❤️இயக்குனர் கிஷோர் குமார் இயக்கத்தில், அறிமுக நாயகன் சனந்த், மடோனா செபாஸ்டின் மற்றும் டி.இமயா நடிப்பில் முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள படம் ‘ஹார்ட்டின்’.
ராஜஸ்தான், மற்றும் ஊட்டியைப் பின்னணியாகக் கொண்டு, நினைவாற்றல் இழப்பு, மற்றும் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் ஒரு ஃபீல்-குட் திரைப்படமாக வெளியாகியுள்ளது.
.கதைக்களம்
❤️ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தமிழ் உணவகம் நடத்தும் நாயகன் சனந்த், அங்கே ஐ.டி (IT) துறையில் பணிபுரியும் நாயகி இமயாவை காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தமிழகம் வரும்போது, நாயகனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு கடந்த சில வருட நினைவுகள் மறக்கடிக்கப்படுகின்றன.
இதற்கு முன் (சாகித்தியா)
மடோனாவை நாயகன் காதலித்து பிரேக் கப்பில் முடிகிறது. அது மட்டும் நாயகனுக்கு நினைவில் இருக்கிறது.
தனது கல்லூரி காதலியான மடோனா செபாஸ்டினைத் தேடி ஊட்டி செல்லும் சனந்த், அங்கே தனது பழைய காதலையும், இமயாவையும் எதிர்கொள்கிறார். இறுதியில் எந்த ஜோடி ஒன்று சேர்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல், பிரிவு, மீண்டும் சந்திப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஹார்ட்டின் ஒரு லேசான ரொமான்டிக்-காமெடி படமாக அமைந்துள்ளது. கதாநாயகனின் தற்போதைய காதல் வாழ்க்கையில் முன்னாள் காதலி மீண்டும் வருவதால் உருவாகும் குழப்பங்களே படத்தின் மையக்கதை
காதல் மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்ற காட்சிகள் ஏற்கனவே பல படங்களில் பார்த்த பழக்கமான கதைகளமாக உள்ளது.முதல் பாதி சுவாரசியமாக நகர்ந்தாலும், திரைக்கதையில் இன்னும் அதிக புதுமை இருந்திருக்கலாம்.
வழக்கமான காதல் கதைகளில் இருந்து மாறுபட்டு, உணர்வுபூர்வமான காட்சிகளுடன் எடுக்கப்பட்டுள்ள ஒரு எளிய குடும்பத் திரைப்படம். புதிய முயற்சிகளை விரும்புபவர்களும், காதல் கதைகளை ரசிப்பவர்களும் இப்படத்தை ரசிக்கலாம்
கதாபாத்திரங்கள்
❤️சனந்த்: (சிவா )என்ற கதாபாத்திரத்தில்
அறிமுக நாயகனாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி நடித்துள்ளார்.
முதல் காதல் தோல்வி , பிறகு இரண்டாவது காதலை ஏற்க தயங்கும் பொழுது. அதன் பிறகு ,மனம் மாறி இரண்டாவது காதலியை காதலிக்கும் பொழுது, சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
நினைவு இழப்பு, ஏற்பட்ட பிறகு, ஊட்டியில் முதல் காதலின் மீது காட்டும் அன்பை அற்புதமாக வழங்கி இருக்கிறார்.
இது இவருக்கு
பேர் சொல்லும் படமாக இருக்கும்.
❤️.மடோனா செபாஸ்டின்
(சாகித்யா) என்ற கதாபாத்திரத்தில் தேயிலை எஸ்டேட் உரிமையாளராக கம்பீரமாக வந்து போகிறார். தன் காதலனுடன் ஏன் சேர்ந்து வாழ முடியாது !!என்பதற்கு அவர் சொல்லும் காரணம் சரியாக இருக்கிறது. கடைசி வரை அந்த கம்பீரம் குறையாமல் அவர் நடிப்பு மிக உயர்ந்து நிற்கிறது.
❤️ இமயா: (சாதனா) என்ற கதாபாத்திரத்தில், அப்பா, அம்மாவின் திருமண வற்புறுத்தலுக்கு பயந்து, ஜெய்ப்பூர் வரும் அவர் அங்கு நாயகன் மீது காதல் கொண்டு, அவரை அடைய நினைப்பது, பிறகு காதலனுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு உடன், அதை தீர்க்க நினைப்பது, என்று பண்பட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார். புதுமுகம் என்றாலும் பல படங்களில் நடித்த ததைப்போல அனுபவமிக்க நடிப்பு, அவர் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக இருக்கிறது.
இரு நாயகிகளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
❤️.வாட்ஸ்-அப் மணி : நகைச்சுவை மற்றும் நட்பின் மூலம்
நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.
அவர் மனைவி அங்கீதா நடிப்பு நன்றாக இருக்கிறது.
❤️ராஜஸ்தான் மற்றும் ஊட்டி என இருவேறு லொக்கேஷன்களை ஒளிப்பதிவாளர் முகேஷ் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் காட்டியுள்ளார்.
❤️ராஜேஷ் முருகேசனின் பின்னணி, இசையும் பாடல்களும் கதைக்கு ஏற்றவாறு இதமாக அமைந்துள்ளன.
❤️முதல் பாதி விறுவிறுப்பாகவும், நகைச்சுவையுடனும் நகர்கிறது.
காதல் காட்சிகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் ரசிக்க வைக்கின்றன.
படத்தொகுப்பாளர்.
பரத் விக்ரமன்
பங்கு அதிகம்.
❤️எழுதி இயக்கி இருக்கிறார்
கிஷோர் குமார்.
இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று மெதுவாக நகர்கிறது.
சில காட்சிகள் முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக இருக்கின்றன.
கிளைமாக்ஸ் இன்னும் தாக்கமாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில்: ஹார்ட்டின் ஒரு எளிமையான, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய காதல் திரைப்படம். அதிரடி திருப்பங்கள் இல்லாவிட்டாலும், காதல் மற்றும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட ஒரு நல்ல பொழுதுபோக்கு அனுபவத்தை இயக்குனர் தந்திருக்கிறார்.
உணர்ச்சி, உள்ளக் கிளர்ச்சி, காதல், ஊடல், சபலம், சந்தேகம் இவற்றை வைத்துக்கொண்டு, திரைக்கதையை நாசூக்காக, நளினமாக, அழகாக அமைத்து, அதற்கு அளவோடு வசனம் எழுதியிருக்கிறார் இயக்குனர். தனி வில்லன், காமெடி டிராக் இவை இல்லாமல் தமிழ்ப் படங்கள் எடுக்கமுடியும் என்று அடித்துக் கூறியிருக்கிறார்.
சனத் -மடோனா இருவருக்கும் சம சந்தர்ப்பம் தரப்பட்டிருக்கிறது. நடிப்பைப் பொறுத்தவரை யார் யாரை மிஞ்சுகிறார் என்று தரம் பார்க்க முடியாதவாறு, இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள் – டெட் ஹீட்!
டி .இமயா காம்பினேஷன் படத்துக்கு இளமையை
தரும் ஒரு நல்ல சேர்க்கை. ‘
❤️ ஆர்ட் டைரக்டர் துரைராஜ், அழகாக ஜெய்ப்பூர் ஓட்டல், நாயகியின் வீடு, நாயகன் வீடு, என அரங்க அமைப்பு செய்துள்ளார்.
❤️காஸ்ட்யூம் டிசைனராக
உத்ரா மேனன்
பணி புரிந்துள்ளார்
❤️பாடல்களை மோகன் ராஜா, விவேக், சாரதி எழுதி இருக்கிறார்கள்
கொண்டாட்டமே பாடல் அவ்வளவு ரசிக்க வைக்கிறது.
❤️ஷையத் மாலிக், ஒப்பனையாளராக
பணி புரிந்துள்ளார்
அருமை.
❤️காஸ்ட்யூமர்: கணேஷ் ,
நாயகன் நாயகி இருவருக்கும் உடைகள் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்.
❤️Creative Consultant : Manimegalai T
Production Controller : T. Selvaraj
Production Executive : S. N. Asraf
Sound Mix : Rajakrishnan M.R
Sound Design : Sree Sankar
VFX : Spectre Post
DI : Prasad
Colorist : Ranga
❤️மக்கள் தொடர்பாளர் திரு.நிகில்முருகன்
அவர்கள்.
❤️மொத்தத்தில் இதயத்தை லேசாக வருடி செல்லும் தென்றல் போல, மென்மையான காதலை இளமையோடு ,பேசி இருக்கிறது .இந்த “❤️ஹார்டின்”❤️