அறிமுக நடிகர் சி.நிகில் ஹீரோவாக நடிக்கும் படம், ‘ரூம் பாய்’. சஸ்பென்ஸ், திரில்லர், திரைப்படமாக வந்துள்ளது. ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ள இப்படத்தை, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நிகில் உடன்,
ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
ஒரு அழகான குடும்பம் ஒரு குள்ளநரியால், எப்படி சின்ன பின்னம் ஆகிறது.
என்பதைஇந்த படம் ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. ஏலகிரியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார்
சஞ்சய் ,என்ற கதாபாத்திரத்தில் நிகில் நடித்திருக்கிறார்.
அங்கு ஒரு இந்திக்கார குடும்பம் தங்க வருகிறார்கள் நிஷா, என்ற இந்த பெண்ணுடன் சஞ்சய் காதல் கொள்கிறார். இதுதான் படத்தின் கதையோ ?என்று யோசிக்கும் பொழுது இயக்குனர் இடைவேளைக்கு பிறகு அப்படியே ரூட்டை மாற்றி சஸ்பென்ஸ் திரில்லராக வியக்க வைக்கிறார்.
நாயகன் நிகில், அவர் கதாபாத்திரம் கடைசி வரை சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.அவர்யார்? அவர் குடும்பம் என்ன ஆனது?
சஞ்சய் அப்பா, பிர்லா போஸ் என்ன ஆனார்?
சஞ்சய் தங்கை ஷாலினிக்கு என்ன ஆனது?
பவித்ரா அப்பா இன்பசேகரன் எங்கே போனார்?
அவரை தேடி போலீசார் அலைவது ஏன்?
என்பன போன்ற கேள்விகளுக்கு சரியான திரைக்கதை, உடன் பல ஆச்சரியத் தக்க சம்பவங்களை உள்ளடக்கி இந்த படத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
இடைவேளைக்கு பிறகு படம் ரக்க கட்டி பறக்கிறது.
அந்த பிளாஸ்பேக் காட்சிகள், மிகவும் இன்றைய காலகட்டத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும், இது போன்ற சம்பவங்கள் தவறான பேர்வழிகளால் நடந்து கொண்டிருக்கிறது. என்பது உண்மை!! கதை மிகவும் மனதுக்கு நெருக்கமாக இருப்பதால், நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது உறுதி!!
.மேனேஜர் ஜேம்ஸ் மரணம், சஞ்சய் அம்மா இனியா மரணம். பவித்ரா அப்பா இன்பசேகரன் மரணம். என படம் சஸ்பென்ஸ் பாணியில் துப்பறியும் படமாக உருவாகி இருக்கிறது.
இயக்குனர்
திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன், இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இடைவேளை வரை, ஒரு சாதாரண காதல் கதை என்பது போல சஞ்சய்க்கும், நிஷாவுக்கும், காதலை காட்டி, இடைவேளைக்கு பிறகு பெரிய ஒரு முடிச்சை அவிழ்கிறார். அது திரைக்கதையின் வெற்றிக்கான உச்சம். அந்த ஃபிளாஷ் பேக் காட்சியில் இரண்டு குடும்பங்கள் என்ன ஆனது? என்பதை காட்டும் பொழுது அதிர்ச்சி ஊட்டும் தகவலாக இருக்கிறது.!! இயக்குனர் ஒரு நல்ல கதைக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். என்பது நன்றாக தெரிகிறது. அவர் இயக்கமும் நன்றாக இருக்கிறது.
நாயகன்
ரூம் பாய் படத்தின் மூலம் நிகில் , தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.
சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். கோபம், விரக்தி, எல்லாம் கலந்த முகபாவனை யுடன் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கதாநாயகன் கிடைத்திருக்கிறார்.
ஆடியோ விழாவில் நிகில், விஜய் போல இருக்கிறார் என்று பரபரப்பாக பேசினார்கள் .அது படம் பார்த்த பிறகு உண்மை தான் என்று எண்ணத் தோன்றுகிறது.
இவருக்கும் தளபதி விஜய் போல நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.
இமான் அண்ணாச்சி,
ஓரிரு காட்சிகள் வந்தாலும் கலகலப்பாக நடித்திருக்கிறார். காத்து கருப்பு, உடன் இவர் செய்யும் கலாட்டா ரசிக்க வைக்கிறது.
பிர்லா போஸ்,
நாயகன் அப்பாவாக ஜிம் மாஸ்டர் சந்திரன், கதாபாத்திரத்தில் ஒரு குடும்பத் தலைவராக நேர்த்தியாக நடித்திருக்கிறார். நல்ல மனிதராக இருந்தாலும் இந்த உலகம் கதை கட்டி, அவர்களை அழித்து விடும் என்பதற்கு இவரது கதாபாத்திரம் உதாரணம்.
காத்து கருப்பு,
பிச்சாண்டி என்ற கதாபாத்திரத்தில் நாயகனுக்கு ஏலகிரியில் வேலை வாங்கிக் கொடுக்கும் நல்ல தோழனாக வருகிறார். காமெடியில் கலகலப்பு இருந்தாலும், இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி வேண்டும் என்பது அவர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
சாதனா, கவிதா விஜயன், கற்பகம் என பலர் நடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.
இந்த படத்திற்கு வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார்.
பாடல்கள் ரசிக்க வைக்கிறது. நாயகன், அப்பா, அம்மா, தங்கையுடன் பாடும் அந்த பாடல் மிகவும் அருமையாக இருந்தது.
குடும்ப சென்டிமென்ட்டுடன் கூடிய குற்றப்புலனாய்வு திரில்லர் கதையில் இப்படம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்தது என்றே சொல்லலாம்
தொழில் நுட்ப கலைஞர்கள்
மீனாட்சி சுந்தர், படத்தொகுப்பு செய்திருக்கிறார். படம் விறுவிறுப்பாக செல்கிறது.
சி. பாரதிராஜா ஒளிப்பதிவாளராக அருமையாக பணிபுரிந்து இருக்கிறார்! காட்சிகள் ரிச் ஆக இருக்கிறது. பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
தினாவின் நடனப் பயிற்சி நன்றாக இருக்கிறது. இளமை துள்ளலாக இருக்கிறது.
கார்த்திக் வர்மனின் சண்டை பயிற்சி நன்றாக இருக்கிறது. ஹோட்டல் மேனேஜர் ஜேம்ஸ் உடன், சஞ்சய் போடும் சண்டைக் காட்சி கள், வில்லனுடன் ,சஞ்சய் போடும் சண்டைக் காட்சி அனல் தெரிக் கிறது.
சவுண்ட் டிசைன் சதீஷ் , சவுண்ட் மிக்சிங் பூபதி ராஜன் , ஒப்பனையாளராக ரத்தினகுமார் பணிபுரிந்து இருக்கிறார் .சஞ்சய், மற்றும் நாயகி களுக்கு நல்ல ஒப்பனை செய்திருக்கிறார் .
காஸ்ட்யூமர் வளையாபதி, எல்லோருக்குமே காஸ்ட்யூம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது அழகாக இருக்கிறது.
மக்கள் தொடர்பாளர் மணவைப்புவன், இந்த படத்தை மக்களிடம் நன்றாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார். நிச்சயம் இந்த படம் பேசப்படும் என்பது உறுதி!!🌷