நூறு சாமி’திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

🔥இயக்குநர் சசி இயக்கியுள்ள நூறு சாமி” ஒரு குடும்ப உணர்வுகளையும், சமூகக் கருத்தையும் மையமாகக் கொண்ட படம். கணவரை இழந்த ஒரு தாய், தனது வாழ்க்கையை மறுபடியும் அமைத்துக்கொள்ள நினைக்கும்போது, குடும்பமும் சமூகமும் அதற்கு எதிராக நிற்பதை படம் பேசுகிறது. பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் சமூக கட்டுப்பாடுகள் இடையேயான போராட்டமே கதையின் மையம்.

🧶செல்வி தனது இளம் வயதிலேயே (26) கணவனை இழந்தவர். இரண்டு மகன்களுடன் சிங்கிள் மதராக அவர்களை வளர்த்து வருகிறார். தனக்கான இன்னொரு ஆண் துணையைத் தேடிக்கொள்ளலாம் என நாயகி நினைக்கும்போது மகனுக்கு அது பிடிக்கவில்லை.

சில வருடங்களுக்குப் பின் மகனுக்கு மெச்சூரிட்டி வந்த பின் அம்மாவின் ஆசைக்கு ஓக்கே சொல்கிறான். ஆனால் நாயகிக்கு இப்போது 42 வயது. சில சமூக சிக்கல்கள் காரணமாக அவரால் இன்னொரு துணையைத் தேடிக்கொள்ள முடியாத சூழல்.

தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி எடுக்கிறார். ஆனால் மகனோ அம்மாவுக்குத் திருமணம் ஆனால் தான் தனக்குத் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறான்.

இரு மகன்களின் வற்புறுத்தலுக்கு இணங்க ஒரு கட்டத்தில் செல்வி தன் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க நாயகியின் முடிவால் நாயகியின் குடும்பம் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சவால்களும் தான் மீதித் திரைக்கதை.

🧶நாயகனாக கெஸ்ட் ரோலில் வருகிறார் விஜய் ஆண்ட்டனி. இடைவேளைக்குப் பின் தான் இவரது எண்ட்ரி.
அப்பாவித்தனம் நிரம்பிய நடிப்பு அவரின் உடல்மொழி, எப்போதும் வியர்வை படிந்த முகம், அலைந்து திரியும் குணம் எனப் படத்தை நகர்த்திக் கூட்டிச் செல்கிறார்
விஜய் ஆண்டனி

🧶 ஸ்வாசிகா பிரமாதமான நடிப்பு, கலக்கி விட்டார். லப்பர் பந்து படத்துக்குப்பின் கிடைத்திருக்கும் நல்ல ரோல். துணையை இழந்து தனிமையில் வாழும் பெண்ணின் வலிகளைக் கண்களாலேயே உணர்த்தி இருக்கிறார். தனக்கு மறுமணம் நடக்க இருக்கிறது என்றதும் அவரது முகம் மலர்வது அருமையான நடிப்பு
ஸ்வாசிகாவின் நடிப்பு படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கணவனை இழந்த கிராமத்து பெண் செல்வியாக இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாக முதல் காட்சியிலேயே கண்கலங்க வைத்து விடுகிறார் பாஸ்கர் விவேக் இரண்டு குழந்தைகளையும் ஹாஸ்டலில் சேர்க்க ஹாஸ்டல் வேனில் அனுப்பிவிட்டு அந்த குழந்தைகள் அடம்பிடித்து இறங்கி ஓடி வரும்போது கண்ணுகளா என்று
கதறி ஓடும் காட்சி விஜய் ஆண்டனி உடன் இயல்பான காதல் காட்சி என படம் பார்ப்பவர்களை அவரது உலகத்துக்கு அழைத்து சென்று விடுகிறார்.
தேசிய விருது நிச்சயம் கிடைக்கும்.

🧶 செல்வியின்
இரு மகன்களாக அஜய், சக்தி இருவரின் நடிப்பும் கனகச்சிதம்.
அஜய் பாஸ்கர் வேடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சக்தி விவேக் என்ற கதாபாத்திரத்திற்கு கிடைத்ததுமாக பொருந்தி இருக்கிறார்.

🧶வில்லனாக இயக்குநர் பாலாஜி சக்திவேல் எரிச்சலை உள்வாங்கி நடித்திருக்கிறார்.

🧶இவர்கள் போக கன்னியாஸ்திரியாக வரும் லிஜோமோல் ஜோஸ், காவ்யா, கருணாஸ் போன்ற அனைவரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

🧶பகவதி பெருமாள், வினோதினி காமெடி டிராக் ஓக்கே ரகம்.

🧶உண்மை சம்பவத்தைக் கொண்டு கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் சசி.
பிச்சைக்காரன் படத்தில்” அம்மாவை தெய்வமாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன இயக்குநர் இதில் அம்மாவை சக மனுசியாகப் பார்க்க வேண்டும். என்ற கருத்தை சொல்லி இருக்கும் விதம் குட்.

🧶விடிந்தால் நாயகிக்குத் திருமணம். நாளை முதல் மகன்களுக்கு சமைக்க மாட்டார். அவர்களாகத்தான் சமைத்துக் கொள்ள வேண்டும். இன்று இரவு சாப்பிடுவதுதான் அம்மா கையில் சாப்பிடும் கடைசி சாப்பாடு என்பதை உணர்ந்து மூவரும் கலங்கி அழும் காட்சி அருமையான எமோஷனல் கனெக்ட் கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

🧶ஊருக்குள் நடக்கும் பஞ்சாயத்தை கலாய்க்கும் விதமும், அதையே க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்க்கு யூஸ் பண்ணிய விதமும் சபாஷ் போட வைக்கிறது.இயக்குனர் புத்திசாலித்தனம்.

🧶2018 ம் ஆண்டு வளையம்பட்டி, கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த உண்மை சம்பவம் இது என்பதால் உண்மைக்கு நெருக்கமாக நம் மனதுக்கு உருக்கமாகத் இருக்கிறது..

🧶க்ளைமாக்சில் உண்மை சம்பவத்தில் வரும் ஜோடியைக் காட்டியபோது தியேட்டரில் ஆடியன்ஸ் எழுந்து நின்று கை தட்டினார்கள்.
இது இயக்குனருக்கு கிடைத்த வெற்றி- பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்ட படம்.
உண்மை சம்பவத்தின் தாக்கம்
இந்தக் கதை ஒரு உண்மை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டதாகவும், சமூகத்தில் பேசப்படாத ஒரு உணர்வை மையமாகக் கொண்டுள்ளது
. இதில் விதவைபெண் மறுமணம் என்ற சமூகத்துக்குத் தேவையான கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

🧶மற்றும் துணை கதாபாத்திரங்களாக
பாலாஜி சக்திவேல் அருள்தாஸ்
முனீஸ் காந்த் பாண்டி குமார்
ஜென்சன் திவாகர்
பக்ஸ் வினோதினி
தாமரை கோடங்கி வடிவேலு
முத்தழகி ,சாரதா
சபிதா ராய், அபிநயா
மூர்த்தி
சுப்பிரமணிய சிவா
அனைவரும் நடிப்பும் முத்தாய்ப்பாக இருக்கிறது.

🧶தர்ஷன்கிர்லோஷ் அவர்கள் ஒளிப்பதிவு
கிராமத்து அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது காட்சிகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு இதம்

🧶ஹரிஷ்யுவராஜின் படத்தொகுப்பு
கச்சிதமாக இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சி நெருங்க நெருங்க இவர் படத்தொகுப்பு, பரபரப்பாக செதுக்கியிருக்கிறார்

🧶பாலாஜி ஸ்ரீராம் இசை யில்உருக்கம்.
மோகன் ராஜனின் பாடல் வரிகள்
சுகமானது.

🧶ஆர்ட் டைரக்டராக சசிகுமார்,
சுவாசிகாவின் வீடு விஜய் ஆண்டனியின் வீடு, என இயல்பாக கிராமத்து கதைக்கு ஏற்றவாறு அரங்கம் அமைத்திருக்கிறார்.

🧶விஜய் சதீஷின் நடன பயிற்சி
நன்றாக இருக்கிறது.

🧶ராம்குமாரின் இயல்பான சண்டைக்காட்சி
சண்டைக் காட்சிகளில் பரபரப்பும், ஒரு விதமான விறுவிறுப்பு, கலந்து கட்டி கொடுத்திருக்கிறார்

🧶காஸ்ட்யூம் டிசைனராக
துர்கா ப்ரியா
விஜய் ஆண்டனி, மற்றும் சுவாசிகா, அஜய் ,சக்தி என எல்லோருக்கும் ஆடை வடிவமைப்பு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

🧶சீராளன் மணி,போட்ட இயல்பான மேக்கப்
ஒப்பனை இயல்பாக இருந்தது.

🧶சவுண்ட் இன்ஜினியர் ஆக
சந்திரசேகர்
சவுண்ட் டிசைனர் ஆக விஜய் ரத்தினம்

🧶மக்கள் தொடர்பாளர் திரு. நிகில் முருகன் அவர்கள்.
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்🌷

🧶 மொத்த மதிப்பீடு
கதை: ⭐⭐⭐⭐☆ (4/5)
நடிப்பு: ⭐⭐⭐⭐☆ (4/5)
இசை & பின்னணி: ⭐⭐⭐⭐☆ (4/5)
திரைக்கதை: ⭐⭐⭐⭐☆ (4/5)
மொத்தத்தில்:4-5/5 குடும்ப உணர்வுகளையும் சமூகச் செய்தியையும் விரும்பும் ரசிகர்களுக்கு நூறு சாமி ஒரு நல்ல அனுபவமாக அமையும். மெதுவான ஆனால் மனதைத் தொடும்
இந்த ஆண்டின் வெற்றி பட்டியலில் இந்த படம் அமைகிறது கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🙏🏾🌷

Comments (0)
Add Comment