ராஜா ஷாப்”திரை விமர்சனம் – 4/5

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபாஸ்” நடிப்பில் வெளிவந்துள்ள ராஜா சாப்”படத்தின் கதை என்ன?

மாஸ்”ஆக்ஷன் “கதையான, இப்படத்தில்….

ராஜுவுக்கு (பிரபாஸ்) தாய், தந்தை இல்லை. தனது பாட்டி கங்கம்மா (ஜரீனா வஹாப்) உயிராகக் கொண்டு வாழ்கிறான். அவனுக்கு பாட்டி தான் உலகம்.

பாட்டிக்கு அவன், அவனுக்கு பாட்டி என எல்லாம் அவர்களே. இவர்களுக்கு அனிதா (ரித்தி குமார்) ஆதரவளிக்கிறாள். ஆனால், பாட்டி பல ஆண்டுகளாக தனது கணவர் கனகராஜுவுக்காக (சஞ்சய் தத்) காத்திருக்கிறார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கங்கராஜுவைப் (சமுத்திரக்கனி) பிடிக்கச் செல்கிறார்.

சமுத்திரக்கனி ராஜிவிடம் பிளாஸ்பேக் கதை சொன்ன பின்னால் படம் ரெக்கை கட்டி பறக்கிறது. கணவருக்காக கங்கம்மா , ஏங்குகிறாள். எப்போதும் அவரைப் பற்றியே சிந்தித்து மறதியையும் வரவழைத்துக் கொள்கிறாள். தாத்தாவைத் தேடிக் கொண்டு வருமாறு பேரன் ராஜுவிடம் கேட்கிறாள். ராஜூவும் தன் தாத்தாவை தேடி அலைகிறான்.

ஹைதராபாத்தில் கனகராஜு இருப்பதாகத் தெரிந்து, ராஜு தேடச் சென்று போலீசாரை நாடுகிறான். அங்கே கிறிஸ்டியன் பெண் பிரெஸ்ஸியை (நிதி அகர்வால்) பார்த்து மயங்குகிறான்.

இவர்களின் காதல் காட்சி ரசனையாகவும் ரசிக்கும் படியும் அமைக்கப்பட்டிருக்கிறது.

சர்ச்சில் ஒரு குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக மூன்று லட்சம் கொடுக்கிறான். ஆனால், அந்தப் பணத்தை கனகராஜு திருடிவிட்டதாக பிரெஸ்ஸி போலீசில் புகார் செய்கிறாள். அதே நேரத்தில், கங்கராஜுவின் பேத்தி பைரவி (மாளவிகா மோகனன்) சூட்கேஸில் நிறைய பணத்துடன் வந்து ராஜுவிடம் ஒரு அசைன்மென்ட் கொடுக்கிறார்.

அப்போது சமுத்திரக்கனி மூலம் தெரியவரும் உண்மை அறிந்து அனைவரும் சேர்ந்து தேட, அவர் நரசாப்பூர் காட்டில் ஒரு கோட்டையில் இருப்பதாக கங்கராஜு மூலம் தெரிகிறது. தனது போலீஸ் சித்தப்பா (விடிவி கணேஷ்), நண்பன் பிரபாஸ் ஸ்ரீனு, பைரவியை அழைத்துக்கொண்டு அந்தக் கோட்டைக்குள் செல்கிறார்கள்
அதன்பின் மாயாஜால உலகம் பல ஜாலங்களை புரிகிறது.

சஞ்சய் தத் யார்? பிரபாஸ் யார்? அவன் பாட்டி யார்? என்று பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம். தனது பாட்டியின் ஆசையை நிறைவேற்றினானா? அந்தக் கோட்டையில் என்ன அனுபவங்கள் ஏற்பட்டன? அதில் உள்ள பேய் யார்? கனகராஜுவுக்கு பணம் மீது ஏன் அவ்வளவு ஆசை? அவனுக்குப் பின்னால் உள்ள கதை என்ன? தேவநகரி சாம்ராஜ்யத்தின் ஜமீன்தாரிணி கங்காதேவியின் கதை என்ன? அவள் கங்கவ்வாவாக எப்படி மாறினாள்? தேவநகரி சாம்ராஜ்யத்தின் செல்வத்தை எல்லாம் திருடியது யார்? இதற்கும் கங்கராஜுவுக்கும் என்ன சம்பந்தம்? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிப்பது தான் இந்த ராஜா சாப்.

படம் முழுக்க பிரமாண்டம். பணத்தை கொட்டி சி.ஜி மற்றும் வி .எஃப். எக்ஸ் காட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

மந்திரவாதியின் மாயாஜாலத்தையும், சைக்காலஜியும் ஒன்று சேர இணைத்து, சகசர நாமம், எனும் தியான மந்திரத்தையும் இணைத்து, ஒரு வித்தியாசமான புதுமையான கதையை கொடுத்திருக்கிறார்இயக்குனர்.

பிரபாஸ் தனி ஆளாக முழுப்படத்தையும் தாங்கி பிடிக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஸ்டைலாக சண்டை போடுகிறார். மாளவிகா மோகனை சண்டை போட விட்டு ரசிக்கும் ஸ்டைலே தனி.

தன் நிழலுடன் சண்டை போடும் அந்த காட்சி யில் அனல் தெரிக்கிறது. முதலையுடன் போடும் சண்டைக் காட்சியும் முக்கியத்துவம் பெறுகிறது. பாடல் காட்சிகளில் ஸ்டைலாக நடனமாடி ரசிக்க வைக்கிறார்.

காமெடி, சென்டிமென்ட் ,என கலந்து கட்டி நடித்திருக்கிறார். எப்போதும் முரட்டு தனமாகவே பிரபாஸை பார்த்த நமக்கு, நீண்ட வருடம் கழித்து செம ஜாலியாக ஆட்டம் பாட்டம் என செம கலக்கு கலக்கியுள்ளார். அதிலும் தன் தாத்தா சஞ்சய் தத்-டன் சவால் விட்டு, பிறகு அவர் போடும் காட்சி என கலக்கியுள்ளார். கிளைமேக்ஸ் காட்சி பிரமாண்டம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.பிரபாஸ் உழைப்பு.

படத்தில் கிளு கிளு ப்புக்காக,மாளவிகா, நிதி, ரிதி என 3 பேர், இந்த 3 பேருமே க்ளாமர் காட்சிகளில் விருந்து வைக்கிறார்கள் மாளவிகா மோகன் போடும் சண்டை காட்சி, ரசிக்க வைக்கிறது. அவர்களுக்கு, மாளவிகாவிற்கு , நிறைய க்ளாமர் என அவர் பங்கை சிறப்பாக செய்துள்ளார். நிதி ,நிறைய கவர்ச்சி காட்டுகிறார். இளைஞர்களுக்கு விருந்து

இந்த படத்தை தயாரித்து இருக்கிறது தயாரிப்பு : பீப்பிள் மீடியா பேக்டரி பேஃன்டஸி கலந்து இயக்கி இருக்கிறார் மாருதி.

சஞ்சய் தத், நடிப்பில் மிரட்டல் ,நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ஜரினா வஹாப் நடிப்பு நயம்

நேரம் : 3 மணிநேரம் 03 நிமிடம் ஓடக்கூடிய படத்தில் விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர்.

ஒரு பாழடைந்த பெரிய பங்களாவில் மாட்டிக்கொண்டு பேய் பிடியில் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகள்தான் படத்தின் உயிர். எந்த அறைக்கு சென்றாலும் பேய் பயமுறுத்துகிறது..

சமுத்திரகனி சில சீன்களில் வந்து போகிறார். விடிவி கணேஷ் காமெடியாக வந்து போகிறார்.

சஞ்சய்தத் சில காட்சிகளில் கொடூரமானவராக, மந்திர, தந்திரங்கள் தெரிந்தவராக வருகிறார். மீதி காட்சிகளில் பேய் உருவத்தில் கிராபிக்சில் தான் சுற்றிக் கொண்டே இருக்கிறார். பிளாஷ்பேக் சீன் நன்றாக இருக்கிறது.

மிகப்பெரிய அந்த பங்களாவில்தான் முக்கால்வாசி படம் நடக்கிறது. அந்த பங்களாவை இன்ச் பை இன்ச் ரசித்து அவ்வளவு தத்ரூபமாக, அழகாக செட் போட்டு இருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ராஜீவன். ஒவ்வொரு இடத்திலும் அவர் உழைப்பு தெரிகிறது. பேய் படங்களுக்கு ஏற்ப ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார் கார்த்திக் பழனி. பேய் சம்பந்தப்பட்ட சீன்களில் கிராபிக்ஸ் டீம் உழைப்பு தெரிகிறது.

பேய் படத்தில் ஹிப்னாடிசம், மனித ஆற்றல், மனக்கட்டுப்பாடு என இயக்குனரும் நிறையவே குழப்பி இருக்கிறார். பேய் கதைகளில் கிளைமாஸ் மிரட்டலாக இருக்கிறது.

பார்வையாளர்கள் யோசிக்கும் வகையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாருதி.

மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு பிரபாஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைவரும் ஜாலியாக பார்த்து ரசிக்கக் கூடிய படமாக வந்துள்ளது “ராஜா சாப்”

Comments (0)
Add Comment