முஸ்தபா முஸ்தபா “திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

Written & Directed By Praveen Saravanan Music Composed By M.S.Jones Rupert.
Banner – The Mapogos Company
Producer – Pradeep Mahadevan

கதை களம்

நாயகன் சதீஷ்,
சுரேஷ் ரவி,
கருணாகரன்,
நண்பர்கள்
ஐடி துறையில் வேலை பார்க்கும் சதீஷும், சுரேஷும் நண்பர்களாக இருக்கிறார்கள். சதீஷ் தன்னுடன் வேலை பார்க்கும் மோனிகா சின்னகோட்லாவைக் காதலித்து மனக்கவிருக்கிறார்.

அதற்கான பேச்சுலர் பார்ட்டியில் நடந்த மது விருந்தில் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்த சதீஷ் அடுத்த கூத்தைக் கேள்விப்பட்டு காதலை பிரேக் அப் செய்கிறார் மோனிகா.

பிறகு படாதபாடு பட்டு அவர் காதலைத் திரும் பப் பெற்று திருமண ரிசப்சனுக்கு ரெடியாகும் வேளையில், லாரா தத்தாவுடன் சதீஷ் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் வீடியோ வைரலகிறது.
அது யூட்யூபில் ஏறிவிடுகிறது .
அது கல்யாண பெண்ணின் கண்ணில் பட்டால் கண்டிப்பாக பூகம்பம் வெடிக்கும் என்பதால், அப்படி ஏதும் நடப்பதற்குள் அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் .!! என்றும் அந்த சதியை யார் செய்தார்கள்? என்றும் கண்டுபிடிக்க நண்பர்கள் முயற்சி செய்கிறார்கள்.

அதற்கான முயற்சியில் இறங்கும் சதீஷ், சுரேஷ் ரவி, கருணாகரனை நாட, அவர் அதை அப்லோடு செய்த நபரான இயக்குனரை, கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
அதன் பிறகு
ஜான் (புகழ்)சதீஷ் திருமணத்தை நடக்கவிடாமல் சதி செய்கிறார்.
இரண்டாவது நாயகனாக வரும் சுரேஷ்தான் ஹீரோவை போல் இருக்கிறார். அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அமைகிறது கிளைமாக்ஸ் திருப்பம்.
லாரா தத்தா கிளாமர் ஏரியாவில் .
கலக்கி இருக்கிறார்.
அந்த வில்லங்கமான வீடியோவை டெலிட் செய்தார்களா ?
சதீஷ், மோனிகா திருமணம் நடந்ததா?
சுரேஷ் ரவி, தன் மனைவியிடம் உண்மையை சொன்னாரா?
என கலகலப்பாக காமெடியாக சொல்லி இருக்கிறது இந்த படம்.

நடிகர்கள் & நடிகைகள்

சதீஷ், வழக்கம்போல் காமெடி யில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
திருமண சந்தோஷத்தை தொலைத்து விட்டு!! யார் செய்திருப்பார்கள்? வீடியோ லீக் ஆனது எப்படி? என பல கேள்விகளோடு!! அங்கும் இங்கும் அலைகிற நிலையை , அவர் சார்ந்த காட்சிகளும் அவரது நடிப்பும், கலகல என்று சிரிக்க வைக்கிறது.

நாயகி மோனிகா, டாக்டர் ஆக வருகிறார். கோபத்தில் கொந்தளிப்பையும். உணர்வுகளை, வெளிப்படுத்தும் விதம் நன்றாக இருக்கிறது.

ஐஸ்வர்யா தாத்தா படுக்கை அறை காட்சியில் நடித்திருக்கிறார். அவர் வரும் இடம் கலகலப்பாக இருக்கிறது. அவரை ஒருதலையாக விரும்பும் வடநாட்டு வில்லன், பாவல் நவநீதன், சதிஷையும், தத்தாவையும் சேர்த்து வைக்க முயற்சிக்கும் காட்சி கலகலப்பான போர்ஷன் அது.

சுரேஷ் ரவி, ஆரம்பத்தில் இரண்டு டின் பீருக்காக, ஆறு பெண்களுடன், தன் வாழ்க்கையில் நடந்த நண்பனின் கதை சொல்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முழு படத்தையும் அவர்தான் கதையாக சொல்கிறார். அவர் ஜோடியாக வரும் மானசா சவுத்ரி நன்றாக நடித்திருக்கிறார். கருணாகரன், காமெடி வில்லனாக கலகலப்பை ஏற்படுத்துகிறார். எல்லோரும் அவர் மூக்கின் மீது, குத்த அவர் நொந்து போவது கலகலப்பு. குக் வித் கோமாளி (புகழ் )ஜான் என்ற இடத்தில் சிரிக்க வைத்திருக்கிறார். மற்றும் பார்வதி, வி.ஜே மகேஸ்வரி,
சாணக்கியன், ஜாவா சுந்தரேசன், சாம்ஸ், லிவிங்ஸ்டன், மாரிமுத்து ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார் கள்.

Music Director – M.S.Jones Rupert இவர் இசையில் பாடல்கள், பின்னணி இசை , கதை களத்திற்கு ஏற்ப கலந்திருக்கின்றன.

இயக்குனர் பிரவின் சக்கரவர்த்தியின் இயக்கம் ஒரு காமெடி படத்திற்கு, என்ன தேவையோ அதை கலகலப்பாக கொடுத்திருக்கிறார். ரசிக்க வைக்கிறது. இவரின் எழுத்து, திரைக்கதை, இயக்கம்

Director Of Photography- K.S.Vishnu Shri இவரின் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளையும், திருமண அரங்கத்தையும், சிறப்பாக படம் பிடித்திருக்கிறது.

Art Director – S.Madan Kumar அரங்க அமைப்புகள் சிறப்பாக இருக்கிறது.நன்றாக பணிபுரிந்து இருக்கிறார்.

Editor – Dinesh Ponraj காட்சிகளை சிறப்பாக செதுக்கியிருக்கிறார் .படம் வேகமாக விறுவிறுப்பாக செல்வதற்கு படத் தொகுப்பாளர் காரணம் Choreographer – Azar இவரின் நடன பயிற்சி சிறப்பாக இருக்கிறது.

மற்றும் இப்படத்திற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்
Vfx – Selvadhasan (Raymax Studios)
Story – Shammeer Sultan
Costume Designer – Preethi Singh (Au Linen)
Chief Co-Director – E.Dhamudharan
Co-Director – S.Suriya
ஆகியோர் பங்கு சிறப்பாக இருக்கிறது.

மக்கள் தொடர்பாளர்கள்
திரு. சுரேஷ் சந்திரா
திரு. அப்துல் நாசர் அவர்கள்
படத்தினை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் இவர்களுக்கும் வாழ்த்துக்கள்*.

சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🌷

Comments (0)
Add Comment