வி.ஜி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் என்.வெங்கடேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ரித்விக்கா ஸ்ரேயா நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி கலைஞர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நரேஷ் மற்றும் விஜய் இசையமைத்துள்ளனர். ராஜேந்திரன் படத்தொகுப்பு செய்ய, அசால்டு மதுரா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். பவர் சிவா நடனக் காட்சிகளை வடிவமைக்க, கலைக்குமார் மற்றும் ஜி.சரவணன் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 18 ஆம் தேதி மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க பொருளாளர் பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன், சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிச்செல்வன், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் என்.வெங்கடேஷன் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “பத்திரிகை, ஊடகத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. நான் பல கதைகள் கேட்டேன், அதில் மணிகண்டன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விசாரணை கைதி என்ற தலைப்பை நான் தான் வைத்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும். எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து, வருக வருக என வரவேற்கிறேன்.” என்றார்.
.படத்தின் கதாநாயகன் உன்னி கிருஷ்ணன் பேசுகையில், “அனைவருக்கும் மாலை வணக்கம், இந்த விழாவுக்கு வந்திருக்கும் பேரரசு சாருக்கு என் மனமார்ந்த நன்றி. திருப்பாச்சி-யில் இருந்து அவரது படங்களை பார்த்து வியந்திருக்கிறேன், அவர் இந்த விழாவுக்கு வந்ததில் எனக்கு சந்தோஷம். சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் சாரை பிடிக்கவே ரொம்ப கஷ்ட்டப்பட்டோம், அவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. நடிகர் மாஸ்டர் மகேந்திரனுக்கு என் மனமார்ந்த நன்றி. யுடியூபையே கலக்கிக் கொண்டிருக்கும் கூல் சுரேஷ் வந்த உடன் விழா கலைக்கட்டி விட்டது. நம்ம கொடுக்கும் கண்டெண்டை பேச மாட்டார், வேறு ஒரு கண்டெண்டை பேசுவார். அவர் வந்ததும் மகிழ்ச்சி. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அசால்டு மதுரை சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். படத்தின் கேமரா பணியும் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது.
படத்தின் கதாநாயகி ரித்விக்கா ஸ்ரேயா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழ் அதிகம் பேச மாட்டேன், தவறு இருந்தால் மன்னிக்கவும். எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் வெங்கடேஷன் சார் மற்றும் இயக்குநர் மணிகண்டன் சாருக்கு நன்றி. உன்னி சொன்னது போல் தான், இயக்குநர் மணிகண்டன் சார் ரொம்பவே அமைதியானவர், யாரையும் திட்ட மாட்டார். யாராவது தவறு செய்தால் கூட பரவாயில்லை, மறுபடியும் பண்ணுங்க பண்ணுங்க, என்று சொல்லி ஊக்கம் கொடுப்பார். எனக்கு இது இரண்டாவது படம், ஸ்டண்ட் வராது ஆனால் என்னை வைத்து சண்டைக்காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்கள். நான் பயத்துடன் தான் கிரவுண்டில் நின்றேன், அப்போது மதுரா சார் வந்தார், பயப்படாதீங்க, உங்களால் முடியும், என்று சொல்லி என்னை ஸ்டண்ட் பண்ண வைத்தார். ஸ்டண்ட் காட்சிகள் மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் வெளியாகும் போது திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். கேமரா மேன் சார் என்னை அழகாக காட்டியிருக்கிறார். என்னுடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் நன்றாக இருக்கிறது, அவருக்கு நன்றி. உன்னி உள்ளிட்ட என் உடன் நடித்த சக நடிகர்களுக்கு நன்றி. தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி. பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்னை இந்த துறைக்கு வர அனுமதித்த என் பெற்றோர்களுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி.” என்றார்.
பி.ஆர்.ஓ கார்த்தி அழைத்து தான் இங்கே வந்தேன், சிறந்த மனிதர், அனைத்து படங்களும் ஓட வேண்டும் என்று நினைப்பவர். இங்கே வந்தது மகிழ்ச்சி, நன்றி.” என்றார்.
மகேந்திரன் சார், கூல் சுரேஷ் சார் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் சாருக்கு நன்றி, காலம் முழுவதும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். நாயகன் உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.” என்றார்.