மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் ‘வடம்’
கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறது
கதை களம்
ஆரம்பத்தில் பசுமாடு லட்சுமி ,
இரண்டு கன்று குட்டியை பிரசவிக்க ,
அதில் ஒன்று பார்வை சரியில்லை என்று நட்டி நட்ராஜ்
(ரத்னவேலு பாண்டியன்)
சந்தைக்கு அனுப்ப,
அதை விமல் தன் வீட்டில் வைத்து (பாண்டி முனி)
ஆக வளர்க்கிறார்.
எந்த கன்றுக்குட்டி சரியில்லை என்று ட்வின்ஸை பிரித்தாரோ நட்டி நடராஜ், அது வளர்ந்து அவருக்கு பிரச்சனையாக வந்து நிற்கிறது.
அடுத்து நட்டி நட்ராஜ்க்கு தன் மகளை கட்டி வைக்க வேண்டும். என்று முனிஸ்காந்த் விரும்புகிறார். அவரது மகள் கோமதியும் ஆசைப்படுகிறார் .
ஆனால் நட்டி நடராஜ் ஒரு சாணி அள்ளும்பெண்
எனக்கு மனைவியா? என்று உதாசீனப்படுத்த, கோமதி தீ வைத்து இறந்து விடுகிறார். இதனால்முனீஸ் காந்த் ரத்னவேலை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார் .
அக்கா கணவரை கொன்றது விமல் தான் என்று விமலை பழிவாங்க நாயகி சரியான நேரம் பார்த்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் .
மதுசூதனன் மஞ்சுவிரட்டும்போது அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் விமல் அவர் வேட்டியை உருவ, மதுசூதனன் தம்பி அன்பு தட்டி கேட்க, அன்புவை வேறொருவர் குத்தப்பட, விமல் தான் குத்தினார் என்று, அவரை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார் .
மதுசூதனன்.என்னும் கர்ணன்.
சந்தனவேலுக்கும், கர்ணனுக்கும் இருக்கும் பகை, காலம் காலமாய்
தொடர்கிறது .
அடுத்து மூர்த்தி தன்மகன் ஒரு பெண் ணுக்கு தொந்தரவு கொடுத்தான் என்று
விமலின் அப்பா நரேன் ,போலீசில் பிடித்துக் கொடுக்கிறார் இதனால் மூர்த்தியின் மகன் இறந்துவிட, விமல்
கொல்ல, கர்ணனை நாடுகிறார். இப்படி ஐந்து கதைகள்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமாக ரசிக்கும் படி இருக்கிறது ஒரு நேர்கோட்டில் ஒன்றாக வந்து கிளைமாக்சில் எல்லாவற்றுக்கும் விடையை தானே தேடிக் கொள்கிறது.
ரத்தினவேல் பாண்டியனை
முனீஸ் காந்த் பழி தீர்த்தாரா?
மூர்த்தி விமலை கொல்ல திட்டம் தீட்டியது பழித்ததா?
பிரிந்து போன ட்வின்ஸ் மாடுகளான செவல பாண்டி முனி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா?
விமலை பழிவாங்க காதல் நாடகம் ஆடிய நாயகியின் கனவு என்ன ஆனது?
தன் அன்பு தம்பி அன்பு இறந்ததற்கு மதுசூதனன் விமல் குடும்பத்தை பழி வாங்கினாரா?
இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது இந்த “வடம்
முனீஷ் காந்த் போர்ஷன், நன்றாக இருக்கிறது.
நாயகி படித்துறைக்கு வரச்சொல்லி,விமலை போட்டு தள்ளும் காட்சி , திடீர் திருப்பம்.
செவல ,பாண்டி முனி, இரண்டு காளைகள் இணையும் காட்சி
சூப்பர் !!
நட்டி நட்ராஜ் கொலை செய்தவர் யார்? என்ற சஸ்பென்ஸ் அருமை
காதல் வந்த பிறகு நாயகி ஆடும் ஸோலோ டேன்ஸ்
ரசிக்க வைத்தது, இப்படி பல காட்சிகளில் நம்மை பரவசப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்
வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டு பிரமிக்க வைக்கிறது அதன் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன்
படம் முழுக்க உருவாக்க பட்டுள்ளது.
வேற லெவலில் இருக்கிறது. படத்தின் இடைவேளைக்கு முன்னரான சண்டைக்காட்சியில்
செம டிவிஸ்ட் வைத்து இருக்கிறார் இயக்குனர்.
இந்தப் படத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஒரு சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் விமல் அற்புதமாக நடித்திருக்கிறார்.
. தீபா- சரவணன் சக்தி- பால சரவணன்- ஆகியோர் மூவரும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் நிச்சயமாக சிரிப்பார்கள்.
சமூகப் பிரச்சனைகளை சொல்லி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இந்த படம் ஒரு கிராமத்தின் கதை. அதை சுற்றியுள்ள மக்களின் மனநிலை.. அவர்களின் உறவுமுறை… இதை இந்த படம் பேசி இருக்கிறது. ‘ஏரும் எங்கள் கடவுள்தான் எருதும் எங்கள் கடவுள்தான்’ இதையும் இந்தப் படம் பேசுகிறது. படத்தை . மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் மிகக் கூட்டங்களுக்கு இடையில் படம் பார்க்கப்பட்டிருக்கிறது. இனி’பாண்டி முனி’ பாடலை தான் ஒலிக்க மஞ்சுவிரட்டில் விடுவார்கள். அந்த அளவிற்கு பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்த
இமானை பாராட்டலாம்
இந்த படத்தில் விமல்,
வெற்றி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் சண்டை காட்சிகளிலும் நடன காட்சிகளிலும் மஞ்சுவிரட்டும்போது அவர் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
நட்டி நட்ராஜ், ரத்தினவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் மஞ்சுவிரட்டில் தன்னுடைய காலை தோற்று விடக்கூடாது என்று கம்பீரமாக நடந்து வரும் பொழுதும் முனீஸ்காந்த், கத்தியால் குத்தும் போதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சனஸ்கா ஸ்ரீ, அழகான தேர்வு, தேவகி என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக, அம்சமாக வந்து போகிறார் பாடல் காட்சிகளில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். முனிஸ்காந்த், நடிப்பு இந்த படத்தில் மிகவும் அருமையாக இருந்தது படத்தின் மிகப்பெரிய பலம் அவர்தான். பால சரவணன், விமலின் நண்பனாக வந்து கலகலப்பு ஊட்டுகிறார். ‘ஆடுகளம்’நரேன்,
விமல் அப்பாவாக
கம்பீரமாக நடித்திருக்கிறார்.மற்றும் மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அனைவருக்கும்
பாராட்டுகள்
தொழில் நுட்ப கலைஞர்கள்
பிரசன்னா எஸ் குமாரின்ஒளிப்பதிவு
கிராமத்து அழகு அள்ளி வந்திருக்கிறது மஞ்சுவிரட்டு காட்சியை, ஒளிப்பதிவாளர் சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
ஷாபு சோசப் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது படத்தின் விறுவிறுப்புக்கு படத்தொகுப்பு முக்கிய பங்காற்றுகிறது.
இசையமைப்பாளர் டி. இமான் .
இந்தப் படத்தில்
பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பங்காற்றி இருக்கிறார். அருமையாக இருக்கிறது.இப்படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் பாடலாசிரியர் ஞானக்கரவேல் தான் எழுதி இருக்கிறார்
பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது.
இந்த படத்தின் திரைக்கதைக்கு உயிர் தந்தவர்கள். கேமரா மேன், எடிட்டர், ஃபைட் மாஸ்டர், மியூசிக் டைரக்டர் இமான் ஆகியோர் உயிர் கொடுத்திருக்கிறார்கள். என்று சொல்லலாம்.
கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் கேந்திரன் வி
கிராமத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டு இதுவரை யாரும் சொல்லப்படவில்லை அதை அற்புதமாக சொல்லி இருக்கிறார் குடும்ப உறவு முறைகள் அவர்கள், நடத்தும் துரோகம், சூழ்ச்சி களை அழகாக சொல்லி இருக்கிறார்.
பெண்களின் வீரத்தை பற்றி பேசி இருக்கிறார்.
ஜல்லிக்கட்டு மாடுகளின் கோபத்தை பேசி இருக்கிறார்.
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
ஆர்ட் டைரக்டர் சசிகுமார், மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்தை 1500 மேற்பட்ட பார்வையாளர்களை காட்டி அரங்கம் அமைத்து சபாஷ் பெறுகிறார்.
சண்டை பயிற்சி ஜி. என் .முருகன்
சண்டைக் காட்சிகளை அனல் தெறிக்க விட்டிருக்கிறார்.
நடனப் பயிற்சி
தினேஷ் ,தீனா, சந்தோஷ்என, மூன்று பேர் பணியாற்றி இருக்கிறார்கள் நடனம் ரசிக்க வைக்கிறது.
காஸ்ட்யூமர் பெருமாள் செல்வம்
கிராமத்து கான கதையில் உடை வடிவமைப்பு பொருந்தி இருக்கிறது.
ஒப்பனையாளர் சீராளன் மணி
நாயகிக்கும், நாயகனுக்கும், நட்டிக்கும் எல்லோருக்கும் ஆடை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.
DI: Infinity Media
Colorist: Rajarajan Gopal
VFX: MK Studios
என இந்த வெற்றி படத்துக்கு உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மக்கள் தொடர்பாளர் எஸ்.2 சதீஷ்குமார் .
படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த வடம்” வெற்றித்தடம் பதிக்கும் என்பது உறுதி”
விமலுக்கு இன்னொரு களவாணி போல வெற்றியை கொடுக்கும் என்பது நிச்சயம்🌷