எங்கள் தங்கம்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

சமந்தாவின் அதிரடி ஆக்சன் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட், படம் தான்”எங்கள் தங்கம்” இதே டைட்டில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த மிகப்பெரிய வெற்றி அடைந்த படம், இப்போது சமந்தாவின் தயாரிப்பில் ,இப்படம் மிகப்பெரிய வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கிறது🌷

கதை களம்

🧶பாரம்பரிய குடும்பத்தில் மருமகளாக வாழும் ஒரு பெண், தனது மறைக்கப்பட்ட கடந்தகாலத்தை யாருக்கும் தெரியாமல் குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறாள்.
⭐ முதல்காதலால் பிரிந்த தனது கணவரின், குடும்பத்துடன் இணைவதற்காக கணவர் வீட்டிற்கு வருகிறார் ஸ்வர்ணா (சமந்தா). குடும்ப அமைப்பிற்குள் தன்னை பொருத்திக் கொள்வதற்கும் கணவரின் குடும்பத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் சமைப்பது பூஜை விவகாரங்களை செய்வது குடும்பத்திற்கு உழைப்பது என சமந்தா முயற்சி செய்யும் வேளையில் அவரை சுற்றி சுழல்கிறது ஒரு மர்மம். ஏற்கெனவே சிறையில் இருக்கும் ஆயுத கும்பல் தலைவன் சமந்தாவை தேட அதை மோப்பம் பிடிக்கும் சமந்தா அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். சமந்தா யார்? சமந்தாவை துரத்தும் அந்த கும்பலின் தலைவன் யார்? இருவருக்கும் என்ன தொடர்பு? இந்த மர்மமான வலைக்குள் இருந்து எப்படி தப்பித்தாரா அல்லது தான் விரும்பிய குடும்ப வாழ்க்கைக்குள் திரும்பினாரா? ஸ்வர்ணவாக வாழும் ஜான்சி என்பதுதான் எங்கள் தங்கம் திரைப்படத்தின் கதை.

: நடிகர் & நடிகைகள்

🧶சமந்தா, டிகந்த் மஞ்சாலே, கவுதமி, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி.
என அனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

.

🧶வில்லன் கர்ணாவாக நடித்தவர் நடிப்பும் ,
கிரண்மை கதாபாத்திரம், மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

சமந்தா

🧶சமந்தாவின் நடிப்பு, படத்தின் மிகப்பெரிய பலம்
குடும்ப உணர்வுகளும் சஸ்பென்ஸ் திருப்பங்களும் ரசிகர்களை ஈர்க்கின்றன.
ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன
சமந்தா புதிய ஆக்சன் அவதாரத்தில் விளையாடி இருக்கிறார். குடும்பப் பெண்ணாக மாறுவதற்கு அவர் செய்யும் நகைச்சுவையான முயற்சிகளும், ஒளிவு மறைவு வாழ்க்கை வாழும் கதாபாத்திரத்திற்கான உடல் மொழிகளிலும் ஸ்கோர் செய்கிறார் சமந்தா. தன்னை துரத்தும் ஆயுத கும்பலின் தலைவனிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள அவர் செய்யும் முயற்சிகள் திரைக்கதையாக விரிகின்றன. சண்டைக் காட்சிகளில் தேர்ந்த பயிற்சி மூலம் அதிரடி காட்டியிருக்கிறார் சமந்தா. வில்லன்களுடன் அவர் போடும் சண்டைகள் திரையைக் கவர்கின்றன. சண்டைக் காட்சிகளில் எல்லாம் அதிரடி ஹீரோக்களை இடது கையால் டீல் செய்திருக்கிறார் சமந்தா.

🧶 டெக்னிக்கலாக சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மாஸ் காட்சிகளை நன்றாக எலிவேட் செய்து ள்ளது

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, ஸ்டெண்ட் காட்சிகள் பிரமாதம்.
சன்டை காட்சி யில்
சமந்தா தூள் கிளப்பியுள்ளார்.
சண்டை காட்சிகள் அதிலும் பஸ் ஸ்டெண்ட் மற்றும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி.
சூப்பர் “

🧶இயக்குனர்
: BV Nandini Reddy
குடும்பங்கள் கொண்டாடும் விதமாகவும் இளைஞர்களுக்கு கவரும், சண்டை காட்சிகளுடனும், அடுத்து என்ன? நடக்கும் என்ற விறுவிறுப்பான, ஜானரோடு, படத்தை வெற்றி பட்டியலில் இடம் பிடிக்க வைத்திருக்கிறார்.

🧶Produced by: Tralala Moving Pictures
Producers: Raj Nidimoru, Samantha, Himank Reddy Duvvuru

🧶Written by: Raj Nidimoru, Vasanth Maringanti
Additional Screenplay: Prahas Boppudi

🧶Creative Supervisor: Sita R Menon
Creative Supervisor: Sita R Menon

🧶CEO : Himank Reddy Duvvuru
Editor: Dharmendra Kakarala
Production Designer: Ullas Hydoor
Action Director: Lee Whittaker, Aejaz gulab

🧶Choreographer : Pony Verma
Costume Designer: Pallavi Singh

🧶VFX Supervisor & Post – Production Supervisor : Nikhil Koduru
Fight Master: Marvel Natraj

🧶Sound Design: Pradeep G
Sound Mixing: Ajith A George
Executive Producer: Rakesh Reddy Gaddam

🧶என்று ஒரு வெற்றிகரமான டீம், இந்த வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள் . அவர்கள் உழைப்புக்கேற்ற வெற்றி நிச்சயம் கிடைக்கும் .

🧶மக்கள் தொடர்பாளர் யுவராஜ்🌷

Comments (0)
Add Comment