காளி தாஸ்2 திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

இயக்குனர் ஸ்ரீ செந்தில் ஆச்சரியப்படும் விதத்தில் இந்த படத்தை கொடுத்திருக்கிறார். த்ரில்லர் படங்கள் என்று சொல்லிக் கொண்டு பல படங்கள் வெளிவரும். ஆனால், அவற்றின் சஸ்பென்ஸை கடைசி வரை கொண்டு போக முடியாமல் பாதியிலேயே பார்வையாளனுக்கு அதை உடைத்துவிடுவார்கள். இந்தப் படத்தில் கடைசி வரை யார் குற்றவாளி என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. நாம் எதிர்பார்க்காத விதத்தில் உள்ளது. அதற்கேற்றபடி வலுவான திரைக்கதையை படத்தில் அரவிந்த் ஆனந்த் அமைத்திருக்கிறார் இயக்குனர்
சிறந்த திரைக்கதைகளில் காளிதாஸ் 2 வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்.

கதை களம்

பரத் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். ஆரம்பத்தில் ஒரு வீட்டில், மூன்று கொலைகள் நடக்கிறது இவர்கள் யார்? என்பதை அவர் ஆராய்ச்சி செய்யும் போது!!! அடுத்து ஒரு அப்பார்ட்மெண்ட் டில் மித்ரா, என்ற நான்கு வயது குழந்தை காணாமல் போகிறது. அந்த அப்பார்ட்மெண்டில் செக்ரட்டரி சங்கீதா, உடன் குழந்தையை தேடும் போது, அஸிஸ் டெண்ட் கமிஷனர் வைஷ்ணவி இணைந்து கொள்ள, இருவரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட,அதே குடியிருப்பில் வசித்து வரும் ஸ்டீபன் தான் குற்றவாளி ,என்று ஸ்டீபனை அட்டாக் செய்ய, அங்கு பிரகாஷ் ராஜ் என்ட்ரி ஆகி, ஸ்டீபன் குற்றவாளி இல்லை என்கிறார்.

அப்படி என்றால் என்ன நடந்தது ?
யார் குற்றவாளி ?

என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குனர்.உண்மைக் குற்றவாளி யார்? இவர்கள் கண்டுபிடித்தார்களா? இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

ஒரு பெண் குழந்தை மித்ரா, மாடியிலிருந்து விழுந்து இறந்ததைக் காட்டி, பின் டாப் ஆங்கிளில் பறக்கும் காமிரா அப்படியே அந்தக் காட்சியை விழுங்க ஆரம்பிக்க, நாமும் படத்திற்குள் விழுந்து விடுகிறோம். ஒரு நேர்த்தியான திரைக்கதை, அதைக் காட்டும் விதமான உருவாக்கம், தேவையான சில கதாபாத்திரங்கள், இயல்பான நடிப்பு, ஒரு படத்தின் தரத்தை மேலே தூக்கிவிடும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நடிகர் & நடிகைகள்

பரத்திற்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு கம் பேக் படமாக இருக்கும். முன்பை விட இப்போது மிகவும் மெச்சூர்டாக திரையில் தெரிகிறார். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேலதிகாரியிடம் சிக்கி கொண்டு எப்படி இருப்பார், குற்றவாளிகளிடம் எப்படி நடந்து கொள்வார்! என்பதை அவ்வளவு இயல்பாக பிரதிபலித்திருக்கிறார் பரத். பாந்தமான நடிப்பு என்று சொல்வார்கள் அதற்கு காளிதாஸ் ஆக பரத்தின் நடிப்பு சரியான உதாரணம்.

ஸ்டீபன் கதாபாத்திரத்தில்

அஜய் கார்த்திக் புதிரான இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர் யார், மாடி வீட்டில்குடி இருக்கும் இவர் ஏன் ரவுடிகளைகொலை செய்கிறார் ? கொஞ்சம் காதல் என ஒரு வட்டத்திற்குள் அவரது கதாபாத்திரம் இருந்தாலும்! அதை ரசித்து செய்திருக்கிறார்.

பேச்சு, நடை, உடை, மிடுக்கு என இரண்டாவது ஹீரோ இவர் தான் என்று சொல்லும் அளவுக்கு.

அசிஸ்டென்ட் கமிஷனராக பவானி ஸ்ரீ, வைஷ்ணவி என்ற கதாபாத்திரத்தில் விஜயசாந்தி யை கதாபாத்திரம் கொஞ்சம் ஞாபகப்படுத்தினாலும் இது அவருக்கான முக்கிய படமாகவும் அமைந்துள்ளது.

ஆனந்த நாக் மனைவியாக ,அபர் நிதி, இவர் கதாபாத்திரத்தில் பெரிய ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார். வீட்டிற்குள்ளேயேதான் இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சங்கீதா மீண்டும் கம் பேக் கொடுத்திருக்கிறார். ஒரு தாயாக என்ன செய்ய முடியும் !!அதை சிறப்பாக செய்து இருக்கிறார். படத்தின் முக்கிய திருப்பத்தை இவர் கையில் எடுத்திருக்கிறார்.

சுரேஷ் மேனன்.

வந்து போகிறார். பரத் உடன்” சிங்கம் ஜெயவேல், கான்ஸ்டபிள் ஆக அவ்வப்போது கலகலப்பை ஏற்படுத்தினாலும் படம் முழுக்க இவரும் வந்து தன் சிறப்பான நடிப்பை பதிய வைத்திருக்கிறார்.

மு. கார்த்தி டாக்டர் பிரசன்னாவாக, வந்து, போலீசையும் மிரட்டுகிறார். இவர் கதாபாத்திரம் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது.

மற்ற கதாபாத்திரங்களில் கிஷோர் கதாபாத்திரம் குறிப்பிடும்படி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, எடிட்டர் புவன் சீனிவாசன் இயக்குனருக்கு மிகவும் பக்கபலமாய் இருந்திருக்கிறார்கள். ஒரு த்ரில்லர் வகைப் படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இசையமைத்திருக்கிறார் சாம்.சி.எஸ்

இப்படியெல்லாம் நடக்கிறதே, இதற்கு லாஜிக் இடிக்கிறதே, என யோசித்தால் அதற்கு கிளைமாக்சில் சரியான விடை கொடுத்திருக்கிறார் இயக்குனர். சில கொலைகள் இருந்தாலும் ,ஒரு நீட் ஆன படத்தைக் கொடுத்த இயக்குனர் ஸ்ரீ செந்திலுக்கு பாராட்டுக்கள்.இவரின் வித்தியாசமான கிளைமாக்ஸ் படத்தை தூக்கி நிறுத்துகிறது.

கொலைகளை மையமாக வைத்த க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படங்கள் பல வந்திருந்தாலும், இந்த கதையை இயக்குநர் உடன் இணைந்து திரைக்கதையை அரவிந்த் ஆனந்த் வித்தியாசமான முறையில் எழுதியிருக்கிறார்கள்.

கொலையாளியை கண்டுபிடிப்பது தான் கதை என்றாலும், அதை சொன்ன விதம், படத்தில் இடம்பெறும் கதபாத்திரங்களை வடிவமைத்த விதம் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக பரத், மற்றும் ,அஜய் கார்த்திக் கதாபாத்திரங்களின் எதிர்மறை குணங்கள், அவற்றை கொலை வழக்கின் விசாரணையோடு பயணிக்க வைப்பது போன்ற விஷயங்கள் படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.

படம் தொடங்கிய உடனே நம்மை கதைக்குள் அழைத்து செல்லும் இயக்குநர் . படம் முடிவடையும் வரை ஒவ்வொரு காட்சியையும் பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறார். இறுதிக் காட்சியை நெருங்கும் போது கூட நம் கண்கள் திரையை விட்டு விலாகதவண்ணம் திரில்லர் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சினிமா ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் இந்த ‘ க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பட விரும்பிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி.
ஓம் பிரகாஷ் அமைத்திருக்கும் சண்டை காட்சி ஆரம்பத்தில்” பரத் ரவுடிகள் உடன் மோதும் போதும், போதும் அஜய் கார்த்தி, சண்டை போடும் அந்த சண்டை காட்சிகளிலும், அனல் தெரிகிறது. நடனம் பாபி ,நடனம் ரசிக்க வைக்கிறது. பாடல்களை மோகன் ராஜ் எழுதியிருக்கிறார். ஒப்பனை விஷயத்தில் மிகையில்லாத ஒப்பனையை கொடுத்திருக்கிறார் ரவி.

கலியுகா .ஏ ராஜாவின் ஆர்ட் டைரக்ஷன் பணி அருமை!! அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் வீடுகள் சங்கீதாவின் கிளைமாக்ஸ் காட்சி, மற்றும் காவல்துறை அதிகாரிகள் அலுவலகம், எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் நன்றாக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்பது அரவிந்தன் ஆனந்த், ஆரம்பத்தில் இடைவேளை வரை குழப்பமாக ” பரத் நடந்து கொண்டே இருக்கிறார் .என்று கமெண்ட்கள் வந்தாலும். கிளைமாக்ஸ் காட்சியில், திரைக்கதை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்த படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் மக்கள் தொடர்பாளர் யுவராஜ்.அவர்கள் மொத்தத்தில் காளிதாஸ் 2, திரில்லர் படங்களில் யூகிக்க முடியாத, இவர் தான் கொலையாளி, என்று யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு, ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்
தயாரிப்பாளர்கள் 5 ஸ்டார் செந்தில், அவர்கள் .மற்றும் மருத்துவர் யோகேஸ்வரன். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த படத்தின் வெற்றிக்கு கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🌷

Comments (0)
Add Comment