“Project Hail Mary” என்பது Andy Weir எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் சை-ஃபை திரைப்படம். இதை இயக்கிஇருக்கிறாரPhil Lord மற்றும் Christopher Miller. முக்கிய கதாபாத்திரத்தில் Ryan Gosling நடித்துள்ளார்
மார்ஷியன்’ நாவலை எழுதிய Andy Weir, 2021-இல் ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி’ என்ற அதிகம் விற்பனையான அறிவியல் புனைகதை நாவல் ஒன்றை வெளியிட்டார். Phil Lord மற்றும் Christopher Miller தயாரித்து இயக்கிய இந்த அறிவியல் புனைகதை சாகசத் திரைப்படத்திற்கு, Drew Goddard வெள்ளித்திரைக்கு ஏற்றாவாறு தழுவி திரைக்கதை எழுதியுள்ளார்.
திரைக்கதை சீராக இருக்கிறது காட்சி அமைப்புகள் பிரமிப்பாக இருக்கிறது.
📖 கதை களம்
படத்தின் நாயகன் தான் யார் ?என்றோ அல்லது எப்படி அங்கு வந்தோம்!! என்றோ!! எந்த நினைவும் இல்லாமல் ஒரு விண்வெளி கப்பலில் கண் விழிக்கிறார் .அவரது நினைவுகள் மெதுவாக திரும்பும் பொழுது, சூரியனில் அணைந்து போகும் காரணமாக ஒரு மர்மமான பொருளுக்கு பின்னால் இருக்கும் விபரங்களை கண்டுபிடிக்கிறார். அந்த பணியை தொடங்கும் போது அவர் தனது அறிவியல் பயிற்சி அபாரமான புத்திசாலித்தனத்தை பயன்படுத்துகிறார். ஆனால் அதை தனியாக அவர் பயன்படுத்தவில்லை அவருடன் இருந்தவர் யார்? என்று வித்தியாசமான கோணத்தில் படம் நகருகிறது.
தனித்த விண்கலத்தில் நாயகன் கோமாவில் இருந்து விழித்தெழும் போது படம் பரபரப்பாக இருக்கிறது. அறிவியல் மற்றும் அணுக்கூறு உயிரியலாளரான Ryland Grace (Ryan Gosling) அவர் ஏன் அங்கு வந்தார். சூரியனின் ஒளியை மங்கச் செய்து, அதை முற்றிலுமாக ஒழிக்கும் Astrophage என்ற நுண்ணுயிரியை எப்படி கையாண்டார். Ryland Grace -ஐப் பணியில் அமர்த்தும் Eva Stratt (Sandra Huller), Astrophage -களை முற்றிலுமாக அழிக்க ப்ராஜெக்ட் ஹெயில் மேரியைத் எப்படி தொடங்குகினார்
என்பது விறுவிறுப்பான கதைக்களம். பூமி பெரிய ஆபத்தில் இருக்கிறது, அதை காப்பாற்ற அவரே ஒரே நம்பிக்கை என்பதை அறிந்து அதன் பிறகு அவர் எதிர்கொள்ளும் விஞ்ஞான சவால்கள், தனிமை, மற்றும் unexpected friendship தான் இந்தக் கதையின் மையம்.
🎥 நல்ல விஷயங்கள்
விஞ்ஞானம் + உணர்ச்சி: “The Martian” போலவே, அறிவியல் விஷயங்களை எளிமையாகவும் ரசிக்கும்படியும் காட்சி படுத்தி இருக்கிறார்கள்
நடிப்பு: Ryan Gosling தனது சீரியஸ் மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்
திரைக்கதை: புத்தகத்தில் இருந்த த்ரில், suspense, humour ஆகியவை சரியான வகையில்
படமாக்கி இருக்கிறார்கள்.
கதை முழுவதும் ஒரே மனிதரை மையமாகக் கொண்டதால், screenplay தான் முக்கியம்.
அதை சிறப்பாக கையாண்டிருப்பது படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறது.
அதிக விஞ்ஞான விளக்கங்கள் casual audience-க்கு கொஞ்சம் heavy ஆக இருக்கும் என்பது மறுக்க முடியாது
இந்த படம் sci-fi ரசிகர்களுக்கும், “The Martian” மாதிரி realistic space survival stories பிடிக்கும் மக்களுக்கும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
Phil Lord மற்றும் Christopher Miller தயாரித்து இயக்கிய
இப்படம் மிகப்பெரிய
படமாக வந்துள்ளது.
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
இப்படம்
லண்டனில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வெளியான இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், இன்றுவரை 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்று
CREDITS -பின்னணிக் குரல்-James Ortiz as the voice of the Alien Rocky while Ray Porter & Meryl Streep as the other voices of Rocky ; Priya Kansara as the voice of Mary of Hail Mary Ship
Daniel Pemberton;
இசை படத்திற்கு மிக உயிரோட்டமாகவும் பரபரப்பாக இருந்தது.
– Greig Fraser ஒளிப்பதிவாளராக பணி புரிந்திருக்கிறார். விண்வெளி கப்பலில் நாயகன் புரியும் சாகசம் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அற்புதமாக இருக்கிறது படம் முழுக்க கேமரா மாயாஜாலம் செய்திருக்கிறது காட்சிகளை கவரும் வண்ணம் படமாக்கி இருக்கிறார்.
ஆங்கிலம், தமிழ், தெலுங்கு & இந்தி ஆகிய மொழிகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிடுகிறது.