🌸வள்ளுவன் ஒரு கிரைம்–மிஸ்டரி–ஆக்ஷன் த்ரில்லர்.
திரைப்படம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுகொள்ளாமல் விட்ட ஒரு காவல் துறை அதிகாரி, ஆளுங்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர், அநியாயத்துக்கு துணை போன வழக்கறிஞர், இவர்கள்
தொடர்ச்சியாக
கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையைத் தேடும் விசாரணையே படத்தின் மையக்கதை. விசாரணை முன்னேறும்போது எதிர்பாராத சதிகளும் திருப்பங்களும் வெளியாகின்றன. �
👍 பலம்
முதல் பாதியில் மர்மத்தை நன்றாக உருவாக்குகிறது.
குற்றவிசாரணை காட்சிகள் சுவாரஸ்யமாக நகர்கின்றன.
பின்னணி இசையும், ஒளிப்பதிவும், த்ரில்லர் உணர்வை உயர்த்துகின்றன.
கிளைமாக்ஸில் வரும் சில திருப்பங்கள் ரசிகர்களை
வியப்பில் ஆழ்த்துகிறத
:திரைக்கதை: முதல் பாதியில் வரும் திருப்பங்களும், இரண்டாம் பாதியில் உள்ள எதிர்பார்ப்பும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கிறது குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மர்ம முடிச்சினை அவிழ்க்கும் .சமூக விழிப்புணர்வு:மிக்க பெண்களுக்குஎதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய
கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது
🌸 சேத்தன் சீனு வெற்றி, என்ற கதாபாத்திரத்தில் தங்கைக்காகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் போராடும் கதாபாத்திரத்தில், துடிப்பாகவும், சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.
🌸ஆஷ்னா ஜாவேரி
சுகன்யா, என்ற கதாபாத்திரத்தில் முதியோர் காப்பகத்தில் இருக்கும் வயதானவரிடம் அன்பு காட்டுவது நல்ல விஷயங்களைக் உதவி செய்யும் கதாபாத்திரத்தில் கிளைமாக்ஸ் கட்சியில், இவர் செய்யும் செயல் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
மறைந்த காமெடி நடிகர், இயக்குனர் மனோபாலா அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார்.
சாய் தீனா, மாவட்ட செயலாளர் கொலை செய்ததற்காக பிரேம்குமாரால்கைது செய்யப்பட்டு சிறையில் , உதை வாங்கும் காட்சி கலகலப்பு.
பிரேம் குமார், தொடர்கலைகளை கண்டுபிடிக்க வரும் சிறப்பு காவல் துறை அதிகாரியாக வந்து இடைவேளைக்கு பிறகு கதையில் விறுவிறுப்பை பரபரப்பை கூட்டுகிறார்.
மீசை ராஜேந்திரன் காவல்துறை மேலதிகாரியாக வந்து கம்பீரத்தை காட்டுகிறார்.
கராத்தே ராஜன், அநியாயம் செய்யும் வழக்கறிஞராக வந்து நீதிபதியை பணத்தால் வாங்கி விடலாம் என்று நியாயத்துக்கு எதிராக நிற்கிறார்.
🌸Banner : Aarupadai Productions
Producer : Shylekumar Rajendran
Co- Producers : V. Balachandar, Nanjunde Gowda, Satish Rajendran
🔥கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சங்கர் சாரதி சட்டத்தில் எவ்வளவு ஓட்டைகள் இருக்கிறது .அதை வைத்து பணம் படைத்த பெரிய மனிதர்கள் பாலியல் குற்றங்கள் செய்து எப்படி தப்பிக்கிறார்கள் அதனால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் எப்படி அவர்களை பழி வாங்குகிறான் என்பதை விறுவிறுப்போடு பரபரப்பாக இன்றைய தேவைக்கு ஏற்ப கதையை சொல்லி படத்தை மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார்.
🔥சான் லோகேஷ் படத்தொகுப்பு பரபரப்பாக விறுவிறுப்பாக செதுக்கியிருக்கிறார்.
🔥சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும், கச்சிதமாக இருக்கிறது. கேமரா கோணங்கள் ரசிக்க வைக்கிறது.
🔥அஸ்வத் இசையில், பின்னணி இசை மிரட்டல் ஆகவும், பாடல் காட்சிகள் இளம் தென்றலாகவும் மனதை வருடுகிறது.
🔥சரவணா அபிராமன், ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார். முதியோர் இல்லம். மற்றும் நாயகன் வீடு, காவல்துறை அரங்கம் ,என எல்லாம் கச்சிதமாக இருக்கிறது.
🔥DI : Whitee Lottus
Sound Design – SRJ Sooraj
Audiography – Tharanipathy Dftech
🌸பாடல்களை மெட்ராஸ் மீரான் ,
சங்கர் சாரதி,
சங்கவி, மாரி சுரேஷ் எழுதியிருக்கிறார்கள் பாடல்கள் ரசிக்க வைக்கிறது
🔥நடனம் அர்ச்சனா ராம், தஸ்தா சிறப்பாக நடனமாட வைத்திருக்கிறார்கள்.
🔥சதீஷ்குமாரின் சண்டை பயிற்சி அனல் தெரிக்கிறது.
🔥Production Supervisor : M Baskar
Manager : Mariyappan
Publicity Designs : Sathish J
Stills : M Cheenu
PRO : Manavai puvan
🌸என ஒரு பெரிய டீம் இந்த படத்துக்காக உழைத்து இருக்கிறது. நிச்சயம் மக்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை