனித்து வந்தார் ஆர்.எம்.வீரப்பன். மறைந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வி அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளின் மந்திரி சபையிலும் பதவி வகித்த பெருமை ஆர்.எம்.வீரப்பனுக்கு உண்டு. கலைத்துறை, அரசியல் என இரண்டிலும் தனது சிறப்பான பங்களிப்பால் உயர்ந்த ஆர்.எம் வீரப்பன், வயது மூப்பின் காரணமாக அனைத்திலிருந்தும் தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு ஓய்வில் இருந்தார். தற்போது காலமாகி உள்ளார்.
‘சத்யா மூவீஸ்’-ல் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த தமிழ் படங்கள்
1. தெய்வத்தாய் -எம்.ஜி.ஆர்2. நான் ஆணையிட்டால் – எம்.ஜி.ஆர்3. காவல்காரன் – எம்.ஜி.ஆர்4. கண்ணன் என் காதலன் – எம்.ஜி.ஆர்5. கன்னிப்பெண் – ஜெய்சங்கர்6. ரிக்ஷாக்காரன் – எம்.ஜி.ஆர்7. மணிப்பயல் – ஏவிஎம் ராஜன்8. இதயக்கனி – எம்.ஜி.ஆர்9. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது – சிவகுமார்10. ராணுவ வீரன் – ரஜினிகாந்த்11. மூன்று முகம் – ரஜினிகாந்த்12. தங்கமகன் – ரஜினிகாந்த்13. காக்கி சட்டை – கமல்ஹாசன்14. மந்திரப் புன்னகை – சத்யராஜ்15. ஊர்க்காவலன் – ரஜினிகாந்த்16. காதல் பரிசு – கமல்ஹாசன்17. புதியவானம் – சிவாஜி கணேசன்-சத்யராஜ்18. என் தங்கை – அர்ஜுன்19. பணக்காரன் – ரஜினிகாந்த்20. நிலாப் பெண்ணே – ஆனந்த்21. புது மனிதன் – சத்யராஜ்22.
2.எங்க தம்பி – பிரசாந்த்23. பாட்ஷா – ரஜினிகாந்த்
ஆர்எம் வீரப்பன் மறைந்தாலும் ‘சத்யா மூவீஸ்’ என்ற பட நிறுவனத்தின் பெயர் கலைத்துறையில் என்றென்றும் அவர் புகழ் பாடும் என்பது மட்டும் திண்ணம்.
அருளாளர் ஆர் எம் வீரப்பன் ஐயா அவர்கள். கலை உலகில் சக்கரவர்த்தியாகவும், அரசியல் உலகில் சிறந்த வல்லுனராகவும்,
சமுதாயத்தை சீர்திருத்திய பெரியார் அவர்களுடனும், தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களுடனும், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுடன், தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களுடனும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் ,என 5 முதல் வர்களுடன்
அருகில் இருந்து பணிபுரிந்து, நல்ல ஆசானாகவும் ,சிறந்த மாணவராகவும் பயின்றவர். இன்றைய இளம் தலைமுறையினர் இந்த ஆவண படத்தை கண்டு தங்கள் வாழ்க்கையிலும் எப்படி! வெற்றி பெற வேண்டும் என்று அவரைப் பார்த்து வாழ வேண்டும். வெற்றி பெற வேண்டும். என்பது எங்கள் நோக்கம்
தமிழ் உள்ளவரை அருளாளர் ஆர் எம் வீரப்பன் ஐயா, அவர்கள் புகழ் நிலைத்திருக்கும் வாழ்க அவர் புகழ்!!!
வாழ்த்துக்களுடன்
கிளாசிக் சினிமா🙏🌷