டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி “தேசம் ஐக்கான் விருது”

மலேஷியா நாட்டில் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ் நாட்டிலிருந்து தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆன்டனி, டி. இமான் போன்ற இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகளை மலேஷியாவில் பல முறை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ஜனநாயகன் படத்தின் மலேஷிய நாட்டு வினியோக உரிமையையும் இவரது மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை, மிகப் பிரமாண்டமாக முறையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்க வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார். சமீபத்தில் மலேஷியாவின் பல பகுதியிலிருந்தும் ஆதரவற்ற 4000 மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை நேரிடையாக வழங்கியுள்ளார்.
டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி “தேசம் ஐக்கான் விருது” அண்மையில் வழங்கப்பட்டது.

Comments (0)
Add Comment