Producer Arun Rangrajulu
Director Ram Chakri
Creative Producer Shree Saravanan
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வெளிவந்துள்ள படம்”‘கார்மேனி செல்வம்’ வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைபடமாக வந்துள்ளது. வாழ்க்கைக்கு தேவையான எல்லா அம்சங்களையும் இந்த படம் தந்துள்ளது.
கதை களம்
சராசரி மனிதன் தன் பொருளாதார தேவைகளை, பூர்த்தி செய்ய போராடும் கதை,
கார் டிரைவர் செல்வம் ,அவரது மனைவி சாந்தி, இவர்களது குழந்தை பாலு, இந்த மூவரும் கடற்கரை ஓரமாக ஒரு சின்ன வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். மனைவி சாந்திக்கு எப்படியாவது ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது கனவு .
டிரைவர் செல்வம் சம்பத் “என்கிற கௌதம வாசுதேவ மேனனிடம் ,வேலை செய்து வருகிறார் .
சம்பத்தின் மனைவி அபிநயா, அவரது மகள் துர்கா ,இந்த அன்பான குடும்பம்
வெளிநாடு செல்லும் பொழுது, சமுத்திரக்கனியிடம் காரை கொடுத்து விட்டு போகிறார். மேனன் .அந்த காரை வைத்து சம்பாதிக்கும் சமுத்திரக்கனிக்கு எப்படியாவது ஒரு கால் கிரவுண்ட் வாங்கிவிட வேண்டும் என்று ஆசை வருகிறது. அந்த ஆசை நிறைவேறியதா? அபிநயா இறந்துவிட ,கௌதம மேனன் குடும்பம் திண்டாடி போகிறது.
அதற்குப் பிறகு சமுத்திரக்கனி யின் கனவு நிறைவேறியதா? மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி இடம் வாங்கும் சமுத்திரக்கனி, கிரெடிட் கார்டு மூலம் டிவி வாங்கும் அவரது செயல், பணக்காரனாக வாழ வேண்டும் என்றால் கடன் வாங்க வேண்டும் என்று தவறான வழியில் செல்லும் அவரின் கனவு எல்லாம் அவரை எப்படி வாட்டி வதைக்கிறது. அதன் பிறகு அவர் குடும்பம் என்ன ஆகிறது? மனைவியின் சொல்பேச்சை கேட்காத எந்த ஒரு கணவனும் கடன்காரன் இடம் மாட்டிக்கொண்டு விழிப்பான் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
நடிகர் &நடிகைகள்
சமுத்திரக்கனி செல்வம் , என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். இயல்பாக நடித்திருக்கிறார். எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டே போகலாம் ஏனென்றால் படத்தை ஒற்றை ஆளாக தாங்கி பிடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
வெளிநாடு சென்று மனைவி மகனை நினைத்து வருந்தும் போதும், டிரைவர் செல்வமாக மூன்று மணிக்கு எழுந்து சம்பாதிக்க ஓடும்போது ,கால் கிரவுண்டு இடம் எவ்வளவு இருக்கும் என்று கேட்கும் பொழுதும் ,கிரெடிட் கார்டை வைத்துக்கொண்டு இவன் என்ன வேண்டுமானாலும் கொடுப்பான். என்று சொல்லும் பொழுதும் .தன்னை அவமானப்படுத்திய தங்கை கணவன் மச்சினனிடம் சென்று கடன் கேட்கும் பொழுதும், இப்படி படம் முழுக்க இவர் நடிப்பு கொடிகட்டி பறக்கிறது.
குழந்தைகளை வளர்க்காதீர்கள்; உயர்த்துங்கள்” என்று என் மகன் பின்னால் எனக்கு என்ன செய்தாய்!! என்று கேட்பான்!! என்று, பகட்டான வாழ்வுக்கு ஆசைப்பட்டு இயல்பை தொலைத்தவர் நிலை, குழந்தை வளர்ப்பு என பல விஷயங்களை நெஞ்சில் தைக்கிற மாதிரி சொல்லி அதிர வைக்கிறார் “
நான்குவிதமான சூழலில் தங்களது பிள்ளைகளின் வளர்ப்பு, பற்றி அதிகமான கனவு கண்டு, தேவையில்லாத கடனைவாங்கி, அதற்கும் முன்னும் பின்னுமான சம்பவங்களின் உணர்ச்சிக் கோர்வைதான் படம் தகுதி, தராதரம், மரியாதை என இன்ன பிற மேம்போக்கு அம்சங்களும், அதற்கு ஆசைப்படும் தன் மனைவியின் பேச்சை மீறி, தனியாரிடம் கடன் வாங்கி, திண்டாடி தவிக்கும் சமுத்திரக்கனி.
ஒவ்வொரு முறையும் ,மகன் பாலு ,அப்பா நீ அறிவாளி!! என்று சொல்லும் பொழுது இன்னசெண்டாக அவர் சிரிக்கும் நடிப்பு அருமை!!
சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா ,சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
குடும்ப தலைவியாக கணவன் கடன் வாங்கும் போது எல்லாம் கண்டிக்கும் மனைவியாக, கணவன் வீட்டார் அவமானப்படுத்தி விட்டதற்காக தன்னுடைய தாலியை வைத்து பணம் வாங்கி, சீர் செய்யும் பொழுது, கணவன் வெளிநாடு சென்ற பிறகு ஏக்கத்தில் வாடும் மனைவியாக, இயல்பான எதார்த்தமான வாழ்வியல் சார்ந்த நடிப்பைபதிவு செய்திருக்கிறார் லட்சுமி பிரியா.
அந்த குட்டிப் பையன் கரண் சக்கரவர்த்தி,மூலம் சொல்லப்படுகிற கதை மிக உன்னதம்.
விழாவுக்கு அப்பா வராததால், விநாயகர் பேசாமல் இருப்பது கசிய வைக்கிறது!!
கௌதம் வாசுதேவ் மேனன் , சம்பத் என்ற தொழிலதிபராக அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் தன்னிடம் வேலை செய்யும் டிரைவர் மீது அளவற்ற அன்பு செலுத்தும் ஒரு நல்ல மனிதராக, இப்படி எல்லாம் இருந்தால்!! எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறார் .தன் மனைவி அபிநயா இறந்த பிறகு அவருடைய ஆசையை நிறைவேற்றும் கௌதம மேனன் இந்த நடிப்பில் உயர்ந்து நிற்கிறார்.
கார்த்திக் குமார் வரும் அந்த காட்சி படத்தின் உயிர் நாடி, கோதண்டம் பிளாட் சுந்தரம், என்ற பெயரில் படத்தில் கலகலப்பை ஏற்படுத்துகிறார். மதுமிதா ,அர்ஜுன் இருவரும் ஒரு காட்சியில் வந்தாலும் ,கலகலப்பு .பேபி லயா “துர்கா என்ற பெயரில் அழகான குழந்தையாக நடித்திருக்கிறார். அபிநயா” தேவி என்ற கதாபாத்திரத்தில் அம்சமாக வந்து போகிறார்.
படவா கோபி” ஒரு காட்சியில் வந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் பெறுகிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் ராம் சக்ரி, எழுதியவசனங்கள். அதே சமயத்தில் வசனகர்த்தாவின் புத்திசாலித் தனங்களை காட்டாமல் ஒரு பாத்திரத்தின் வார்த்தைகளாகவே ஏற்றி விட்டிருக்கிறார் இயக்குநர் .
குழந்தைகளின் உலகமும், பெற்றோர்களின் உலகமும் அப்படியே பதிவாகியிருக்கின்றன. “”தன் முதலாளி கௌதம மேனன் பணம் தரும் போதெல்லாம் சமுத்திரக்கனி வேண்டாம் என்று சொல்லும் பொழுது சிலிர்க்க வைக்கின்றன வசனங்கள்!
அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவை ததும்ப
கொடுத்திருக்கிறார்.
இயக்குனர்.
ஒரு வாழ்வியல் படத்தை எதார்த்தமாக பலரும் தங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணரும் வகையில், பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ,கடன் சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்!! என்று நெற்றிப்பொட்டில் அறைந்தது போல சொல்லி இருக்கிறார் இயக்குனர் .இதை பார்த்து தெரிந்தவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன்
யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு
வசனங்களே இல்லாமல் நீளூம் பல இடங்களில் தன் இசையால் உயிர் கொடுக்கிறார் கிளைமாக்ஸ் காட்சி பின்னணி இசை இன்னும் மனதில் கேட்கிறது. ” படத்துக்குப் பின் கேமரா வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறது.
இந்தப் படத்தின் இசையின் முதல் முறையாக மியூசிக் ஏஸ் சர்வீஸ் (Music As Service) என்ற புதுமையான முறையில் இசையமைக்கப் பட்டுள்ளது.
இந்தப் பணியை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் திறம்பட செய்துள்ளது.
பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ்
இருவரும்
படத்தொகுப்பை கையாண்டு
படத்தொகுப்பை கச்சிதமாக செதுக்கி இருக்கிறார்கள்.
தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனித்திருக்கிறார்.
மணி அமுதவன் பாடல்களை எழுத,
ஹரிஷ் கார்த்திக் நடனம் அமைத்திருக்கிறார்
ஒரே சாட்டில் சமுத்திரகனி, ஆடும் அந்த நடனம் சிறப்பு.
ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள்
வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா.
அனைவருக்கும் உடை வடிவமைப்பு பொருந்தி இருக்கிறது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ஒரு வெற்றி படமாக வந்துள்ளது கார் மேனி செல்வம்.
மக்கள் தொடர்பாளர் திரு. நிகில் முருகன் அவர்கள்.
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த கார்மேனி செல்வம்”
சொல்லும் சேதி என்ன?
பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ,கடனில் சிக்கி வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் !!
மனைவியின் கனவு, குழந்தையின் கனவு, என்று இருக்கும் சந்தோஷமான வாழ்க்கையை தொலைத்து விட்டு பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். !!
கஞ்சியோ, கூழோ,
குடும்பத்தோடு அமர்ந்து அருந்தினால் அதில் கிடைக்கும் சுகத்தை விட வெளிநாட்டில் போய் கோடி கணக்கில் சம்பாதித்தாலும் அந்த குடும்பத்தின் சந்தோசம், அமைதி அங்கு கிடைக்காது!! என்பதை சொல்லி இருக்கிறது.
இப்படி குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு அற்புதமான படத்தை கொடுத்த இயக்கனருக்கும், தயாரிப்பாளருக்கும், கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🌷🙏