ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ் மின் சம்பத்குமார் நடித்துள்ள ‘பிரேக் பாஸ்ட்’ (Break/Fast) திரைப்படம், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் ஏற்படும் ஈகோ, கலாச்சார மாற்றங்களை மையமாகக் கொண்ட கமர்ஷியல் காதல் திரைப்படமாக வந்துள்ளது.பத்மா கிளாசிக் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது
கதை களம்
ரிஷப், லட்சுமி இருவரும் காதலித்து ,மூன்று மாதத்தில் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு வருகிறார்கள். நீதிபதி வினோதினி, டாக்டர் கங்காதேவி யிடம் (கஸ்தூரி) கவுன்சிலிங் அனுப்புகிறார்.
கஸ்தூரி டாக்டர் மட்டுமல்ல ,சென்சார் போர்டு உறுப்பினர் என்று சொல்கிறார் நான் பார்த்த ஒரு திரைப்படத்தை உங்களுக்கு சொல்கிறேன். அதற்கு பிறகு நீங்கள் முடிவெடுங்கள். என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.
அந்த கதையில், ராணவ் ,ரோஸ்மின், சம்பத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்.
ராணவ்,ரோஸ்மின் காதலுக்கு தடையாகநாயகி அப்பா சம்பத்குமார். அவரை மீறி காதலித்து, ராணவ் ரோஸ்மின் திருமணம் செய்து கொள்ள, நன்றாக போகும் வாழ்க்கை பயணத்தில் மீண்டும் ஒரு சிக்கல், அதை மீறி வாழ்ந்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் மையப்புள்ளி.
அழகான இந்த காதல் கதையில் கிளைமாக்ஸ் ,காட்சி படம் பார்ப்பவர்களை அதிர வைத்து விடுகிறது.
தங்கள் ஈகோவால் பிரிந்து போகும் தம்பதியினர். தனக்கு பிறக்கும் குழந்தைகளை பற்றி கவலைப்படுவதில்லை .என்ற அற்புதமான கருத்தை ஆழமாக சொல்லி உள்ளார் இயக்குனர்.
இன்றைய தலைமுறை காதலில் நிலைத்து நிற்பது கடினம் என்பதையும், ராணவ், ரோஸ் மின் ஈகோ பிரிவினையை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது.: காதல் மற்றும் பிரேக்கப்பிற்கு பிறகு ஏற்படும் உணர்வுகளை இயக்குனர் நெற்றி பொட்டில் அறைந்தது போல சொல்லி இருக்கிறார்.
உறவுகளுக்கு இடையேயான சிக்கல், எதிர்பார்ப்பு, உணர்வுகள் என பலவற்றை படம் பேசியிருக்கிறது.
இந்த படம். படம் பார்ப்பவர்கள் நிச்சயம் அவர்களும் இந்தக் கதையில் மனதுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்படும். இது வெறும் படம் மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான பயணம்” திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம்.
.
நடிகர்& நடிகைகள்
ராணவ், சாந்தனு என்ற கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருக்கிறார். கிராமத்தில் இருக்கும் அப்பா, இரண்டு கிட்னியும் இழந்து போராடுவதை கண்டும் வருந்துவது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன் என்று சொல்லி சென்னையில் கிடைத்த வேலையை செய்து கொண்டு அவர்களுக்கு பணம் அனுப்பும் அந்த பொறுப்பும், குப்பை தொட்டியில் வேலை செய்த தன்னை எம்.டி ஆக்கிய காதலிக்கு விசுவாசமான கணவனாகவும்,அம்மா, அப்பா வை அவமதித்த மனைவியை தூக்கி எறிவதும் என,நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் ராணவ்.
ரோஸ்மினி,
ஜான்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பணக்கார பெண்ணின் திமிர், ஈகோ, அப்பாவை எதிர்த்து பேசும் குணம், காதலனுக்காக எல்லாவற்றையும் துறந்து விட்டு வந்து, கிராமத்து மாமியார், மாமனாரை அவரின் செயல்களை பொறுத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பொழுதும் குழந்தை பிறந்த பிறகு ,தாய்ப்பால் கூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, தாய்ப்பாலை கீழே பீச்சி விடும் அளவுக்கு ஒரு குரூரமான சிந்தனையில் இருக்கும் ஜான்வியின் கதாபாத்திரம் அதிர்ச்சி!! ரோஸ் மின் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.
சம்பத் குமார்
ராஜாராம் ,என்ற தொழிலதிபராக, தன்மகள் குப்பைத் தொட்டியில் வேலை செய்யும் ஒருவனை காதலிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத கோடீஸ்வரர் அப்பாவாக வெளுத்து வாங்கி இருக்கிறார் .அவர் நடிப்பு அவ்வளவு இயல்பாக இருந்தது
,கஸ்தூரி,
கங்காதேவி என்னும் சைக்காரிஸ்ட் டாக்டராகவும், சென்சார்போர்டு உறுப்பினராகவும், விவாகரத்து கேட்கும் இளம் தம்பதிகளை சேர்த்து வைக்கும் ஒரு தாயாகவும், கதையின் மிகப்பெரிய திருப்புமுனைய
த்தை ஏற்படுத்துகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அழுது புலம்பும் பொழுது அவர் மீது அனுதாபம் ஏற்படுகிறது.
அர்ச்சனா,
நாயகனின் அம்மாவாக லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். மருமகள் தன்னை வீட்டை விட்டு அனுப்பி விட்டாள் என்று வருத்தப்பட்டு கணவன் இறந்த பிறகு அங்கு வரும் மகனிடம், குங்குமம் பொட்டு ,மடிப் பிச்சை கேட்டேன், இப்படி அள்ளிக் கொட்டிட்டியேப்பா!! என்று அழுது புலம்பும் பொழுது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கார்த்திக் மோகன்,
ரிஷப், என்ற கதாபாத்திரத்தில் இளமை துள்ளும் நடிப்பால், காதலியுடன் சண்டை, சச்சரவு என்று அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
அமிர்தா ரங்கநாத்.
லட்சுமி, என்ற கதாபாத்திரத்தில் கோபக்கார பெண்ணாக படம் முழுக்க வந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் தன் தாய் யார் !!என்று தெரிந்த பிறகு கோபமும், அழுகையும் ,பொங்க அவர் மடியில் சாயும் அழகு அற்புதம்.
ரவி மரியா கிருஷ்ணமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க கலகலப்பை ஏற்படுத்துகிறார்
இயக்குனர் ரங்கநாதன் நாயகனின் அப்பாவாக இரண்டு கிட்னியை இழந்து விட்டு பரிதாபமான தோற்றத்தில் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்றும் நாயகியின் சித்தி, ஜான்வின் தோழி மருத்துவர் ராஜு, என்ன பலரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
தொழில் நுட்ப கலைஞர்கள்
காந்தி கிருஷ்ணா, கதை ,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். பிரம்மாண்ட படங்களுக்கு ,கதை வசனம், எழுதிய இவர் இன்று இளைய தலைமுறையினர் கொண்டாடும் வகையில் இந்த படத்தை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
கிளைமாக்ஸ் காட்சியில் எல்லோருடைய கண்களையும் குளமாக்கி விடுகிறார். இளம் தம்பதிகள் பிரிவு, ஒரு பெரும் துயரம் என்பதை இந்த படத்தில் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.
இயக்குனர் பார்வையில்….
பெண் தன் காதலனிடம் அதிக பாசத்தை வெளிப்படுத்துவதற்கு காரணம் அன்பு
அடிமைகள் அன்பு செலுத்துவதற்கும், சுதந்திரமானவர்கள் அன்பு செலுத்துவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அடிமைகளின் அன்பு, நிறைய எச்சரிக்கை, ஏக்கம், எதிர்பார்ப்புடன் வரும். படத்தில் ஜான்வி காதல் வயப்படும் போது சாந்தனுவிடம் சொல்வதை கவனிப்போம். அப்பாவிடம் சண்டையிட்டுக் கொண்டு வெளியேறும் ஜான் விக்கு,சாந்தனு சொல்லும் அவர் அப்பா பற்றி காட்சிகள் சூப்பர்!!
இப்படி படம் முழுக்க நெகிழ வைக்கும் காட்சிகள் ஏராளம்!!
தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ்,
ஒரு நல்ல படத்தை கொடுத்த தற்கு பாராட்டுக்கள், ஜி.வி. பிரகாஷ் குமார், இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பாடல் வரிகள்: முத்து முத்தாக கவியரசு வைரமுத்து மற்றும் விவேக், எழுதி இருக்கிறார்கள்.
தமிழ்நாடு திரையரங்க விநியோகஸ்தர்: குகன் வெளியிடுகிறார் பலவெற்றிபடங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த படமும் அவருக்கு வெற்றியாக அமையும்.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவாளர் .வி. பன்னீர்செல்வம் தான் அவரின் ஒளிப்பதிவு. காட்சிகள் ரிச் “ஆக இருக்கிறது. நாயகியின் வீடு, அந்த ஆஸ்திரேலியா பாடல், என ஒவ்வொரு காட்சியும், கண்ணுக்குள் குளுமையை தருகிறது .
பாஸ்கர் சுஜீத்தின்,படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது .
ஆர்.கே.நாகு ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் நாயகியின் வீடு, அவரது அலுவலகம், மற்றும் எல்லா காட்சிகளிலும் அவரின் கைவண்ணம் நன்றாக தெரிகிறது.
சன்டை பயிற்சி ஸ்ரீதர் அமைத்துள்ளார் ஒரு சண்டைக் காட்சிதான் என்றாலும், அது சிறப்பாக இருக்கிறது.
கலரிஸ்ட் ஜி எஸ் முத்து. சவுண்ட் டிசைன் லட்சுமி நாராயணன் மற்றும் இந்த படத்திற்கு பணிபுரிந்த ஒப்பனையாளர்கள். ஆடை வடிவமைப்பாளர்கள்வி எஃப் எக்ஸ் பணி புரிந்தவர்கள், உதவி இயக்குனர்கள், என அனைவரும் இந்த வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள்
மக்கள் தொடர்பாளர்கள் திரு .சுரேஷ் சந்திரா அவர்கள் திரு .அப்துல் நாசர் அவர்கள் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்: