ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கத்தில், அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெற்றி படம்”சீதா பயணம் “
கதை களம்
(ஐஷ்வர்யா அர்ஜுன்) அம்மாவை சிறு வயதிலேயே இழந்து தன் அப்பா சத்யராஜ் வளர்ப்பில் நன்றாக வளர்ந்தவர் தன், அப்பாவை அம்மா ,என்று அழைக்கிறார் . இவர் அப்பா சத்யராஜ் ,மகளை “டாடி”என்று அழைக்கிறார் இதுவே ஒரு புதுமையான சிந்தனை!!
சென்னையில் இருந்து ,மதுரைக்கு சமையல் கலை வல்லுனர் ஒருவரின் ஒர்க் ஷாப் ஒன்றிற்கு செல்கிறார் “சீதா”
செல்லும் வழியில் நாயகன் நிரஞ்சனை சந்திக்கிறார், அங்கு ஒரு டிவிஸ்ட் வைத்து இருக்கிறார் இயக்குனர்.
ஹீரோ சீதா புரம் ஆன ,தன் ஊருக்கு போக லிப்ட் கேட்க, சீதாவும் லிப்ட் கொடுத்து அவருடன் பயணிக்கிறார். அதற்கு சில கண்டிஷன் போடுகிறார் சீதா.
இருவரும் செல்லும் வழியில் , டீக்கடையில் கோவை சரளா, அவரது மகன் சிவா, மருமகள் பார்வதி சந்திக்கிறார்.
அடுத்து ஸ்கூல் குழந்தைகள், இதை அடுத்து ரோட்டில் பழம் விற்கும் ஜனனி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் (கிரி) மாடு மேய்க்கும் சிறுவன் , என அனைவரையும் சந்தித்து நிரஞ்சனையும் அவர் ஊரில் இறக்கி விட்டு ஒர்க் ஷாப் நடக்கும் இடத்திற்கு செல்கிறார்.
அப்படி அவர் ஒர்க் ஷாப் பில்டிங்கில் அருகில் வரும் போது கேஸ் லீக்கெஜால் அந்த பில்டிங்கே வெடித்து சிதற, ஐஸ்வர்யா அர்ஜுன் நொடி பொழுதில் உயிர் தப்பிக்கிறார்.
அது படத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைகிறது.
இதனால் ஒரு முடிவுக்கு ஐஸ்வர்யா (சீதா)வருகிறார், அது என்னவென்றால் தான் 20 நொடி தாமதமாக வர, பலரும் தன்னை தடுத்து நிறுத்தினார்கள், அவர்கள் அனைவரையும் சந்தித்து நன்றி!! சொல்ல வேண்டும் . என்று அபி யை தேடி சீதா புரம் வருகிறார்.. பிரகாஷ் ராஜ் (ஹனுமந்தச்சாரி) குடும்பத்தை சந்திக்கிறார்.
அந்த பெரிய குடும்பத்தில் நடக்கும் அன்பு, பாசம் கண்டு வியக்கிறார்.!!அதன்பிறகு, சீதா,அபி இருவரும் சென்னை திரும்பும் போது இருவர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடக்க, அதில் இருந்து எப்படி தப்பித்தார்கள்?
சீதா,அபி காதல் நிறைவேறியதா?
நாயகன் அபி யார்?
சீதா தன் திருமணத்துக்கு போடும் கண்டிஷன் என்ன?
என்பதை அழகாக, சாலை பயணத்தில, ஆக்ஷன், மற்றும் எமோஷனல் கலந்து சொல்லி இருக்கும் படம் “சீதா பயணம்: நடிகர் &நடிகைகள்
ஆக்ஷன் கிங் அர்ஜுன்
அருமையான கதைகளம், கொண்ட இப்படத்தை தயாரித்து, நடித்து, இயக்கி இருக்கிறார்.
தேச பக்தி படங்களில், சண்டைக்காட்சிப் படங்களில் நடித்து ஆக்ஷன் கிங் பட்டத்தைப் பெற்றவர் நடிகர் அர்ஜுன். இவர் நடித்த ஜென்டில் மேன், முதல்வன், ரிதம், குருதிப்புனல், ஜெய்ஹிந்த், கர்ணா உள்ளிட்ட படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.
இவர் இயக்குனராக ,ஐஸ்வர்யா அர்ஜுனை வைத்து சொல்லிவிடவா படத்தை இயக்கியிருந்தார்.
அதற்கு பிறகு சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நடிகர் அர்ஜுன் ’சீதா பயணம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகி, ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்.
கிரி”என்ற கதாபாத்திரத்தில் பல கொலைகள் செய்து, சீதாவின் நல்ல மனம் கண்டு மனம் வருந்தி, திருத்தும் வேடத்தில் அருமையாக நடித்திருக்கிறார்.
அர்ஜுன் என்று சொன்னாலே முதலில் ஞாபகம் வருவது, `தேசப்பற்று’. அதை வழக்கமான ஆக்ஷனில் மட்டும் சொல்லாமல், பாசம், காதலையும்’ கலந்து சொல்ல முயற்சித்திற்காகவே இயக்குநர் அர்ஜுனுக்கு ஒரு வார்ம் வெல்கம். அறிமுக நடிகர் நிரஞ்சன் நடிப்பு gk அருமை. முக்கியமாக, ஸ்டன்ட் காட்சிகளில் அதிக கவனம் பெறுகிறார். ஹீரோவின் ஆறடி உயரம், உடலமைப்பு என இரண்டையும் சரியாகப் பயன்பத்தியிருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர் கிக்காஸ் காளி. முக்கியமாக, ஹீரோவின் இன்ட்ரோவில் இடம்பெறும் சேஸிங் சீன் காட்சிகள் `வாவ்’ ரகம்.அப்பாவை பிரியவேண்டும் என்று இழப்புக்கு, சிந்தும் கண்ணீராகட்டும், காதலைச் சொல்லமுடியாமல் வெளிக்காட்டும் தவிப்பாகட்டும், முக்கியமான இடங்களில் கச்சிதமான நடிப்பால் கவர்கிறார், ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜூன். அறிமுகக் காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் ஒரே டேக்கில் இவர் பேசும் வசனம், சிறப்பாக இருக்கிறது.
பிரகாஷ் ராஜ்,
அனுமார்ந்தாச்சாரியாக அசத்தியிருக்கிறார். ஒரு பாசக்கார குடும்பத்தில் ஒரு பெரியவர், எப்படி இருப்பாரோ ?அதை கண்முன் காட்டி நெகிழ வைக்கிறார்.
படத்தில் இன்னொரு முக்கியமான சிறப்பம்சம் என்றால் அது சத்யராஜ் கதாபாத்திரம் தான்.
தன் மகளுக்காக உருகுவது ,தனியாக காரில் செல்லும் பொழுது, பாசத்தோடு வழி அனுப்புவது. கிளைமாக்ஸ் காட்சியில், பிரகாஷ்ராஜ் வீட்டுக்கு சென்று மகளுக்கு மனம் பேசுவது. என்று ஒரு தந்தையாக வாழ்ந்திருக்கிறார்.
துருவ் சார்ஜா ஓரிரு காட்சிகள் வந்தாலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் மாடுகளை விடுதலை செய்துவிட்டு ,மனம் கலங்கி உருகுவது சிறப்பு.
கோவை சரளா, பாசம் உள்ள தாயாக, அம்சமாக மனதில் நிற்கிறார்.
மற்றும் சரண் ஸ்ரீ, அனுமந்த், நியா, மாணிக் சந்தனா, சுமித்ரா, நராசிருனு, சகஸ்ரா,ராஜ் குமார், நாக மகேஷ், பூபதி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
இசை அமைப்பாளர்
அனூப் ரூபன் பின்னணி இசையும் பாடல்களும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
பாலமுருகனின் நடனம் ரசிக்க வைக்கிறது.
அயூப் கான் படத்தொகுப்பாளராக படத்தை சிறப்பாக செதுக்கியிருக்கிறார்.ஆர்ட் டைரக்டர்களாக, மோகன்,கிரே, சிவகாமேஷ், கிருஷ்ணா ஆகியோர், போட்டி விழாக்களிலும், ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சியிலும் மற்றும் பல இடங்களில் அரங்கம் அமைத்து பாராட்டு பெறுகிறார்கள்.
VFX: Hocus Pocus (Chennai)
DI Colourist: Venkat Gadi (Sarathi Studios)
Dolby Atmos Mix: L. Satish Kumar DFT (Sarathi Studios)
Publicity Designs
மக்கள் தொடர்பாளர்கள்
சதீஷ் &சிவா
மொத்தத்தில் “சீதாவின் பயணம் வெற்றிப் பயணம்”🌷