யூத்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

கென் கருணாஸ். இவர் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து ‘அசுரன்’, ‘விடுதலை-2’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, நடிகர் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார்.

தொடர்ந்து, கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்து ள்ளமுதல் படம்” யூத் ” இப்படம் வெற்றி பட்டியலில் இடம் பெற்றுள்ளது வாழ்த்துக்கள் கென்!!

இப்படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் த சார்பில் கருப்பையா தயாரித்துள்ளார்.

கதை களம்

பேக்கரி கடை நடத்தும், அப்பா உன்னிகிருஷ்ணன், மகன் எப்படியாவது படித்து பாஸ் ஆக வேண்டும் என்று எல்லா சாமியையும் வேண்டும் அம்மா சரோஜா, இவர்களின் மகன்தான் “பிரவீன்” (கென் கருணாஸ்) இவர் 10ஆம் வகுப்பில் ஜஸ்ட் பாஸாகி 11ஆம் வகுப்பு செல்ல, எப்படியாவது ஒரு காதலிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் பள்ளிக்கு செல்கிறார். பள்ளியில் காதலிக்க ஆனால், ஒரு பெண் கூட இவருடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் என்ட்ரி கொடுக்கிறார் மீனாட்சி.

இதை அடுத்து கனகவல்லி கெவின் வாழ்க்கையில் வருகிறார் அந்த காதலாவது நிறைவேறியதா? இல்லையா? என்பதே கதை களம்”

முதல் பாதி முழுவதும் பள்ளி வாழ்க்கை, நண்பர்கள், காமெடி, லைட் காதல் போன்ற அம்சங்களுடன் சுறுசுறுப்பாக செல்கிறது. எங்கும் அலட்டலில்லாமல், இயல்பான காட்சிகள் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இரண்டாம் பாதியில் கதை மெதுவாக உணர்வுப்பூர்வமான திசையில் நகர்கிறது. இளமையில் ஏற்படும் மன அழுத்தங்கள், உறவுகள், பிரிவுகள் போன்றவை நிதானமாக சொல்லப்பட்டு, கிளைமாக்ஸில் மனதை தொடும் விதமாக முடிகிறது.
அண்ணன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு செல்லும் தேவதர்ஷினி படும் அவமானம் மனதை உருக வைக்கிறது .

பள்ளியில் சென்று தன் மகன் செய்த தவறுக்காக மற்ற பெற்றோர்களின் கால்களில் விழும் தேவதர்ஷினி மனதில் இடம் பிடிக்கிறார்.

இப்படி படம் முழுவதும் இயல்பான காட்சிகளின் மூலம் கதை ,ஆசிரியர் இயக்குனர், நடிகர் என அசத்தியிருக்கிறார் கென் கருணாஸ்.

நடிப்பு & தொழில்நுட்பம்

கென் கருணாஸ் ஹீரோவாக மிகவும் இயல்பாக நடித்துள்ளார். இளமை துள்ளும் காதல் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் அழகான பெண்களை கண்டவுடன் கென்முடி, காற்றில் பறப்பதும் ,அவர் ஒரு மாதிரியாக “லுக்கு விட்டு சிரிப்பது செம!!

அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அழுது துடிப்பதும், கிளைமாக்ஸ் காட்சியில் தன் கனவு எது? என்று காதலிடமிருந்து பிரிந்து வருவதும் கைதட்ட வைக்கிறது!!!

ஆரம்பத்தில் இருந்தேஅப்பாவிடம் கோபமாய் இருக்கும் கெவின் ,அவரின் அப்பா 1985ல் ஆண்ட்ரியாவைப் பிரிந்து அவர் அறை வாங்கியதை சொல்லும் பொழுது, தன் மகன் தோற்று விடக்கூடாது என்று ஒரு தோற்ற அப்பாவின் வழியை சொல்லும் பொழுது, அப்பாவை கட்டி பிடிக்கும் கென் கருணாஸ், நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஹீரோயினான அனிஷ்மா தனது எளிமையான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை கவர்கிறார். மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் வரும் காட்சிகள் வசந்த தென்றலாய் இளமை ஊஞ்சலாடுகிறது.

சுராஜ் வெஞ்சரமூடு

தன் பழைய காதலி ஆண்ட்ரியாவை மறக்க முடியாமல் அதே சமயம் நிகழ்காலத்தில் வாழும் தன் மனைவி சரோஜா மீது அன்பை வைத்துக்கொண்டு மகன் தோத்து விடக்கூடாது என்றும் அன்பு வைத்து அவர் நடித்திருக்கும் காட்சிகள் செம சிறப்பு!!

படத்தின் மிகப்பெரிய பலம் தேவதர்ஷினி,

சரோஜா ,என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார். தன் மகனை எப்படியாவது ஐஏஎஸ் ஆக்கிவிட வேண்டும். என்று துடிக்கும் அவர் நடிப்பு சூப்பர்!!
நளினி ,பள்ளி கரஸ்பாண்ட் ஆக, அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்

தொழில் நுட்ப கலைஞர்கள்

இசை அமைப்பாளர்

ஜி.வி. பிரகாஷ் குமார் இசை இந்த படத்தின் முக்கிய பலம். பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. குறிப்பாக எமோஷனல் சீன்களில் இசை பெரிய பங்கு வகிக்கிறது.

கதை வசனம் எழுதி இயக்கி நடித்திருக்கிறார் கென் & கேங்

இளைஞர்களின் உணர்வுகளை அழகாக சித்தரிக்கும் மகிழ்ச்சி நிறைந்த திரைப்படத்தை இயக்குனர் கென் கருணாஸ் இயக்கியிருக்கிறார் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார். இளமையின் உற்சாகத்தையும், உணர்வுகளையும் திரையில் கொண்டு வந்திருக்கும் விதம் மிகவும் பாராட்டத்தக்கது.

இடைவேளைக்கு பிறகு படம் உணர்வு பூர்வமான திசையில் பயணிக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் மனதை ஆழமாக தொட்டுச் செல்கின்றன. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய சிறந்த படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

விக்கியின் ஒளிப்பதிவு அருமை குளுமையாக இருந்தது.பாடல்காட்சியில் கேமரா விளையாடி இருக்கிறது.

படத்தொகுப்பு: நாஷ்
படத்தை நல்ல முறையில் செதுக்கி இருக்கிறார்.

ராமு தங்கராஜ் ,ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் அருமையாக இருக்கிறது.
காஸ்டியூம் டிசைனர் காவியா ஸ்ரீராம்
பாடல்கள் எழுதியது :
விக்னேஷ் ஸ்ரீகாந்த், கென், ஈஸ்வர், சந்தான லட்சுமி ,
பாடல்கள் ரசிக்கும் வகையில் இருந்தது.
சோபி பவுல் ராஜின்,
நடனப் பயிற்சி ரசிக்க வைத்தது.
சண்டை பயிற்சி
கலை கிங்ஸ்டன்
கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அசத்தல்!!!

மக்கள் தொடர்பாளர்
பரணி அழகிரி, அவர்கள்
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த படம்
இளமை உணர்வுகளை நிஜமாக காட்டிய விதம், இயல்பான நடிப்பு, ஜி.வி.யின் இசை, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய சுத்தமான கதை என்ன பல விஷயங்கள் இருக்கிறது
வெற்றி பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
“யூத்”🌷

Comments (0)
Add Comment