கரா”திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

Produced by Dr. Ishari K. Ganesh under his banner Vels Film International,Co Produced By: Kushmitha Ganesh

தமிழ் திரையுலகில் திறமைமிகு நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் இந்த ஆண்டில் நடித்திருக்கும் பெரிய படம், ‘கர’. இந்த படத்தை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிரார். கர திரைப்படம், ஆக்‌ஷன் – த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். இவர், இதற்கு முன்னர் இல்லாத ஒரு கதாப்பாத்திரத்தில் மமிதா நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரங்களில் கருணாஸ், ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

கர”வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்”கிளாசிக் சினிமாவின்” வாழ்த்துக்கள்.

கதை களம்

கர) படம் ஒரு கிராமத்து பின்னணியில் உருவான, மாஸ்-ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி கலந்த கதை படம் ,ஒரு சாதாரண மனிதன் எப்படி சூழ்நிலைகளால் மாற்றம் அடைகிறான். அவன் திருட வேண்டிய அவசியம் என்ன? வங்கி கொள்ளை, கதையின் மையமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் பகுதி நல்ல எமோஷனலாக இருக்கிறது. தனுஷ், ப்ரித்வி இரண்டு பேருமே படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு MLA வீட்டை திருட செல்கின்றனர். அதில் தனுஷ் மட்டும் மாட்டுகிறார், அவர் மாட்டும் ஸ்டேஷனில் உயர் அதிகாரியாக இருக்கும் சுராஜ் தனுஷ் மீது நிறைய கேஸ்களை போட்டு தனக்கு பப்ளிச்சிட்டி கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார்.
அந்த காட்சிகள் செம விறுவிறுப்பு!!

இதையடுத்து, தனுஷ் சுராஜை அடித்து, அங்கிருந்து தப்பிச் செல்ல, ரேணிகுண்டா சென்று மமிதா பைஜுவுடன் வாழ்ந்து வருகிறார், ஆனால் கஷ்டம் அவரை விட்டு வைக்கவில்லை, இதனால் மெஸ் ஆரம்பிக்க முடிவு செய்கிறார்.
அந்த ஹோட்டல் காட்சி, இளமையும் அழகும் நிறைந்த காட்சிகளாக இருக்கிறது.

கிள்ளியூரான, தன் சொந்த ஊருக்கு வந்து தன் அப்பா கே. எஸ் .ரவிகுமாரிடம் நிலத்தை விற்று பணத்தை கேட்கிறார் . அங்கு தான் கதை, திரைக்கதை, அடுத்த கட்ட பாய்ச்சல் பாய, பிறகு தான் தெரிகிறது, அவரே நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து தான் ட்ராக்டர் வாங்கியுள்ளார் என்பது.

ஒரு கட்டத்தில் வாங்கிய கடனுக்காக நிலத்தை பேங்க் ஜப்தி செய்ய, கே எஸ் ரவிகுமார் இறந்து போக, தன் அப்பாவை தன்னுடைய நிலத்தில் அடக்கம் செய்ய வங்கி மறுக்க, இப்படி எல்லா திசைகளிலும் தனுஷை சூழ்நிலைகள் நெருக்க, பிறகு தனுஷ் இறந்து போன அப்பாவை, ஜப்தி செய்த நிலத்தில் அடக்கம் செய்தாரா?

நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கிய ஏழை மக்கள் நிலை என்ன ஆனது? தன்னை நம்பி வந்த மமிதாபைஜ்ஜை கரை சேர்த்தாரா? சுராஜின் தேடலிருந்து தனுஷ் எப்படி தப்பித்தார் ? மக்கள் நாயகனாக மக்களுக்காக போராடும் தனுஷ், சட்டத்தின் பிடியில் சிக்கினாரா? என்பதையும் , தற்போது நடக்கும் போர் !!அதன் விளைவுகளை 1990 களிலேயே மக்கள் சந்தித்தது, படிப்பறிவு இல்லாத மக்களை எப்படி லோன் கொடுப்பவர்கள் ஏமாற்றுகிறார்கள்,
என்பதையும் தேவர் மகன் படத்தின் ஷுட்டிங்கை காட்டிய விதம் அருமை!!1990-ல் நடக்கும் கதை. இது வெறும் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான கதை ஆழமாக அலசியது விக்னேஷ் ராஜா ஆல்பர்ட் பிரகாஷ் கதை, திரைக்கதையில், இந்தப் படம், தாக்கம் ராமநாதபுரம் வறுமையில் வாழும், ஏழை விவசாயிகள் கண்ணீரையும், அவர்களை வங்கி எப்படி ஏமாற்றி, அவர்கள் சொத்துகளை ஜப்தி செய்கிறது என்பதையும், உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறது.

கர ” சினிமா வெறும் பொழுதுபோக்கல்ல! சமுதாயத்தை பழுது பார்க்கும்கருவி என்று அவர் எடுத்திருக்கும் முயற்சிக்கு நமது பாராட்டுக்கள்!!

நாயகன் தனுஷ்

– Dhanush க்கு இந்த படம், சாதாரண மாஸ் படம் இல்ல; சமூக கருத்து, எமோஷன், ரியலிஸம் எல்லாம் கலந்த ஒரு சக்திவாய்ந்த திரைப்படம். அதில் அம்சமாக பொருந்தி இருக்கிறார் 🎬 வங்கி, குடும்பம், நிலம் மற்றும் அடக்குமுறையால் வறுமையில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் தான் கதையின் மையம். திருடி விட்டு, தப்பித்துஓடும் சூழ்நிலை உருவாக, 👉 இது சாதாரண ஸ்டோரி மாதிரி தோன்றினாலும், வங்கி கொள்ளையை எதிராக பேசி இருக்கிறார் தனுஷ். ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .

(Performance)

Dhanush – இந்த படத்தோட முக்கிய பலம் இளமைக்கும், வயதான அப்பாவுக்கும் பிரச்சனை பணம். அதை உள் வாங்கி அசத்தியிருக்கிறார். எமோஷன் + கோபம் + அமைதி – எல்லாத்தையும் balance பண்ணி நடித்திருக்கிறார்.
சமூக அக்கறையோடு கமர்சியல் என்டர்டைன்மென்ட் எமோஷனல் கலந்து தனுஷ் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.வாழ்த்துக்கள்சார்🌷 சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி போய், வாழ்க்கையிலும் ஜெயிக்காமல், தவறான வழியில் சம்பாதித்து பிழைப்பை ஓட்டி, மீண்டும் தன் அப்பாவிடமே வந்து நின்று கலங்குவது, பிறகு தன் அப்பா இறந்து போக அவருக்காக களத்தில் இறங்குவது என வழக்கம் போல எமோஷ்னல், ஆக்‌ஷன் என கலக்கியுள்ளார்.
சன்டை காட்சி அனல் பறக்கும் வகையில் கடுமையான உழைப்பை கொடுத்து இருக்கிறார்.

படம் முழுக்க ராமநாதபுரம் மக்கள் வாழ்க்கை, அவர்கள் வலியை பதிவு செய்து இருக்கிறார். கருப்பு சாமி நீ தான் காப்பாற்ற வேண்டும் .என்று சொல்லி, தொழில் தொடங்கும் போது தனுஷ் தனது ரோலில் நன்றாக பொருந்துகிறார். குறிப்பாக ஆக்ஷன், மற்றும் சென்டிமெண்ட், சீன்களில் அவரது நடிப்பு பாராட்டத்தக்கது.

மமிதா பைஜ்மிகவும் இயல்பான நடிப்பு ரியலிஸ்டிக்கா நடித்திருக்கிறார் தனுஷ் திருடி விட்டு வந்த பிறகு ,அவரை அடித்து விட்டு அழும் காட்சி சூப்பர்!!

கே.எஸ் ரவி குமார்

பட்டாளத்தார் கந்தசாமி, கதாபாத்திரத்தில் கே .எஸ். ரவிக்குமார் வெளுத்து வாங்கி இருக்கிறார். அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் அட அவர் தானா!! இது என்பது போல் தனுஷ் தந்தையாக அத்தனை யதார்த்தம்,
படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அவர் நடிப்பு பலம் .

கருணாஸ்

காசி ,என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மனிதர் என்பதால் அச்சு அசலாக பொருந்தி இருக்கிறார்.

ப்ரித்வி, சிறப்பான நடிப்பை தந்துள்ளார்

சுராஜ் எப்படா நீ மாட்டுவா !!என பல வருடம் காத்திருந்து தனுஷை பிடிக்க அவரும் களம் இறங்கும் காட்சி சூப்பர் ஸ்டோரி டெல்லிங்.
அவரின் ஆட்டம். அவர் வரும் காட்சிகளில் ,செம ஸ்பீடு !!அவர் நடிப்பு ரசிக்க வைக்கிறது. பத்திரிகையில் தன்னுடைய பெயர் வர வேண்டும், என்று அவர் ஏக்கம் கிளைமாக்ஸில் அவர் சொல்லும் உபதேசம் .என படம் முழுக்க அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.

ஆடுகளம் நரேன் வரும் காட்சி எல்லாம் சூப்பர் காட்சி ,விசில் பறக்கும் சீன்கள் .

இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து பேங்க் கொள்ளைஅடிப்பவராக, ஜெயராம் முத்து செல்வன், என்கிற சீனியர் மேனேஜர் கதாபாத்திரத்தில்
சிறப்பாக செய்திருக்கிறார் , எம் எஸ் பாஸ்கர் வரும் காட்சிகள் நெகிழ வைக்கிறது.

ஸ்ரீஜா ரவி தனுஷ் அம்மாவாக, கிராமத்தில் வாழும் ஏழை தாய் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

கதை, வசனம் ,எழுதி இயக்கி இருக்கிறார் விக்னேஷ் ராஜா அவருடன் சேர்ந்து எழுதி இருக்கிறார் ஆல்பர்ட் பிரகாஷ் பலமான புள்ளிகள் (Positives). ரியலிஸ்டிக் & பவர்‌ஃபுல் கதை தனுஷ் career-best performance ஆகவும் சமூக கருத்து (caste, oppression) கொடுத்து இருக்கிறார் . கிளைமாக்ஸ் முடித்த விதம் சூப்பர்!! தனுஷ் வங்கியில் கொள்ளை அடிக்கும் போது ,எப்படியாவது மாட்ட போகிறார் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அவரை தப்பிக்க வைப்பது இயக்குனர் சாமர்த்தியம்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையில், பாடல்கள் தேனாக இனிக்கிறது. பின்னணி, இசை பலம்.

தேனி ஈஸ்வரர் ஒளிப்பதிவு ராமநாதபுரத்து மக்களின் வறட்சி, மற்றும் விவசாயிகள் படும் வேதனை, என்று மண்ணையும் சேர்ந்து படம் பிடித்திருக்கிறது. கிராமத்து லொகேஷன், சினிமாட்டோகிராபி ரொம்ப ரியலிஸ்டிக் ஆக்ஷன் சீன்கள் ரா & நேச்சுரல் feel கொடுக்கிறது கேமரா. டெக்னிக்கலாக கேமரா ஒர்க் 1990-ல் நடப்பது என்பதால் செட் பல காட்சிகள் என்றாலும், அதை ரியல் ஆக படக் பிடித்து காட்டியுள்ளனர்.

ஸ்ரீஜித் சாரங், படத்தொகுப்பு எல்லா இடத்திலும் படத்தை ரசிக்கும் வண்ணம் செதுக்கியிருக்கிறார்.படம் ஆரம்பித்த 45 நிமிடம் கதைக்கு தேவை யான பரபரப்பை கொடுத்து இருக்கிறார்.

மாய பாண்டியனின் ஆர்ட் டைரக்டர் பணி, பஞ்சவன் யூனியன் பேங்க், மற்றும் தனுஷ் வீடு, தனுஷ் வேலை செய்யும் ஓட்டல், என்று எல்லா இடங்களிலும் கைவண்ணம் பளிச்சிடுகிறது.

தினேஷ் காசியின், ஆக்சன் காட்சிகள் அசத்தல் ரகம். பேங்கில் போடும் சண்டை காட்சிகள். ஆரம்பத்தில் வரும் சண்டைக் காட்சி. கிளைமாக்ஸ் காட்சிகளில் சண்டைக் காட்சிகள் அனல் தெரிக்கிறது.
காஸ்ட்யூம் டிசைனராக, தினேஷ் மனோகரன், பணிபுரிந்து இருக்கிறார்.மற்றும்காவ்யா ஸ்ரீராம் பணிபுரிந்து இருக்கிறார்கள்.

காஸ்ட்யூமர் :நாகு.
ஒப்பனையாளராக ராஜ் .
ஸ்பெஷல் ஒப்பனை
ரோனக்ஸ் சேவியர் .
சவுண்ட் டிசைன்
சச்சின் சுதாகரன். மற்றும் ஹரிஹரன்.
பாடல்கள்: யுகபாரதி மற்றும் உமா தேவி,
பொயட் தனுஷ் .
அருண் ராஜா காமராஜ்.கார்த்திக் நேத்தா,அறிவு

VFX: AJAX
VFX Supervisor: Praveen D
DI: Prasad, Knack Studios
Colorist: Prasad

மக்கள் தொடர்பாளர்கள் : Riaz K Ahmed, Sathish (AIM)&Siva

மொத்தத்தில் இந்த கரசாமி”ஏழைகளின் வணங்கும்”குல சாமி”

Comments (0)
Add Comment