எலைட் டாக்கீஸ் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்கத்தில் அன்புடன் அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் ‘பேட்டில்’ (‘Battle’)
திரைப்படத்தின் விமர்சனம்.
கதை களம்
கலை என்பது பொழுதுபோக்கு அல்ல, மாற்றத்தை உருவாக்கும் அரசியல் கருவி! என்ற தத்துவத்தோடு, இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று பல அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. அதே சமயம் தனியார் பள்ளிகளில், அநியாய கட்டண கொள்ளை வசூலித்து, பெற்றோர்களையும், மாணவர்களையும், துன்புறுத்துகிறார்கள் .அப்படி வசூலித்தும், சரியான ஆசிரியை நியமிக்காமல், சரியாக பாடம் நடத்தாமல், மாணவிகள் சரியான மதிப்பெண் எடுக்க விட்டால் அவர்களை மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு தற்கொலை செய்ய தூண்டுகிறார்கள். இதெல்லாம் மாற வேண்டும். ராணுவத்துக்கு 35/ சதவீதம் ஒதுக்கும் அரசு கல்விக்கு 0 2.0 என்று நிதி ஒதுக்கிறது .என்ற குற்றச்சாட்டையும் இயக்குனர் முன்வைத்துள்ளார் .
ஜென் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியராக மதி வேலை செய்து வருகிறார். (ஆராத்யா)
அதே பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் மதுமிதா சரியாக பாடம் எடுக்க ஆசிரியர் இல்லை என்று, சொல்லி மதியிடம் அழுது புலம்ப, மதி நிர்வாகத்திடம் ஆசிரியைகளை ஒன்று திரட்டி பேசி தீர்வு காண முற்படுகிறார். ஆனால் பள்ளியின் தாளாளர் கிருஷ்ணன் (சுப்பிரமணிய சிவா)
உரிமை கேட்கும் ஆசிரியைகளை மூன்று மாதம் சம்பளம் கொடுத்து விட்டு வெளியே போகச் சொல்லி உத்தரவிடுகிறார்.
இந்த நிலையில் ராப் பாடகர் ராப் மணி, வாழ்க்கையில் உயர்ந்து பெரிய லட்சியத்தை அடைய வேண்டும் என்று ராப் பாடகராக உருவெடுக்கிறார். அவர் தன் நண்பன்
வெட்டுக்கிளியுடன்
ஜாலியாக இருந்தவர் ,மதி மீது காதல் கொள்ள,
ராப் மணியின் இசையை கேட்டு குரு ,தன் குரூப்பில் சேர்த்துக் கொண்டு பெரிய அளவில் வளர்கிறார் ராப் மணி, பள்ளியில் மதிக்கு ஏற்பட்ட ஒரு அசம்பாவிதத்தால் ராப் மணி, வாழ்க்கை சீர்குலைகிறது. ராப் மணியும் ,மதியும், ரோட்டில் போகும்போது ,கார் விட்டு இருவரையும் கொல்ல ஏற்பாடு செய்கிறார் கிருஷ்ணன். இதிலிருந்து ராப் மணி மீண்டாரா? தன் லட்சியப் பயணமான லண்டன் சென்று பாட வேண்டும் என்பதை இறுதியில் ஜெயித்துக் காட்டினாரா? தன்னையும், தன் காதலியையும், கொலை செய்ய நினைத்த கிருஷ்ணனை சட்டப்படி என்ன செய்தார்? என்பது தான் மீதி கதை!!
ராப் பாடகரின் வாழ்க்கையைப் பின்னி பிணைந்து முழுக்க சென்னை பின்னணியில் நடைபெறும் இக்கதை, அந்த பாடகர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திரையில் காட்டுவதோடு ,ஒரு முக்கிய விஷயமான கல்வி பற்றி வெளிச்சம் போட்டு காட்டுகிறது .
ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை முழுக்க காட்டும் முதல் தமிழ் படம் இதுவாகும். ராப் பாடகர்கள் ஒன்று கூடும் இடத்தில் பேட்டில் என்ற நிகழ்வு நடைபெறும். அதை குறிக்கும் வகையிலும், நாயகன் எதிர்கொள்ளும் போராட்டங்களை விளக்கும் வகையிலும் இப்படத்திற்கு ‘பேட்டில்’ என்று பெயர் வைத்துள்ளார்கள்” படம், “சரியாக இரண்டு மணி நேரம் தான் விறுவிறுப்பாக போகிறது.
நாயகன்
அர்ஜுன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்,
வடசென்னை இளைஞனாக ராப் படகராக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தன்னைப் பற்றியும் தன் ஏரியாவை பற்றியும் யாராவது கிண்டல் செய்தால் பொங்கி எழுவது தன் காதலிக்கு பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சுப்பிரமணிய சிவாவை உண்டு இல்லை என்று பண்ணுவது என்று புதுமுக நாயகனாக இருந்தாலும் பொறுப்புடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகி
ஆராத்யா மிக முக்கிய வேடத்தில் கலக்கியுள்ளார்.
மதி என்ற ஆசிரியை வேளத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவி மதுமிதா நிலையைக் கண்டு கலங்குவதும் பின் அவருக்கு உதவி செய்ய நினைக்கும் பொழுது மாணவி தற்கொலை செய்து கொள்ள ஆராய்ந்தியா அழுது புலம்பி நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.
இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா
ஜென் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக கொடூர பணம் படைத்தவராக சுருட்டை புகைத்துக் கொண்டு மதியை கட்டி வைத்து அடிக்கும் பொழுது சிறந்த வில்லன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகனிடம் கல்வியின் எவ்வளவு பணம் வருகிறது என்று கணக்கு சொல்லும் பொழுது வியப்பை ஏற்படுத்துகிறது
மற்றும் சரவண சுப்பையாவும்,
ஒன்று இரண்டு காட்சிகள் வந்தாலும் படத்தின் மிகப்பெரிய பலம்.
அமைச்சராக முனீஷ்காந்தும் நடித்துள்ளார்கள்
, காயத்ரி, நாயகன் அம்மாவாக, , சுருளி, ‘இட்லி கடை’ படத்தில் சிறு வயது தனுஷ் பாத்திரத்தில் நடித்த திஹான் மற்றும் திவ்ய ஸ்ரீ உள்ளிட்டோர் ‘இப்படத்தில் முக்கிய வேடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.
ஜீவா இசையில்
பாடல் ரசிக்க வைக்கிறது.
ராவண ராம், கெபின், நிஷாந்த், கானா அப்பிலோ, சத்யபிரகாஷ் மற்றும் வைஷ்ணவி உள்ளிட்டோர் பாடல்களை பாடியுள்ளனர்.
பாடல் ரசிக்க வைக்கிறது.
முன்னணி ஒளிப்பதிவாளர் செழியனின் உதவியாளரான யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். காட்சி கள் கண்களுக்கு குளுமை, பிரபல எடிட்டர் லெனின் உதவியாளரான காமேஷ் படத்தொகுப்பை கையாண்டு இருக்கிறார் செம ஷார்ப்!!
.
.ஆர்ட் டைரக்டர்
இளஞ்செழியன்
அரங்க அமைப்புகள் அருமையாக இருக்கிறது
ஹரி பிரசாத் & ரகுமான் அமைத்த நடனம் ரசிக்க வைக்கிறது
சன்டை ஓம் பிரகாஷ்
இண்டர் வெல் பிளாக் சன்டை காட்சி அனல் தெரிக்கிறது
மற்றும் இப்படத்திற்காக உழைத்த ஒப்பனையாளர் டி .ஐ கலர் கரெக்சன், செய்தவர்கள் வி. எப். எக்ஸ் பணிபுரிந்தவர்கள், என, அனைவரும் சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள் .
இயக்குனர் நாராயணன்
தண்டகாரண்யம்’ படத்தின் உதவி எழுத்தாளராகவும் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் .
ஒரு நல்ல கதையை கருவாக்கி, அதற்கான நடிகர் நடிகைகளை உருவாக்கி, நாட்டுக்குத் தேவையான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். இன்று, தனியார் பள்ளிகள் , கட்டண கொள்ளை அடித்து, சரியான பாடம் எடுக்காமல் ,மாணவ மாணவிகளை கசக்கி பிழிந்து, அவர்களை எப்படி மன அழுத்தத்திற்கு தள்ளுகிறார்கள். என்ற ஒரு அற்புதமான படத்தை கொடுத்ததற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
மக்கள் தொடர்பாளர் திரு. நிகில் முருகன் அவர்கள்