வசூல் மன்னன் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

கதை களம்

சரவணனை அந்த ஊர் மக்கள் அல்வா சரவணன் என்று அழைக்கிறார்கள்.
காரணம் தன் தங்கையின் திருமணத்திற்காக கடன் வாங்கி, வட்டி மேல் வட்டி கட்டி கடனை அடைக்க முடியாமல் எல்லோருக்கும் அல்வா கொடுப்பதால் அவர் பெயர் அல்வா சரவணன்.
கூடவே அவரது மாமன் குட்டிப்புலி சரவண சக்தியும் இணைந்து பண்ணாத லொள்ளு வேலைகளைப் பண்ணுகிறார்கள்.
கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸ் பந்தோபஸ்து கேட்டு பெறுவது.
அந்த போலீசையும் இருவரும் பாடாய்ப்படுத்துகிறார்கள்.
இன்னொரு பக்கம் பல தொழில்களில் பணம் கொட்டும் பெரிய மனிதர் வேலராமமூர்த்தி மகள் நாயகி நிவேதாவுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்காக காக்கி சட்டை கமல் போல போலீஸ் உடை அணிந்து கொண்டு ‘போலி போலீசாக’ சுற்றிக் கொண்டிருக்கிறார்.
அவரிடம் சரவணன் 10 லட்சம் கொடுத்தால் போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணம் கேட்கிறார்.
ஆனால் நாயகி உண்மையை அறிந்து உஷாராகி விடுகிறார்.

மூன்றாவது கதையாக காவல் அதிகாரி சரவண சுப்பையா நேர்மையான பத்திரிகையாளர்
காந்தி ராமன் கொலையை துப்புத் துலக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்.

ஸ்ரீ தேவாவை நிவேதா ஒரு புள்ளியில் சந்திக்க, அவரையும் ஏமாற்றும் ஸ்ரீ தேவாவின் உண்மை முகம் தெரிந்து, தான் போலீஸ் ஆனதும் என்கவுண்டரில் உன்னைத்தான் போடுவேன் என்று சபதம் மேற்கொள்கிறார் நிவேதா.
ஒரு ஆபத்தில் மாட்டிக் கொண்ட நிவேதாவை நாயகன் தேவா காப்பாற்றுகிறார்.
இப்பொழுது நாயகனும் நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா?
கொலை செய்யப்பட்ட காந்தி ராமனுக்கு உரிய நீதியை போலீஸ நிர்வாகம் பெற்று தந்ததா?
வேலராமூர்த்தி பல கொலைகளை செய்து சட்டத்தின் பிடியில் சிக்கினாரா? தப்பினாரா?
என்பதை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் காமெடியாகவும் இரண்டு மணி நேரம் ஜாலியாக சொல்கிறது இந்த வசூல் மன்னன்.

ஸ்ரீ தேவா நடிப்பு இயல்பாக இருக்கிறது
அதுவும் ஏமாற்றி லந்து கொடுக்கும் வேலைகளில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
அம்மா வீட்டை விட்டு போ எங்கயாவது பிழைத்து நன்றாகவா!! நான் இரந்தால் கூட வர வேண்டாம் என்று சொல்லும் போது கலங்குகிறார் .
தன் சொத்தை வித்து கடனைகட்டலாம் என்று நினைக்கும் பொழுது தங்கையின் கணவன் வில்லனாக வரும்போது அதிர்ச்சி அடைகிறார்.
நாயகியின் அப்பா கொலைகாரன் என்று தெரிந்த பிறகு அவரை எப்படியாவது சட்டத்தில் பிடியில் சிக்க வைக்க வேண்டும் என்று அவர் போடும் நாடகம் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் வெள்ளி திரைக்கு ஒரு நல்ல அழகான ஹீரோ வரவு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
சரவண சக்தியின் லந்து பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. ஒரு கட்டத்தில் காவலுக்கு வரும் போலீசின் துப்பாக்கியை பிடுங்கி அவர் பண்ணும் அலப்பறை அவ்வளவு ரசிக்க வைக்கிறது
படம் முழுக்க நாயகனுக்கு துணையாக வந்து அதகளம் பண்ணுகிறார்.

நாயகி நிவேதா
போலீஸ் வேடத்துக்கு பக்காவாக பொருந்தி போகிறார்
அப்பாவிடம் காட்டும் அசால்ட் தனம். நாயகன் நல்லவன் என்று தெரிந்த பிறகு அவனை உறுகி உறுகி காதலிப்பது
போலீஸ் வேலைக்கு பயிற்சி எடுக்கும் பொழுது பின் தங்கி சோர்ந்து விட, நாயகன் காட்டும் ரோசத்தால் வென்று காட்டுவது கிளைமாக்ஸ் காட்சியில் சொந்த அப்பாவையே சட்டத்தின் பிடியில் சிக்கவைத்து நீதியை நிலை நாட்டுவது. என சிறப்பாக நடித்திருக்கிறார்.
அவரையும் அவரது நடிப்பும் ரசிக்க முடிகிறது. போலீஸ் வேலைக்கான பயிற்சிகளில் ஓட்டம் தாண்டுதலில் எல்லாம் டூப் போடாமல் நடித்து அசத்தி இருக்கிறார்.

தன் வழக்கப்படியே கேமராவிற்கு ஒரு ஆங்கிளில் முகம் காட்டி வில்லத்தனம் செய்கிறார் வேல ராமமூர்த்தி.

அத்தனை பெரிய வில்லனைக் கடைசியில் சாதாரணமாக பொறி வைத்து பிடித்து விடுகிறார்கள்.
அது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

ஸ்ரீ தேவா கடன் வாங்கியதன் காரணம் சரியாக சொல்ல பட்டு இருக்கிறது..

பரணியின் இசையில் பாடல்கள் பளிச்சென்று மனதை கவர்கின்றன.

ஒளிப்பதிவு
கிராமத்து அழகை சரியான கோணத்தில் காட்டி இருக்கிறது .எல்லா காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.
இயக்குனர் வேல் குமரேசன் நம்பகமாகவும்,
நகைச்சுவையாகவும் கதை சொன்ன விதம் ரசிக்க வைக்கிறது. தவறுமேல் தவறு செய்யும் ஹீரோ அவனை தண்டிக்க காத்திருக்கும் நாயகி, கொலை செய்யும் வில்லன் அவனை பிடிப்பதற்காக அலையும் ஒரு போலீஸ் கூட்டம் இப்படி கதை பின்னல்கள் ஒன்றின் பின் ஒன்றாக நன்றாக முடிச்சு போட்டு கிளைமாக்சில் கரெக்டாக சரியாக அவிழ்த்து இருக்கிறார் இயக்குனர்.

படத்தொகுப்பாளர் கச்சிதமாக படத்தை செதுக்கியிருக்கிறார் .
ஒப்பனையாளர் ,
ஆடை வடிவமைப்பாளர் ,
கலர் கரெக்ஷன், செய்தவர்கள்
மற்றும் சவுண்ட் மிக்சிங் செய்தவர்கள், என எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பாக
பணி புரிந்திருக்கிறார்கள் வசனம் ரசிக்க வைக்கிறது. பாடல்கள் தாளம் போட வைக்கிறது .
இளமை துள்ளும் இந்த படம் ரசிகர்களை தவறும் என்று நம்பலாம்
வசூல் மன்னன் வசூல் சக்கரவர்த்தி தான் .

மக்கள் தொடர்பாளர்கள் திரு .விஜய் முரளி அவர்கள். கிளாமர் சத்யா அவர்கள்

வசூல் மன்னனுக்கு வரவேற்பு 🌷

வசூல் மன்னன் – தியேட்டரிலும் நடந்தால் நலம்..!

Comments (0)
Add Comment