பாலன் (The Boy) திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -/5

கதை களம்

🧶பாலன்: தி பாய்” ஒரு மர்மம், உளவியல் மற்றும் உணர்ச்சிகளை இணைக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. தாய்–மகன் உறவை மையமாக வைத்து, கடந்தகால ரகசியங்கள் எவ்வாறு வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதைக் கூறும் கதையாக இது ,
வெற்றி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
சிறுவயதில் தனது தாயைப் பிரிந்து கஷ்டப்படும் ஒரு சிறுவன், காணாமல் போன தன் தாயைத் தேடிச் செல்லும் பயணம் தான் இக்கதை.

🌍கதாபாத்திரங்கள்: இத்திரைப்படத்தில் ஆதிசேஷன், ஃபர்ஹானா பளதிங்கள், மற்றும் சாந்து சலீம்குமார் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனைவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

🌍இப்படத்தை சிதம்பரம் இயக்கியுள்ளார். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.


படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், கதாபாத்திரங்களை ஆழமாக அறிமுகப்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்கள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் படத்திற்கு வலுசேர்க்கின்றன.
இயக்குநர் சிதம்பரம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் ஒரு மனதைத் தொடும் அனுபவத்தை வழங்கியிருக்கிறார். திரைக்கதையை ஜீத்து மாதவன் எழுதியிருப்பது படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது.
தாய்–மகன் பாசத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான கதை.
சஸ்பென்ஸ் மற்றும் உளவியல் அம்சங்கள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளன.

🧶ஷைஜூ காலித் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை அழகாக உருவாக்குகின்றன.
🧶குழந்தை நடிகரின் இயல்பான நடிப்பு பாராட்டைப் பெறுகிறது
வணிக ரீதியான மாஸ் அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு படம் சற்று அமைதியான அனுபவமாக தோன்றலாம்.

🧶ஆவேசம் திரைப்படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசஃபின் கதை என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு
அவை கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார்

🧶 எப்போதும் நினைவுகூறத்தக்க மிகச்சிறந்த திரைப்படமாக பாலன் இருக்கும். இவ்வளவு பேரின் பங்களிப்பு மிகச்சிறப்பாக ஒன்றிணைந்துள்ளது. 2.40 மணி நேரம் கொண்ட படத்தில் எங்கும் சோர்வு இல்லை. திரையரங்கைவிட்டு வெளியேறும் போது மனதில் தங்குகிறது. நம்ப முடியாத மேஜிக்” பாலன் திரை படம்.

இயக்குனர்*சிதம்பரம்
🧶ஜான் ஈ மன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்த வரிசையில் இந்த பாலன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் கதையை சொன்ன விதம், திரைக்கதையை சீராகக் கொண்டு சென்ற விதம், படத்தில் வைத்த டிவிஸ்ட், கிளைமாக்ஸ் காட்சியில் வைத்து ட்விஸ்ட், என படம் முழுக்க தனி ராஜாங்கம் நடத்தி இருக்கிறார் இயக்குனர் .ஒரு சிறந்த படம் இப்படித்தான் இருக்கும், என்று படம் பார்த்தவர்கள் சந்தோஷமும் திருப்தியுடன், வெளியே வரும் அளவுக்கு படத்தை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.

🧶படத்தில் நடித்த நாயகி ,சின்ன குழந்தை ,அந்த போலீஸ் அதிகாரி இப்படி எல்லோரும் நடிப்பும் அற்புதமாக கலந்துகட்டி வந்திருக்கிறது. பாலன்” மிகப்பெரிய வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்🌷

Comments (0)
Add Comment