தயாரிப்பு:
🌸வ்ரிதி சினிமாஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனர்களின் கீழ் வெங்கட் சதீஷ் கிலாரு தயாரித்துள்ளார்
🔥18000 கிராமங்களில், அடையாளம் இல்லாமல் மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .
அப்படி ஒரு
மலை கிராமத்தில் வாழும் பெத்தி, (ராம்சரண்) தனது ஊர் ஆட்களுடன் சர்க்கரை ஆலையில் வேலை பார்க்கிறார். அதே சமயம், விஜயநகரத்தின் செல்வாக்கு மிகுந்த ராம்புஜ்ஜியின் (திவ்யந்து) கிரிக்கெட் அணியில் விளையாடி 🌚வெற்றிகளை பெற்று தருகிறார்.👍
🪩அவர் வேலை பார்க்கும் ஆலையில், ராம்சரணின் ஊர் மக்களுக்கு மட்டும் அரைக்கூலி தான் தருகிறார் ஜான்விஜய். அதற்கு காரணமாக அவர் கூறுவது உங்களுக்கு என்று ஒரு அடையாளமே இல்லை என்பது தான்.
அச்சியம்மா (ஜான்வி கபூர்)
அவர் அப்பாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது அவருடைய உடைகளை உருவி அவமானப்படுத்துகிறார், திவ்யந்து
அதை தட்டி கேட்ட பெத்தியை
கிரிக்கெட் ஆடுகளத்தில் அவமானப்படுத்தப்படுகிறார் .
🌚குஸ்தி வாத்தியாரான கௌர்நாயுடுவிடம் சென்று பயிற்சி பெறுகிறார் பெத்தி. அதன் மூலம் அவர் எப்படி தனது ஊருக்கு அடையாளத்தைப் பெற்றுத் தந்தார் என்பதே மீதிக்கதை.
🌍”ராம் சரணின் சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தை தூக்கி நிறுத்துகின்றன;
பலம் 👍
ராம் சரணின் நடிப்பு மற்றும் உடல் மாற்றம் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். �
விளையாட்டு பின்னணி, கிராமத்து உணர்வு, மாஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. �
A. R. Rahman இசை மற்றும் பின்னணி இசைக்கு பாராட்டு கிடைத்துள்ளது. �
Janhvi Kapoor கதாபாத்திரம் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை
துணை நடிகர்கள் பலர் முழுமையாக கடுமையாக உழைத்திருக்கிறார்கள்
மாஸ், விளையாட்டு, உணர்ச்சி கலந்த ராம் சரண் ரசிகர்களுக்கான படம். ராம் சரணின் நடிப்புக்காக நிச்சயம் வெற்றி பேசப்படும்👍
👑உப்பெனா’ படத்திற்குப் பிறகு புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
வீரம் எமோஷனல் நாட்டுப்பற்று விளையாட்டு என்று கலந்து கட்டி படத்தை இயக்கி இருக்கிறார்
மலைவாழ் மக்களின் பக்கம் நின்று நியாயத்தை பேசி இருக்கிறார் அதற்கு பிரபல ஸ்டார், ராம்சரண் குரல் ஓங்கி ஒலிக்க வைத்திருக்கிறார். இப்படி ஒரு நல்ல கதையை தேர்வு செய்வதற்காக இயக்குனருக்கு வாழ்த்துக்கள்👍
😎 ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.
படம் முழுக்க கவர்ச்சியும், ஆண்களை வசைபடுவதும், வில்லன்களை நேருக்கு நேர் சமாளிப்பது ,என்று ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட விருந்து அளித்திருக்கிறார்.
🔥சிவ ராஜ்குமார்,
கௌரவ நாயுடு என்ற கதாபாத்திரத்தில் கம்பீரமாக வருகிறார் .குஸ்தி வாத்தியாரக ,
ராம்சரண் இடம் பெத்தி இருக்கியா? போறியா ?என்று கண்டிஷன் போடும் காட்சிகளில் அப்படி ரசிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் கட்சியில் ராம் சரண் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறும் பொழுது அவர் உருகி நடித்திருப்பது பாராட்டுக்குரியது 👍
🍩ஜெகபதி பாபு,
மலைவாழ் மக்கள் ரயிலில் செல்ல வேண்டும் அவர்களுக்கு ஒரு போக்குவரத்து வேண்டும் என்பதற்காக 30 வருடமாக சிவப்பு கொடியை ரயில் முன் காட்டிவிட்டு, அதே ரயிலில் அவர் அடிபட்டு சாவது, உறுக்கம் .அவர் இறந்த பிறகு கதை செம சூடு பிடிக்கிறது🔥 முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறார் ஜகபதிபாபு.
மற்றும்
திவ்யேந்து சர்மா, தாரக் பொன்னப்பா, ரவி கிஷன் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
அனைவர் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.
ஒரு கிராமத்து எமோஷனல் டிராமாவையும்,
ஸ்போர்ட்ஸையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? ராம் சரண் ஈர்த்தாரா?
ராம்சரண் கடுமையான உழைப்புக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்
படத்தின் ஹை லைட்
.
🌸சாதி , பெயரால் நடக்கும் அவமானம்
எமோஷனல் 🌚
🌍 பெத்தி பங்கு பெறும் மல்யுத்தப் போட்டி.
🥵சாலை வசதி இல்லாத மலைக்கிராமம். சாலை, போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் கஷ்டப்படுவது
🥵தங்கள் ஊருக்கு அங்கீகாரம் கிடைக்கவும், ரயில் நிலையம் வரவும் கடந்த முப்பது ஆண்டுகளாக போராடுவது.
😨ரயில் நிற்கவில்லை. என்று ஒரு எம்.எல்.ஏ-விடம் அவருக்குக் கொடூரமான அவமானம் ஏற்படுவது
. 😭இதனால், ரயில் தண்டவாளத்தில் விழுந்து உயிரை விடுவது
😎 பெத்தி ஓட்டப்பந்தயத்திற்கு மாறும்காட்சி
🌍 1990-2020 காலகட்டத்தில் நடக்கும் கதை
அதை அப்படியே படம் பிடித்து இருப்பது
🪩 ஒலிம்பிக்கில் இந்தியா பின்தங்குவதும், உள்ளூர் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதும், அதில் பெத்தியின் பெயர் பரிந்துரைக்கப்படுவதும் என காட்சி கள் ரசிகர்களை தியேட்டரில் கைதட்டல் வாங்குகிறது
👍க்ளைமாக்ஸ் மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது. கடைசி அரை மணி நேரம் விறுவிறுப்பாக நகர்கிறது.
😎ஸ்ருதி ஹாசன் ஒரு சிறப்பு பாடலுக்கு ஆடியுள்ளார்.செம
👍 பின்னணி இசை வழக்கம்போல உள்ளது. இது ஏ.ஆர். ரஹ்மானின் டாப் கிளாஸ் இசை.
🌸 ரத்னவேலுவின் ஒளிப்பதிவு அருமை. அந்தக் காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளார்.
விஜயநகரம் காட்டுப் பகுதிக்கு அருகே உள்ள ஒரு மலைக் கிராமம்
ஒளிப்பதிவாளர் கை வண்ணத்தால் அந்த பள்ளத்தாக்கு கதைக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது அதை அருமையாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்👍
🌸 எடிட்டர் நவீன் நூலி
இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம்
👑வசனங்கள் நன்றாக உள்ளன.
இயக்குனர் புச்சி பாபு சனா ஒரு நல்ல கதையை எழுதியிருக்கிறார் அதை இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றவாறு விறுவிறுப்பாகக் கொண்டு செண்டுள்ளார் ராம் சரணிடம் இருந்து ஒரு சிறந்த நடிப்பை வாங்கியதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தயாரிப்பாளர்கள் படத்திற்கு தாராளமாக செலவு செய்துள்ளனர். கதையை எளிதாக யூகிக்க முடிந்தாலும், உணர்ச்சிகரமான காட்சிகள் உங்களைக் கட்டிப்போடும். ராம் சரணின் நடிப்புக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.👍
🌸மொத்தத்தில் இந்த பெத்தி மலைவாழ் மக்களின் கடவுளாக கருதப்படுபவன்🌸 விளையாட்டுப் போட்டிகளில் தன்னம்பிக்கை நிறைந்தவன்👍 சவால் விட்டு வெற்றி பெறும் வெற்றிக்கு சிறப்பான மகுடம்👑 காத்திருக்கிறது.