🌸அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ள ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம் “டபுள் ஆக்குபன்சி,
வித்தியாசமான கோணத்தில், கதை களம், படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கிறது.
: கதை களம்
டபுள் ஆக்குபன்சி ஒரு வழக்கமான காதல் படம் அல்ல. பகலில் ஒரு பெண்ணாகவும், இரவில் ஒரு ஆணாகவும் ,ஒரே உடலில் இரண்டு ஆன்மாக்கள் வாழும் வித்தியாசமான ஃபேண்டஸி கதையை மையமாகக் கொண்டு நகர்கிறது. இந்த புதுமையான கருத்தே படத்தின் மிகப்பெரிய பலம்.
காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த டபுள் ஆக்குபன்சி, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.
சுவாரஸ்யமான கதைக்களம், திறமையான நட்சத்திர பட்டாளம் மற்றும் சிறப்பான திரைக்கதையுடன், டபுள் ஆக்குபன்சி
படம் முழுக்க கலகலப்பாகவும் ,
காமெடியாகவும், தமிழ் சினிமா இதுவரை காணாத ஒரு ஜானர் காலடி எடுத்து வைக்கிறது.
ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்துக் கொண்டு அதை எவ்வளவு விறுவிறுப்பாக கொடுக்க முடியுமோ அந்தளவு விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண் ரஜினியாகவும், மாலை 6:00 மணி முதல் அதிகாலை ஆறு மணி வரை ஆண் ரஜினியாகவும் மாறி மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தின் சுவாரசியம் குறையாமல் கொடுக்கப்பட்டிருப்பது படத்திற்கு பெரும்பலம்.
இந்தத் திரைப்படத்தில் நாயகனாக சந்தோஷும் நாயகியாக ரேஷ்மாவும் நடித்துள்ளனர். ஆண் ரஜினியாக வரும் சந்தோஷ் துள்ளல் மிகுந்த நடிப்பால் கவனம் இருக்கிறார். அவருடைய கட்டுக்கோப்பான உடலும், காதல் ரசனைமிக்க முகபாவனைகளும் கதாபாத்திரத்திற்கு அருமையாக பொருந்தி போய் உள்ளது. சம்யுக்தாவுடன் அவர் செய்யும் காதல் சேட்டைகள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. பெண் ரஜினியாக உள்ள ரேஷ்மாவிடம் அவர் கோபப்படும் இடங்களிலும், அவள் மீதான கோபம் அர்த்தமற்றது என உணரும் தருணங்களிலும் மிகச் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் சந்தோஷ். காதல் கை நழுவும் இடங்களில் தவிப்புடன் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு படத்திற்கு கைகொடுத்துள்ளது.🌸அருணாச்சலம்-வள்ளி , இவர்களுக்கு பிறக்கும் ஒரு குழந்தை சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் அன்று பிறப்பதால் அதற்கு ரஜினி என்று பெயர் சூட்டுகிறார்கள்.
15 வருடத்திற்கு பிறகு பிறக்கும் அந்த குழந்தை ஒரு அதிசய குழந்தையாக பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் இருப்பதைக் கண்டு, பக்ஸ்” கும்பல் அந்த குழந்தையை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறது. ஓமலூர் இருந்து, கொடைக்கானல் வந்த அந்த தம்பதியினர் அங்கே பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். அதன் பிறகு ரஜினி பெரிய குழந்தையான பிறகு அப்பா, அம்மா விபத்தில் இறக்க சென்னைக்கு வேலை தேடி வருகிறார் .ரஜினி
அதன் பிறகு நடக்கும் காதல் காமெடி கலாட்டா கிளைமாக்ஸ்சில் மனதை உருக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இதுதான் இந்த படத்துக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.
⭐ பலங்கள்
புதுமையான கதை மற்றும் ஃபேண்டஸி அணுகுமுறை.
முக்கிய நடிகர்களின் நடிப்பு உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் கவனம் ஈர்க்கிறது.
இசையமைப்பாளர் Sam C.S. வழங்கிய பின்னணி இசை பல காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை சமநிலைப்படுத்த முயற்சி செய்திருக்கிறது
நடிகர் & நடிகைகள்
:🔥சந்தோஷ், ரஜினி என்ற ஆண் கதாபாத்திரத்தில்
முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். பிரியாவுடன் காதல், காட்சியில் ரொமான்ஸ், செய்வதிலும் வி டிவி கணேஷ் உடன் காமெடி காட்சிகள், சண்டைக் காட்சிகளும் அனல் தெறிக்கும் வகையில் நடித்திருக்கிறார்
வாழ்த்துக்கள்” ப்ரோ”
🍩ரேஷ்மா வெங்கடேஷ் ,பெண் ரஜினி ஆக, கார்த்திக்குடன் காதல் ,ஆண் ரஜினியுடன் மோதல், பக்ஸ் உடன் மோதல், என்று நவரசங்களை வழங்கி இருக்கிறார்.
அவர் ஆணாக மாறும் காட்சிகளிலும் ,படும் அவஸ்தைகளிலும், கிளைமாக்ஸ் காட்சியில் மூச்சை பிடித்து ,ஆண் ரஜனியை வரவழைப்பதிலும், சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
🌸சம்யுக்தா பிரியா என்ற கதாபாத்திரத்தில்
ஆடை வடிவமைப்பாளராக, கவர்ச்சியிலும் கலக்குகிறார். காதலிலும் கலந்து கட்டி ரொமான்ஸ் செய்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில், இவர் செய்யும் தியாகம் நெகிழ வைக்கிறது.
பப்பில், காதலைத் தொடர்ந்து , மப்பும் மந்தாரமாக படத்தின் வெற்றிக்கு உதவும் கதாபாத்திரம் இது.
🔥வினோத் கிஷன் -கார்த்தி என்ற கதாபாத்திரத்தில், ரேஷ்மாவுக்கு உதவும் ரொமான்ஸ் பாயாக வருகிறார்,
பெண்ணாக இருக்கும் ரஜினிக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
🧶விடிவி கணேஷ் ராஜு பாயாக, ராஜ் ஸ்டீல் நடத்தும், இவர் காமெடிக்கு கேரண்டி இவர். வரும் காட்சிகளில் தியேட்டர்களில் பிளாஸ்ட் வெடிக்கிறது.
ஆண் ரஜினி பெண்ணாக மாறுவதை பார்த்து இவர் கிண்டல் செய்யும் காட்சியாகட்டும், கிளைமாக்ஸ்சில் நாயகன் ஆபத்தில் மாட்டிக் கொள்ள, தன் அடியாட்களை அனுப்பி ,உதவி செய்யும் கதாபாத்திரத்திலும் விடிவி கணேஷ் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இவர் கதாபாத்திரம் மிகப்பெரிய பலம்.
🔥பகவதி பெருமாள் (பக்ஸ்) இதில் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
பெண்ரஜினியிடம்
வியாபாரம் பேசும் டீல், இவரது ஜெனடிக்ஸ் வைத்து
பணம் சம்பாதிக்க போடும் திட்டம் கிளைமாக்ஸ் காட்சியில் ஆண் ரஜினி யிடம்,குத்துப்பட்டு சாகும் காட்சி ,என பக்ஸ் “மிரட்டி இருக்கிறார்.
🔥மற்றும்
– விச்சு விஸ்வநாத்
– போஸ் வெங்கட்
– வினோதினி வைத்தியநாதன்
ஆகியோர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
🔥இயக்குநர்: அஸ்வின் கந்தசாமி
ஒரு வித்தியாசமான கதையை தமிழுக்கு எப்படி கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்ற யுத்தியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் .இனி இது போன்ற பேண்டஸி படங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம் இயக்குனரின் பாசிட்டிவான திங்க் படத்துக்கு வெற்றியை தேடித் தந்திருக்கிறது.
படத்தின் கதை ஒரு ஜனரஞ்சகமான படத்திற்கு ஏற்ற வித்தியாசமான கதைதான். மேலும் ஜனரஞ்சகமான படம் என்றால் அரைத்த மாவைத்தான் மீண்டும் அரைப்பார்கள் என்ற புள்ளியில் இருந்து மொத்தமாக மாறுபட்டு இந்த கதையை அமைத்து ஒரு நேர்த்தியான படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் அதற்காகவே தனி பாராட்டுக்கள்.
அதேபோல் ரஜினி என்ற இரண்டு கதாபாத்திரங்கள்தான் படத்தின் பலமே. அதனை போதுமான அளவுக்கு நேர்த்தியாக வடிவமைத்து எங்கேஜ் செய்துள்ளார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி. படத்திற்கு மற்றொரு பலம் என்றால் அது டயலாக்குகள் தான். நிதானமாகவும் நிறைவாகவும் நகரும் காட்சிகளுக்கு படத்தின் வசனங்கள் வலு சேர்க்கிறது.
ஆண் ரஜினியும் பெண் ரஜினியும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள போன் பயன்படுத்தும் டெக்னிக் சிறப்பு படத்தின் காட்சிகளை தொந்தரவு செய்யாமல் அழகாக எலிவேட் செய்யும் அளவுக்கு இசையைக் கொடுத்துள்ளார் கதை மற்றும் திரைக்கதையில் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தமிழில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சேப்பா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது
கிளைமாக்ஸ், அடுத்த பாகத்துக்கு லீட் என ஒரு கம்ப்ளீட் கமர்ஷியல் படமாக தந்துள்ளார் இயக்குனர்.வாழ்த்துக்கள்சார்🌷
🌸தயாரிப்பாளர்கள்: ஏசிஎஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ்பு சுந்தர் (அவ்னி மூவிஸ்)
இப்படி ஒரு கதையை தேர்வு செய்து அதை படமாக தந்த தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். புதுமைக்கு கைகொடுக்கும் இவர்கள் எண்ணங்கள் வெற்றி பெறட்டும்.
🔥தலைமைச் செயல் அதிகாரி: ஆர். மதன் குமார்
🌸 கிரியேட்டிவ்
புரொடியூசர்: அனந்திதா சுந்தர்
இவரின் வித்தியாசமான எண்ணம் வித்தியாசமான கதை தேர்வு,, நிச்சயம் இவருக்கு வெற்றியை தேடி தரும்.
🔥சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் அதிரடி பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.
🔥 சந்தகுமார் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம் காட்சிகள் மிகவும் ரிச்சாக, இருக்கிறது காதல் காட்சிகளில் புதுமை வழிகிறது.
🔥படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி
குழப்பமில்லாமல் தெளிவாக படத்தொகுப்பு செய்துள்ளார்.கச்சிதமாக இருக்கிறது.
🔥தயாரிப்பு வடிவமைப்பு: செந்தில் ராகவன்
🔥ஆடை வடிவமைப்பு: ஸ்ருதி ஆர். கண்ணன்
ஆண் ரஜினி பெண் ரஜினி ஆக மாறும் போதும், அந்த காட்சிகளில் ஆடை வடிவமைப்பு ,மற்றும் ப்ரியா, கதாபாத்திரத்திற்கு நவீன நாகரிக ஆடை வடிவமைப்பு என அசத்தியிருக்கிறார்.
🔥 தயாரிப்புத் தலைவர்: என். மணிவண்ணன்
🔥தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபி
🔥விஎஃப்எக்ஸ்: ஃபாசில் முகமது எஸ் (ஸ்டுடியோ தலைவர், பிக்சல் லைட் ஸ்டுடியோ)
🌍 கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர் (நாக் ஸ்டுடியோஸ்)
🧶ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி மற்றும் எஸ். அழகியகூத்தன்
– சவுண்ட் மிக்ஸிங்: சுரேன் ஜி (ஹம் ஆடியோ)
🧶புகைப்படங்கள்: வி. ராஜன்
🧶ஒப்பனை: என். செல்லத்துரை
கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு ஒப்பனை செய்து இருக்கிறார் ஒப்பனை அழகு.
🧶பப்ளிசிட்டி டிசைன்: வியாக்கி
🌸 மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்
இந்தப் படம் ஆரம்பத்தில் இருந்து
மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, மக்களிடம் கொண்டு சேர்த்த, மக்கள் தொடர்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
🔥கிரியேட்டிவ் புரொமோஷன்ஸ்: கச்சா மாங்கோ
– டிஜிட்டல் மார்க்கெட்டிங்: பீட்ராூட்
– ஆடியோ உரிமம்: சரேகமா இந்தியா லிமிடெட், ஆர்.பி.எஸ்.ஜி குரூப் நிறுவனம்
🔥என ஒரு வெற்றி படத்துக்கு ஒரு பெரிய டீம் உழைத்து இருக்கிறது நிச்சயம் இப்படம் வெற்றி பட்டியலில் இணைகிறது வாழ்த்துக்கள்.🌷