வியூஃபைண்டர் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் மற்றும் காம்ரேட் டாக்கீஸ் தயாரிப்பில், நவீன் மு இயக்கிய தேசிய விருது பெற்ற தமிழ் குறும் படம்.
லிட்டில் விங்ஸ் “
இது 71வது இந்திய தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த ஒளிப்பதிவு விருதை வென்றுள்ளது..
கதை
பசி, மற்றும் ஆணாதிக்கத்தால் பாதிப்படைந்த கிராமத்து தம்பதியின் வாழ்க்கையை விவரிக்கும் படம்.
இந்த படம் மனிதனின் பசியைப் பற்றி பேசுகிறது. ஆண் பெண் உறவை பற்றி பேசுகிறது. போகும்போது என்ன எடுத்துக் கொண்டு போகிறோம் என்பதை பற்றி பேசுகிறது. கிராமத்து பெண்கள் எவ்வளவு சுமையை, சுமக்கிறார்கள். எவ்வளவு வலியோடு வாழ்கிறார்கள் என்பதை சொல்கிறது .
காளிதாஸ், என்ற கதாபாத்திரம் கறி சோறு சாப்பிட ஆசைப்படுகிறது
ஆனால், பஞ்சவர்ணம் என்கிற காளிதாஸ் மனைவியால் கறி சோறு சமைத்து தர முடியவில்லை. அதனால் பஞ்சவர்ணம் வேலைக்கு போன பிறகு, வீட்டில் இருக்கும் சேவலை அடித்து கறி சோறு சாப்பிட ஆசைப்படுகிறார் .
அந்த சமயத்தில் காளிதாஸ் இறந்து போக, அவர் ஆசைப்பட்ட அந்த சேவல் சனிக்கிழமை என்பதால், அந்த சேவலும் அவரோடு சேர்ந்து போகிறது. இந்த கதையில் எத்தனை சமூக அர்த்தங்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
பஞ்சவர்ணம், இந்த கதாபாத்திரம் கணவனிடம் ,திட்டு வாங்கிக் கொண்டு, அவசர அவசரமாக வேலைக்கு போனால் , அங்கு உனக்கு வேலை இல்லை என்று சொல்லும் . பரிதாபத்தை ஏற்படுத்துகிறது இந்த கதாபாத்திரம்.
பஞ்ச வர்ணம்,
முட்டையை எடுத்துப் பார்த்து, குஞ்சு பொரித்து விட்டதா? என்று பார்க்கும் அந்த கண்களில் இருக்கும் ஏக்கம், கணவன் இறந்த பிறகு, கோழி குஞ்சை கையில் எடுத்து சந்தோஷப்படும் அந்த உணர்வு.
என பல இடங்களில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மணிமேகலை.
ஒரு மரணம் ஒரு விடுதலை.
காளிதாஸ் ,ஒரு கையை இழந்தவராக, மனைவியிடம் வாதம் செய்து கொண்டு, மனைவியின் சேலை யை கட்டிக்கொண்டு சேவலை கூப்பிடுவது, நன்றாக இருக்கிறது
அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.
மதுரை ராம்ஜி சிக்கன் கடை நடத்துவராக, நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.
இயக்குனர்
சொல்லப்படாத சுமைகளை, கதையாக வடித்து, வாழ்வியலை காட்டியிருக்கிறார்.
இயக்குனர்.
திருவண்ணாமலை பகுதியில்படப் பிடிப்பு ,நடத்தி முழுக்க முழுக்க கிராமத்து வாழ்வியலை அழகாக வடிவமாக்கி இயக்கி இருக்கிறார்.
யதார்த்தமான கிராமிய சூழல், கலாச்சாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது .சர்வதேச அளவில் , கிராமிய சூழலை பிரதிபலிக்கும் படம் சேவல் ,அடை காக்கும் கோழி மீதான, மனிதனின் அன்பையும், யதார்த்தமான கிராமிய வாழ்வியலையும் காட்டும் குறும்படத்தை
அருமையான முறையில் இயக்கி
சிறந்த இயக்குனர் பட்டியலில் இடம் பிடிக்கிறார் நவீன். மு
தயாரிப்பு: வியூஃபைண்டர் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் & காம்ரேட் டாக்கீஸ் (Dream Warrior இவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌷
சந்தோஷ் தயாநிதியின், இசை
சில இடங்களில் மௌனமாக கதையை ஆழமாக வெளிப்படுத்தி இருக்கிறது.
மருதுவின் கேமரா, கவிதையாக காட்சிகளை காட்டி இருக்க, இன்னொரு கேமிரா மேன் மீனாட்சி சோமன்
அவர் பங்குக்கு சிறப்பான முறையில் படமாக்கப்பட்டு இருக்கிறார்.
விறுவிறுப்பையும், பதைபதைப்பையும் நழுவவிடாமல், இழுத்துக் கட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். கதாபாத்திரங்களின் உணர்வுகளை மென்மையாகப் பேசுகின்றன.
சேவலை காளிதாஸ் அடித்துக் கொன்று விடுவாரோ !என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது .
அது ஒவ்வொரு முறையும் தப்பிக்கும் பொழுது அப்பாடா!! என்று இருக்கிறது பரபரப்பிற்கான வேகத்தையும், உணர்வுகளுக்கான இறுக்கத்தையும் படத்தொகுப்பாளர் கையாண்டு இருக்கிறார்.
ஆர்ட் டைரக்டர் விஜய், முட்டை ஓட்டுக்குள் குஞ்சு, இருக்கும் காட்சி, ஒன்றே போதும் ஒரு திறமைக்கு சாட்சி, பஞ்சவர்ணம் வீடு, சிக்கன் கறி கடை, என்று அர்ப்பணிப்போடு செய்து இருக்கிறார்.
சவுண்ட் டிசைனராக சுரேன், ராகவ்,லைவ் ரிக்கார்டிங் சூப்பர்
மக்கள் தொடர்பாளர் ஸ்ரீ வெங்கடேஷ்
இயக்குனர் ராஜ் முருகன் கோ புரொட்யூஸராக இப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
இந்த குறும்படத்தை ட்ரெய்லர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிடுகிறது. கண்டு களியுங்கள்
ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்பது உறுதி.
சிறப்பம்சம்: 53வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) இந்திய பனோரமாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ் குறும் படம்.
விருது பெற்ற குறும்படங்கள் லிட்டில் விங்ஸ் – 2025 தேசிய விருது பெற்ற சிறந்த ஒளிப்பதிவு குறும்படம்.