”நீ Forever”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5.

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்”நீ Forever”.

கதை களம்

சுதர்ஷன் கோவிந்த் அஜய் ,என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும், அர்ச்சனா ரவி இப்படத்தில் ஹீரோயினாகவும் அறிமுகமாகியிருக்கிறார் கள்.
இன்றைய நவீன கால காதலை. இன்றைய GenZ தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம்
கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
பொளாட்சியில் நடக்கும் சம்பவங்களும் ஒய் ஜி மகேந்திரன் மகள்
வித்யா, வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு, தன் காதலனால் கைவிடப்பட்டு திரும்பி வந்த பிறகு ஒய்ஜீ மகேந்திரன்
இனி நான் சொல்வது தான் சட்டம். என்று எல்லோரையும் கண்டிப்புடன் வளர்க்க, தன் மகள் ஓடிப் போனது போல தன் பேரனும் அந்த தழறை செய்து விடக்கூடாது, என்று கண்டிஷன் போட, ஆனால் நாயகன் அஜய் சென்னையில் ஒரு ஆப்பை உருவாக்க, அது காதல் பீல் இருந்தால் மட்டுமே செட்டாகும் என்று சொல்ல ,அதற்காக காதலிக்கிறார் .அதே சமயம் நாயகி ஒரு காதல் பீலோடு படம் எழுதி இயக்கினால் படம் வெற்றி அடையும். என்று அவரும் ஒரு சம்பிரதாயத்துக்காக காதலிக்கிறார். இந்த காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதை அவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறது படம். முதல் பாதியில், கொஞ்சம் காதல், என்று ஸ்லோவாக போனாலும், இரண்டாம் பாதியில் படம் வேகம் எடுக்கிறது. நாயகன் தன் அப்பாவை சந்திக்கும் காட்சிகளில், கண்களில் நீரை வரவழைத்து இதயத்தை நெகிழ வைக்கிறது. ஐஸ்வர்யா என்னும் மதி, நாயகனின் குடும்பத்துக்குள் வந்த பிறகு அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்படுகிறது.

நடிகர் &நடிகைகள்

சுதர்சன் கோவிந்த்
அஜய் ,என்ற கதாபாத்திரத்தில் ஒரு இன்னசென்ட் நாயகனாக காதலியை பிரிந்து அழும் பொழுது, தன் அப்பா, அம்மா பிரிவை கேட்டாலும், தன் தாத்தா கண்டிஷன் கேட்டு, நண்பன் ராக்கி உதவியுடன் காதலிக்க, தொடங்குவது என படம் முழுவதும் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறார். அற்புதமான நடிப்பு.
அர்ச்சனா ரவி, மதி என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க , நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த அவர், ஒரு அன்பான குடும்பம் கிடைத்தும் தன் காதலனை கைபிடிக்க முடியவில்லை. என்று கலங்கும் பொழுது ,ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு காதலனை தேடி அலையும் பொழுதும். சூப்பரான நடிப்பு.
ராக்கி, என்ற வேடத்தில் நாயகனின் நண்பனாக வரும் பிரதோஷ் செய்யும் கலாட்டா கலகலப்பை ஏற்படுத்துகிறது.
குக்கி என்ற கதாபாத்திரத்தில் வரும் நோபில் காமெடிக்கும், கலகலப்புக்கும் கேரண்டி.
நாயகனின் அம்மாவாக வரும் வித்யா, ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். கணவனை பிரிந்து அப்பாவின் கண்டிஷனில் அன்புக்காக ஏங்கும் அந்த கதாபாத்திரம் நம்மை நெகிழ வைக்கிறது.
ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஒய் ஜி மகேந்திரன் .தனது பண்பான அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார். தேவர் மகன் சிவாஜி கணேசன் அவர்கள் அமர்ந்து சேரில் உட்கார்ந்து கொண்டு வீட்டையே தன் கட்டுக்குள் கொண்டு வந்து கண்டிப்பாக ஒரு தந்தையாக, தாத்தாவாக ,படம் முழுக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
யோகி, என்ற கதாபாத்திரத்தில் வரும் நிழல் கள்ரவி குறுக்கு வழியில் சூதாடி பணத்தை தொலைத்து விட்டு குடும்பத்தையும் இழந்து நிற்கும் பரிதாபக் காட்சிகள்.
பிரபாகர், என்ற கதாபாத்திரத்தில் வரும் எம்.எஸ். ஸ்ரீதர் தன்னுடைய கோபத்தினால் குடும்பத்தை இழந்து தவித்து விட்டு, பிறகு நாயகன் உதவியுடன் சேர்வது மனதை தொடும் காட்சிகள்.
மகாலட்சுமியாக பிரபாகரன் மனைவியாக வரும்
ராதிகா ஸ்ரீநிவாஸ் காட்சிகள் குறைவாக வந்தாலும், நிறைவான நடிப்பு நல்ல கதாபாத்திரம்.
என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

தொழில்நுட்ப குழு

தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்: புகழ் & ஈடன் இப்படத்தை தயாரித்திருக்கிறார் அவருக்கு “தருணம் படம் வெற்றியை கொடுக்க விட்டாலும் இந்த படம் சிறப்பான வெற்றியை கொடுக்கும்.
எழுதி இயக்கி இருக்கிறார் அசோக்குமார் கலைவாணி.
அற்புதமான கதை, வசனம், திரைக்கதை, இயக்கம் எல்லாமே நன்றாக இருந்தது அவர் சிந்தனை வித்தியாசமாக இருக்கிறது. பொள்ளாச்சி சம்பவங்கள் படத்திற்கு உயிர்நாடியாக அமைந்திருக்கிறது. இந்த படத்தை பார்த்து நிறைய தம்பதிகள் ஒன்று சேருவார்கள் அதற்கு இந்த படத்தில் இயக்குனர் காரணம் என்று அவர் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்.
அஸ்வின் ஹேமந்த்
இசையில், பாடல்கள் பரவசம் பின்னணி இசை உருக வைக்கிறது.
ராஜா பட்டாச்சார்ஜி
அவர்களின் ஒளிப்பதிவு பொள்ளாச்சியை குளு குளு என்று காட்டி இருக்கிறது சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகளும் ரிச்சாக இருக்கிறது.
எஸ்.ஏ.நாகார்ஜுன்
படத்தை தொகுத்தி ருக்கிறார் கச்சிதமாக இருக்கிறது. தங்கள் காதலைப் பற்றி நாயகனும், நாயகியும், ஒருவர் மாதிரி ஒருவர் சொல்லும் காட்சிகள் படத்தொகுப்பாளரை பாராட்ட வைக்கிறது. காட்சிகளை பரபரப்பாக கொண்டு சென்றதிலும் இவங பங்கு பாராட்ட வைக்கிறது. வர்ணாலயா ,
ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார். அற்புதம் .அந்த கஃபே, நாயகன், நாயகி சந்திக்கும் இடம், பொள்ளாச்சி வீடு ,எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் பங்கு அற்புதமாக இருக்கிறது.
ஜெகதீசன்
ஆடை வடிவமைப்பாளராக
பணி புரிந்திருக்கிறார் அருமை.
சிந்துஜா அசோக் கலைவாணி பாலன்
ஒப்பனை சூப்பர் .

பாடலாசிரியர்களாக கு.கார்த்திக்
பாடல்கள் ரசிக்கும் வகையில் இருந்தது

ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார்
ஒலி கலவை: அரவிந்த் மேனன்
VFX: Hocus Pocus
DI: டி-ஸ்டுடியோஸ் போஸ்ட்
நடனம்: விஜயராணி
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ்
டப்பிங்: டி-ஸ்டுடியோஸ்
போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: விக்ரம் சேகர்
மக்கள் தொடர்பு : AIM சதீஷ்.&சிவா

மொத்தத்தில்,
காதல், என்பது உணர்வுபூர்வமாக வர வேண்டுமே தவிர ,தங்கள் சுயநலத்துக்காக காதலிப்பது போல் நடிக்க கூடாது. ஆண்களையும், பெண்களையும், யாரும் ஏமாற்ற கூடாது .என்ற படிப்பினையும், தம்பதிகள் பிரிந்து சென்று மீண்டும் இணையும் பொழுது ஏற்படும் உணர்வு களையும், அற்புதமாக சொல்லி இருக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா🌷

Comments (0)
Add Comment