ஒரு பேய் படம் இப்படியும் மிரட்டலாம். என்று மிரட்டி இருக்கிறார்கள். பல காட்சிகள் பயத்தை வர வைத்திருக்கிறது.
கதை களம்
அஸ்தினாபுரம் கிராமத்தில், மாந்திரீக சடங்கு தவறாக போய்விடவே, தலைமுறை தலைமுறையாக இது தொடர்கிறது.
ஆரம்பக் காட்சியில் மோனா தன் மாமியாருக்கு,
சாப்பாடு கொண்டு போய் வைக்கும் காட்சியில் ஆரம்பித்து !!பாதரிடம், மன்னிப்பு கேட்கும் காட்சியில் பரபரப்பும்
தொற்றிக் கொள்கிறது.!!!
ஏஞ்சல் என்ற குழந்தையை மாஸ்லின் களவாடும் காட்சியும், அவர் விரலை அவரே நறுக்குவதும், பற்களை பிடுங்குவதும் ,தன் மகளையே ,அந்த தீய சக்திகள் கொலை செய்ய நினைப்பதும், மார்ச்சுவரியில்,
பிணத்தை உடற்கூறாய்வு செய்யும் அனுபவமிக்க டாக்டர்கள் சாத்தானிடம் மாட்டிக் கொள்வதும், அந்த பிணத்தை புதைக்கும் பொழுது அங்கு விக்டோரியாவின் பிணம் இருப்பதும், அதன் பிறகு நாயகன் சாகர், தன் நண்பன் முரளியுடன் நாயகியின் வீட்டுக்குள் சென்று அந்த பாட்டியை மீட்க நினைப்பது, பிறகு அவர் அந்த சாத்தானிடம் மாட்டிக் கொள்வது இப்படி இடைவேளை வரை பல காட்சிகளில் அள்ளு விட வைத்திருக்கிறது இந்த படக்குழு. ஹாரார், திரில்லர் ரசிகர்களுக்காகவே மிகவும் சிரமப்பட்டு யோசித்து, எழுதி இருக்கிறார் இயக்குனர் .பேய் பிடித்தவர்கள் தாறுமாறாக நடந்து கொள்வதும், ஒருவித அமானுஷ்யத்திற்கு கட்டுப்பட்டு,மோனா ரத்த வெறி பிடித்து நடந்து கொள்வதும், ஊரில் சிலர் மர்மமான முறையில் இறந்து கொண்டிருப்பதும், அதற்குமோனாவுக்கும் சம்பந்தம் இருப்பதாக மக்கள் பேசிக் கொள்வதும், இறந்தவர்களை போஸ்ட்மார்ட்டம் செய்ய பார்த்தால், அதையும் தடுக்கும் சாத்தான் ,என்று படம் முழுக்கவே மிரட்டி இருக்கிறார்கள் .
மணிகண்டன் ராமலிங்கத்தின் திரைக்கதை, நடுங்க வைக்கிறது. பயத்தை வர வைக்கிறது. ஹாலிவுட் படங்கள் ஆன, காஞ்சுரிங் ,
தி ஓமன், போன்ற படங்களை நினைவுபடுத்தும் விதமாக மிரட்டி இருக்கிறார் இயக்குனர் .
படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை திகில் மோடிற்குள் கொண்டு செல்கின்றார் இயக்குனர்.
படத்தின் பல இடங்களில் திக்கென தெறிக்கவிடும் ஸ்கேரி மொமெண்ட்ஸ் உள்ளன. குறிப்பாக வீட்டில் அடைந்து கிடக்கும் விக்டோரியாவின் ஆவி,காட்சி திகிலின் உச்சம் என்று கூறலாம். மோனா குடும்பத்தில் ஆவிகள் அட்டகாசம் செய்ய, மறுபுறம் சாத்தானின் வேட்டை தொடர பீதியில் ,உரைகிறது படம் பார்ப்பவர்கள் நெஞ்சம்.
நடிகர் &நடிகைகள்
இரண்டு குழந்தைகளுக்கு
அம்மாவாக மோனா,
(மெஸ்லின் )என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் .
கொடூரமாக அவர் பார்க்கும் பார்வையும் ,தன் விரலை அவரே வெட்டிக் கொள்வதும், சுவற்றில் மோதி மண்டையை உடைத்துக் கொள்வதும், பாதரிடம் பேசியாக வேண்டும் என்று அவரை கொள்வதும். மதர் ஷீலாவை கொல்வதும், இப்படி ஏகப்பட்ட காட்சிகளில் மோனா நடிப்பு செம மிரட்டலாக இருக்கிறது. சாத்தான் பிடிக்கு ஆளாகி ,தன் மகள் அலிசா, ஐரின் இருவரையும் துன்புறுத்தும் ஒரு அம்மாவாக மன உளைச்சலில், சாத்தானின் சக்தியால் தாக்குதலுக்குள்ளாகி, பயத்தையும், பதட்டத்தையும், சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் மோனா.
வாழ்த்துக்கள் மேம்.
(ஐரா) அலிஷா என்ற கதாபாத்திரத்தில், அம்மாவிடம் சிக்கிக் கொண்டு சீரழியும் பொழுதும், தன் காதலனுக்கும் “எஸ் சொல்ல முடியாமல் தவிக்கும் போதும், பள்ளியில் ஒருவித காகத்தால் பயப்படுவது, போலவும் தன் அம்மாவுக்கு என்ன நடந்தது? என்று அலசி ஆராய்ந்து!! அற்புதமாக நடித்திருக்கிறார் .
நாயகன் பிரட்ரிக் ஜேம்ஸ், (சாகர்) அலிசாவின், காதலனாக அழகான பள்ளி நடிப்பை கொடுக்கும் போதும். தன் காதலியின் அம்மாவுக்கு, என்ன நடந்தது ?என்பதை அலசி ஆராய்ந்து!! கண்டுபிடிப்பதில் கதையின் முக்கிய பங்கு வகிக்கிறார். நாயகியின் பாட்டியை கூட்டி வருகிறேன், என்று அந்த வீட்டுக்குள் சிக்கி, அவர் சின்னம் பிண்ணமாகி, படும்அவஸ்தையின் போதும், பிறகு, அந்த சாத்தான் அவர் வீட்டுக்கே வந்து அவர் காதுக்குள் சத்தத்தை ஏற்படுத்தி தன் காதை தானே குத்திக் கொள்வதும் படத்தின் ஹைலைட்டான காட்சிகள்.
அடுத்து கடவுளை வெறுத்து ,சாத்தான் வழிபாட்டுக்குள் நுழைந்து, நாக்கை வெட்டிக்கொள்கிற எபிசோடுகளில் சாந்தினி தமிழரசன் நடிப்பு!! விக்டோரியாவாக உயர்ந்து இருக்கிறது. மற்றும் எட்வர்ட், தயாரிப்பாளராகவும், காவல்துறை அதிகாரி ஆகவும் கலக்கியிருக்கிறார். அவர் வரும் காட்சிகள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. ஸ்ரீஜாரவி, நடிப்பு அருமையாக இருக்கிறது .
ஹாலிவுட் ஹாரர் படங்கள் பார்த்தால் என்ன உணர்வு ஏற்படுமோ? படம் பார்க்கும் பொழுதே ஒரு அச்சத்தை ஏற்படுத்தி பின்னணி இசையின், மூலம் அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் அஸ்வின் கிருஷ்ணா, பாடல்கள் சுமார் ரகம் என்றாலும், பின்னணிஇசை அற்புதம்!!!
பாலாஜி ராமசாமியின் ஒளிப்பதிவு மிரட்டி இருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனிகளின் தொடங்கி, அஸ்தினாபுரம் 1973, 1986,1950 காலகட்டங்களில் நடந்த கதைகளை சொல்லி, விக்டோரியா காலத்து கதைகளை சொல்லும் பொழுது, மிரட்டி இருக்கிறது. மலை கிராமத்தை கண்முன் நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
படத்தொகுப்பாளர் கள்
ராஜ்குமார், மற்றும் கோவை அபிஷேக்
இருவரும்
கச்சிதமாக படத்தை செதுக்கி இருக்கிறார்கள் .
எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையாமல் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
படத்தின் ஆர்ட் டைரக்டர் பணி அற்புதமாக இருக்கிறார்
சுரேந்திரன் செல்வராஜ்.
எந்த இடத்திலும் மிகை இல்லாமல், ஆர்ட் டைரக்டர் செய்திருப்பது சிறப்புக்குரியது .
ஒப்பணையாளர்,
இந்த படத்துக்கு மிகவும் சிரமப்பட்டு ஒப்பனை செய்து இருக்கிறார்!! இறந்து போகிறவர்கள் உடம்பில் வரும் அந்த கோடுகள். இறந்து போகிறவர்களை பிணக்கூறாய்வு செய்யும் பொழுது ஏற்படும் அந்த ஒப்பனை, மோனாவின் ஒப்பனை, சாந்தி தமிழரசன் ஒப்பனை, என படத்தில் மிகப்பெரிய பலம் ஒப்பனை தான்.
மற்றும் சவுண்ட் டிசைனர் அஸ்வத்தாமன் சிவா, அற்புதமாக ஒலி அமைப்பு செய்து கொடுத்திருக்கிறார்.
ஆடை வடிவமைப்பு
தமிழினியா, அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப நன்றாக இருக்கிறது. 1950 காலகட்டத்தில் விக்டோரியா, கதை சொல்லும் பொழுது சாத்தானை வழிபடும் மக்கள் எப்படி இருப்பார்களோ அதற்கேற்றார் போல் ஆடை வடிவமைப்பு, சாந்தினி தமிழரசனின் ஆடை வடிவமைப்பு, மோனாவின் ஆடை வடிவமைப்பு ,இப்படி எல்லா இடங்களிலும் ஆடை வடிவமைப்பாளர் கவனம் பெறுகிறார்.
டி. ஐ செய்தவர்கள் கலர் கரெக்ஷன் செய்தவர்கள், லைட்டிங் பணி செய்தவர்கள், என எல்லோருடைய பங்கும் இந்த படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறது. ஒரு அற்புதமான ஹாரார்,திரில்லர் படத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனரும், தயாரிப்பாளரும் ,
மக்கள் தொடர்பாளர் ஸ்ரீ. வெங்கடேஷ்
மொத்தத்தில், இந்த சாத்தான் .நிச்சயம் எல்லோரையும் மிரட்டுவான் .படம் பார்ப்பவர்களை கதிகலங்க செய்வான். மூடநம்பிக்கைகள் அந்த காலகட்டத்தில், எப்படி எல்லாம் மனிதர்களை ஆட்டி படைத்திருக்கிறது. என்று சொல்லும் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும். சமீப கால சினிமாக்களில் மிகவும் நம்மை அதிர வைத்த படம்.இது தான் .உண்மைக்கு மிக நெருக்கமான படம் என்று சொன்னால் இந்த சாத்தான் தி டார்க்” படத்தை சொல்லலாம். நல்ல படத்தை கொடுத்த படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும், மக்கள் தொடர்பாளர்.மற்றும் அனைவருக்கும் .
வாழ்த்துக்கள்!!
மேக்கிங் சிறப்பாக உள்ளது. பின்னணி இசை மற்றும் சவுண்ட் மிக்ஸிங், எபெக்ட்ஸ் ஆகியவை திகில் காட்சிகளுக்கு வலுசேர்க்கின்றன. திரைக்கதையில் வேகம் ,பயத்தை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்றற்போல் பல காட்சிகள் அமைக்கப்படுள்ளன
க்ளாப்ஸ்
திரைக்கதை,
திகிலூட்டும் காட்சிகள்.
பின்னணி இசை,
மிரள வைக்கும் ஒளிப்பதிவு,
என மிரட்டி இருக்கிறது. இந்த “சாத்தான் தி டார்க்”